தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை !

This entry is part 24 of 31 in the series 31 மார்ச் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 58 

தனிமை விளிம்பிலே வனிதை !

 

 Tagore

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

பரந்த இருள் மூட்டத்தில் தவறிப் போய்

இரவு மலர் விழுந்தது

உறக்கத்தின் வேலி ஓரத்தில்  !

காலை இளம் பரிதி வீசும்  முதல்

கதிர்ச் சுடரை வணங்கு தற்கு

குருட்டுத் தனமாய்

இருட்டில் வெளியேறித்  தவறுதலாய்

தன்னந் தனியாய்  அவள்

வந்திருக் கிறாள் !

வெகு துணிச்சலில் மெல்லுடல் மேனியாள்

வீணான முயற்சியில்

இப்படி நளினமாய் முனைந்தது

எத்தகை வியப்பு !

என் கண்கள் காணத் தவறின அவள்

உடல் அங்கங்களின்

எடுப்பான இளமை வனப்பை !

 

வந்தவள் முன் நிற்பதை

வணக்கத்துக் குரிய முறையில்

என்ன பெயரிட்டு அழைப்ப தென்று

எனக்குத் தெரிய வில்லை,

இருள் வானில்

திரள் திரளாய்ப் பயணம் செய்யும்

வானத்து மீன்களுடன்

வந்தாள், மீண்டும் போனாள்  அவள்

ஏகாந்த வேலியின் ஓரத்தில் !

அவள் விட்டுச் சென்ற

அகந்தை நளினத் தூண்டலுக்கு

தகவல் கூறத் தெரிய வில்லை  :

இரவின் மூடிய வாசல் வழியே

ஏனிவள்  வந்தாள் என்று ?

 

+++++++++++++++++++++++++

பாட்டு : 278   தாகூர்  தன் 64 வயதில் [ஏப்ரல்  1925] எழுதிச்  சாந்திநிகேதன இதழில் வெளியிடப் பட்டது.

+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com]  March 26, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஜெயந்தி சங்கரின் “ திரிந்தலையும் திணைகள்”போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *