தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாக மாநாடு அழைப்பிதழ்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 19 of 22 in the series 16 நவம்பர் 2014

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாக மாநாடு அழைப்பிதழ்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் லெட்சுமி விலாஸ் வங்கி மேல்மாடியில் எதிர்வரும் 20.11.2014 ஆம் ஆண்டு மாலை 5 மணியளவில் மாநாடு நடைபெற உள்ளது. இதன் சம்பந்தமாக செய்தியாளர்களிடம் கூறிய தமுஎகச அமைப்பைச்சேர்ந்த கவிவாணன் கூறுகையில், சுதந்திரப்போராட்டத்தில் நம்நாட்டு விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட சுப்பிரமணிய சிவா, தமிழகத்தில் இரண்டாவது முழு நீள நாவலான கமலாம்பாள் சரித்திரம் எழுதிய நாவலாசிரியர் ராஜம் அய்யர், மணிக்கொடி பத்திரிக்கையின் ஆசியராகவும், மணிக்கொடி சிறுகதைகள் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருதுப் பெற்ற எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான பி.எஸ்.இராமையா, எழுத்து என்ற பத்திரிக்கையை தொடங்கி புதுக்கவிதைக்கு வளம் சேர்த்தவரும், சுதந்திர தாகம் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சி.சு.செல்லப்பா போன்றவர்களை நினைவ+ட்டும் விதமாகவும், வத்தலக்குண்டு மண்ணில் கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கிய பங்களிப்பை நல்கி வரும் தமிழகத்தின் முன்னோடி இலக்கிய இயக்கமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. எனவே இலக்கிய அன்பர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602

Series Navigationநந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழாநிலையாமை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *