தேடல்

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

சேலம் எஸ். சிவகுமார்

தேடல்  1
காத்திருந்து காலம் போனது ;
பூத்திருந்து பார்வை போனது .
கடந்துபோன காலமும்,
கரைந்து போன பார்வையும்
திரும்பவும் கிடைத்தால் – என்
தேடலைத் தொடங்குவேன்
காத்திருக்காமல்.
தேடல் 2
குழந்தை இருக்கும் வீட்டில்
எல்லாமே கசமுசா ;
எதையோ தேடினால்
எதுவோ கிடைக்கிறது –
வாழ்க்கையைப் போல.
குழந்தையும் கடவுளும்

ஒன்றுதானோ !
தேடல் 3
கால் கடுதாசி கொடுத்துவிட்டு
வீட்டுக்கு வந்தால்
எல்லாரும் கடுகடுப்பு, சத்தம் ;
மீண்டும்

தேடவேண்டும் –
தொலைத்துவிட்ட

வேலையையும்,
தொலைந்துபோன

மரியாதையையும்!

 

தேடல் 4
யாரும் என்னைத்
தேடவேண்டாம் என
எழுதி வைத்து விட்டு,
எதையெதையோ தேடி
ஓடிப் போனேன் ;
ஓய்ந்து போன பிறகுதான்

புரிந்தது ; நானும் என்னைத்

தேடவில்லையென்று !

தேடல் 5
ஓன்று              1
பத்து                 10
நூறு                  100
ஆயிரம்            1000
பத்தாயிரம்     10000
லட்சம்              100000
பத்து லட்சம்  1000000
கோடி                10000000 – என
தேடித் தேடி

சேர்த்த பணம் ;
சோர்ந்த பின்புதான் புரிந்தது –
முதலிலிருந்தே வெறும்

பூஜ்யங்களாய் சேர்த்து வந்த
ஏழை நான் என்று

—————————-

Series Navigationதொடுவானம் 133. படப்பிடிப்பில் பரவசம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *