திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்

This entry is part 26 of 26 in the series 27 அக்டோபர் 2013

kasivathambi

ஜுலை 2, 2000 இதழ்:

கட்டுரை: அதிபார்வை: வெங்கட ரமணன்:

கிட்டப் பார்வை, தூரப் பார்வை என இரண்டு விதமான பார்வைக் குறைகளை நீக்கும் கண்ணாடிகளையே நாம் அறிகிறோம் – அணிகிறோம். அதிபார்வை என்பது புதிய கண்டுபிடிப்பு. லேசர் ஒளிக்கதிர்கள் மூலம் விழிகளின் தற்போதைய திறனை ஆராய்ந்து, தொலை நோக்கிகளில் பயன்படுத்தப் படும் “லென்ஸ்” களுக்குக் கிட்டத்தட்ட இணையான லென்ஸ்களை உருவாக்கி ஒருவரை வெகு தூரத்தில் இருக்கும் கட்டிடத்தைக் கூடத் துல்லியமாகப் பார்க்க வைக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை விளக்குகிறது கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400070211&edition_id=20000702&format=html>)

கணினிக் கட்டுரைகள் -4 (5)-மா. பரமேஸ்வரன் – எப்படி பாதுகாப்புகளைத் தகர்த்து ஒருவரின் வங்கிக் கணக்கை இன்னொருவர் சென்றடைகிறார் என்னும் தொழில் நுட்பத்தை விளக்கும் கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400070212&edition_id=20000702&format=html>)
கணினிக் கட்டுரைகள் -4 (6)-மா. பரமேஸ்வரன் – ISDN என்னும் தொலை தொடர்பு இணைப்பின் தொழில் நுட்பம் மற்றும் பயன்பாடுகளை விளக்கும் கட்டுரை (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400070213&edition_id=20000702&format=html> )

பேராசிரியர் கா.சிவத்தம்பியுடன் யமுனா ராஜேந்திரனின் உரையாடல் -சோவியத் யூனியனின் வீழ்ச்கிக்கான காரணமாக கா.சி. கருதுவது தொழில் வளர்ச்சி லெனின் காலத்தை ஒப்பிட ஸ்டாலின் காலத்தில் சோவியத் ரஷியாவின் எல்லாப் பகுதிகளிலும் சமமாக இல்லை. ஸ்டாலின் காலத்தில் அவர் விவாதம், வாக்கெடுப்பு என்றில்லாமல் முதிர்ச்சியுடன் ஒருமித்த கருத்தைக் கட்சியின் ஒவ்வொரு அமர்விலும் திரட்டினார். பின்னர் இதுவே வழக்கமானது ஆனால் பின்னால் வந்த தலைவர்கள் தலைமையின் கருத்தை உறுப்பினர் மீது திணிக்கவே இதைப் பயன்படுத்தினர். மறுபக்கம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், இவர்களும் இவர்களின் கருத்துரிமையும் ஆதரிக்கப் படவில்லை. மக்களின் மதநம்பிக்கைகள், மற்றும் பண்பாட்டு இயங்குதல்கள் குறித்து, அவற்றோடு ஒட்டி ஒழுகுதல் குறித்து சீனத்திடம் இருந்த , இருக்கிற தெளிவு சோவியத் யூனியனில் இல்லை. பொருளாதாரத்தின் புதிய கொள்கைகளை முதலாளித்துவ நாடுகள் முன்னெடுக்கும் போது அதை எதிர்கொள்ள இயலாமற் போனதற்குக் காரணம் மார்க்ஸீய தருக்கம் என்ற ஒன்றை இழந்ததே. அதை மீட்டெடுக்க வேண்டும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600070215&edition_id=20000702&format=html>)

நாடக அறிமுகம் -தலை – நா.முத்துசாமி – இந்திரஜித்தின் தலையை இலக்குவன் எடுத்து வர அதன் பின் அதைத் தேடிக் கிடைக்காமற் போகும் போது இவனது தலையை எடுத்தவரது தலையை நான் எடுப்பேன் என்று ராவணன் சபதம் செய்ததை கம்பராமாயணத்தின் அடிப்படையில் நாடகமாக உருவாக்கி வரும் முயற்சி பற்றிய கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60007021&edition_id=20000702&format=html)

நகைச்சுவைக் கட்டுரை – தமிழ்த் திரைப்பட உலகமும் கணினி உலகமும் -V.R.மூர்த்தி – வேலைக்காரன் – புரோகிராமர், எஜமான் – பிராஜக்ட் மேனேஜர் என்று தமித் திரைப்படப் பெயர்களையும் கணினித் துறையில் பணிபுரிவோரின் வெவ்வேறு பணி அடிப்படையிலான பதவிகளை ஒப்பிடும் நகைச்சுவைக் கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=70007023&edition_id=20000702&format=html>)

கதைகள்: ஊமைத் துயரம் நீல. பத்மநாபன், கவிதைகள்: கண்ணாடி வளையல்கள் – ருத்ரா, இவ்வாறாக- விக்ரமாதித்யன்

ஜுலை 9 இதழ்:
மார்க்ஸுக்குப் பின்னான மார்க்ஸ் – யமுனா ராஜேந்திரன் – பேராசிரியர் கா.சிவத்தம்பி உரையாடல் -Marx after Marx – மார்க்ஸிஸம் என்பது ஒரு மதம் மாதிரி இல்லை. நாம் மனித வாழ்வியல் மற்றும் பொருளாதாரத்தில் காணும் சில பிரச்சனைகளுக்கு அவரிடம் பதில் இல்லை. அல்லது பதில் பொருந்தவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட்கள் அவரை ஒரு யுதயா மரபிலான தீர்க்கதரிசியாகக் காணவில்லை. மாறாக, காரணமும் காரியமும் உள்ள ஒரு தொடர்போடான அறிவு பூர்வமான ஒரு சிந்தனைப் பகுப்பாய்வாளார் என்றே காண்கிறோம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200070911&edition_id=20000709&format=html>)

கட்டுரை: உலக நாடுகளில் எதிர்ப்பரங்கு- The revolutionary worker லிருந்து – தமிழாக்கம் அ.ஜ.கான், இரா.விஜயகுமார் – 1930களில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை அமெரிக்காவில் மேடை ஏற்றுவதில் துவங்கிய ஜோஸ்ப் பாப், நிறவெறிக்கு எதிராகவும், ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைக்காகவும் தமது நாடகங்களின் வழியாகப் போராடியவர். வியட்நாம் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு அதை முன்னெடுத்துச் சென்றதற்காக அவர் பல தொலைக்காட்சி வாய்ப்புகளை இழந்தார். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20007091&edition_id=20000709&format=html>)

கட்டுரை: தாம்பாவில் தமிழ் விழா- குறும்புக் குகநாதன்- ஜுலை 2000 முதல் வாரத்தில் ஃப்ளோரிடாவில் நடந்த தமிழர் சங்கமத்தில் ஜெயகாந்தனின் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. ஜெயகாந்தன், சுகி சிவம், கிருஷ்ணசாமி, குமரி அனந்தன் அனைவரின் பேச்சும் பட்டிமன்றமும் ஏமாற்றம் அளித்தன. ஏமாற்றம் அளித்தது சிம்ரனும் தான். நிகழ்ச்சிக்கு வரவேயில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200070915&edition_id=20000709&format=html> )

கட்டுரை (ஆசிரியர் பெயர் இல்லை) – ” என்னால் முடிந்த போது நான் உன்னைப் பேணிப் பாதுகாத்திருக்க வேண்டும்”- ஒரு பணக்காரருக்கு நான் கு மனைவிகள். அவர்களில் மூவர் அவரது மரணத்தில் அவருடன் வர விரும்பவில்லை என்கின்றனர். ஆனால் முதல் மனைவி மட்டும் அதற்கு விரும்புகிறார். அவரைப் பார்த்தால் எலும்பும் தோலுமாக இருப்பதைக் கண்டு அவர் “என்னால் முடிந்த போது நான் உன்னைப் பேணிப் பாதுகாத்திருக்க வேண்டும்” என்று மனம் வருந்துகிறார். வாழ்க்கையில் நான்காவது மனைவி போன்றது உடல். மூன்றாம் மனைவி சொத்துக்களுடனும், இரண்டாம் மனைவி சொந்த பந்தங்களுடன் ஒப்பிடக் கூடியவர்கள். கூடே வரப் போவது இவர்களில் யாரும் இல்லை. நம எண்ணமே முதல் மனைவி போன்றது. நாம் அதைப் பேணிப் பிரகாசிக்கச் செய்யாமல் காலம் கடந்து வருந்துகிறோம். புத்தர் கதை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600070915&edition_id=20000709&format=html> )

நகைச்சுவை : இது இந்தியாவில் தான் நடக்கும் – தின கப்ஸா தலைப்புச் செய்திகள் – ஜுலை 2000 போது முக்கியத்துவம் பெற்ற செய்திகள் போன்ற நகைச்சுவைத் தலைப்புச் செய்திகள். (ஆசிரியர் பெயர் இல்லை) (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=70007093&edition_id=20000709&format=html> )

கதைகள்: பாக்கி அசோகமித்திரன், மதிப்பு மிகுந்த மலர் – வல்லிக் கண்ணன், கவிதை- சன்னல் – ருத்ரா

******************************************************
ஜூலை 14 2000 இதழ்
கட்டுரை: பெண்கள் – Y.S.உமா-(கல்லூரி மாணவி) – பாரதியாரைப் பாராட்டும் உமா திருக்குறளைச் சாடுகிறார். அது என்ன “தெய்வம் தொழாஅக் கொழுனன் தொழுதெழுவாள்”? சிலப்பதிகாரமும் அவ்வாறானதே. ஆண்களைத் தேவையானால் எதிர்த்து நாங்கள் சமனானவர்கள் என்று நிலை நாட்டுகிறார் உமா. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200071615&edition_id=20000716&format=html> )

கட்டுரை: இன்டிஃபாடா – பாலஸ்தீய நாடகக் குழு – மூலம் -மொழிபெயர்ப்பு-அ.ஜ.கான் & இ.ரா. விஜயகுமார் பாலஸ்தீனத்துக்காகப் போராடும் கைதிகள் எவ்வாறு இஸ்ரேலிய சிறைகளில் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதை இந்த நாடகக் குழு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்து நடத்திய நாடகங்கள் மூலம் உலகுக்கு உணர்த்தியது. கட்டுரையில் “அன்சார்” என்னும் நாடகத்தைப் பற்றிய ஆழ்ந்த விமர்சனம் உள்ளது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60007161&edition_id=20000716&format=html>)

நேர்காணல்: அமெரிக்காவில் ஜெயகாந்தன் பகுதி -2- (பகுதி 1 கிடைக்கவில்லை) – கேள்விகளில் உள்ள வார்த்தைகளை விடக் குறைவான சொற்களில் ஜெயகாந்தனின் கூர்மையான பதில்கள். ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு ஏன் எழுதுவதை நிறுத்தவில்லை என்ற கேள்வி வராத அளவு இயங்கியதே தம் வெற்றி என்பது ஒரு உதாரணம். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600071614&edition_id=20000716&format=html>)

கதைகள் – நினைவுச் சின்னம் – மும்தாஜ் யாசீன், முள் – பாவண்ணன், வேப்பம்பூப் பச்சடி – இரா. கோவர்த்தனன், கவிதைகள் – வீடு- கோகுலக் கண்ணன், கல் பொரு சிறு நுரை – ருத்ரா

**************************************************
ஜூலை 17 2000 இதழ்: காலடியில் புதையுண்ட எமன் – கண்ணிவெடிகள்: வெங்கட ரமணன்: கண்ணி வெடிகள் பற்றிய மிக விரிவான கட்டுரை. இதில் குறிப்பிட்டிருக்கும் பல விவரங்கள் நாம் அறியாதவை. இரண்டாம் உலகப் போரின் போது புதைக்கப் பட்ட கண்ணி வெடிகள் பல இன்னும் அகற்றப் படவில்லை. அந்த அளவு எண்ணிக்கையும் பொருட் செல்வாகும் காரணமும். ஒற்றைப் புதை கண்ணிவெடிகள் மற்றும் சிதறுண்ட கண்ணிவெடிகள் என இரு வகை உண்டு. முதலாவது பூமிக்குள் இருந்து ஒன்று மட்டும் வெடிக்கும். இரண்டாவதோ ஒரே சமயத்தில் ஒரு இடத்தில் பரவி புதைக்கப் பட்டிருக்கும். நிலத்துக்கு மேலே பெரிய அளவு அழிவுடன் வெடிக்கும் அனைத்தும். பல ஐநா ஒப்பந்தங்கள் மதிக்கப் படாததால் இன்னும் இதைப் பயன்படுத்தும் நாடுகள் உள்ளன. மிக மோசமாக பாதிக்கப் பட்டு இன்னும் உயிர்பலிகளைக் கொடுக்கும் நாடுகள் கம்போடியா, போஸ்னியா. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400071712&edition_id=20000717&format=html>)

கட்டுரை: காஷ்மீர் சுயாட்சியும் ஒடுக்கப் பட்ட முஸ்லீம்களும் -சின்ன கருப்பன். -1953க்கு முந்தைய ஆட்சிமுறைக்கு காஷ்மீர் மாற வேண்டும் என்னும் கோரிக்கையை ஒரு தீர்மானமாக காஷ்மீர் சட்டசபை நிறைவேற்றியதை ஒட்டி எழுதப் பட்ட கட்டுரை. முஸ்லீம்களுக்கு என்று உரிமை கொடுப்பது போல் கொடுத்து அவர்க்ளை ஒதுக்கி வைக்கவே மத்திய அரசு முயலுவதாகக் கருதுகிறார் சி.க. இந்துவாதிகளுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 370 பிரிவை நீக்கும் படி முஸ்லீம்களே கோர வேண்டும் என்கிறார்.

கட்டுரை: பெண்கள் – பகுதி -2- கல்லூரி மாணவி பிரேமா போஸ்கோவின் கருத்துக்கள்- வரதட்சணை வாங்குவது ஆண் விபசாரம் மாதிரி. பெண் உரிமையைப் பெற்றோரே நசுக்கினாலும் எதிர்க்க வேண்டும். பிஷாரா (முஸ்லீம்) கருத்துக்கள்: குளச்சல் என்னும் ஊரில் 9ம் வகுப்புக்கு மேல் பெண் படித்தால் யாருமே ஏற்க மாட்டார்கள். அதனால் தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். எங்கள் மதம் மேற்படிப்பு பெண்களுக்கு வேண்டும் என்றே சொல்கிறது. நபிகள் நாயகம் சீனாவரை சென்று கூடப் படி என்று தான் சொல்கிறார்.

கிரிஜா வேணுகோபால் – முஸ்லீம், ஹிந்து இரண்டு மதங்களிலும் மத நூல்களில் பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் நிறையவே உள்ளன. இவற்றைப் பயன்படுத்திப் பெண்கள் அடக்கப் படுகிறார்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200072316&edition_id=20000723&format=html>)

கட்டுரை: தமிழ் நாட்டில் வீதி நாடக இயக்கம்: K.V.ராமசாமி – வீதி நாடகங்கள் மிகவும் இயல்பாக, குழுவினர் அனைவரும் ஒன்றாக விவாதித்து வசனம் எதுவும் பிரதியில் எழுதப் படாமல் ஒத்திகையின் போது ஒழுங்கு செய்யப் பட்டு நடத்தப் பட்டன. பாதல் சர்க்காரின் ஒரு பட்டறை இந்தக் குழுவினருக்குப் பயிற்சியும் தந்தது. குழுவினரின் ஈகோ பிரச்சனைகளாலேயே குழு கலைந்தது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60007231&edition_id=20000723&format=html> )

நாடக விமர்சனம்: வேறு பெயரில் மீதி சரித்திரம் – அம்ஷன் குமார் – பாதல் சர்க்காரின் பாகி இதிஹாஸ் என்னும் நாடகம் தமிழில் மேடையேற்றும் போது அரங்க அமைப்பு மற்றும் காட்சிகளின் நிறைய குறைகள் தென்பட்டன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60007232&edition_id=20000723&format=html>)

கதைகள்: கொடியேற்றம் – அசோகமித்திரன், நான் இருக்கிறேன்-ஜெயகாந்தன், சவண்டிக் கொத்தன் – சி.வெ. ரமணி, கவிதைகள்: மையல் – பசுபதி, பளிங்கு காகிதம் – ருத்ரா

சமையல் குறிப்புகள்; கொடுப்புளி, தக்காளி மசாலா

******************************************

ஜூலை 30 இதழ்: வாழ்வின் மகத்துவம் – பகுதி 1- நியு ஜெர்ஸியில் ஜெயகாந்தன் நிகழ்த்திய உரை. பாரதியாரையும் புதுமைப் பித்தனையும் தம் இலக்கிய வாழ்வின் முன்னோடிகளாகக் காண்கிறார் ஜெயகாந்தன். ‘புரூஃப் ரீடிங்” பணியில் புதுமைப்பித்தனின் படைப்புக்களை 20 வயதில் படித்தை நினைவு கூறுகிறார். சென்னையில் நடைபாதையில் வாழ்ந்த “ரிக்ஷா” ஓட்டிகளின் எளிய சொல்லாடல்களில் கண்ட இலக்கியத்தைத் தான் படைத்ததாகக் குறிப்பிடுகிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=600073015&edition_id=20000730&format=html> )

மதுரை நாடக விழா: சங்கண்ணா :மதுரை நிஜநாடக இயக்கத்தினரால் நடத்தப் பட்ட 12 நாடகங்கள் பற்றிய கட்டுரை. “இரண்டாவது ஆட்டம்” என்னும் நாடகம் சர்ச்சைக்குரியதாகி நிறுத்தப் பட்டதைக் குறிப்பிடும் கட்டுரை. பாரம்பரியத்தைப் பற்றிய தவறான புரிதலுடன் நாட்டுப்புறக் கலைகள், கதைகள், விழாக்கள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன என்று விமர்சிக்கிறது. சர்ச்சையைத் தவிர “இரண்டாவது ஆட்டம்” நாடகத்தில் சாரம் இல்லை என்பது கட்டுரையாசிரியரின் கருத்து.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60007301&edition_id=20000730&format=html>)

கதைகள்: தர்க்கத்திற்கு அப்பால் -ஜெயகாந்தன், மழை ஓய்ந்தது- இரா.சோமசுந்தரம், அம்முலு- லா.ச.ராமாமிர்தம், கவிதைகள்: வர்ணதேசம் – ருத்ரா. கருமை- பசுபதி, தஸ்லீமா நஸ்ரீனின் ஆறு கவிதைகள்: யமுனா ராஜேந்திரன். சமையல் குறிப்புகள்: இனிப்பு தோசை, ரவா கிச்சடி.

************************************
ஆகஸ்ட் 6, 2000 இதழ்: கட்டுரை: தஞ்சை பிரகாஷ் : வேர்களைத் தேடிய ஆலமரம் – தஞ்சை சுவாமிநாதன் : ஏப்ரல் 27, 2000 அன்று தஞ்சை பிர்காஷ் அமரர் ஆனதை ஒட்டி அஞ்சலியாக எழுதப் பட்ட் கட்டுரை. ‘சும்மா’ என்னும் அமைப்பின் இலக்கிய அமர்வுகளில் தஞ்சை பிரகாஷை சந்தித்ததை நினைவு கூறுகிறார். பல்வேறு இலக்கிய அமைப்புகளின் கூட்டங்களையும் தான். ஹிந்தி இலக்கிய கர்த்தாவுக்கான ‘பிரேம் சந்த்’ க்கு என்றே விழா எடுத்தது தமிழ் இலக்கியச் சூழலில் மிகவும் அரிதானது. ராஜராஜ சோழன் சிலை அருகே கதை வாசிப்பு, கவிதை வாசிப்பு என்று அவர் ஒழுங்கு செய்தவை சிறந்த இலக்கியப் பணிகள். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60008061&edition_id=20000806&format=html>)

கட்டுரை: வாழ்வின் மகத்துவம் – நியு ஜெர்ஸி கூட்டத்தில் ஜெயகாந்தன் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி- வாழ்வின் மகத்துவத்தை சிறு வயதிலேயே தான் பாரதியார் கவிதைகளிலும் விக்டர் ஹ்யூகோவின் “லா மிஸாரப்” என்னும் நூலிலும் தான் படித்து உணர்ந்ததை நினைவு கூறுகிறார் ஜெயகாந்தன்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60008061&edition_id=20000806&format=html )

கட்டுரை: குவாண்டம் கணினிகள் – வேங்கட ரமணன் – “பைனரி” முறை என்றால் என்ன, அடிப்படையில் எந்தத் தொழில் நுட்பம் கம்ப்யூட்டர் இயக்கப் பயன்பட்டது அதன் கணித அடிப்படை என்ன என்பதை விளக்கும் கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400080612&edition_id=20000806&format=html>)

கதைகள்: நைவேத்தியம் – நீல பத்மனாபன், தெளிவு – கே. எஸ். அய்யங்கார், யுகசந்தி – ஜெயகாந்தன், சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் – தி.ஜானகிராமன், கவிதை: பொன் தூண்டில் – ருத்ரா.
ஆகஸ்ட் 13,2000 இதழ்: கட்டுரை: தமிழினத் தலைவர் வீரப்பனார் வாழ்க – மஞ்சுளா நவநீதன் – வீரப்பன் நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியதைக் கண்டிக்கும் கட்டுரை. தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் பேசுவோர் வீரப்பனை மையப்படுத்துகிறார்கள். வீரப்பனைக் கட்டுப்படுத்தாத மாநில அரசையும் கட்டுரை கண்டிக்கிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200081315&edition_id=20000813&format=html> )

கதைகள்: பழி – பாவண்ணன், கண்ணன்- லா.ச.ராமாமிர்தம். கவிதைகள்: கனவுகள் – சிவகாசி திலகபாமா, அவளுக்கும் நதி என்று பேர் – ருத்ரா – (இ.பரமசிவன்)
****************************************
ஆகஸ்ட் 19, 2000 இதழ்: கட்டுரை: தமிழ் நாடு இரண்டாகப் பிரியுமா? – சின்னக் கருப்பன் – மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தது தீர்க்க தரிசனமற்றது. நிர்வாக வசதிக்காகப் பெரிய மாநிலங்களை இரண்டு அல்லது மூன்றாகப் பிரிக்கலாம். அமெரிக்காவில் மாநிலங்களுக்கு வரி விதிப்பிலும் நிர்வாகத்திலும் சுதந்திரம் இருப்பது முன் மாதிரி. சிறிய மாநிலங்கள் தமிழ் நாட்டிலும் கர்நாடகத்திலும் உருவானால் காவிரி நதியை தேசியமாக்குவதும் சாத்தியம். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200081915&edition_id=20000819&format=html> )

ஆகஸ்ட் 20, 2000 இதழ்: கதைகள்: ஆற்றின் மூன்றாவது கரை – ஒரு லத்தீன் அமெரிக்கக் கதை, இல்லாதது எது? -ஜெயகாந்தன், கவிதைகள்: தஸ்லிமா நஸ் ரீனின் ஐந்து காதல் கவிதைகளும், பிற ஐந்து கவிதைகளும்.

கட்டுரைகள்: கணினிக் கட்டுரைகள் – 8 -மா. பரமேஸ்வரன் – நாம் கணினியில் பயன்படுத்தும் RAM Random Access Memory என்பதன் பயன் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?- கணினியில் சேமிக்கப் படும் விவரங்களையும் அதன் நினைவுத் திறனின் பல வகைகளையும் விளக்கும் கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400082011&edition_id=20000820&format=html>)

கட்டுரைகள்: கணினிக் கட்டுரைகள் – 8 -மா. பரமேஸ்வரன்- Computer Virus என்பதைப் பற்றி எளிதாகப் புரிந்து கொள்ளுங்கள்: கணிப்பொறியில் கிரும் நிரல்கள் எவ்வாறு உருவாக்கப் படுகின்றன அவை கணிப்பொறியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்கும் கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=400082012&edition_id=20000820&format=html> )

****************************************
ஆகஸ்ட் 27 2000 இதழ்:
கட்டுரை: கல்விக் கனவுகள்: தமிழ் நாடு பொறியியல் கல்வி : 150 கல்லூரிகளில் 32000 பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன. கணிப்பொறி முக்கியமான படிப்பே ஆனால் அதை வேலைவாய்ப்பு என்னும் அடிப்படையில் மட்டும் அணுகக் கூடாது. ஒரு கல்லூரி 400 பட்டதாரிகளை உருவாக்கினால் 800 பேருக்கு ஆரம்பக் கல்வி அளிக்க முன் வர வேண்டும். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்குத் தேவையான ஒரு திறனை வளர்த்துத் தர வேண்டும். தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். வேலைவாய்ப்பு என்னும் கண்ணோட்டமே அடிப்படையாக இருக்கக் கூடாது.
கட்டுரை: ஆத்மாநாம் கவிதைகள்: சுந்தர ராமசாமி (கட்டுரை 1993ல் எழுதப் பட்டது. அப்போது பிரம்மராஜன் முயற்சியில் வெளியான ஆத்மாநாம் கவிதை நூலை ஒட்டி ஆத்மாநாம் என்னும் கவிஞரை நாம் அடையாளம் காணும் கட்டுரை.) இதை சுருக்கி எழுத முடியாது. எனவே அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி கீழே:
மென்மையான கவிஞர் என்று இவரை சொல்லலாம். இவருடைய ரீங்காரம் தான் மென்மையானதே தவிர, ரீங்காரத்துக்கு ஆதாரமான கம்பி – உள்பலம் – வலிமையானது. சுயத்தின் மீது நம்பிக்கை கொண்ட உள்பலம் இது. தன் அனுபங்களை சதா அசை போடுவதில் வரும் உள்பலம். அனுபவங்களின் சாரங்களை அறிய தனக்கு உகந்த தயாரிப்புகளிலும் இவர் கவனம் கொண்டிருந்தார். படிப்பும் தொடர்புகளும் விவாதங்களும், இதனால் காலத்தைப் பற்றிய உணர்வு இவருக்குச் சாத்தியமாயிற்று. கூடி வராத கவிதைகளில் கூட காலத்துக்கும் கவிதைக்கும் இடையே பழமையின் களிம்பு இல்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60008271&edition_id=20000827&format=html> )

கதைகள்: பூ உதிரும் -ஜெயகாந்தன், புரட்சி எழுத்தாளரின் கதாநாயகி – கு.அழகிரிசாமி. கவிதைகள்: கன்னிமை:எஸ்.ராமநாதன், தொலைந்தவை – நா.விச்வநாதன்.
**********************************

Series Navigationசீதாயணம் முழு நாடகம் [4] (இரண்டாம் காட்சி)
author

சத்யானந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    Radhakrishnan says:

    How to see the articles in http://www.thinnai.com
    கணினிக்கட்டுரைகள் – 4 – மா.பரமேஸ்வரன்
    6. ISDN என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ? (00-7-2)

Leave a Reply to Radhakrishnan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *