தாகூரின் கீதப் பாமாலை – 18 வைகாசி வாழ்த்து

This entry is part 20 of 43 in the series 17 ஜூன் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எவருடைய வீணை இனிய குரலில் வாசிக்குது
எனது தனித்துப் போன புதிய வாழ்வினிலே.
காலை மலர்ந்த தாமரை மலர் போல்
கட்ட விழ்க்கும் இதழ்களை என் இதயமே.

எல்லா அழகுமயம் விழிதெழும், அனைத்திலும் களிப்பு
இதயத்தில் நிரம்பும் இன்பம் ஒரு கண்ணி மைப்பில்
எங்கிருந்தோ கொணரும் தென்றல் ஓர் புத்துணர்வை
எடுத்த கற்றும் ஆத்மா அணிந் திருக்கும் அங்கியை.

களிப்பும் சோகமும் ஆழமாய் உள்ளத்தைத் தொடும்
விளிக்கச் சொற்கள் இல்லை, விளக்க முடிய வில்லை
எனது வேட்கைகள் இன்று அகில மெங்கும் ஒலிக்கும்
வனமும், நதியும்  நடுங்கும் உணர்ச்சி வசப்பட்டு.

+++++++++++++++++++
பாட்டு : 247 தாகூர் தன் 33 ஆம் வயதில் எழுதியது (மே 1893).  இப்பாடலை தாகூரே தன் தமையன் துவீந்திரநாத் மகன் (25 வயது)
சுதீந்திரநாத் திருமணத்தின் போது களிப்பு உணர்ச்சியோடு பாடி இருக்கிறார்.  அப்போது இரவீந்திதிரநாத் தாகூர் திருமணமாகி நான்கு நளினக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சமயம்.
+++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] June 11, 2012

Series Navigationதாய்மையின் தாகம்……!வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 17
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் திரு ஜெயபாரதன் ஐயா,

    வழமைபோல அருமையான, தனிப்பட்ட முறையிலான தமிழாக்கம். பகிர்விற்கு நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புமிக்க பவள சங்கரி,

    தாகூரின் நுண்மைக் காவியப் படைப்புகள் வாலிப வயதிலே தளிர்த்து கனி தர வளர்ந்து விட்டன. இந்த அரிய நூலை எனக்குத் தேடி அனுப்பியர் என் ஆத்ம நண்பர் ஒருவர்.
    உங்கள் இனிய பாராட்டுக்கு நன்றி.
    அன்புடன்
    ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *