தமிழக தேர்தல் விளையாட்டுகள்

This entry is part 1 of 17 in the series 10 ஏப்ரல் 2016

polgesஐந்து வருடத்துக்கு ஒரு முறை தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க கொடுக்கும் வாய்ப்பை பெரும்பாலான தமிழக மக்கள் இலவசத்துக்கும் இருநூறு ரூபாய்க்கும் போல விற்றுவிடுவதை சமீப காலமாக செய்து வருகிறார்கள். அப்படியிருந்தும் தமிழ்நாட்டில் தோசையை திருப்பி போடுவதை போல ஒரே திராவிட கட்சியின் இரண்டு பக்கங்களை மாறி மாறி தங்களை சுட அனுமதித்துகொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் வெறியர்கள் போல தேர்தல் செய்திகள் வெறியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஐந்து வருடத்துக்கு ஒருமுறை வரும் கிரிக்கட் கோலாகலம் எனலாம்.

இந்த முறை ஐந்து முனையாகவோ ஆறுமுனையாகவோ தேர்தலை பல நூறு கட்சிகள் சந்திக்கின்றன. அதிமுகவுடன் பல கட்சிகள், திமுகவுடன் காங்கிரஸ் சேர்த்து பல கட்சிகள். விஜயகாந்த் வைகோ திருமா ஜி ஆர் .. சமீபத்தில் இணைந்த வாசன் என்று ஐவரோடு சேர்ந்து அறுவரானோம் என்று மக்கள் நல கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். பாமக, பாஜக என்றும் இரண்டு கட்சிகள் தனியாக நிற்கின்றன. இத்தனை கட்சிகள் இருக்கின்றன என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே பல கட்சி தலைவர்களுக்கு தெரியவரும். இதில் நடிகர் கார்த்திக் நடத்தும் கட்சியும் தேர்தல் நேரத்தில் மட்டுமே பேசப்படும். தினமலரில் இவரது செய்திகளை ரொம்ப சந்தோஷத்தோடு போடுகிறார்கள். அவர்களுக்கே சிரிப்பு தாங்க முடிவதில்லை.

அதிமுகவுக்கு மிகவும் சந்தோஷம் தரும் பல்முனை போட்டி இவ்வாறாக அமைந்திருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் தோற்றால் கூட அது பிரம்மாண்டமான செய்தியாக இருக்க போகிறது என்று தோன்றுகிறது.

ஆனால் அவரவருக்கு விரும்பியதெல்லாம் நடந்துவிடுவதில்லை. பாஜகவை விட்டுவிட்டு எல்லோரும் தன்னுடன் இணையவேண்டும் என்று திமுக நிச்சயம் விரும்பியிருக்கிறது. சோனியா காங்கிரஸ், மதிமுக, வாசன் காங்கிரஸ்,கம்யூனிஸ்டுகள், பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் அனைத்தும் திமுகவின் தலைமையில் தேர்தலை சந்தித்திருந்தால், திமுக நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும் என்று அடித்து சொல்லலாம். அப்படிப்பட்ட மெகா கூட்டணி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும். ஆனால், முன்பு தேர்தலில் அறுதி பெரும்பான்மை இல்லாமல் இருந்தபோதும் திமுக காங்கிரஸின் ஆதரவில் ஆட்சி செய்தபோதும், ஆட்சியில் பங்கு அளித்ததில்லை. அதனால் காங்கிரஸ் கூட இந்த முறை ஆரம்பத்தில் திமுக அணியில் சேர பிரியப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் காங்கிரஸுக்கு வேறு வழியில்லை என்பதால் திமுகவுடன் அணி சேர்ந்துவிட்டது.

பாஜக அறுதிப்பெரும்பான்மை பெற்றாலும் மத்தியில் அனைத்து கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்து மோடி தலைமையில் ஆட்சி செய்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அறுதி பெரும்பான்மை இல்லாதபோதும் ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு கொடுக்க திமுக மறுத்திருக்கிறது.

அப்படியிருக்கும்போது திமுக அமைக்கும் மெகா கூட்டணியில் பங்கெடுக்க எந்த கட்சியும் தயாராக இருக்காது. இருந்தும், தேமுதிகவுடன் வெகுகாலம் பேசினார்கள். அந்த ஒரே விஷயத்திலேயே அந்த கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்திருக்கும் என்றே கருதுகிறேன்.

தினமலர் மக்கள் நல கூட்டணிக்கு 20 சதவீதம் வாக்குகள் என்று சொல்லி அது திமுக அதிமுகவுக்கு புளியை கரைக்கும் என்று முதல் பக்க செய்தி கொடுத்திருக்கிறது. அது உண்மை அல்ல.

வைகோ நடத்தும் மதிமுக கட்சி தனியாக நின்று பெற்ற வாக்கு சதவீதம் சுமார் 6 சதவீதம். அவ்வாறு தனியே நிற்கும்போது விஜயகாந்த் தனியே கட்சியை ஆரம்பிக்கவில்லை. வைகோவுக்கு வாக்களித்தவர்களும் விஜயகாந்துக்கு வாக்களித்தவர்களும் ஒரே டெமோகிராபிக்காக இருக்கலாம். இவர்களது வாக்கு சதவீதத்தை கூட்டி எந்த முடிவுக்கும் வரமுடியாது.

ஏனெனில் பெரும்பாலும் இவர்கள் தனியாக நின்றதில்லை. பெரும்பாலும் கூட்டணியில் ஒரு குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டுமே நிற்கிறார்கள். அதனால், அவர்கள்பெற்ற வாக்கு எண்ணிக்கையில் எது அதிமுக வாக்குகள் எது பாமக வாக்குகள் என்று அறிவது கடினம்.

மேலும் பாஜக தனியாக நின்ற காலத்தில் சுமார் 2 சதவீத வாக்குக்களை பெற்றிருக்கிறது. அது மோடியின் தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் நின்றபோது நின்ற தொகுதிகளில் சுமார் 19 சதவீதத்தையும், மொத்த வாக்குக்களில் 5.5 சதவீதத்தையும் பெற்றது. அதே தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக மொத்த வாக்குக்களில் 5.1 சதவீதத்தையும் நின்ற தொகுதிகளில் 15 சதவீதத்தையுமே பெற்றது. இப்போதும் பாஜகவின் உண்மையான வாக்கு சதவீதத்தை கண்டறிவது கடினமே.

இப்போது பாஜகவும் பாமகவும் தனியாக நிற்பதால், அந்த கட்சிகளுக்கு எவ்வளவு வாக்குகள் விழும் என்று தோராயமாக அறியலாம். ஆனால் மக்கள் நல கூட்டணிக்கு விழும் வாக்குகளில் எவ்வளவு வாக்குகள் அந்தந்த கட்சிகளது வாக்குகள் என அறிவது கடினம். ஆனால் திமுகவின் வாக்குகளையும் அதிமுகவின் வாக்குகளையும் அறிவது கடினமல்ல. திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் அந்த வாக்குகள் அனைத்துமே திமுகவின் வாக்குகளே என்கிறேன். சோனியா காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்குக்களை விட குறைவாகவே இருக்கும்.

தற்போது இந்தியாவின் தேர்தல் அமைப்பு கொள்கைரீதியாகவும், ஜாதிரீதியாகவுமே பிளவு பட்டிருக்கிறது என்பது உண்மையென்றாலும், அதனை தாண்டி மக்கள் சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள் என்பதை ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியின் மூலம் காண்கிறேன்.

அதுவும் முக்கியமாக எந்த மத பின்புலமோ, ஜாதி பின்புலமோ அல்லது கொள்கை பின்புலமோ இல்லாமல், ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்திலும் டெல்லியிலும் பிரம்மாண்டமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இது அன்றாட பிரச்னைகளை யார் தீர்ப்பார்கள் என்ற மக்கள் எதிர்பார்ப்பின் விளைவே. இதன் அடிப்படையிலேயே இனி அரசியல் அமையும் என்பதை முன்பே உணர்ந்து கொண்ட மோடி, பாஜகவை இந்துத்துவா சட்டகத்திலிருந்து வெளியே கொணர்ந்து வளர்ச்சியை முன் வைத்தார். இதனை அடுத்த தளத்துக்கு ஆம் ஆத்மி கட்சி நகர்த்தியிருக்கிறது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வளர்வது அதன் மத அடையாள அரசியலிலிருந்தும், வரலாற்று பழிவாங்கல் அரசியலிலிருந்தும் வெளிகொணர்ந்து வளர்ச்சி, அன்றாட பிரச்னை தீர்வு என்ற நடைமுறை அரசியலுக்கு கொண்டு வருவதன் அறிகுறியாக அதனை வரவேற்கிறேன்.

தமிழகத்தில், திமுகவும் அதிமுகவும் ஒன்றை மற்றொன்று ஊழல்கட்சி என்று பிரச்சாரம் செய்வதை போல நகைச்சுவை காட்சி எதுவும் இல்லை. ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்பதாகத்தான் இருக்கிறது. பாமக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவைகளால் ஒரு போதும் தங்களது ஜாதி அடையாளத்திலிருந்து வெளியே வரமுடியாது, அப்படி வரவும் விரும்புவதில்லை. வைகோவும், விஜயகாந்தும் இதுவரை அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கூட்டணி கட்சியாக இருந்ததும், அவர்கள் ஒரு மாற்று செயல்திட்டத்தை முன் வைக்காததும், அவர்களது பலவீனங்களாக சொல்லலாம். வெறுமே தலைமை மாறுவது மட்டுமே செயல்திட்டம் அல்ல. முதலமைச்சர் என்பது மாற்று செயல்திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. வைகோ வந்தால் என்ன செய்வார் என்பதை பற்றி ஒரு தெளிவான கருத்து யாரிடமும் இல்லை. அதே போல விஜயகாந்தை பற்றி அவர் கட்சியை ஆரம்பித்தபோது இருந்த எதிர்பார்ப்பு, பல வருடங்களில் தேய்ந்திருக்கிறது.

ஆகவே இன்று, மாற்று செயல்திட்டத்தை தமிழ்நாட்டில் முன்வைக்க இருக்கக்கூடிய ஒரே கட்சியாக பாஜகவை மட்டுமே பார்க்கமுடியும். ஆனால், அது தீவிரமான அல்லது மென்மையான இந்துத்துவத்தின் சட்டகத்திலிருந்து தன்னை வெளியேற்றிகொண்டு, வளர்ச்சிக்கான வாய்ப்பாக தன்னை முன்னிறுத்த முயற்சி செய்யவில்லை. சமீபத்தில் இந்த தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும், விஜயகாந்துக்கும் கூட்டணி அழைப்பிதழை அனுப்பிவிட்டு உட்கார்ந்திருந்தபோதே அதன் பலவீனம் நன்கு தெரிந்தது. மோடிக்கு தமிழகத்தில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் சிறப்பான பிரதமராக இருக்கிறார் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், தமிழக தேர்தல் பிரதமருக்கான தேர்தல் இல்லை என்பது அவர்களுக்கு தெரியாதா?

தமிழகத்தில் இன்று முக்கியமாக நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதா, திரு மு கருணாநிதி, திரு விஜயகாந்த், திரு அன்புமணி ஆகியோர். பாஜக தேர்தலில் தனியாக நிற்கும் இந்த நேரத்திலும் தனது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பிகாரில் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காததால் பாஜக தோற்றது என்று கருத்து இருக்கிறது. அதனால் அஸ்ஸாமில் முதலமைச்சர் வேட்பாளராக திரு சபர்வால் அவர்களை அறிவித்திருக்கிறார்கள். அங்கு பாஜக வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக ஆகிய இரண்டு மட்டுமே ஓரளவுக்கு வளர்ச்சியையும், ஊழல் ஒழிப்பையும் முன்னுக்கு வைத்தும், உண்மையான மக்கள் பிரதிநிதியாகவும் அவர்களது குரலாகவும் செயல்பட கூடியவை. இதுவரை தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற கட்சிகள் அந்த நம்பிக்கையை கொடுக்கவில்லை. ஜாதி ஓட்டு, கொள்கை ஓட்டு ஆகியவை மூலம் பெறும் எம் எல் ஏ பதவிகள் துஷ்பிரயோகமே செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் பாஜகவுக்கு ஓட்டே இல்லை. அப்படி இருந்தால்தானே மத ஓட்டு? பாராளுமன்ற தேர்தலில் பாஜக நின்றபோதும் மத ரீதியாக தன்னை அடையாளப்படுத்திகொள்ளாமல் வளர்ச்சியை முன்வைத்து மோடி தேர்தலில் வாக்குக்களை கேட்டார். கணிசமான தமிழ்நாட்டினர் அந்த குரலை செவிமடுத்தனர். அதனை தொடர்ந்து பாஜக தமிழகத்தில் ஒரு வளர்ச்சிக்கான வாய்ப்பாக, மக்கள் குறைகளை கேட்கும் பிரதிநிதித்துவத்துக்கான வாய்ப்பாக தன்னை முன்னிறுத்திகொண்டிருந்திருக்கலாம். இதுவரை இல்லை. இனியும் காலம் கடந்துவிடவில்லை.

Series Navigationதினமும் கொஞ்சம் ஜெயகாந்தன்
author

சின்னக்கருப்பன்

Similar Posts

20 Comments

  1. Avatar
    முனைவர் தி.நெடுஞ்செழியன் says:

    எழுத்துரு மற்றும் கட்டுரையின் பக்க வடிவமைப்பு படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. மாற்றியமைக்கவும்.
    நன்றி.

  2. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இந்த தேர்தலில் பா.ஜ.க-வின் செயல்பாடுகள் காங்கிரஸ் தேவலாம் என்ற அளவுக்கு குமட்டல் தருவதாக இருந்தது. ஒரு தேசிய கட்சி விஜய்காந்த்துக்கு இப்படி நடைபாவாடை விரிப்பது அருவருப்பாகவும் ஆபாசமாகவும் இருந்தது. வை.கோ அப்படி நடந்துகொண்டது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் பா.ஜ.க ?

    உண்மையில் தமிழகத்தைப்பொறுத்தவரை அதுவும் தலைவர்களைக்கொண்ட கட்சி மட்டுமே. தமிழிசை, எல்.கணேசன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களோடு கூடவே சுப்பிரமணியம் சாமி வேறு.

    தமிழக பிரச்சினைகள் எதற்காவது சென்ற ஐந்தாண்டுகளாக இவர்கள் ஒன்றுபட்டு மக்களோடு களமிறங்கி போராடியிருக்கிறார்களா அல்லது ஸ்டாலின் போன்று மக்களை சந்திக்க எண்ணியிருப்பார்களா அல்லது தமிழகம் சார்ந்த முக்கியமான திட்டப்பணிகளுக்காக முதல்வரை சந்தித்து பேசியிருப்பார்களா ?

    மத அஜெண்டாவை – குறைந்தபட்சம் தமிழக அளவிலாவது – சுத்தமாக கைவிட்டு, மதுவிலக்கு, விலைவாசி, ஊழல், வளர்ச்சித்திட்டங்கள் போன்ற பிரச்சினைகளில் ஒன்றுபட்டு களமிறங்கியிருந்திருந்தால் – தமது தொலைக்காட்சி ஊடகத்தை வலுப்படுத்தியும், முகநூல், வாட்ஸப் போன்ற தொழில்நுட்ப வசதிகளை முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்தியும் மிக பரந்துபட்ட பொதுமக்களோடு தொடர்பில் இருந்திருந்தால் – விஜய்காந்த், வை.கோ, ராமதாஸ் போன்ற தகுதியேயில்லாத அனைவரையும் ஓரங்கட்டியிருந்திருக்க இயலும்.

    முக்கியமான தருணங்களை தவறவிட்டுவிட்டார்கள் பா.ஜ.க-வினர்.

  3. Avatar
    r. jayanandan says:

    பாமரன் கட்சி.

    நான் முதலமைச்சர் ஆனால்;

    1. சாதிகளை ஒழிப்பேன்.
    2. நதிகளை இணைப்பேன்.
    3. எல்லாருக்கும் பசு ஒன்று , இலவசமாக கொடுத்து,
    பாலை இலவசமாக மக்கள் பெற்றுக் கொள்ள செய்வேன்.
    4. யாரும் பள்ளிக்கே செல்லவேண்டாம். எல்லா மாணவரும் பாஸ் தான்.
    5. இந்தியாவை, அமெரிக்காவேடு இணைத்து, திருவோடு ஏந்த செய்வேன்.
    6. எல்லா கட்சிகளையும் ஒழித்துக்கட்டி, அமெரிக்காவை போல் இரண்டு கட்சிகள் மட்டும் வைத்து, மாற்றிமாற்றி ஆட்சி செய்து, எவ்வளவு முடியுமோ, அவ்வுளவு சுருட்டுவோம்.

    மேலும் தொடரும்………

    ஜெயானந்தன்.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    ” தமிழகத் தேர்தல் விளையாட்டுகள் ” என்ற கட்டுரையில் சின்னக்கருப்பநன்றாகவே புகுந்து விளையாடியுள்ளார். எதையும் மறைக்காமல் அப்பட்டமாக உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். கட்டுரை நியாமானதாவே உள்ளது. இருப்பினும் அத குறித்து சில கருத்துகள் கூற விரும்புகிறேன்.
    கட்டுரையை ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை இலவசத்துக்கும் இருநூறு ரூபாய்க்கும் சுலபமாக இழக்கும் தமிழக மக்களின் அறியாமையை நையாண்டி செல்துள்ளார். அது உண்மைதான். தேர்தல் சமயத்தில் கிடைக்கும் அவற்றைப் பெற்று அப்போது மகிழ்ந்தால் போதுமானதுதான்அவர்களுக்கு! அதன்பின்தான் ஏகப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் உள்ளனவே. அவை போதாதா என்ன?
    அடுத்தபடியாக தோசையைத் திருப்பிப் போடுவதைப்போல ஒரே திராவிடக் கட்சியின் இரண்டு பக்கங்களை மாறி மாறிச் சுட அனுமதித்துள்ளார்கள் என்றும் கிண்டல் அடித்துள்ளார்.என்ன செய்வது? ஒரு காலத்தில் பலம் வாய்ந்த கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தமிழகத்தில் பலவீனமாகி அரை நூற்றாண்டாகிவிட்டது.ஒரே பலம் வாய்ந்த கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆனது. அதிலிருந்து பிரிந்த இதர சில்லறைக் கட்சிகள் ( அ.தி.மு. க.வை ” சில்லறை ” என்று சொல்ல இயலாது ) அனைத்துமே “திராவிட” என்ற அடைமொழியை விடாமல் பிடித்துகொண்டுதான் பிழைப்பு நடத்துகின்றன! இவை அனைத்தும் தாய்க் கழகமான தி.மு. க. வில் இல்லாத எந்த திராவிடக் கொள்கைக்காக கட்சி நடத்துகின்றன என்பதை யோசித்தால் உரக்க சிரிக்க வேண்டும்போல் தோன்றுகிறது. நெற்றியில் போட்டும் பட்டையையும் தீட்டியவர்கள் தங்களை திராவிடக் கட்சியினர் எனக் கூறிக்கொள்வது வேடிக்கையாக உள்ளது.இவர்களுக்கெல்லாம் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்னவென்பது தெரியுமாவென்பதே பெரிய கேள்விக்குறிதான்.எதை வைத்து இவர்களெல்லாரும் தங்களை திராவிடக் கட்சிகள் என்று கூறிக்கொள்கின்றனர் என்பதே தெரியவில்லை. அண்ணாவைப் பற்றியும் அவருடைய எழுத்துக்கள் பற்றியும் இவர்களுக்கு எதாவது தெரியுமா என்பதும் சந்தேகமே.
    அடுத்தது கூட்டணி. எந்த அடிப்படையில் அல்லது கொள்கையில் கூட்டணி வைத்துக்கொள்கிறார்கள் என்று பார்த்தால் உண்மையில் ஒரு கொள்கையும் இல்லை. அடிப்படைக் கொள்கை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும். தற்போது உள்ள மூன்று கூட்டணிகளுக்கும் அதுவே அடிப்படை நோக்கம். தி.மு.க. வின் நோக்கம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவேண்டும். அதற்கு பக்க பலமாக காங்கிரஸ் சேர்ந்துள்ளது. காங்கிரஸ் பா.ஜா.கவை. தமிழகத்தில் காலூன்ற விடாமல் பார்த்துக்கொள்கிறது. அதனால் அந்தக் கொள்கை அடிப்படையில் அது தி.மு. க.வுடன் சேர்ந்துள்ளதில் நியாயம் உள்ளது. முன்பும் இதுபோன்ற கூட்டணி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டும் பலம் வாய்ந்த கட்சிகள்தான். ஒரு காலத்தில் காங்கிரஸ் எந்தப் பக்கம் சாய்கிறதோ அந்தப் பக்கம் வெற்றி வாகைச் சூடிய வரலாறும் உள்ளது. தற்போது எப்படியோ தெரியவில்லை.
    ஆண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவைக் காப்பதில் கண்ணுங்கருத்துமாய் உள்ளது. அவர் தனித்து நின்றே வெற்றி பெறலாம் என்று எண்ணுபவர். தமிழக மக்களில் பலவீனத்தை நன்கு அறிந்தவர் ஜெயலலிதா. பணபலமும் அதிகார பலமும் போதும் என்று நம்புபவர் அவர். அதனால் உதிரிக் கட்சிகள் பக்கம் அவர் திரும்பியும் பார்க்கவில்லை.
    பாட்டாளி மக்கள் கட்சி எப்போதுமே கனவு காணும் கட்சி. அது சாதிக் கட்சி என்று மக்கள் முத்திரை குத்திவிட்டனர். வன்னியர்களைத் தவிர வேறு யாரிடமும் அது ஒரு வாக்குகூட வாங்க முடியாது என்பது ஊர் அறிந்த உண்மை.
    இறுதியாக உள்ளது மக்கள் முற்போக்குக் கூட்டணி. இதில் கம்யூனிஸ்டுகளும், விடுதலை சிறுத்தையும், வை.கோ. வும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து ஒரு கூட்டணி அமைத்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு திராவிட கட்சிகளுமே வரக்கூடாது என்பதே அடிப்படைக் கொள்கை. இவர்களால் இதை நிறைவேற்ற முடியும் என்று உண்மையில் நம்புகிறார்களா? இவர்களின் தனிப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்து விட்டுதான் இந்த முடிவுக்கு வந்துள்ளனரா? இப்போதே தே. மு. தி . க. வில் ஓட்டை விழுந்துவிட்டது! உண்மையில் இவர்கள் ஜெயலலிதாவை இறக்க வேண்டுமெனில் தி.மு.க. வுடன்தான் ஒட்டு மொத்தமாக சேர்ந்திருக்கவேண்டும். அப்போது நிச்சயம் அது நிறைவேறும். ஆனால் அப்படி நிறைவேறினால் கலைஞர்தான் முதல்வர். விஜயகாந்த் அல்ல. அதனால் கேப்டன் சேரமாட்டார். கலைஞர் அதனால் அவருக்கு எதிரி. அதே வேளையில் ஜெயலிதாவை இறக்குவதே அவரின் ஒரே குறிக்கோள்! இது இந்த ஜன்மத்தில் முடியுமா என்று அவர் கொஞ்சமாவது எண்ணிப்பார்க்கும் நிலையில் இல்லை!
    இப்போது வேறு வழியில்லாமல் இந்தக் கூட்டணிகள் கொள்கைகள் ஏதுமின்றி களத்தில் இறங்கிவிட்டன! அருமையான விளையாட்டுதான் இது! இதில் தமிழக மக்கள் எப்படி விளையாடப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போமே?…அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  5. Avatar
    r. jayanandan says:

    மேலே நான் உளறிக்கொட்டியதற்கு காரணம், பல கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை படித்து விட்டு, சித்தம் , பித்து பிடித்து எழுதி விட்டேன். வாக்காள பெருமக்களே, சின்னணக்க் கருப்பன் கட்டுரையை போல், பஜாக வினர், உன்னத ஆட்சியாளர்களாக,
    தமிழகத்தில் மலர்ந்தால், என்னை போன்ற பல பித்தர்கள்,
    சித்தம் தெளிய வாய்ப்புள்ளது.

    நன்றி, வணக்கம் ஜெயானந்தன்.

  6. Avatar
    r. jayanandan says:

    மும்முனையாக அலையும், இந்த கட்சிகள், உண்மையிலேயே, மக்களுக்கு சேவை செய்யவா அல்லது கொள்ளை அடிக்கவா !
    முன்னதை, இதுவரை, ஆட்சியில் இருந்தவர்கள் முழுமையாக செய்ததாக,
    சான்றுகள் இல்லை. கொள்ளையடித்து, மாட்டிக்கொண்டு, அலையே அலை என்று, நீதி மன்றத்தை நோக்கி நடப்பது , நாடறிந்த உணமை.

    எந்த கட்சியாவது, நாங்கள், மக்களுக்கு சேவை செய்யும் போது,
    அரசின் நிதியை தொட மாட்டோம். திட்டங்களை கொடுத்துவிட்டு,
    நிதி ஒதுக்கீட்டை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், பார்த்துக் கொள்வார்கள். அவர்களை, கண்காணிக்க , , நீதிமன்றத்தால், நியமிக்கப்படும் ஒரு குழுவே பார்த்துக் கொள்ளும். அதி, தவறு நடந்தால், கடுமையான தண்டனை கொடுக்க, சட்டம் இயற்ற வேண்டும். இதற்கு, எந்த கட்சியாவது முன்வருமா?
    கேளுங்கள் வாக்காள பெருமக்களே, உங்களை நோக்கி, உங்கள் இல்லம் தேடி வரும், சட்ட மன்ற உறுப்பினர்களிடம் கேளுங்கள்.

    ஜெயானந்ததன்.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      சும்மா ஜோக்கடிக்காதீங்க சார் :)

    2. Avatar
      BSV says:

      நிதி ஒதுக்கீட்டை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், பார்த்துக் கொள்வார்கள். அவர்களை, கண்காணிக்க , , நீதிமன்றத்தால், நியமிக்கப்படும் ஒரு குழுவே பார்த்துக் கொள்ளும். அதி, தவறு நடந்தால், கடுமையான தண்டனை கொடுக்க, சட்டம் இயற்ற வேண்டும்.//

      This is wrong.

      இந்திய மக்களாட்சியில் மக்கள் வாக்குகளைப்பெற்று ஆட்சி அமைக்கும் கட்சி தான் நினைக்கும் திட்டங்களை அமல் படுத்த விரும்புகிறது. திட்டதிற்கான முறைப்படி நிதியை ஒதுக்கீடு செய்து அரசு அதிகாரிகளின் மூலமாக நிறைவேற்றுகிறது. அவர்கள் சரியாக அதைச்செய்கிறார்களாக என்பதை அவ்வரசே கண்காணிக்கும். இங்கே நீதிமன்றம் எங்கே வந்தது? அப்படி வந்தால் நீதிமன்றம் அரசின் திட்டங்ளை நிறைவேற்ற அரசால நியமிக்கப்பட்ட கருவியாக அல்லவா ஆகிவிடும்? அரசு ஆட்சி செய்யுமா? இல்லை நீதிமன்றமே அரியணை ஏறி ஆட்சி செய்யுமா?

      1. Avatar
        BSV says:

        This is wrong; This refers to Jayanandan’s statement: நிதி ஒதுக்கீட்டை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், பார்த்துக் கொள்வார்கள். அவர்களை, கண்காணிக்க , , நீதிமன்றத்தால், நியமிக்கப்படும் ஒரு குழுவே பார்த்துக் கொள்ளும்.

        It should have been placed at the beginning. Sorry.

  7. Avatar
    ஷாலி says:

    //…தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக ஆகிய இரண்டு மட்டுமே ஓரளவுக்கு வளர்ச்சியையும், ஊழல் ஒழிப்பையும் முன்னுக்கு வைத்தும், உண்மையான மக்கள் பிரதிநிதியாகவும் அவர்களது குரலாகவும் செயல்பட கூடியவை…//

    தமிழக தேர்தல் விளையாட்டில் ஓரங்கட்டப்பட்டு ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு வாடி நிற்கும் ஒற்றை கொக்காக களத்தில் நிற்கும் பாஜக வின் பரிதாப நிலையை தூக்கி நிறுத்த, திரு. சின்னக்கருப்பன் செய்யும் பில்டப் கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது.

    ஊழல் கட்சி என்றால் அது,காங்கிரசும்,கழகமும் மட்டுமாம்.பச்சப் புள்ளே பாஜக வுக்கு ஊழல் விரலை வாயில் வைத்தாலும் கடிக்கத் தெரியாதாம்.
    பச்சப் புள்ளைக்கு கடிக்கத்தெரியாதுதான்,ஆனால் நன்றாகக் சப்பி சாப்பிடும்.பங்காரு லட்சுமணன் முதல் எடியூரப்பா ஊழல் வரை,கார்கில் சவப்பெட்டி ஊழல் தொடங்கி இன்றைய பனாமா பேப்பர் லீக்ஸ் வரை ராணுவக் கொள்முதலில் இவர்கள் ஆடிய தேச பக்த ஊழலாட்டம் ஊர் சிரித்த கதை நாடறிந்து நாறிய ஒன்று.

    காங்கிரசின் தலைமை சரியில்லை.கழகத்தலைமையும் சரியில்லை.அப்ப பத்தரை மாற்று தங்கம் பாஜக தலைமையா? அதையும் பார்த்துவிடுவோம்….

    போலிஸ் மந்திரியாக இருந்தபோது தலைமறைவாகி,பின்னர் பிடிபட்டு, கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, மூன்று மாதம் மாமியார் வீட்டில் களி தின்று கம்பி எண்ணியவர்.

    சொந்த மாநிலத்தில் இருக்கவும்,நுழையவும் உயர் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு,இரண்டு வருடங்கள் எங்கோ “அஞ்ஜாதவாசம்” இருந்தவர்.

    கவர்னர் பதவிக்கு ஆசைப்பட்ட நீதிதேவன் மயக்கத்தினால், இன்று களங்கம் நீங்கி,பதவிக் களத்தில் பவனி வருகிறது பாஜக தலைமை.

    இது தெரிந்தும்…உண்மை புரிந்தும்…இன்னும் மயக்கமா?
    சொல்லுங்கோ..சின்னப்புள்ளே…சின்னக்கருப்பன்!

  8. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    ஊழலை அளவுகோலாகக்கொண்டு இந்திய மட்டுமல்ல உலகிலேயே பெரும்பாலும் எந்த அரசியல்வாதி/கட்சியையும் அளக்க முடியாது என்பதால் அதை தவிர்த்துவிடலாம்.

    ஏனெனில் …

    எமர்ஜென்ஸியில் சுளுக்கெடுத்த மகாராணியாருக்கு நடைபாவாடை விரித்ததும் ;

    எதற்கோ ஆசைப்பட்ட நீதிதேவனின் கணக்குப் பிணக்கத்தினால் – சுணக்கத்தினால் களங்கம் நீங்கி பதவியில் நீடிக்கும் தமிழக கட்சித்தலைமையும்

    அனைவரும் அறிந்த காட்சிகளே.

  9. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    ஆனால் இப்படி ஒரு போடு போட்டீர்கள் பாருங்கள் :

    // தமிழக தேர்தல் விளையாட்டில் ஓரங்கட்டப்பட்டு ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு வாடி நிற்கும் ஒற்றை கொக்காக களத்தில் நிற்கும் பாஜக வின் பரிதாப நிலையை //

    பா.ஜ.க-விற்கு தமிழகத்தில் இதுவரை வோட்டு வங்கியே இல்லை. எனவே ”ஓரங்கட்டப்பட்டு” என்ற பதம் பொருந்தாது. (என்னவோ இதுநாள்வரை மையத்தில் இருத்தப்பட்டு இருந்தது போலத்தான்)

    நான் ராஜாஜியையேஏஏஏஏஏ எதிர்த்து அரசியல் செய்தவன் ;
    நான் காமராஜரையேஏஏஏஏஏ எதிர்த்து (எப்படி “எதிர்த்தார்கள்” என்பது முடை நாற்றமடிப்பது என்பதால் அது வேண்டாம்) அரசியல் செய்தவன் ;

    கடைசியில் ஒரு விஜய்காந்துக்காக தவமிருந்த காட்சி இருக்கிறதே …

    பழம் நழுவி பாலில் விழுவதற்காக தவமாய் தவமிருந்த கோலமிருக்கிறதே …

    அடடாஆஆஆஆஆஆ !!!

    1. Avatar
      BSV says:

      ஒரு கட்சியின் தனி நடத்தை மக்களுக்கு முக்கியமன்று. உங்களைப்போன்று வெட்டி அரசியல் பேசுபவருக்குத்தான் அது சரி.

      அரசியல் என்பது நிரந்தர உருவங்களின் வடிவமாக இருக்கவே முடியாது. காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதுதான் அரசியல். நிரந்தர அரசியல் எனபது அதன் அடிப்படைக்கொள்கைகளில் கூட இருக்க முடியாது. Politics is the art of possible.

      இருந்தால் என்னவாகும்? முட்டாள்தனங்களின் ஒட்டுமொத்த உருவமாகும். முட்டாள்கள் அரசியல் செய்தால் மக்களுக்குத்தான் இழப்பு. தன் ஈகோவைக் காப்பாற்றிக்கொள்ள மக்களைச் சுட்டுத்தள்ளுவான். பிற மாநிலங்களோடு ஈகோ போர் செய்து உதவி செய்ய வந்தவர்களையும் விரட்டி அடிக்கும் மூடனவன்.

      எவர் எவர் காலில் விழுந்தாலும் அதனால் இறுதிப்பலன் மக்களுக்கு வருகிறதா? அதாவது மக்கள் வாழ்க்கை அமைதியாகவும் அடிப்படை உரிமைகளைப்பெற்று வாழ்வதாகவும் நலிந்தோரை வலிந்தோர் வாட்டாத சமூகமாகவும். எல்லாருக்கும் எல்லாமே ஓரளவுக்கு கிடைக்கும்படியாகவும், முயன்றோர் தன் முயற்சியின் விளைவை தாமும் அனுபவித்து, பிறருக்கு நல்கி வாழும் சமூகத்தை உருவாக்க‌ உதவுவதாகவும் இருந்தால் போதும். நான் அரசியல்வாதியாக இருந்தால், எவர் காலிலும் விழுவேன். எனக்கு தனிப்பட்ட மானம் ரோசம் இருக்கத் தேவையில்லை. பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் தகப்பன் மானம் ரோசம் பார்த்தால் என்னவாகும்? அது போல.

      மக்களின் பசியை விரட்ட பத்தும் பறந்து போக வேண்டும்!

      1. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        // நான் அரசியல்வாதியாக இருந்தால், எவர் காலிலும் விழுவேன். எனக்கு தனிப்பட்ட மானம் ரோசம் இருக்கத் தேவையில்லை. //

        விழலாம், தவறில்லை. அது தனது சுயலாபத்திற்காகவன்றி மக்களுக்காகவெனில் அப்படி காலில் விழுவது மக்களின்மீது சம்பந்தப்பட்ட அரசியல்வாதி வைத்திருக்கும் அக்கறையையும் மாளாக்காதலை குறிப்பதாக பொருள் கொள்ளப்படும் ; எப்படி பஞ்சகாலத்தில் நேரு உணவுக்காக உலகமெங்கும் கையேந்தினாரோ, அப்படி.

        ஆனால் தான் கொள்ளையடிப்பதற்காக காலில் விழுவதுதான் ஆபாசமாக இருக்கிறது.

  10. Avatar
    smitha says:

    Johnson,

    தி.மு.க. வின் நோக்கம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவேண்டும். அதற்கு பக்க பலமாக காங்கிரஸ் சேர்ந்துள்ளது. காங்கிரஸ் பா.ஜா.கவை. தமிழகத்தில் காலூன்ற விடாமல் பார்த்துக்கொள்கிறது. அதனால் அந்தக் கொள்கை அடிப்படையில் அது தி.மு. க.வுடன் சேர்ந்துள்ளதில் நியாயம் உள்ளது. முன்பும் இதுபோன்ற கூட்டணி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டும் பலம் வாய்ந்த கட்சிகள்தான்.

    It is not the congress that has prevented BJP from getting a foothold in TN. BJP has & is always seen as a north indian party here. Also, it has never identified a CM candidate thus far due to squabbling between its leaders.

    Congress has no option but to align with DMK. As Ditto with DMK. As it is, it is weak. It has been further weakened after Vasan broke away to form the TMC.

    Congress will not be able to win even 5 seats this time.

    ஒரு காலத்தில் காங்கிரஸ் எந்தப் பக்கம் சாய்கிறதோ அந்தப் பக்கம் வெற்றி வாகைச் சூடிய வரலாறும் உள்ளது. தற்போது எப்படியோ தெரியவில்லை.

    Not true. Congress always aligned with either DMK or the AIADMK in both the assy & parliament & hence they could win. When then stood alone in 1989 & 2014, they were routed.

  11. Avatar
    BSV says:

    //It is not the congress that has prevented BJP from getting a foothold in TN. BJP has & is always seen as a north indian party here. Also, it has never identified a CM candidate thus far due to squabbling between its leaders.//

    பி ஜே பி தமிழ்நாட்டில் அரசியல் நடாத்த தடை யாக இருபபது அதன் இந்துத்வா கொள்கைகள். தமிழ் நாட்டு இந்துக்கள் தங்கள் மதம் அபாயத்திலிருக்கிறது. உடனே வந்து காப்பாற்றுங்கள் என்று இவர்களைக் போய் மன்ராடவில்லை. மோடி, அத்வானி, பகவத், தகோடியா இவர்களின் கொள்ளுப்பாட்டான்கள் இவ்வுலகில் அவதாரம் செய்வத்ற்கு முன்பே தமிழகத்தில் இந்துமதம் தன் தனித்தன்மையோடே வியாபித்து இன்றும் வாழ்கிறது. கிருத்துவமதமும் இசுலாமும் இங்கே வாழ்கின்றன‌. ஆனால் மதுரை மீனாட்சியம்மன் தேர்த்திருவிழாவுக்கோ, கள்ளழகர் ஆற்றில் இறங்குவதையே ஊரே கொண்டாடுகிறது. இதனால், இந்துத்வா பருப்பு இங்கு வேகவில்லை. புலி வருகிறது…புலி வருகிறது என்ற கூப்பாட்டை நம்ப தமிழ் மக்கள் நம்பி ஏமாற தயாராக இல்லை.

    இதை நன்குணர்ந்த தமிழ்நாட்டு பிஜேபி தலைவர்கள், இந்துதவா கொள்கைகளைப் பற்றி வாயே திறப்பதில்லை. பெரியாரையும் பற்றி பேசுவதே இல்லை.

    பிறகு?

    இதன் பின்னர்தான் இவர்களுக்குப் பிரச்சினை? எதைப்பற்றி பேசுவது? மக்கள் பிரச்சினைகளைப் பற்றியும் அவற்றைத் தீர்ப்பதிலுமே கவனம் வைக்கலாம். ஆனால் அதை மற்றவர்கள் இவர்களைவிட நன்கு செய்கிறார்கள். அதாவது பேசவாவது செய்கிறார்கள். தமிழக பிரச்சினைகளப்பற்றி இவர்கள் பேசமுடியாகாரணம். பல தமிழகத்துக்கும் மைய அரசுக்கும் ஒன்று சேரா வகையைச்சேர்ந்தவை. இரு தோணிகளில் காலூன்றினால், பொத்தென்று கடலுக்குள் விழவேண்டியதுதான்.. என்று தெரிந்து இங்கிருப்பதாக அங்கும், அங்கிருப்பதாக இங்கும் சீன் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    கடைசியாக, ஓரளவுக்கு இந்துத்வம் செல்லுபடியாக, மத அரசியல் செய்து ஓரிரு இடங்களையாவது வெல்ல வகை செய்யும் கோயம்புத்தூரிலும் நாகர் கோயிலிலும், அல்லது இந்துத்வா கொள்கைகளை ஏற்றுக்கொண்ட தமிழக பார்ப்ப்னர்கள் நிறைந்த மயிலாப்பூர, தி நகர் போன்ற தொகுதிகளின் நின்று பார்க்கிறார்கள். தமிழகபார்ப்ப்னர்களிலும் இந்துத்வா என்றால் உணர்ச்சிவசப்படுவோர் எண்ணிக்கை குறைவே. இந்துத்வா விலைவாசியைக் குறைக்குமா? பஸ் ஃபேரைக் குறைக்குமா? என்ற பிராக்டிகல் சென்ஸ் உள்ளவர்கள். முழுக்க முழுக்க இவர்களையும் பி ஜே பி நம்ப முடியாது.

    பி ஜே பி இப்படி மதம் தங்களைக் கரை சேர்க்கும் எனற கனவை விட்டுவிட்டு, தமிழ்ச்சமூகமே தம்மை கரைசேர்க்கும் என்ற நினைப்பை ஏற்று, தமிழ்நாட்டுப்பிரச்சினைகளை மைய அரசுக்குக் கொண்டுபோய் தீர்வுகள் காணும் முயற்சிகளின் இறங்கிய பின்னர், தமிழ் ம்க்களை எதிர்நோக்கி வாக்குக்கள் கேட்க முடியும்.

    நார்த் இன்டியன் பார்ட்டி சவுத் இண்டியன் பார்ட்டி என்பனவெல்லாம் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போடும் கூட்டத்துக்கு மட்டுமே பொருந்தும்.

  12. Avatar
    smitha says:

    BSV,

    No one talks of EVR these days. In fact, the present generation does not even know who EVR is.

    The fact that BJP espouses hjindutva is not wrong. Even the Supreme Court has justified the usage of hindutva.

    You have yourself admitted that the local BJP leaders do not talk of hindutva here as you have said.

    It is not that the local leaders do not talk of local issues. They do, but they squabble amongst themselves & this affects the party.

    Your argument that brahmins who are in large numbers in T.Nagar & Mylapore & Kovai may support BJP is amusing. The total percentage of the brahmin population in TN is 2%.

    Even assuming that all of them vote for the BJP, it cannot win. Brahmins can never influence the results of any election.

    1. Avatar
      BSV says:

      ஈ வே ரா பெரியார் இராமசாமி அவர்கள் ஒரு தீர்க்கதரிசியன்று.

      பெரியார் ஒரு மதம் சாரா சீர்திருத்த வாதி மட்டுமே. தான் வாழ்ந்த சமூகத்தில் தான் கண்ட குறைகளில் எவற்றை பெரிதாக நினைத்தாரோ அவை மட்டுமே அவரின் தாக்குதல் இலக்காயின. மக்களுக்குச் சொல்லிசொல்லி அவர்களை ஏற்றுக்கொள்ள வைத்து அக்குறைகளைப்போக்குவதுதான் அவரின் வாழ்க்கைத் தொண்டு.

      அவர் பத்து தலைமுறைகளுக்குத் தான் பேசப்படவேண்டுமென்று செயல்படவில்லை. நினைக்கவுமில்லை. அவர் அப்படியே வாழ்ந்தாலும் நினைத்தாலும், அவர் கண்ட குறைகள் நீங்கும் போது அவரும் மறக்கடிக்கபபடுவார். பள்ளிப்படிப்பை முடித்தபின் எத்தனை பேர் தமக்குச் சொல்லித்த ஆசிரியர்களை நினைத்துப்பார்க்கிறோம்? நோயக்குணப்படுத்திய மருத்துவரின் பெயராவது நினைவிருக்குமா? இல்லை அவ்வாசிரும் மருத்துவரும் தம் பெயர் இவன் நினைவில் நிற்க வேண்டுமென நினைத்தா இவனுக்கு உதவுகுகிறார்கள்? பெரியார் ஒரு சமூக மருத்துவர்.

      பெரியாரின் சீர்திருத்தங்கள் அல்லது சிகிச்சைகள் வெற்றியடைந்தனவா: என்பதுதான் ஆராய்வுக்குட்படுத்த்ப்பட வேண்டிய கேள்வி. அக்கேள்வியை ஆராய உங்களால் முடியாது. காரணம் அதற்கான முதல் தகுதி பெரியார் ஒரு சீர்திருத்தக்காரர் என்பதை ஏற்கும் மனது வேண்டும். மேலும் நீங்கள் அவர் காண்ட நோய்க்கரணிகளுள் ஒரு சாரார் வழிவந்தோர் ஒன்றால் பாதிக்கப்பட்டோரின் பரம்பரை. குற்றம் சாட்டப்பட்டவரே எங்கேனும் நீதி வழங்குபவராயிருப்பாரா?

  13. Avatar
    BSV says:

    பதில் சரி. சொன்ன விதம் சரியில்லை.

    கருநாநிதி மீது நம்பிக்கை வைக்க முடியாது என்று ஒரேயடியாகச் சொல்லி விடலாமே> அஃதென்ன ஆபாசம்?

    இவரில்லை; அவருமில்லை என்பதுதான் இன்றைய நிலை. ஒருவர் ஊரெல்லாம் சொத்து சேர்த்து குளிரான் அழகிய எஸ்டேட் பங்களாவில் வாழ்பவர். இந்திய ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கி அமைச்சர்கள், அரசு அதிகாரிகள அனைவரையும் தன் காலில் மண்டியிட வைத்து இன்பம் காணும் சர்வாதிகாரி. இன்னொருவர் தன் ஜாதிக்காகத்தான் போராடுகிறேன்; தன் ஜாதிக்காகத்தான் கட்சி தொடங்கினேன் என்று தலித்து மக்களை எதிர்க்க பிற் ஆதிக்க குழுக்களோடு குலாவிக்கொண்டே தாங்கள் ஜாதிக்கட்சியே இல்லை என்று மக்கள் காதுகளில் பூச்சுத்தி பார்க்கிறார்.. அவர் மகன் அமைச்சராக இருந்த ஒரு சில ஆண்டுகளில் ஏராளம் ஊழல்கள்; இந்தூர் நீதி மன்றத்தில் வழக்கு. தமிழக முதலமைச்சராக ஆசைப்படுமிவர் மற்றவருக்கு சவால் விடுகிறார். இன்னொருவர் தன் மனைவி, மச்சான என தமிழகத்தை தன் குடும்பச்சொத்தாக்க ஆசைப்படுகிறார். குடிபோதையில் தள்ளாடிக்கொண்டே குடியை ஒழிப்பேன் என மக்களைக் கோமாளிகளாக்கிக்கொண்டிருக்கிறார். பொதுவுடை கட்சிகளோ எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என பேயாய் அலைகிறார்கள்.

    எல்லாருமே ஓர் அல்லது இரு அல்லது அதற்குமேல் ஆபாசமான அரசிய்ல வாழ்க்கை வாழ‌ ஒருவர் மட்டுமே ஆபாசமென்று சொல்லி எவர் காதில் ;பூச்சுத்த நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்?

  14. Avatar
    smitha says:

    BSV,

    You have blindly said that I do not have the ability to assess EVR. That is itself against EVR’s principles where he used to tell in his meetings that people should use their intellect & not blindly follow him.

    His was a personal driven agenda born out of his hatred towards Brahmins. He drove a wedge & divided the society into Brahmins vs non Brahmins. TN has a history of severe caste clashes & that has only increased, thanks to EVR.

    He was blind to the wrongs done to dalits. In fact, he even chastised them for clashing with upper castes. He just gave statements but did nothing concrete for them.

    His silence on the keezhvenmeni massacre is proof for this.

    He violently attacked Hinduism & did not have the guts to speak out against the divisions in other religions. In almost all his speeches, he only criticized brahmins.

    He spoke & wrote on women empowerment but how were nagammai & maniamma treated? He campaigned for self respect marriages & but his wedding to maniammai was register wedding.

    For 50 years he campaigned against Brahmins & spread canards about them. This has poisoned the Tamil society & we are suffering even today.

Leave a Reply to smitha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *