தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள்

This entry is part 8 of 31 in the series 31 மார்ச் 2013

ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல்கள் மாணவர் கோரிக்கைகள் எல்லாம் தற்போது தேக்க நிலையை நோக்கிநகர்கிறது.. இதற்க்கு பல காரணங்கள் உண்டு. 1960கலில் இடம்பெற்ற பிரஞ்சு மணவர்கிளற்சிக்குப்பின்மாணவர்கள் மாணவர் போராட்டங்கள் பற்றி பல கோட்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.இவற்றை வாசிக்கும்படி கோருவதுடன் இவற்றுக்கும் வெளியில் உள்ள மிக முக்கியமான அடிப்படைக் காரணம் ஒன்றை அடையாளம் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.
இனவெறி இலங்கை அரசுக்கெதிராக நிலைபாடு எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான்மூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் அடிப்படை நோக்கம்.அதனால்தான் குமுதம் தீராநதியில் 2006 (http://www.tamilcanadian.com/article/tamil/97) வெளிவந்த எனது பேட்டியிலும் மீனவர் பிரச்சினைக்கு விசேட அழுத்தம் கொடுத்தேன். மேற்படி பேட்டியை திரும்ப வாசிக்கும்படி பணிவன்புடன் கோருகிறேன். இலங்கை அரசினால் கொல்லப்படும் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டத்தை இலங்கை அரசால் இந்திய தமிழக மீனவர்கள் கொல்லப்படும் பிரச்சினையுடன் கீழ்ப்படுத்தி இணைக்காமல் இலங்கை அரசுக்கு எதிரான தமிழகத்தின் கோரிக்கையாகவளர்த்தெடுக்க முடியாது என நான் கடந்த பத்துவருடங்கலுக்கும் மேலாக வாதிட்டு வருகிறேன்..

ஈழத் தமிழருக்கு ஆதரவான கோரிக்கைகளை மீனவர் கொல்லப்படும் பிரச்சினையுடன் இணைத்து முன்னிலைப் படுத்தியிருந்தால் வெளி மாநில மக்களும் மத்திய அரசும் நிராகரிக்க முடியாத கோரிக்கைகளாக அவை முன்னிலைப் பட்டிருக்கும். தமிழக மானவர்களின் தமிழக கட்ச்சிகளின் கோரிக்கைகளுக்கும் தமிழக சட்டசபை தீர்மனங்களுக்கும் இது பொருந்தும்.

இனியேனும் தாமதிக்காமல் தமிழகத்தில் இலங்கை இனவெறி அரசு உருவாக்கும் நெருக்கடிகள் வரலாற்று ரீதியாகவும் சரியான கோட்பாட்டு அடிப்படையிலும் புரிந்துகொள்ளப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் போராட்டத்தின் கோரிக்கைகள் மீழ ஒழுங்கு படுத்தப் படுதல் வேண்டும். இது நமது காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய கோரிக்கைகளை நமது அறிஞர்களும் போராளிகளும் தமிழகத்துக்கு வெளியில் ஏனைய மாநில மக்கள் மத்திய்க்கும் டெல்கிக்கும் முன்னெடுத்துச் செல்ல்லவேண்டும்..

1

இலங்கையை தமிழக மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

முதலாவதாக காரணம் இந்தியரான தமிழக மீனவர்கள் வகை தொகையின்றி இலங்கைப் படைகளால்கொலை செய்யப்படுவது. இரண்டாவது காரனம் ஈழத்தமிழருக்கு எதிரான இலங்கை அரசின்இனக்கொலையும் போர்குற்றங்கள் தொடர்வதும். இந்த முறைமையில் மட்டுமே மாணவர்களும் அரசியல்கட்சிகளும் இப்பிரச்சினையை வடக்கு நோக்கிக் கொண்டு செல்லமுடியும். மீனவர் பிரச்சினையை கை விட்டுவிட்டு இனக்கொலை இலங்கை அரசுக்கெதிராக நடத்தும் போராட்டங்கள் எதுவும் இதற்க்குமேல் செல்லும்சாத்தியமில்லை.

இலங்கை அரசால் மீனவர்கள் கொல்லப்படுவது இலங்கை அரசால் ஈழ தமிழர்கள் கொல்லப்படும் பிரச்சினைபோல முக்கியமான பிரச்சினையாகும்.
ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு 500க்கும் அதிகமாக மீனவர்கள்
இலங்கை அரசால் கொல்லப்பட்டது மீனவர் பிரச்சினை தொடர்வது ஒன்றும் முக்கியமான பிரச்சினையாக தெரியவில்லை. அகில தமிழ் நாட்டு கட்ச்சிகளும் போராட்டக்குழுக்களும் ,
சிவில் அமைப்புகளும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இதனை உணருதல் அவசியம்.
தமிழக பதிரிகைகளை விரித்தால் மாணவர் போராட்ட சேதிகளுக்கு மத்தியில் ராமேஸ்வரதிலோ நாகப்பட்டினத்திலோ இலங்கை அரசின் கொலைவெறிக்கு எதிராக மீனவர்கள் அனாதைகள்ப்போலதனித்துப்போய் போராடுகிற சேதிகளும் கானக்கிடக்கிறது. ஏன் ஒரே எதிரிக்கு எதிரான போராட்டங்கள் இப்படி பிளவு பட்டுக்க் கிடக்கின்றன. ஏன் அரசியல் வாதிகளைப்போல மாணவர்கள் மீனவர் பிரச்சினையை முதன்மைப் படுத்தவில்லை? இத்தகைய வரலாற்றுக் கேழ்விகளுக்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

மீனவர்கள் தமிழராக இருந்தபோதும் வாக்குப்
பலமற்ற ஏழை பாழை சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதைத்தவிர புறக்கணிப்புக்கு வேறு காரணம்தெரியவில்லை. பிழைகள் திருத்தப் படவேண்டும். இல்லையேல் எதிர்கால ஆய்வாளர்கள் மறைமுக சாதிஉணர்வு என்றுதான் இதனை பதிவு செய்வார்கள்.

கேரழக்கரையில் இத்தாலிய கடற்படையால் 2 மீனவர்கள் கொல்லப்பட்டபோது சில மணித்துளிகளுக்குள்ளேயே கேரழ மக்களும் கேரழ அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும் பொங்கி எழுந்தார்கள். இத்தாலி நட்பு நாடு என்பதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
இதற்க்கு கேரழாவில் ஜாதி உணர்வு கீழ்ப்பட்டிருப்பதும் மாநில இன உணர்வு சாதி உணர்வைவிடமேலோங்கி இருப்பதுவும்தான் காரணமாக இருக்க முடியும்.
தமிழர்கள் என்பதால் 500 க்கும் அதிகமான இந்தய
மீனவர்களை சுட்டுக்கொன்ற இலங்கை நட்ப்பு நாடா? என்று கேட்க்கும்போது கோரிக்கையை
புரிந்துகொள்வது அயல்மாநிலங்களுக்கும் இலகுவாக இருக்கும். இன்று வடமாநிலத்தவர் பலர் தமிழகத்தின் கோரிக்கையை உணர்வு நிலைப் பிரச்சினையாகவே பார்க்கிறார்கள். இதுதான் பிரச்சினையே

2

கோட்பாட்டு ரீதியில் தமிழக மக்களின் போராட்டம் இலங்கை நட்ப்பு நாடல்ல என்பதை காங்கிரஸ் தலைமையிலான மதிய அரசுக்கு உணர்த்தி அவர்களை செயல்பட வைப்பதாகும். இதனை மாணவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். மீனவர் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினையில் இயன்றவரைபல்வேறு தமிழக அரசியல் சக்திகளின் ஆதரவுடன் காங்கிரஸ் பஜக சிபிஎம் உட்பட எல்லா தரப்பிலுமுள்ள நட்ப்புச் சக்திகளுடன் சேர்ந்து இலங்கையை தனிமைப் படுத்துவது மட்டுமே தமிழக மக்களின் நோக்கமாகமுடியும். அது மட்டும்தான் போராட்டங்களை வெற்றிப்பாதையில் முன்னெடுத்துச் செல்லும். இலங்கையைவிட்டுவிட்டு பஜக காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளைத் தனிமைப் படுத்தும் முயற்ச்சி இலங்கை இனவெறி அரசுக்கும் தமிழக தேர்தல் அரசியல்திளுக்கும் மட்டுமே அனுகூலமானதாகும். .

தமிழகச் சட்டசபை தீர்மானங்கள் உட்ப்பட இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் பல மீனவர் பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை என்பது அபத்தமாகும் தீர்மானங்களும் கோரிக்கைகளும் தமிழக மக்களின் முன்னுரிமை அடிப்படையில் ஒழுங்கு படுத்தப்படாவிட்டால் தேக்க நிலைக்கே இட்டுச் செல்லும். .

மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிபந்தனைகளுடன் தமிழக இந்திய கட்சிகளுக்கும் அரசுகளுக்கும் முன்வைத்துவிட்டு சற்று நிதானிக்க வேண்டிய தருணமிதுவாகும்.

தற்காலிகமாக தங்கள் போராட்டங்களை நிபந்தனைகளுடன் வாபஸ் பெறுவதும் புதிய தீர்மானங்கள் போராட்ட வடிவங்கள் விவாதிக்கப் படுவதும் அதுவரை கல்லூரிகளுக்குத் திரும்புவதும் சரியான முடிவாகஇருக்கும். மாணவர்கள் தொடரும் மக்கள் மற்றும் அரசியல் இயக்கப் போராட்டங்களை எப்பவும் கண்காணிக்க முடியும். அவர்கள் கல்வியைத் தொடர்வதுடன் புதிய போராட்ட வடிவங்களோடு எப்பவும் மீண்டும் போராட்டத்தில் தவணை முறையிலோ தொடற்ச்சியாகவோ குதித்திடவும் முடியும்.

கட்சிகளும் சிவில் அமைப்புகளும் மாணவர் பின்போடும் இடத்தில் இருந்து போராட்டத்தை முனெடுத்துச் செல்ல வேண்டும். அத்தகைய போராட்டங்கள் மாணவர்களது கண்காணிப்பினால் மேலும் உறுதிப்படும்.

Series Navigationகந்தா ( தமிழ் )பரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?
author

வ.ஐ.ச.ஜெயபாலன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    புனைபெயரில் says:

    இந்திய தமிழக மீனவர் பிரச்சனையில் பல சிக்கல்கள் இருக்கிறது. இராமேஸ்வரம் சேர்ந்தவர் தானே அப்துல்கலாம், அவர் ஜனாதிபதியாக இருந்தவரே… அவரிடம் கேளுங்கள்.. இந்த விஷயத்தில் மத்திய அரசு செயல்படும் முன் மீனவர்கள் தங்களை எவ்வளவு தூரம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது புரியும்.

  2. Avatar
    புனைபெயரில் says:

    இலங்கைத் தமிழர்கள் என்ற பெயரில் ஒரு கங்காணிக்கும்பலாய் இருந்து பிற தமிழர்களை ஆட்டிப் படைத்து அழித்தொழித்த கும்பலுக்கு ஆதரவான போராட்டம் வெல்லாது…

  3. Avatar
    Salanan says:

    ஈழத்தமிழர் பிரச்சினைக்கு கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வெற்றி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறு. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கும் கல்லூரிகளில் ஒரு சிலவற்றில் மட்டும் மாணவர் போராட்டம் தலையெடுத்தது. அந்த கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. (சென்னையில் மட்டும் 500 கல்லூரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்? வெகு சொற்பமே!). கலந்து கொண்ட மாணவர்களிலும் பெருவாரியானவர்கள் peer pressure காரணமாகத்தான் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் தெரியாது. மேலும் கடனை உடனை வாங்கி மிகுந்த கஷ்டத்தோடு பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். ஆனால் அவர்கள் போராட்டம் கீராட்டம் என்று அலைந்து தங்கள் வாழ்க்கையில் மண்ணைப்போட்டுக்கொள்கிறார்கள் என்று பல பெற்றோர்கள் அங்கலாய்த்துகொண்டதையும் காணமுடிந்தது. பல பெற்றோர்களுக்கு இந்த போராட்டம் வெறுப்பை தான் ஏற்படுத்தியது. நிறைய மாணவர்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை கேட்டு கை கொட்டி மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள். இதை நானே வேதனையோடு கண்டேன். இங்கே எங்கே இருக்கிறது ஈழ மக்களின் மீதான கரிசனையும் மனிதாபிமானமும்? கோவையை சேர்ந்த ஒரு பேராசிரியை, இந்த போராட்டம் பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதை கண்டித்து நடக்கிறது என்று தொலைப்பேசியில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழகத்தில் இருக்கும் படித்தவர்களே ஈழ மக்களின் பேரழிவை இந்த லட்சணத்தில் புரிந்து வைத்துள்ளார்கள். சாதாரண மக்களை பற்றி என்ன சொல்ல?. இந்த போராட்டத்தை கம்யூனிச அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைக்க முயற்சித்தன. கிறித்துவ அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைத்தார்கள். திராவிட கட்சிகளோ இந்த போராட்டத்திற்குள் நுழைந்து ஆதாயம் அடைய முயற்சித்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம். எதிர்காலத்தில் என்ன ஆகுமோ தெரியவில்லை.
    ஆனால் இவற்றுக்கிடையில் சில விஷயங்களும் நடந்தன. அக்கிரகாரப்பண்ணை என்று அழைக்கப்படும் ஐ.ஐ.டி-க்குள் மாணவர்கள் ஈழ மக்களுக்காக பேரணியும் உண்ணாவிரதமும் நடத்தியது ஒரு பெரிய ஆச்சரியம். அந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தது. விஷயம் தெரிந்தவர்களை கூட்டி வந்து கருத்தரங்கமும் நடத்தினார்கள். மற்ற மாநில மாணவர்களின் ஆதரவையும் திரட்டினார்கள். ஒரிரண்டு நாட்கள் மட்டுமே நடந்தாலும் இது மிகப்பெரிய விஷயம். அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    இந்த போராட்டத்தின் போது இலக்கில்லாத பல விஷயங்கள் இடம் பெற்றன. தமிழீழம் தான் வேண்டும் என்று பதாகை வைத்திருந்தது. பிரபாகரனின் படத்தை தூக்கிக்கொண்டு திரிந்தது. இதெல்லாம் இந்த போராட்டத்துக்கான ஆதரவு தளத்தை மிகவும் குறுகியதாக்கிவிடும். அனைத்திந்திய அளவிலும் உலகளவிலும் ஈழ மக்களுக்கு ஆதரவு கிடைக்கவேண்டும் என்றால் மேற்கண்டவற்றை தவிர்க்க வேண்டும். கீழ் கண்ட இரண்டு விஷயங்களை மட்டும் பிரதானப்படுத்தவேண்டும்.

    1. போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலையும் வக்கிரமாக நடைபெற்றன. சாதாரண பொது மக்கள் ஒரு லட்சத்தக்கும் மேல் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இதற்கு சிங்கள படையினரும் அவர்களின் மிகுந்த உயர் மட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களுமே பொறுப்பு. விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் இன்று இல்லை. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனில் சர்வதேச அளவில் சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இப்போது சுதந்திரமாக அதிகாரத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

    2. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் எஞ்சி இருக்கும் தமிழர்களுக்கு பிரச்சினை தீரவில்லை. அவர்களின் நிலமும் வீடுகளும் ஆக்கிரமிக்கப்டுகின்றன. வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களின் அடையாளம் துடைக்கப்படுகிறது. வாழ வழியில்லாத இம்மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். ஒரு காத்திரமான சுயாட்சிக்கு பண்ணாட்டு சமூகம் வழி வகை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் ராணுவ மயமும் சிங்கள மயமும் அகற்றப்பட வேண்டும். இதற்கு பண்ணாட்டு சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேற்கண்ட இரண்டு விஷயங்கள் மட்டும் எப்போதும் முன்வைக்கப்பட வேண்டும். பிரபாகரனின் படம் அல்ல.

    தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். எப்படிப்பட்ட வஞ்சகமும் அநியாயமும் ஈழ மக்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியாத மாணவர்கள் பல இடங்களில் சிரித்துக்கொண்டே குரல் எழுப்புவதையும் மறியல் செய்வதையும் புகைப்படங்களில் காண முடிந்தது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்கு காரணம் அறியாமையே. இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் எதிர்காலத்தில் பல்வேறு அதிகார அமைப்புக்களிலும் தொழில்களிலும் (உள்ளூரில் இருந்து உலகளவில்) பொறுப்பு வகிக்கப்போகிறவர்கள். அடுத்த தலைமுறைக்கு இந்த விடயங்களை கொண்டு போகிறவர்களும் இவர்கள் தான். ஆகவே தமிழகத்து மாணவர்கள் ஈழ விவகாரத்தில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களான அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது.
    இன்றைக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்களாகவும் மிகப்பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளார்கள். ஆகையால் தான் இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தடைகளையும் மீறி சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இவர்களால் உலகளவில் லாபி செய்யவாவது முடிகிறது. இன்றைய உலகில் சாதாரண மக்கள் எத்தனை கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு போராடினாலும் அதற்கு பலன் அவ்வளவாக இருக்காது. ஆனால் அறிவுஜீவிகளை அதிகம் கொண்ட ஒரு சிறிய இனம் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். வெறும் ஒன்றரை கோடி பேர்களை கொண்ட யூத இனம் இதற்கு ஒரு உதாரணம். ஆகவே தமிழகத்தில் மிகுந்த ஆங்கில புலமையும் தமிழ் இன உணர்வும் கொண்ட திறமையான மாணவர்களை உருவாக்கவேண்டும். உலகெங்கிலும் தமிழர்கள் உயர் அதிகார பீடங்களை அலங்கரிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். (ஐ.நா மனித உரிமை குழுவின் தலைவராக இருக்கும் நவநீதம் பிள்ளை அம்மையார் எனும் ஒரே ஒரு நபர் சிங்கள அரசுக்கு எத்தகைய நெருக்கடியாக மாறினார் என்பதை சொல்ல தேவையில்லை)

    இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடி தான். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையும் தேவை. ஆனால் தி.மு.க என்னும் கட்சி இருக்கும் வரை தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை வருவது கடினம் என்றே தோன்றுகிறது. இவர்களின் ‘டெசோ’ சார்பில் நடந்த முழு அடைப்பே இதற்கு ஒரு உதாரணம். ஆளும் கட்சியின் ஆதரவு மறைமுகமாகவாவது இருந்தால் தான் இம்மாதிரியான போராட்டங்கள் முழு வெற்றியடைய முடியும். ஆனால் ஆளும் அ.தி.மு.க-வின் ஒப்புதல் இல்லாமல் கருநாநிதியாலும் அவரின் எடுபிடிகளாலும் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்டது தான் இந்த டெசோ பந்த். இப்போது தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த ஈழப்பேரழிவை முன்னிறுத்தி சுய ஆதாயம் தேட கருநாநிதி முயன்று வருகிறார். வரும் நாட்களில் இவரும் இவர் கட்சியும் எடுபிடிகளும் பல்வேறு போராட்டங்களையும் பித்தலாட்டங்களையும் முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வார்கள். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வருகிறதல்லவா? ஆகவே கொலைகாரனின் கூட்டாளியாக இருந்து ஆதாயம் தேடியது போதாதென்று பிண வீட்டிலும் ஆதாயம் தேடும் இந்த மாதிரியான திராவிட கட்சிகளிடம் தமிழகத்து மக்கள் வரும் நாட்களில் உஷாராக இருக்க வேண்டும். அது தான் இப்போதைய தேவை.

  4. Avatar
    புனைபெயரில் says:

    இந்திய அரசு இலங்கை அரசை தாஜா செய்யவில்லை. “தான்” மட்டுமே தலைவன் என்ற இறுமாப்புடன் இருந்த எவரும் வென்றதில்லை… இடி அமீன் ஒரு நல்ல உதாரணம். ஈழத்தில் முதலில் அவர்களால் சக தமிழர்களின் ஆதரவை பெற முடியவில்லை. துப்பாக்கி முனையில் கண் முன் நடக்கும் செயல்களை மிரட்டி பணிய வைக்க முடியும்.. ஆனால், உள்ளத்தின் உத்வேகத்தை..? அமிர்தலிங்கத்தின் சாவின் போதே, இலங்கை வடக்கத்தி கும்பலின் முடிவு எழுதப்பட்டு விட்டது. அமெரிக்க அரசின் முன்னாள் ஜனாதிபதியை கை வைத்தால் என்ன நிலை ஏற்படுமோ அதே மாதிரி தான் இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமரை கை வைத்தால் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், 13 ஆண்டுகள் போனஸ் கிடைத்தது. அதற்குள் அவர்கள் தங்களின் தனி நாட்டை பெற்றிருக்க வேண்டும். ஏன் முடியவில்லை. இந்திய அரசும், கருணாநிதியும், ஜெயும் ஆதரிக்கவில்லை. ஆனால், இப்போது மாணவர்கள் ஓட்டிற்காக பயப்படுகிறார்கள். இனி மாண்வர்கள் ஓட்டு கேட்டு வ்ந்தால் அவர்களின் மார்க் ஷீட்டை கேட்க வேண்டும். ஏதோ ஒரு மாணவ தலைவன் அரசியல்வாதிகளுடன் பிரியாணி சாப்பிட ஏன் பிற மாணவர்கள் முட்டாள்களாக வேண்டும். ?

  5. Avatar
    புனைபெயரில் says:

    பிரபாகரனின் படம் அல்ல. –> அந்த படத்தின் மீதிருக்கும் உலக வெறுப்பு புரியாமல் இவர்கள் ஃபீலீங்காகி வாழ்வை தொலைக்கிறார்கள். எந்த இலங்கைத் தமிழனாவது இவர்களுக்காக முன் வருகிறானா..?

  6. Avatar
    புனைபெயரில் says:

    நல்ல வேளை இவர்களில் பல முத்துக்குமரன்களும், செங்கொடிகளும் உருவாகாமல், பல தமிழுணர்வாளத் தலைவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்தது. தமிழுருவிகள் எழுதி வைத்த கட்டுரைகள் / கவிதைகள் வீணாயின என்பது நல்லதே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *