திண்ணையின் இலக்கியத் தடம் -26

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

நவம்பர் 6 2003 இதழ்: இஸ்லாத்தில் பிரிவினை- முகம்மது இஸ்மாயில்- ஒன்றாயிருந்த சமூகம் இன்று இரண்டாய்த் தோன்றுவதன் பல காரணங்களில் முக்கியமான காரணம் என்னவெனில் முஸ்லீம்களில் சி(ப)லர் அல்லாவுக்கு இணை வைக்கிறார்கள் என்பதே ஆகும்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203110610&edition_id=20031106&format=html )

திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்- எச். பீர் முகம்மது- இஸ்லாமிய சட்ட நடைமுறை (ஷீஆ) நவீனப் போக்குக்கு ஒவ்வாததாக அமைந்திருக்கிறது. குர்ஆனின் மொத்தமுள்ள ஆராயிரம் வசனங்களில் இருநூறு வசனங்கள் மட்டுமே சட்டரீதியான கண்ணோட்டம் உடையவை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203110613&edition_id=20031106&format=html )

உயிர்ப்பலியும் பெரியாரும் – ஞாநி- தமிழ்நாட்டில் இருப்பது போலப் புதுவை யூனியன் பகுதியிலும் உயிர்பலித் தடைச் சட்டம் வேண்டும் என்று கோரி 1964ம் ஆண்டு தமது 85வது வயதில் காரைக்கால் காளி கோவிலெதிரே போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். சட்டம் கொண்டு வருவதாக உறுதி அளித்த பின்னரே போராட்டம் கைவிடப் பட்டது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20311062&edition_id=20031106&format=html )

கண்ணப்ப தம்பிரான்- அஞ்சலி -ஞாநி- கோவில் சடங்காக வட தமிழ் நாட்டில் உயிர்த்திருந்த கூத்தை கண்ணப்ப தம்பிரான் சடங்காக மட்டும் பார்க்கவில்லை. அதை நிகழ்கலையாகவே அவர் அணுகினார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60311063&edition_id=20031106&format=html )

திறந்த விழிகள் :கட்டுக்கோப்பான படைப்பு முறை நோக்கி :ஆர். ஆர். சீனிவாசனின் விவரணப் படங்கள்- யமுனா ராஜேந்திரன்- சீனிவாசனது படங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவதாக சமகால அரசியல் சார்ந்த விவரணப் படங்கள், இரண்டாவதாகப் பண்பாட்டுக் கோலங்களைப் பற்றிய படங்கள், மூன்றாவதாகத் துயர் குறித்த படங்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60311069&edition_id=20031106&format=html )

எனக்குப் பிடித்த கதைகள் -84- மூலதனம் என்னும் அளவு கோல் விந்தனின் ‘மாடும் மனிதனும்’ – பாவண்ணன்- ஒரே சமயத்தில் மாடுகளும் ஒரு பண்ணையாளும் அகாலமாக இறந்து விடுகின்றனர். மனைவி அந்த விசுவாசமான ஆள் போனதற்கு வருந்துகிறார். பண்ணையாரோ “இன்னொரு ஆள் முதலில்லாமல் கிடைப்பான். மாடுன்னா மூலதனத்தை எடுத்து வைக்கணுமே” என்று வருந்துகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60311061&edition_id=20031106&format=html )

கடிதங்கள்- நவம்பர் 13, 2003- நாகூர் ரூமி – ஆபிதின் படைப்புகளை சாரு நிவேதிதா திருடியதற்கு ஆதாரமாக சாருவே கைப்பட எழுதிய கடிதங்களும், சாருவின் முதல் மனைவியாக வாழ்ந்து ‘பட்ட’ சகோதரி அமரந்தா (விசாலாட்சி) கடிதங்களும் – சென்னை ஸ்னேகா வெளியீடான ஆபிதினின் ‘இடம்’ சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20311131&edition_id=20031113&format=html)

எதிர்வினை: நவீன இலக்கியவாதிகளுக்கு ஞாநி வழங்கும் Chastity Belt – மனுஷ்ய புத்திரன்- நடிகை லஷ்மியின் குரூரமான கட்டைப் பஞ்சாயத்து நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதிப் பணம் பண்ணும் நீங்கள் பிறரிடம் போய் ‘நீ சுஜாதா புத்தகம் போடுகிறவனா? கமலஹாசனைப் போய்ப் பார்க்கிறவனா என்றெல்லாம் சவடால் அடித்துக் கொண்டிருப்பது தமிழ் இலக்கியச் சூழலின் ஆபாச நகைச்சுவை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20311133&edition_id=20031113&format=html )

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன்- அல்ஃபோன்ஸ் தெ லெமர்த்தின் (Alphonse De Lamartine) -1790- 1869- நாகரத்தினம் கிருஷ்ணா-
கோடரி வீசிட காலடி வீழும்
கூடுகள் நிறைந்த கதியற்ற மரங்கள்
மரவளை தோன்றும் விலங்கும்
மரக்கிளை நீங்கும் பறவையும்
அழிவைக்காண, அச்சம் விழிகளில்
விளங்காச் செயலை
இதயம் சபித்திடும்.
மூட மனிதர் அவரழிவைத் தேடும் மனிதர்
இருட்டில் மூழ்கிட வான்வரை அழிப்பர்

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60311134&edition_id=20031113&format=html )

எனக்குப் பிடித்த கதைகள் -85- ஐயமும் ஆவேசமும்- என்.எஸ்.எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக் கொழுந்து’- பாவண்ணன்- ஒரு பெண்ணால் ஆண்களுக்கு இணையாக தேயிலைக் கொழுந்து பறிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டுகிறாள் ஒரு இளம் பெண். ஆனால் ஆணாதிக்கக் கணக்குப் பிள்ளை அதை ஏற்காமல் மழுப்ப முயலுகிறார். இலங்கைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60311132&edition_id=20031113&format=html )

நவம்பர் 20, 2003 இதழ்:

நாச்சியார் திருமொழி- மாலதி-

சிறு குயிலே! திருமாலை ஆங்கு விரைந்தொல்லைக்
கூகிற்றியாகில் அவனை நான் செய்வது காணே
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60311201&edition_id=20031120&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்- 86- புன்னகை என்னும் ஆயுதம் – திலிப் குமாரின் மூங்கில் குருத்து- “கோட்” வாடகைக்குக் கொடுத்து அதை வைத்து ஒரு இளைஞனின் புன்னகை எத்தனையோ வருத்தமானவற்றை விழுங்க உதவுகிறது. முதல் நாள் வருமானமே இல்லாமல் பசியாய் அனைவரும் படுத்த பிறகு மறுநாள் காலை அம்மா எரிச்சலுடன் பேசுகிறாள். அவனால் அதைப் புன்னகையுடன் ஏற்க முடியவில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60311203&edition_id=20031120&format=html )

நவம்பர் 27,2003 இதழ்:
முப்பருண்மையோடு நீர்கீழ் நிழலும் பிரும்மராஜன் எழுத்தும் – மாலதி-

சுயசரித்திரத்தில் வான்கோ
வெட்டிக் கொண்டான் ஒரு காதை
கட்டுப் போட்டு அதையும் படமெழுதி
சுக்கான் பிடித்துப் புகை விட்டான்
அந்தணர்க் கந்தணன் சொன்னான்
பிட்டும் பிடி சாம்பலும்
சொந்த மண்ணும்
சமமே சமம்

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60311272&edition_id=20031127&format=html )

எனக்குப் பிடித்த கதைகள் 87- குகைக்குள் ஒரு பயணம்- ராஜேந்திர சோழனின் ‘கோணல் வடிவங்கள்- தான் திருமணம் செய்து கொள்ளாமல் உறவு வைத்திருப்பவள் வேறு யாருடனும் பழகக் கூடாது என்று நினைக்கும் ஆணாதிக்க குணம் பற்றிய கதை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60311271&edition_id=20031127&format=html )

டிசம்பர் 4 2003 இதழ்:
இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள்- தொல்.திருமாவளவன்

இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெட்கமிருந்தால் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த மண்ணில் தாழ்த்தப் பட்டவர்களை நீங்கள் என்றைக்காவது சகோதரர்களாக நினைத்திருக்கிறீர்களா?

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20312047&edition_id=20031204&format=html)
பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ழான் தர்தியே- (Jean Tardieu)- 1903-1995- நாகரத்தினம் கிருஷ்ணா- நாடக ஆசிரியர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், வானொலிக் கர்த்தா, ஓவிய விமர்சகர், கவிஞர் என எந்த கிரீடத்துக்கும் இவர் தலை பொருந்தும்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60312048&edition_id=20031204&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்-88- இயற்கையும் யதார்த்தமும் – மாத்தளை சோமுவின் “தேனீக்கள்”- அம்மாசி என்னும் கிழவர் அரசு மருத்துவமனையில் பிணங்களை ஒப்படைப்பது அல்லது அடக்கம் செய்வது என்னும் பணியில் இருந்தவர். பணிக்காலம் முழுதும் பகலில் மருத்துவமனை- இரவில் கள்ளுக்கடை -கடைசியாகப் படுப்பது டீக்கடையில்- இவ்வாறாகவே காலத்தை ஓட்டி விட்டார். பணி ஓய்வுக்குப் பின் தனக்கு என்று ஒரு ஆதரவு தேவை என்று அவருக்குப் புரிகிறது. அவர் மாயாண்டி என்னும் துப்புரவுத் தொழிலாளியிடம் சூசகமாகத் தெரிவிக்கிறார். முதலில் மருக்கும் மாயாண்டி தன் மனைவியின் அறிவுரையால் மனம் மாறுகிறான். அவன் மனைவி அவனிடம் அவருக்கு வர வேண்டிய அரசு ஓய்வூதியம் மற்றும் ரொக்கம் பற்றிக் கூறி அவை அனைத்தும் தமக்கே வரும் என்று நினைவு படுத்துகிறாள். முதலில் வீட்டுக்குள், காலப் போக்கில் திண்ணையில் என்று வைத்து விடலாம் என்றும் கூறுகிறாள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60312041&edition_id=20031204&format=html )

டிசம்பர் 11,2003 இதழ்:

அன்புள்ள மனுஷ்ய புத்திரனுக்கு- ஞாநி- இலக்கியவாதிகளுக்கு சாஸ்டிடி பெல்ட் வேண்டாம் என்பது தான் என் கருத்தும். சாஸ்டிடியே வேண்டாம் என்ற நிலை உங்களுடையது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20312116&edition_id=20031211&format=html )

எனக்குப் பிடித்த கதைகள் -89- சொற்களுக்குப் பின் இயங்கும் “ஆழ்மனம்”- என்.கே.ரகுநாதனின் “நிலவிலே பேசுவோம்”- கிராமத்தில் மதுவிலக்குப் பிரசாரம் குறித்துப் பேசுகிறார் ஒரு முக்கியஸ்தர். கள் இறக்கும் தொழில் செய்யும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தவர் “கள்ளை ஒழிக்கும் ஆர்வம் ஏன் தீண்டாம் ஒழிப்பில் இல்லை?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவரிடம் பதிலில்லை. மறுபக்கம் அயல் நாட்டு சரக்குத் தொழிலை மேல்சாதியினர் தொடங்கவும் வாய்ப்பாகும் என்பதையும் அவரிடம் அழுத்தமாகக் கூறி வாதிடுகிறார்கள்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60312111&edition_id=20031211&format=html )

டிசம்பர் 18 இதழ்:

விலங்கு பலி X ஜூவகாருண்யம்- பேர்லின் ராகவன் – தமிழ் நாட்டில் இவ்வருடம் தலித்துகளுக்கு எதிரான இரண்டு சட்டங்கள் வந்துள்ளன. ஒன்று மத மாற்றத் தடை சட்டம். மற்றது மிருகபலித் தடை சட்டம்.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20312183&edition_id=20031218&format=html )

அலன் ஸாக்கலுடன் ஜூலியன் பாக்கனி உரையாடல்- வரலாறும் கலாசாரச் சார்பு வாதமும்: தமிழ் பின் நவீனத்துவம் குறித்த சில குறிப்புகளுடன்- யமுனா ராஜேந்திரன்-
ஒரு படைப்பை அணுகும் போது இரு வகைகளில் அணுக முடியும். அப்படைப்பு தோன்றிய விரிந்த வரலாற்றுப் பின்னணியில் வைத்து அப்படைப்பைப் புரிந்து கொள்வது முதலாவது. அணுகுமுறை. தன் அனுபவங்களின் மட்டத்திற்கு எந்தப் படைப்பையும் சிந்தனைத் தளத்தையும் குறுக்கி விடுவது இரண்டாவது அணுகுமுறை. ஜெயமோகனின் பல குளறுபடிகளுக்கும் அவரது இரண்டாவது அணுகுமுறையே காரணம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60312185&edition_id=20031218&format=html )

பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- மொரிஸ் ப்ளான்ஷோ -Maurice Blanchat-நாகரத்தினம் கிருஷ்ணா- ‘இலக்கிய வெளி’ (L’ ESPACE LITTERAIRE) அவரது மிகச்சிறந்த் படைப்புகளிலொன்று. பதில்களை விடக் கேள்விகளே இங்கே அதிக பட்சமாக எடுத்தாளப் படுகின்றன. அக்கேள்விகளில் வெளிப்படுகின்ற எளிமையின் ஊடாக, அடுக்கடுக்கான படிமங்களையும் உருவங்களையும் உய்த்துணர்கின்றோம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60312187&edition_id=20031218&format=html )

எனக்குப் பிடித்த கதைகள் -90- அகமாற்றத்தின் நிறம்- ஜெயதேவனின் ‘தில்லி’- பாவண்ணன்- மலையாள எழுத்தாள ஜயதேவனின் படைப்பில் டெல்லியில் வேலை பார்க்கும் ஒரு வெளியூர்க்காரன் கண்டு விண்டரிய முடியாத அந்நகரத்தின் உள்ளார்ந்த அதிகார மையங்கள் அதன் உள்ளார்ந்த வன்முறைகள் பற்றிய கதை. அமைப்பின் எதிர்ப்பாளனுக்குக் கிடைக்கும் தண்டனையுடன் கதை முடிகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60312181&edition_id=20031218&format=html )

டிசம்பர் 25 2003 இதழ்:
பிரிவினைவாதத்துகு எதிரான போராட்டம்- கே.காமராஜ்
இந்தியாவின் ஒருமைக்கு எதிரான சவால் நமது மாநிலத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கிறது. இது தன்னை திராவிட முன்னேற்றக் கழகம் என்று அழைத்துக் கொள்ளும் அரசியல் கட்சியிடமிருந்து வருகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20312252&edition_id=20031225&format=html )

வாசக அனுபவம்- உமா மகேஸ்வரியின் ‘வெறும் பொழுது’ – பி.கே.சிவக்குமார்.
வருடங்களால் வளர்ச்சியுறாது
வடிவம் மாறாது தோசைகள்
வாழும் வாழ்தலற்று.
அம்மாவின் பாட்டியின்
பாட்டியின் அம்மாவின்
இன்னும் என்னுடைய தோசைகள்
ஆண்டாண்டு காலமாய் அப்படியே.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60312255&edition_id=20031225&format=html )

எனக்குப் பிடித்த கதைகள்-91- நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள்- என்.எஸ்.எம்.ராமைய்யாவின் “ஒரு கூடைக் கொழுந்து”- பெண்ணால் ஆணுக்கு இணையான பணியைச் செய்து முடிக்க முடியாது என்னும் ஆணாதிக்க மனோபாவம். தேயிலை பறிக்கும் பெண் ஏற்கும் சவாலில் பெறும் வெற்றி பற்றிய கதை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60312252&edition_id=20031225&format=html)

Series Navigationஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *