தாகூரின் கீதப் பாமாலை – 31 நீ அருகில் உள்ள போது… !

This entry is part 27 of 31 in the series 16 செப்டம்பர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நேற்றிரவு அப்பாட்டு வந்த தெனக்கு
நீ அருகில் இல்லாத போது !
அது சொன்னது : நான்
ஆயுட் காலம் முழுதும் போராடி வந்த
ஆர்பாட்டத்தை !
காரிருளில் ஓரு கணம்
தாரகை போல்
வார்த்தைகள் இசையோ டிணைந்தன
நீ   அருகில் இல்லாத போது !

பொழுது புலர்ந்ததும்
எனக்கொரு நம்பிக்கை
இசையோடு பாட வேண்டும்  நான்
உனக் காக
நான் இறக்கும் முன்பு !
ஆயினும் நான்
முயன்றிட முனையும் போது
இன்னிசைக் குகந்த சொற்கள்
இழந்து தவிக்கும்,
நீ என்னருகில் உள்ள போது !

+++++++++++++++++++++++++
பாட்டு : 9 தாகூர் தன் 54 ஆம் வயதில் (செப்டம்பர் அல்லது அக்டோபர் , 1916 இல் ) தானே மொழிபெயர்த்து  நாடோடி [Fugitive] என்னும் தலைப்பில் 17 ஆம் பாடலாய் 1919 ஆண்டில் எழுதியது.
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com]  September 10, 2012

Series Navigationஇலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *