தொலைந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்

This entry is part 53 of 53 in the series 6 நவம்பர் 2011

மனிதனாக பிறந்த ஒவ்வொருவறுக்கும் பல அடையாளங்கள் வாழ்கையில் தேவைப்படுகிறது. இந்த அடையாளங்களே அவனது வாழ்கையின் பல பரிமாணங்களையும் நிர்மாணிக்கிறது. பல அடையாளங்கள் காலப்போக்கில் ஒருவரது வெற்றி தோல்விகளை வைத்து மாறும் தன்மை கொண்டது. ஆனால் சில அடையாளங்கள் என்றுமே மாறாது நிலைத்துதிருப்பவை. (அவை பரம்பரை பரம்பரையாக தொன்றுதொட்டு வரும் பண்பாடுகளான மொழி, இனம், மதம், தாய்நாடு, கலாசாரம், ஆண்மிகம் பாரம்பரியங்கள் ஆகும். மேலும் இவை ஒரு தாய்மையின் அடையாளங்களாகவே போற்றப்பட்டு வந்தன. எனவே இப்படிப்பட்ட அடையாளங்களை ஒருவன் மாற்றினால் அவனை சமுதாயம் மதிப்பதில்லை. இப்படிமாற்றமுடியாத மாற்றக்கூடாத அடையாளங்களை மாற்றி மாற்றி கூறிக்கொண்டு வீண் பேச்சு பேசி ஊரையும் தன்னையும் ஏமாற்றிக்கொண்டு திரிகின்றனர் பெரும்பாலான பகுத்தறிவு தமிழர்கள்.
பாரத்ததில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் நான் ஒரு இந்தியன் என்ற அடையாளம் எல்லாவற்றிலும் முதன்மையானது. இந்த அடையாளம் தேவையில்லை என்றுகூறிகொண்டு இங்கேயே ஜிவனம் செய்பவர்கள் தேசதுரோகிகளே. இந்த குறை பெரும்பாலான சிறுபான்மையயிரிடமும் போலிமதசார்பின்மை பேசுபவரிடமும் பகுத்தறிவு வியாதிகளிடமும் கண்கூடாக காணமுடிகிறது. இவர்கள் நம்நாட்டை கூறுபோட்டு அன்னியர்க்கு விற்ககூட தயங்காத கேவலமான மிருக ஜென்மங்கள்.
இரண்டாவது அடையாளம் ஒருவறது தாய்மதம். தாய் மதத்தை மாற்றுபவன் தன் தாயையே விலைபேச துணிந்தவன் ஆவான். ஒருவன் தன் முன்னோர்களை பற்றி அவமானபடுவான் ஆனால் அவனுக்கு அழிவுகாலம் வந்துவிட்டது என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இவ்வாறுமாறுபவன் தன்மானம் இழுந்து அடைகலம் புகுந்த மதத்தில் சிறுமைபடுகிறான். பல்லாயிரம் வருடங்களாக பாரதத்தில் வேதமரபை ஒட்டிய வாழ்கை நெறிமுறைகளையே மக்கள் பின்பற்றி வந்தார்கள். உலக நாகரிகங்களிலேயே வேதகால நாகரிகம்தான் மிகபழைமையானதும் முதன்மையானதும் ஆகும். உலகின் மற்ற நாகரிகவளர்சியின் முன்னோடி வேத நாகரிகமே. இதன் தாக்கத்தை எல்லா நாகரிகத்திலும் கண்கூட காணலாம். இடையே இங்கேயே வேதமதத்ததை ஒட்டி சில சில மாற்றங்களுடன் தோன்றிய புத்த, ஜைன மதங்களால் வேதமதத்தை வெற்றிகொள்ளமுடியவில்லை. பின் நாட்களில் படைஎடுத்து வந்த மிலேச மதங்களாலும் வெற்றி கொள்ள முடியவில்லை. காரணம் வேதமத்தின் உன்னதமான மனிதநேய கொள்கைகளும் சுதந்திரமான இறைகொள்கையுமே ஆகும்.
எல்லாம்வல்ல இறைவன் என்பவன் ஒருவனே அவன் உயிர் உள்ள ஆறறிவு படைத்தமனிதன் ஐந்தறிவு படைத்த விலங்கு உயிர் இல்லாத ஜட, திரவ, வாயு போன்ற எல்லா உலகபடைப்புகளிலும் வாசம் செய்கின்றான். அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. கடவுளின் படைப்பை உருமாற்றம் செய்யலாம் அன்றி ஒருவராலும் அழிக்கவும் ஆக்கவும் முடியாது. எந்த நல்ல கெட்ட செய்கையின் எதிர்வினை பலனை இப்பிறவியிலேயே அனுபவிப்பான். எஞ்சியவை அவன் சந்ததியையும் அவனது மறுபிறவியிலும் அவனை தொடர்ந்து தாக்கவோ பலன் அளிக்கவோ செய்யும்.
நான் கடவுளை நம்புகிறேன் ! கடவுள் என்னும் ஆன்மா என்னிடம் வாசம் செய்கிறார் !! நான்தான் கடவுள் !!! இப்படி நம்முள் வாசம் செய்யும் கடவுள் என்ற ஆன்மாவை உணர்வதே இந்து ஆன்மிகம். இந்த உணர்வை பெற இந்துமதம் பல வழிகளை சுட்டிகாட்டியுள்ளது. இந்த உணர்வை பெற்று முக்தி அடைந்தவர்கள் மிகமிக குறைவு. எப்படி காற்றை நாம் உணரலாமே அன்றி கண்ணால் கானமுடியாதோ கடவுளையும் ஒருவன் உணரலாமே அன்றி காணமுடியாது. அப்படி ஆண்மாவை உணர்ந்தவர்களின் சக்தி அபரிமிதமானது.
கடவுள் இருப்பிடத்தை விஞ்ஞானம் மென்ஞானம் ழூலம் நீருப்பிக்கலாம் என்றால் அவர் சக்திவாய்ந்த கடவுளாக இருக்கமுடியாது. மாதா ,பிதா, குரு, தெய்வம் என்று கடவுளை நான்காம் இடத்தில் வைக்கிறதது இந்து மதம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு தூண்களை அஸ்திவாரமாக கொண்டள்ளது இந்து மதம். ஆய கலைகள் 64 கையும் அலசி ஆராய்ந்து ஒரு வழிமுறை வகுத்துள்ளது இந்து மதம். மென்ஞாகமே விஞ்ஞானம் என்று இன்று வரை நிரூபித்துவருவது இந்து மதம்.
தொல்காப்பியர் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்த எந்த புலவர்களும் இந்துமதம்வேறு தமிழர்மதம்வேறு என்று கூறவில்லை. பெரியாரின்வழிவந்த பிதற்றல் கூட்டத்தின் வழிநடப்பவர் என்றால் உண்மையை நம்ப மறுக்கும் உங்களை தெளியவைக்க யாராலும்முடியாது ? குமரிக் கண்டம் லூமுரியா என்று எந்த கடல் ஆராய்சியில் இறங்கினாலும் உலகின் எந்த எந்தெந்த இடங்களை தோண்டி ஆராய்தாலும் வெளிவருவது இந்துமத அடையாள சின்னங்களே தான் என்பது திண்ணம். பின் எங்கிருந்து வரும் தனி தமிழர் மதம் ?
ஆனால் மிலேச மதங்கள் இருப்பதோ ஒரு பிறவிதான் எனவே உலக சன்லாபங்களை இப்பொழுதே அனுபவிக்கவேண்டும். அதற்கான எல்லா அத்துமீறல்களையும் அடுத்தவர் நலத்தை கெடுக்கும் வகையில் செய்ய புனித நூலில் வழி செய்யப்பட்டுள்ளது. அப்படி செய்தால்தான் மேலும் சொர்கத்தில் சன்லாபத்துடன் சயன வாழ்கை அனுபவிக்கலாம். இவை இறைதூதுவர்களால் போதிக்கப்பட்டது என எழுதிவைத்து அதன்படி நடக்கிறார்கள். இதை நிறைவேற்றுவது எப்படி என்று இந்த துற்போதனைகள்தான் முக்கால் பங்கு புனித நூலில் கூறப்பட்டுள்ளது. எஞ்சி சில நல்ல போதனைகள் எல்லாம் இந்திய மதங்களின் போதனைகளை காப்பியடித்தும் சரியாக புரிந்து கொள்ளாமலும் சில மாற்றங்களுடன் எழுதிவைத்துள்ளார்கள் என்பதே எதார்த உண்மை. இந்த குழம்பிய குட்டையில் குளிக்க பணம் பதவி பட்டம் என்ற ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள பல அப்பாவி இந்துக்கள் மதம் மாறி சுய அடையாளங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள். இந்து பெண்களின் அடையாளங்களான கழுத்தில் தாலி, சக்திவாய்ந்த குங்குமம் பொட்டு, தலைநிறைய பூ, காலில் மெட்டி இவற்றுடன் சுமங்கலிகளை எதிர்கொண்டு சென்றால் காரியசித்தி நிச்சயம் என்பது இந்துகளின் நம்பிக்கை. ஆனால் மதமாறிய இந்து பெண்களை கூட்டமாக ஞாயிறுகிழமைகளில் இந்த அடையாளங்கள் எதுவும் இல்லாமல் பார்கையில் வேதனையாக உள்ளது. இவற்றை துறந்தவர்கள் ஏன் புடவையை மாற்றி கவுன் மிடி போன்ற அன்னிய மத ஆடைகளை அணியவில்லை ? ஏதாவது துரத்தும் அல்லது எதையாவது எரிவார்கள் என்ற பயமா ? பிறந்தநாளின் பொழுது பெரியவர்களை வணங்கி கோவிலுக்கு சென்று அவர்கள் நட்சத்திரத்தின் பேரில் அர்சனை செய்வது இந்து வழக்கம். ஆனால் இன்று தன் பெயரையே கேக்கில் எழுதி அதை கத்தியால் வெட்டி ஏற்றிய மெழுகுவத்தியை ஊதி அணைப்பது எவ்வளவு அபசகுனமானது என்பதை உணராமலே விழா கொண்டாடுகிறார்கள். அம்மா அப்பாவை மம்மி தாடி என்று பெருமையாக அழைக்கிறார்கள். மம்மி என்றால் செத்த பிணத்தை போட்டுமுடும் ஒரு ngllfவழக்கம். டாடி என்றால் பல அர்தங்களை அகராதி சொல்கிறது. மறைமுகமாக இது ஒரு மாமாபயல் என்றே அர்தம் கொள்ளவேண்டியுள்ளது.
முன்றாவது தமிழன் என்ற இன அடையாளம் தமிழர்களின் ரத்தத்தில் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் இது தமிழர்களின் கலை, இலக்கியம், கலாசாரம், ஆண்மிகம், நாட்டியகலை, சிற்ப்பக்கலை, சங்கீதம், இந்துமத பண்பாடு, கடல்கடந்து வாணிபம், தேசிய ஒருமைபாடு என்ற எண்ணற்ற பொக்க்ஷியங்களின் பங்களிப்பை பரைசாற்றியது. ஆனால் காலப்போக்கில் தமிழன் என்ற இன உணர்வு சிதைந்து திராவிடன் என்ற அடையாளத்தை ஏற்றதால் அது தேசியத்தை பிரிக்கும் சக்தியாக உரு பெற்று இந்துமத எதிர்ப்பு , கடவுள் மறுப்பு , வடமொழி வெறுப்பு , பார்பன கசப்பு , அன்னியமத காதல் என்ற பிரிவினை உணர்வுளின் வெளிபாடான ஒரு ஈர்ப்பு சக்தியாக மாறிவிட்டது.
தமிழரின் இந்துமத பங்களிப்பு, தமிழரின் பக்திமார்கம் என்று இந்தியர்களின் முன்னேற்றத்திற்கும் நாகரீகசெழுமைக்கும், ஆண்மிகஎழுச்சிக்கும் பெரும்பங்கு அளித்த நாடு தமிழ்நாடு என்பதை மறந்து மறைத்து தம் முன்னோர்களின் பங்களிப்பையும் பெருமையையும் உருதெரியாமல் குழிவெட்டிக்கொள்ளும் போலி திராவிடம் கண்டிப்பாக பூண்டோடு ஒழிக்கப்படவேண்டும். பாமரனாய் விலங்குகளாய் பான்மைகெட்ட போலி திராவிடபேய் ஒடுக்கப்படவேண்டும். தமிழர்தம் பெருமையை உணர்ந்து தலைநிமிர்ந்து நிற்வேண்டும். பெரியார் புராணம் மிகைபடுத்தி பாடுவதை உடனேநிறுத்தவேண்டும். அவர் 10 பேரூடன் சேர்ந்த 11வது சழூக சீர்திருத்தவாதி என்பதுடன் நிறுத்தப்படவேண்டும்.
பிராமிணனை பிடிக்கவில்லை , பிராமிண புலவர்கள் இயற்றிய இலக்கியங்கள் பிடிக்கவில்லை சரி !! ஆண்மிகம் பிடிக்கவில்லை , சமஸ்கிரதம் பிடிக்கவில்லை , இந்துமதம் பிடிக்கவில்லை இவற்றின் தாக்கம் இல்லாத இலக்கியங்களே எதுவுமே இல்லை என்பதுதான் யதார்த உண்மை. பின்எதற்க்கு இந்த செம்மொழிமாநாடு ? இன்று கடவுள் மறுப்பவர்கள் இந்து எதிர்பவர்கள் ஏழைபங்காளனான அரசியல் தலைவர்களின் வீடுகளில் உள்ள பெண்கள் தலையில் ஒருகட்டு பூவுடன் ஒரு ரூபாய் அளவில் குங்குமம் வைத்து ஊரில் உள்ள கோவில்களை சுற்றிகொண்டிரு்க்கிறார்கள். உயிரோடும் உணர்வோடும் கலந்துவிட்ட ஒன்றை எத்தனைகாலம்தான் மாயை என்று அவதூறு சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பது. தாயையும் சேயையும் படைத்த கடவுளாலும் பிரிக்கமுடியாது. சத்தியம் நிச்சயம் ஓர்நாள் வெல்லும்.
பெரியார் துதி பாடவா செயின்ட்தாமஸ் துதி பாடவா ஜி.யூ.போப் துதிபாடவா சோனியா துதி பாடவா ஆதிகிருஸ்துவம் துதி பாடவா லுமுரியா கண்டம் துதி பாடவா முகஸ்துதி பாடி கேட்கவா ஆண்டவா !!!!
நான்காவதாக தாய்மொழி அடையாள பற்று. ” யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கம் கானேன்” என்றான் பாரதி ஆனால் பச்சை தமிழன் என்று போலியாக திரியும் கூட்டத்தின் தலைவன் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவர். எல்லாம் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தன்வீட்டு பிள்ளைகளு்க்கு ஆங்கிலபெயர் வைத்து ஆங்கிலபள்ளியில் படிக்கவைக்கிறார்கள். ஒற்றைவரி ஒளவையின் ஆத்திசூடியும் கொன்றன்வேந்தனும் வள்ளுவனின் இரட்டைவரி திருகுறளும் சொல்லியுள்ள ஒழுக்கநெறிகளை குறைத்து குறைத்து இவற்றை பாடபுத்தகங்களில் இல்லாமலே எடுத்துவிட துடிக்கின்றனர். jopOதமிழும் சமஸ்கிரதமும் தமிழர்களுக்கு தாயும் தந்தையும் ஆகும். தாயை விட சிறந்த கோவில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற எதார்தம் புரியாமல் தனி தமிழ் என்று தமிழ் உச்சரிப்பைகூட சரியாக சொல்லத் தெரியாத ஒரு கூட்டம் தமிழ் மொழியை கொன்று கொண்டு இருக்கிறார்கள். இதைவிட கொடுமை தெய்வ புலவர் திரு வள்ளுவருக்கு கிருஸ்துவ பாதரிதான் பாடம் நடத்தினார் என்ற சரடையும் மானம் ரோஷம் இல்லாமல் கேட்டுக்கொண்டு பகுத்தறிவாளிகள் மௌனம் சாதிக்கின்றனர். தமிழையும் சரியாக கற்காமல் அண்டை மாநிலங்களில் வேலைவாய்பை பெறக்கூடிய இந்திய பொது மொழியான இந்தியையும் கற்காமல் ஆங்கிலத்தையும் அரைகுறையாக கற்று ஒரு தலைமுறையை வீண் அடித்த பெருமை இந்த திராவிட புகுத்தறிவு ஜீவிகளையே சாரும்.
பல மிலேசர்களின் ஆக்ரமிப்பாலும் காலணி ஆதிக்கத்தாலும் ஜாதி தீண்டாமை போன்ற கொடிய சமூக வழக்கங்கள் ஏற்ப்பட்டதோடு இந்து மதத்தை பற்றியும் இந்து இலக்கியஙகளைப் பற்றியும் மொழியை சரியாக தெரிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே பிரிவினை செய்து தாறுமாறாக சரித்திர சான்றுகளை எழுதிவைத்து சென்றுள்ளார்கள். இப்படிபட்ட ஆதாரம் இல்லா ஆதாரங்கள் தான் இன்று நாட்டில் மலிந்துகிடக்கிறது. இதை தான் திராவிட பகுத்தறிவு வியாதிகள் உண்மை என்று நம்பி தமிழர் மதம் வேறு இந்து மதம் வேறு இது ஆரிய சூழ்ச்சி என்றெல்லாம் அவதூறு பரப்பி கொண்டிருக்கிறார்கள்..
நமது பாரதபாரம்பரிய எழில்மிகு கோவில்களின் பரிதாபநிலை epidjநினைத்தால் நெஞ்சம் பதைக்கிறது. Archeological Survey of India & States HR department துணையுடன் வெளிநாட்டிலிருந்து வந்த கிருஸ்துவ பெண் சோனியா மெய்னோ தலைமையில் நடக்கும் அட்டூழியங்கள் செல்லி மாளாது.

நமது இந்திய அரசாங்கமும் சுதந்திரத்திற்க்கு பின் பாரதத்தின் பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதில் ஒரு மெத்தன போக்கையே கடைபிடித்து கொண்டிருக்கிறது. பாரம்பரிய சின்னங்களான கோவில் சிலைகள் வண்ண ஓவியங்கள் புகழ்வாய்ந்த கட்டிடங்கள் என்று எதையுமே பொருட்படுத்துவதில்லை. (ASI) உள்ளவர்கள் எப்படி திட்டம்தீட்டி பொதுமக்கள் கண்ணில் மண்ணைதூவி புரன்நுதாரணம் செய்வதாக சொல்லிக்கொண்டு இடிப்பது சேதப்படத்துவது சுவடு தெரியாமல் அப்புறப்படுத்துவது போன்ற பாதக செயல்களை செய்துவருகிறார்கள் என்பதற்க்கு பல நிகழ்வுகளை குறிப்பிடலாம்.
2007 ஆம் ஆண்டுதொட்டு (ASI+Regional Endowment Board ) நமது பாரம்பரிய சின்னங்களை புதுபிப்பதாக சொல்லிக்கொண்டு கலைநயத்துடன் இருந்தவற்றை பொலிவிழக்க செய்துவிடுகின்றனர். இது எப்படி இருக்கின்றது என்றால் நன்கு அலங்கரிக்கப்பட்ட லஷ்மிகரமான மணபெண்ணிற்க்கு அமங்கலமான விதவை வேஷம்போடுவது போல்தான்.
இப்படி தமிழனின் அடையாளங்களை அழிப்பதற்கு ஆதரவுதரும் பகுத்தறிவு கூட்டம் ஒருநாள் தமிழனை நாகரிகம் இல்லாத பரதேசிகள் என்று உலகிற்க்கு அடையாளப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Series Navigationபூபேன் ஹசாரிகா –
author

வேதம் கோபால்

Similar Posts

38 Comments

  1. Avatar
    GovindGocha says:

    காவ்யாவின் தாத்தாவிற்கு தாத்தாவோ, பாட்டிக்கு பாட்டியோ… சாணத்தையும், எருகுப்பையும் போட்டு விவசாயம் செய்து இயற்கை விளைச்சல் உணவருந்தினார்கள்… ஆனால், அது ஓல்ட் என்பதால் அதை புறந்தள்ளி பின் 17:17:17 உரம் போட்டு உடல் கெட்டு இன்று இயற்கை உணவு என்றால்.. அது தொன்மையான வாழ்வு முறை எப்படி சிறந்த்தாகும் என்பாரா..? அவரிடம் அடிப்படையிலே நிம்மதியற்ற தன்மை இருக்கலாம்… அதன் காரணம் பகுப்பாயப்பட வேண்டுமே தவிர, தொன்மை பற்றியதல்ல…. இங்கு எல்லோரும் அவரவர் திறமை விடுத்து, இன்னொரு ஜாதியினரை முன்மாதிரியாக கொண்டு ஓடுவதால் தான்…. பிரச்சனையே…

  2. Avatar
    Kavya says:

    நீண்ட கட்டுரை, இந்துத்வா ஐடியாலஜியை நமக்குத் தெளிவுபடுத்த எழுதப்பட்டிருக்கிறது. அதை திண்ணை வாச்கர்கள் வரவேற்பார்கள். வரவேற்க வேண்டும். ஏனெனின், பலகருத்துக்களின் வழியாகப் பயணம் செய்தே அவரவர் தம் கருத்தை நெருங்க முடியும். இல்லாவிடில் காட்டுமிராண்டி வாழ்க்கை.

    போகட்டும். இக்கட்டுரைக்கு வருகிறேன். பல பத்திகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு எதிர்க்கருத்து தோன்றுகிறது. அனைத்தையும் ஒரே நேரத்தில் எழுதினால் கவனம் சிதறும். எனவே முதல் மூன்று பத்திகள் மட்டுமே தற்போது.

    முதல் பத்தி. “மனிதனாகப்பிறந்த”. இரண்டாவது: “பாரதத்தில்”; முன்றாவது. “இரண்டாவது” என்று தொடங்குபவை.

    இவைகளில் கடும் சொற்கள் காணப்படுகின்றன. வேதம் கோபால் அவைகளைத் தவிர்த்திருக்கலாம்.

    முதல் பத்தி: //ஆனால் சில அடையாளங்கள் என்றுமே மாறாது நிலைத்துதிருப்பவை. (அவை பரம்பரை பரம்பரையாக தொன்றுதொட்டு வரும் பண்பாடுகளான மொழி, இனம், மதம், தாய்நாடு, கலாசாரம், ஆண்மிகம் பாரம்பரியங்கள் ஆகும். மேலும் இவை ஒரு தாய்மையின் அடையாளங்களாகவே போற்றப்பட்டு வந்தன. எனவே இப்படிப்பட்ட அடையாளங்களை ஒருவன் மாற்றினால் அவனை சமுதாயம் மதிப்பதில்லை//

    இது தவறு என்றே சொல்லலாம். சில அடையாளங்கள் மட்டுமல்லாமல் எல்லா அடையாளங்களுமே நிரந்தரமானவை அல்ல. ஆனால் அப்படி நிரந்தரமானவை என்றொரு மாயத்தோற்றத்தை உருவாக்கலாம். எப்படி? ஒருவர் ஒரு ஊரில் பிறந்து அங்கேயே வாணாள் முழுக்க வதியும்போது, அவர் ஒரு கிணற்றுத்தவளை போல அவ்வூரே உலகம்; அவர் கண்டதே காட்சிகள் அல்லது அவரது அடையாளங்கள் என முழுக்கமுழுக்க நம்பியே உயிரை விடுவார். இன்றைய தென் தமிழகத்தில் உலாவரும் ஜாதீய அடையாளம் இப்படிப்பட்ட அடையாளங்களில் ஒன்று. இப்படிப்பட்டவர்கள் கிணற்றுத்தவளைகளாக இருக்கும் நிலையிலிருந்து மாறுபடும்போது, அவரது ஜாதிய அடையாளம் மெல்லமெல்லத் தேய்ந்து பின் வேறொரு அடையாளத்தை அதன்மீது ஏற்றி விடும்; அல்லது அவரது முந்தைய அடையாளம் நிரந்தரமன்று; அஃது இருக்கும் சூழலால் ஒரு தற்காப்பு முயற்சியாகத்தான் வந்தது என அவருக்குத் தெளிவு ஏற்பட்டு மனித நேயம் ஜாதீய அடையாளத்துக்கும் அப்பாலே என உணர்தல் ஏற்படும்.

    இப்படி அடையாளங்கள் தற்காலிகமானவை; மனிதனின் மீது அவை அவனறிந்தோ அறியாமலோ திணிக்கப்பட்டவை. இந்த அடையாளங்கள் போய் விட்டால், அவன் உயிர்விட்டு விடுவதில்லை. ஊரைவிட்டுத்தள்ளி வைக்கப்பட்டோர் சாவதில்லை. ஆயின் வருந்துவர். அவ்வருத்தம் அவருக்கு அங்கு தொடர்ந்து வதிப்பதாலேயே, இடத்தைக் காலி பண்ணி வேறூருக்குச்சென்று விட்டால் ? போயோ போச்.

    இங்கு ஒரு தந்திரந்த்தை வேதம் கோபால் போன்றோர் செய்வதை உற்றுணர்தல் அவசியம். அடையாளங்களைத் திணிப்போர் “இதுவே உன்னடையாளம்; இஃதன்றி உனக்கு வாழ்க்கையில்லை!” என மனவசியம் செய்கிறார்கள். இவ்வசியத்தால், அவன் தன்மீது திணிக்கப்பட்ட அடையாளத்தை சீர்தூக்கிப் தனக்கு உகந்ததா என்று பார்க்கும் மனத்திறனை இழந்து விடுகிறான். சில வேளைகள் இத்தந்திரவாதிகளுக்குத் தொல்லைதரும் வகையில் அன்னிய அடையாளங்கள் அவன் முன் வைக்கப்படும். அப்போது அவன் ‘இவ்வளவு நாள் இது மட்டுமே என் அடையாளம் என நினைத்திருந்தேன். வேறுபலவும் இருக்கின்றனவா ? அவை எப்படி என்று பார்க்கலாமே !’ என நினைத்துப் போந்தால், அவற்றுள் ஒன்று திணிக்கப்பட்ட அடையாளத்தைவிட தனக்கு உகந்தது என அவன் முடிபு செய்து ஏற்றுக்கொண்டால், முதல் அடையாளத்தைத் திணித்தோர என்ன செய்வார்கள் ! திண்ணையில் அவனை, “கேவலமான மிருக ஜென்மம்” என்று சொல்லி நீண்ட கட்டுரை வரைந்து தன் மனதுக்கு ஆறுதலைத்தேடுவார்கள்.

    I have reacted only a little. For other statements in the essay in the succeeding paras, my reactions will follow one by one. Even to para 1, my reaction is incomplete.

    Pl wait

  3. Avatar
    அமீதாம்மாள் says:

    நிறைய எழுத்துப் பிழைகள் நெருடுகிறது. ஆசிரியர் வருத்தப்படுவார் என்று எழுதாமல் இருக்கமுடியவில்லை. அவர் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்தப் பின்னூட்டம். நன்றி

  4. Avatar
    vedamgopal says:

    Madam Pl refer my e-mail sent to the web site in the morning-

    Dear Sir

    Thanks for putting my article in your web site. My tamil & english knowledge is below average and I thought that you will do the spelling correction before putting it. Any way in future I will do double check the article before sending/v.gopal

  5. Avatar
    Paramasivam says:

    Mr.Vedham Gopal has made many sweeping comments.His essay contains lot of accusations rather than points supporting his arguments.He wants the society to follow superstitions.He calls names against non-believers including Periyar.But for Periyar,I would not have reacted to his essay.

  6. Avatar
    Kavya says:

    இந்துப்பெற்றோருக்கு பிறக்கிறான் ஒருவன்; இசுலாமியப்பெற்றோருக்குப் பிறக்கிறான் மற்றொருவன்; இன்னொருவனோ கிருத்துவப் பெற்றோருக்குப் பிறக்கிறான்.

    “என்னைக்கேட்டு என் தாய் தந்தை பெற்றாரா? என்பதைப்போல என்னைக்கேட்டு என் மதத்தை தந்தனரா?” என்பதையும் அவன் கேட்கலாம். குழந்தைப்பருவ முதல் சுயசிந்தனை தோன்றும் வாலிபப்பருவம் வரை அவன் அவனுக்குப் பிறப்பால் தரப்பட்ட அடையாளத்தைச் சுமக்கிறான். பள்ளியில் அவன் அடையாளம் எழுதப்படுகிறது. கோயில்களுக்கோ சர்சுக்களுக்கோ, அல்லது மசூதிகளுக்கோ இழுத்துச் செல்லப்படுகிறான். ஒரே தெய்வமோ, அல்லது பலபல தெய்வங்களோ அவன்மீது திணிக்கப்படுகின்றன.

    சிலர் அத்திணிப்பை உணமையென நம்பி ஒரேயடியாக அம்மதத்தில் மூழ்க, சிலர் அத்திணிப்பை உண்மையென வெறித்தனமாகப் பிடித்து தீவிரவாதிகளாக‌, சிலர் தெருவோரத்து சுவிசேச ஊழியர்களாகி மதமாற்றம் செய்வோராகிறார்கள். பலர் (இவர்களே மெஜாரிட்டி) அத்திணிப்பைபற்றிச் சட்டை செய்யாமல், ஏனென்றால் மதம் ஒரு பொருட்டல்ல – எல்லாருக்கும் ஒரு மதம் அதுபோல எனக்கும் – அதால் எனக்கோ என் குடும்பத்துக்கோ ஒருவாய்க்கஞ்சி கூட கிடைக்காது என்று நன்றாகத் தெரிந்தும் மத அடையாளம் – அதாவது அவர்கள் பெற்றொர் அவர்கள் மீது திணித்தது – பற்றிக்கொண்டு வாழ்கிறார்கள். கூட்டத்தோட கோவிந்தா அல்லது ஏசுவே அல்லது அல்லாவே போட்டால் நிம்மதி எனபது இவர்கள் கட்சி. இக்கட்சியே அறுதிப்பெரும்பான்மை உள்ள கட்சி.

    இவர்களுக்கப்பால், தனக்கு சுய சிந்தனைப்பலம் வரும்காலை, தன்மீது திணிக்கப்பட்ட‌ அடையாளம் தனக்குச் சரியா ? என ஆராய்ந்து. பிடித்தால் அதைப்பிடித்து வாழ்வதும் உண்டு.

    பிடிக்கவில்லையென்றால், பிற அடையாளங்களை ஓர்ந்து அதனுள் ஒன்றைத்தேர்ந்தெடுத்து (திருமழியிசையாழ்வாரை இங்கு எடுத்துக்காட்டலாம் – முதலில் நாத்திகர், பின்னர் பவுத்தர், பின்னர் சமணர், பின்னர் சைவர், இறுதியாக தீவிர வைணவர்) இப்படி தன்மதத்ததைத் தானே தேர்ந்தெடுப்பவர்களை இக்கட்டுரையில், தாயையே விலபேசும் கொடியவர்கள் என்கிறார் ‘முதிர்ச்சி பெற்ற நாகரிகம் தந்த மதத்தை ஏற்றுக்கொண்ட வேதம் கோபால்.

  7. Avatar
    suvanappiriyan says:

    வேதம் கோபால்!

    //இவர்கள் நம்நாட்டை கூறுபோட்டு அன்னியர்க்கு விற்ககூட தயங்காத கேவலமான மிருக ஜென்மங்கள்.//

    //இரண்டாவது அடையாளம் ஒருவறது தாய்மதம். தாய் மதத்தை மாற்றுபவன் தன் தாயையே விலைபேச துணிந்தவன் ஆவான்.//

    சட்டியில் இருப்பது அகப்பையில் வருகிறது.

    எனது முன்னோர்கள் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் இஸ்லாத்தை ஏற்றனர். ஏன் இந்தியாவில் பிறந்து இந்து மதத்தில் பிறந்து அராபிய மதத்தை சுவீகரிக்க வேண்டும்.? ஏனெனில் எனது முன்னோர் இந்து மதத்தில் சூத்திரர்களாக பாவிக்கப்பட்டனர். பிராமணர்களை தவிர்த்து மற்ற அனைவரும் இந்து மத கொள்கைகளின்படி சூத்திரர்களே! இந்த இழிவை அடுத்த தலைமறையிலாவது துடைக்க வேண்டும் என்ற வேகம் வந்தது எனது முன்னோர்களுக்கு. வேதத்தை பிராமணர்களை தவிர வேறு சாதியார் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற சொன்னது வேதம் கோபாலின் வெறி பிடித்த மதம். உலக மக்கள் அனைவரும் ஒரு இடத்திலேயே பிறக்க நம்ம இந்து மதம் மட்டும் நெற்றியில் பிறந்தவன் மேலோன், வயிற்றில் பிறந்தோன் இடையன், காலின் பிறந்தோன் சிறியோன் என மனிதர்களை வேற்றுமைப்படுத்தியது.

    எனவே இந்து மதத்தை தூக்கி எறிந்தனர் எனது முன்னோர். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்த என் முன்னோர்களை நினைத்து எனது கண்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கிறது. இன்று என்னை எவனாது சூத்திரன் என்று சொல்ல நா வருமா? சொன்னால் அவனது நாவை அறுத்து எறிந்து விடுவோமே! சமணம்,பௌத்தம், கிறித்தவம் என்று அனைத்தையும் விழுங்கிய இந்துத்வா இன்று இஸ்லாத்தையும் விழுங்கி இந்து மதத்தின் ஒரு பிரிவாக மாற்ற துடிக்கிறது. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அது நிறைவேற போவதில்லை.

    என்னை சூத்திரன் என்று ஒத்துக் கொண்டு அந்த மதத்திலேயே இருப்பதுதான் தன் தாயை விலை பேசுவதாக முடியும். கேவலமான மிருக ஜென்மமாகவும் இருக்க முடியும். தன் மானமுள்ள ஒருவன் தனக்கு எங்கு மரியாதை கிடைக்கிறதோ அதை நோக்கிதான் ஓடுவான். மற்றவர்களையும் தக்கவைக்க இந்து மத வேதங்களை திருத்தும் பணியில் வேதம் கோபால் போன்றவர்கள் ஈடுபடலாம். அதை விடுத்து பாதிக்கப்பட்டவனுக்கு இருக்கும் ஒரே வழியான இஸ்லாத்தை வம்புக்கிழுத்து மூக்குடைபட வேண்டாம்.

  8. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    அரேபியாவிலும் பாகிஸ்தானிலும் ஏன் தீண்டாமை இருக்கிறது?
    அல் அக்தும் என்று இணையத்தில் தேடிப்பாருங்களேன்.
    http://en.wikipedia.org/wiki/Al-Akhdam
    http://www.nytimes.com/2008/02/27/world/middleeast/27yemen.html?partner=rssnyt&emc=rss
    இவர்களும் முஸ்லீம்கள்தான். அரேபிய தீபகற்பத்தில் ஏன் தீண்டாமை இருக்கிறது? அதுவும் 1300 ஆண்டுகளாக?
    இவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தும் அரேபியர்களின் நாக்கை அறுப்பதில் முதலில் ஈடுபட்டுவிட்டு இங்கே வரலாமே?

  9. Avatar
    vedamgopal says:

    According to me when one is born he is identified as male or female and all other identifications are society enforced like nationality, religion and cast group. When one has the right to change his nationality if he settle in other country, when one has the right to change his religion as per his choice, WHY NOT ALLOW CHANGE OF CAST GROUP?
    Nationality is a general identification based on the birth place. Even for changing the nationality in a foreign land one has to full fill so many conditions and also to wait for long time to get the changed citizenship. It is not something like dipping you in bath tub, putting a cross dollar in the neck and saying from to-day you are a Christian. The majority becomes minority and he is eligible for all the minority benefits. Is it logic? Cast & religion are based on who gave birth to you and it is permanent and can not be changed. If change of religion is justifiable by law then change of cast group is also justifiable. I am willing change my cast group and want to announce that I am converted to dalit community and except the government to provide all the reservation benefit. Is it OK ????????????

    1. Avatar
      Kavya says:

      Amusing.

      Change of caste is a not warranted if a person disbelieves in caste system. He may have been born a Brahmanan but if he changes his religion, he loses his caste. Which caste the outlaw Hyder Ali involoved in Madurai Police station bomblast belongs? Thanjavur Brahmanan. Which caste Sathu Chellappaa belongs ? Same district orthodox Brahminan. I cite these two only to prove that once you leave the Hindu relgion, you lose your adaiylaam of casate.

      Therefore, it is in your religion that the evil was born, as pointed out by Suvanapiryan. It is by leaving it that the evil can be cast off. You must throw off the whole varnasharadhamam which you and Malarmannan are praising it everywhere.

      Your forefathers were proudly announced their inheritance of caste to the word; “We are Brahminars and the status has been given to us by our Vaideega religion; and no one can dislodge us from the top rung of caste hierarchy” A boast. Even today, you want to be called so for ever. It is not a boast for you. It is real to you. You believe it. That is why you love vaideega religion.

      Thus, thousands of generations of his forefathers announced to the world their castes. One might argue here that being a brahmanan is not by birth. But hell with this theory which is meant to pass MA in Vaishnavism in Madras University. What is practice? None of his forefathers never ever thought to change their vaideega religion because of the status it gave them. At the same time, while they were gleeful, on the lowest rung of Hindu society, the misery marked the lives of the people called Untouchables. His forefathers did not care for such misery a good percentage of their fellow humans lived in; to boot, they themselves became the cause of such misery – by practising untouchabitiy and. by giving divine legitimacy to such practice, encouraged all others to sat on dalits and spit upon them. The bitter scenario in Paramakkudi and elsewhere bear witness to the mischief cause by the religion.

      Can he deny all these ?

      Now, Vedam Gopal wanted to become a dalit. Only to get reservations. In Independent India only, dalits began to get attention in order to get uplifted to the scale of equality with others. Just 60 years ago. But the story of Vaideega religion is, to use our Thinnai’s favourite Hindutva acolyte,

      Reservations are not permanent. But the Hindu religion is. The govt jobs are becoming rarer and rarer thanks to outsourcing. Staggering data are slowly coming in to our dismay that reservations have not uplifted these people en masse and so, Govt of India has started thinking seriously that IT IS IN ECONOMIC UPLIFTMENT that the real solution lies. That is why, it has now ordered that the dalits should be encouraged to take up business ventures. The next Budget may throw some surprises.

      Now come to this pukka paarppnar Vedam Gopal.

      If a day comes when statistics flow in to prove that upliftment has somewhat happened to make it high time the reservations were scaled down, and then given up for good, what will Vedam Gopal do then ?

      He will simply cozy in the permanent status of the imaginary adaiyaalam as he put it, called Brahmin caste. He will continue to enjoy it. By enjoyment, I don’t mean money and affluence; rather things which made the Brahmins the envy of Tamil society for millennia. The ejaculation of being a Brahmin by birth gives all his writings the necessary catalyst to defend Vaideega religion. If not, why is he there at all ?

      Vedam Gopal is therefore a clever argumentative Paarppnar. Santharppavaatham.

      Deprive dalits, he will like to be a Brahmin for ever. He won’t symapthise and empathise with the dalits, though not actively help them.

      Give Reservations, he will pretend to discard his caste identity coming from his parents, and don the dalit identity w/o LIVING THEIR LIVES. please note this kapada naadagam.

      To be a dalit, he should first give up his vaideega religion which is against dalits having the KILLER BREW called varnashradharama, and then go to a dalit cheri (there are so many within Chennai city itself; if he wants, I would suggest the notorious one facing Udayam Theatre complex and squat there, with them, with your sons and daughters. Then, you need not ask for reservations. It will be given to you.

      When night falls and it becomes dark, prostitution for a few rupees, bootlegging, alcoholism, wife beating. Death, deprivation of basic human dignity, karpu? Not for them. Flesh will be sold – living flesh, take it and enjoy yourself. Squalor, disease and death. Les Miserables.

      Men may come, men may go
      We go on for ever.

      Vedam Gopal will like to be dalit. I am being serious. He will be a dalit really then if he takes up the challenge I throw to him: to go and live there. To go on for ever. No temple. No sandihaa vandanam. No Gayatri Mandiram. No Naalaiyiora Divya Prapandham. No theevaram. No thiruvaasagam. No Vedangkal. No Upanishad. A free free world of prostitution and country liquor.

      Welcome to our paracheri. Or get killed in police firing, in nochi kuppam (I saw fishermen running to the kuppam when Devaram fired his shots at them – why? They made the heinous crime of littering the Marina beach with their catamarans !) or at Pamakkudi. Welcome to face police brutality!

      Don’t worry Gopal, your son and daughter will get reservations. I will help them. Give me their bio data please.

  10. Avatar
    vedamgopal says:

    //எனது முன்னோர்கள் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் இஸ்லாத்தை ஏற்றனர். ஏன் இந்தியாவில் பிறந்து இந்து மதத்தில் பிறந்து அராபிய மதத்தை சுவீகரிக்க வேண்டும்.?// கத்தி முனையில் பயந்துகொண்டு மாறினார்கள் என்பதுதான் உண்மை – இஸலாத்திலும் கிருஸ்துவத்திலும் மூளை சலவை என்பது ஒரு சடங்கு நன்றாக கஞ்சி போட்டு விரைபாக ஆகிவிடுவீர்கள். தண்ணீரில் நனைத்தால்தான் விரைப்பு விலகும் – புரிந்தால் சரி !!!

  11. Avatar
    malarmannan says:

    முகமதிய சமுதாயம் திரையிட்டு மூடப்பட்டுள்ள சமுதாயம். அவ்வப்போது சூறைக் காற்று அடிக்கையில் திரை சிறிது விலகும். லப்பை வாழ்க, ராவுததர் ஒழிக என்கிற சுவர் இலக்கியம் தென்பட்டு மறையும். ஷாபானுக்கள் காணப்படுவார்கள். வன்புணர்ந்த மாமனார்தான் இனி உனக்குக் கணவன் என்று மருமகளுக்குத் தீர்ப்பளிக்கும் விசித்திரம் நடப்பது புலப்படும். முல்லாக்கள் போடும் வாய்ப் பூட்டுடன் கிடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பரிதாபத்திற்குரியவர்கள் எனது அன்பு முகமதிய சகோதரர்கள். அவர்களூக்காக அனுதாபப் படுகிறேன். தாய் மதம் திரும்ப அவர்களைப் பாசத்துடன் அழைக்கிறேன். வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் முகமதியர் மட்டுமே தமது சிந்தனைகளைச் சுதந்திரமாக வெளியிட முடியும். ஆனால் அவர்களுக்கும் ஃபத்வா அச்சுறுத்தல் உண்டு. ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல், பிராமணனைத் தவிர மற்ற ஜாதியார் வேதம் படிக்கக் கூடாது என்பதெல்லாம் ஆதாரம் இல்லாத வெற்றுப் பிரசாரம். துவேஷத்தைத் தூண்டிவிடுவதற்காகச் செய்யப்பட்டது. இந்த மாய்மாலப் பொய்கள் யாவும் என்றோ ஆதாரப் பூர்வமாக அம்பலப்படுத்தப் பட்டுவிட்டன!
    -மலர்மன்னன்

  12. Avatar
    vedamgopal says:

    @ Kavya
    // முதல் பத்தி. “மனிதனாகப்பிறந்த”. இரண்டாவது: “பாரதத்தில்”; முன்றாவது. “இரண்டாவது” என்று தொடங்குபவை. இவைகளில் கடும் சொற்கள் காணப்படுகின்றன. வேதம் கோபால் அவைகளைத் தவிர்த்திருக்கலாம். //
    நாகரிகம் கருதி என் தவறை இனிமேல் திருத்திக்கொள்கிறேன்
    ” கேவலமான மிருக ஜென்மங்கள்.” “தன் தாயையே விலைபேச துணிந்தவன் ஆவான்” இவற்றை
    ”இது கேவலமான செயல் என்பது என் கருத்து” என்றும் – ”தாயை பழிப்பதற்கு சமம்” என்றும் மாற்றி படிக்கும் படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.
    நான் உபயோகபடுத்திய கடும் சொற்களால் தான் ஒரு வாசகர் தனது மறுமொழியில் இப்படி கூறுகிறாரா (வேதம் கோபாலின் வெறி பிடித்த மதம். – இன்று என்னை எவனாது சூத்திரன் என்று சொல்ல நா வருமா? சொன்னால் அவனது நாவை அறுத்து எறிந்து விடுவோமே! ) அல்லது அது இயற்கையிலேயே பெற்ற வர பிரசாதமா !!

  13. Avatar
    vedamgopal says:

    @ Kaviya
    //அவன் தன்மீது திணிக்கப்பட்ட அடையாளத்தை சீர்தூக்கிப் தனக்கு உகந்ததா என்று பார்க்கும் மனத்திறனை இழந்து விடுகிறான்.//
    சமூசூழலால் தாய் தந்தை மூலம் இயற்கையாகவே ஏற்ப்பட்ட ஒன்றை (இனம்-மதம்-தேசியம்) திணிக்கப்பட்டது என்று சொல்கிறீர்கள். அதனால் தனக்கு உகந்ததா என்று பார்க்கும் மனத்திறனை இழந்து விடுகிறான் என்றும் சொல்கிறீர்கள். இப்படி சீரதூக்கி பார்க்கும் மனத்திறனை இழந்த ஒருவன் ஏற்புடையது எது என்று நிர்ணயிக்கும் தகுதியை இழந்துவிடுகிறான். அதனாலேயே அது திணிக்கப்படுகிறது இதனால் மத நல்லிணக்கணம் குலைகிறது அதை தடைசெய்வேண்டும் என்பதே இந்துகளின் குரல்.

  14. Avatar
    GovindGocha says:

    ஏன் இந்தியாவில் பிறந்து இந்து மதத்தில் பிறந்து அராபிய மதத்தை சுவீகரிக்க வேண்டும்.? ஏனெனில் எனது முன்னோர் இந்து மதத்தில் சூத்திரர்களாக பாவிக்கப்பட்டனர்— ஏனென்றால் அப்போது இணையம் கிடையாது. அங்கு போனால் சமம் என்ற நினைப்பு. தொழுகை கூட உள் பிரிவால் ஒரே சமயத்தில் கிடயாது என்பது இவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்…. அவலை நினைத்து உரலை இடிக்கிறார்…

  15. Avatar
    GovindGocha says:

    இன்று என்னை எவனாது சூத்திரன் என்று சொல்ல நா வருமா?—- அத விடுங்க… நீங்க ஷியாவா , சன்னியா…? உங்களைப் பார்த்தா பரிதாபமா இருக்கு…. சௌதில கூட , அறிவார்ந்த இல்லை தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்குத்தான் மரியாதை… மதம் என்பதற்காக மட்டுமல்ல…

  16. Avatar
    GovindGocha says:

    தாய் மதத்தை மாற்றுபவன் தன் தாயையே விலைபேச துணிந்தவன் ஆவான்.—-> இது ஒரு மூன்றாந்தரமான கூற்று. வன்மையாக கண்டிக்கிறேன். இன ,சாதி, அடையாளம் என்பது குடும்பத் தொடர். அதில் ஜீன்களின் தொடர் இருக்கும். மதம் என்பது வாழ்வு நெறி. ஒருவனுக்கு பிற நெறி பிடித்தால் மாறுவது அவனது இஷ்டம். அதாவது தத்துவம் நெறி புரிந்து. பணத்துக்காக மாறுவது அவனது முடிவு. மிரட்டி மாற்றப்பட்டால் அவனை பாதுகாப்பது பிறரின் இஷ்டம். மற்றபடி மத தத்துவங்கள் பற்றி அலசலாம் பேசலாம் இல்லை விஞ்ஞான பூரிவமாக ஆராயலாம். இந்து மதம் கங்கைகரையிலும், இஸ்லாம், கிறிஸ்துவ மதம் ஒரு பகுதியிலும், மாயன் இன்னொரு பகுதியிலும் தோன்றி வர…. தமிழர்கள் வாழும் பகுதியில் அவை எதுவும் தோன்றவில்லை. அந்த மத தத்துவங்கள் மொழி பெயர்க்கவே பட்டன. முருகன் என்ற கடவுளே இந்து மதத்தில் கிடயாது.. ஆனால் தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது… அது ஏன்..?

  17. Avatar
    GovindGocha says:

    சொன்னால் அவனது நாவை அறுத்து எறிந்து விடுவோமே— புகுந்த இடத்து பிரச்சனை இது. வன்முறையால் வளர்ச்சி என்பது மாயை . அதற்கு பாக்கி, ஆப்கி உதாரணம். அது சரி, பிற மத கடவுளை கேவலமாக் சித்தரித்த ஓவியருக்கு நீங்கள் என்ன நிலைப்பாடு எடுப்பீர்கள்..

  18. Avatar
    vedamgopal says:

    @ Kavya
    // பிடிக்கவில்லையென்றால், பிற அடையாளங்களை ஓர்ந்து அதனுள் ஒன்றைத்தேர்ந்தெடுத்து (திருமழியிசையாழ்வாரை இங்கு எடுத்துக்காட்டலாம் – முதலில் நாத்திகர், பின்னர் பவுத்தர், பின்னர் சமணர், பின்னர் சைவர், இறுதியாக தீவிர வைணவர்)//

    இவை எல்லா நம் நாட்டில் தோன்றிய மதங்கள். அதனால் நாட்டின் பண்பாடுகளோ கலாசாரமோ கெட்டுவிடாது. இதையே தான் புத்த மதத்திற்கு மாறிய அமபேத்கரும் சொன்னார்.

    1. Avatar
      Kavya says:

      இசுலாமியர்களிலும் கிருத்துவர்களிலும் நாட்டுக்கு உழைத்த உத்தர்மர்கள் உண்டு. கலை, இலக்கியம், விஞ்ஞானம் என்று பங்காற்றி நாட்டுப்பணியாற்றியோர் உண்டு. அப்துல் கலாமைப்போல ஏராளமானவர்கள். 1857 சிப்பாய்க்கலகம் இசுலாமியராலும் இந்துக்களாலும் சேர்ந்தே நடத்தப்பட்டது அன்னிய ஆட்சியாளருக்கு எதிராக.
      மு.மு.இசுமாயிலைவிட கம்ப ராமாயணத்தை வேதம் கோபாலோ மலர்ம்னனனோ படித்திருக்கவும் முடியாது; புகழ்ந்திருக்க முடியாது.

      அத்தனைபேரையும் ஒரேகட்டாகக்கட்டு ‘ தாயை விலைபேசத்துணிந்தவர்கள்” என்கிறார் வேதம் கோபால். ரொம்ப ஓவர். மன்னிப்புக்கேட்க மாட்டீர்கள்; அது தேவையில்லை. தவறை உணர்ந்தால் போதும்.

  19. Avatar
    Paramasivam says:

    A sudhra who did penance was killed by Rama as per Valmiki Ramayana.The TN Govt”s Act allowing all caste people to become Archaka is challenged in court.The south gate of Chidambaram temple is still closed.Will Mr.Malarmannan explain?

  20. Avatar
    GovindGocha says:

    மலர்மன்னன் இந்த மாதிரி வாக்குவாதங்களில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்… நீங்கள் கடந்து வந்த வரலாற்றை உள்ளது உள்ளபடி – உங்கள் கருத்தும் இல்லாமல் – எழுதுங்கள். அதுவே மிகப் பெரும் தொண்டு.

  21. Avatar
    suvanappiriyan says:

    மலர்மன்னன்!

    //ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல், பிராமணனைத் தவிர மற்ற ஜாதியார் வேதம் படிக்கக் கூடாது என்பதெல்லாம் ஆதாரம் இல்லாத வெற்றுப் பிரசாரம். துவேஷத்தைத் தூண்டிவிடுவதற்காகச் செய்யப்பட்டது. இந்த மாய்மாலப் பொய்கள் யாவும் என்றோ ஆதாரப் பூர்வமாக அம்பலப்படுத்தப் பட்டுவிட்டன!//

    ‘பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும் எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்’ – மனு த.சா.ஆ .1 சு., 100 என்றும் ‘சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்’ (மனு த.சா.அ. 8.சு 270) என்றும் ‘பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்’ – மனு (த.சா.அ 2 சு,31) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

    உண்ணத்தக்க உயிர்களை நாள்தோறும் கொன்று உண்டாலும் பாவத்தை பிராமணன் அடைய மாட்டான். பிராமணனாலேயே உண்ணத்தக்கவையும் கொல்லத்தக்கவையும் படைக்கப்பட்டிருக்கின்றன- மனு (த.சா.அ.5.சு- 30)

    பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக. ஆனால் பிராமணன் சூத்திரனின் பொருளை கொள்ளையிடலாம்’ (மனு த.சா.அ.9.248)

    கொடிய குற்றம் செய்தாலும் பிராமணனைக் கொல்லாமலும், மற்ற எத்தகைய துன்பத்திற்கும் ஆளாக்காமலும் அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்து அயலூருக்க அனுப்ப வேண்டும். (மனு த.சா.அ.சு 380)

    அரசனானவன் எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனைக் கொல்ல நினைக்கக் கூடாது’
    மனு (த.சா.க.8.சு.380)

    நான் எழுதியது ஒரு சில சாம்பிளகளே! இன்னும் பல நூறு வசனங்கள் அள்ள அள்ள குறையாமல் வருகிறது. நான் கேட்பது இப்படி ஒரு கேடு கெட்ட சட்டத்தை நாடு முழுக்க தடை செய்யாமல் நாட்டு மக்களில் ஒரு சாரார் பயபக்தியோடு தினமும் படித்துக் கொண்டிருக்கிறோம். வேத பாட சாலைகளில் குழந்தைகளுக்கு சொல்லியும் கொடுக்கப்படுகிறது. இப்படி சிறு வயதிலிருந்தே கடவுளின் பெயரால் சிறுக சிறுக தீண்டாமை மனதிலே விதைக்கப்படுகிறது. எனவே தான் ஒரு சாரார் எவ்வளவு படித்திருந்தாலும் தீண்டாமையை ஆதரிக்க காரணமே! மலர் மன்னன் போன்ற எல்லாம் அறிந்த ஒரு பதிவரே இதற்கு வக்காலத்து வாங்கினால் தீண்டாமையை இன்னும் எத்தனை யுகமானாலும் மாற்றவே முடியாது. அந்த மக்கள் இஸ்லாத்தையும் கிறித்தவத்தையும் நோக்கி செல்வதையும் தடுக்க முடியாது.

    குறள் 948
    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்

    விளக்கம்
    நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)

    //லப்பை வாழ்க, ராவுததர் ஒழிக என்கிற சுவர் இலக்கியம் தென்பட்டு மறையும்.//

    இப்படி ஒரு சில பிரிவுகள் உண்டாவதற்கு தடை சொல்லும் பல குர்ஆன் வசனங்களை என்னால் காட்ட முடியும். ஆனால் இந்து மதத்தில் வர்ணாசிரமத்தை ஆதரிக்கும் வசனங்களே நான் மேலே காட்டியிருப்பது.

    லெப்பை ராவுத்தர் என்றாலும் இஸ்லாமிய வட்டத்துக்குள் இவர் உயர்ந்தவர் அவர் தாழ்ந்தவர் என்ற நிலை இல்லை. அனைவரும் மசூதியில் ஒன்றாக நின்று தொழுகிறார்கள். பெண் கொடுத்து பெண் எடுத்து கொள்கிறார்கள். தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டால் அவர்களின் லெப்பை ராவுத்தர் என்ற பிரிவும் மறைந்து விடுகிறது. ஆனால் இந்து மதத்தில் பிறப்பால் ஒருவன் இன்ன சாதி என்று தீர்மானிக்கப்டுவதால் அவன் இறக்கும் வரை அவனத இழிவு நீங்குவதில்லை. அதற்கு உறுதுணையாக இருப்பது இந்து மத வேதங்கள்.

  22. Avatar
    GovindGocha says:

    லெப்பை ராவுத்தர் என்றாலும் இஸ்லாமிய வட்டத்துக்குள் இவர் உயர்ந்தவர் அவர் தாழ்ந்தவர் என்ற நிலை இல்லை—- Joke of the year

    1. Avatar
      Kavya says:

      நிலவிலும் கலங்கம் உண்டு என்பார்கள். வரிக்கு வரி வாதம் வராது. பொதுவாகத்தான் சொல்லவேண்டும். அப்படிப்பார்க்கும்போது, வைதீக இந்து மதம் மக்களை இறைவன் சொன்னான் என்று பிரித்துப்பார்த்தது. அதாவது பிரிவினைகளுக்கு இறைவனே அப்ரூவல் தந்தான் என்று எழுதிவிட்டது. கேட்டால், அது குணவாரியாக மக்களைப்பிரித்தல் என்று சொல்லிவிடுவார்கள். இறைவன் சொன்னான் என்றுதானே நீங்கள் பிராமணர்கள் ஆனீர்கள்? தாசில்தார் சொல்லியா ?

      தான் வகுத்தப்பிரிவினைகள் ஒருநாள் ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் தீண்டாமைக்கு உள்ளாவார்கள் என்று எல்லாவல்ல இறைவனுக்குத் தெரியாதா ? ஆனால் இவர்கள் இறைவனுக்குத் தெரியவில்லையாம்.

      அதே வேளையில் இசுலாமியரிடம் பிரிவினைக்கு அவர்கள் இறைவனோ மறைத்தூதரோ அங்கீகாரம் தரவில்லை. அப்படியிருந்தால் கோவிந்த் கோச்சா சுட்டிக்காட்டிப்பேசலாம்.

  23. Avatar
    விருட்சம் says:

    வேதம் கோபால் & மலர்மன்னன்

    நாம் மதம் மாறுபவர்கள் பற்றி நிறையக் கவலைப்படுகிறோம்.  ஆனால் இன்றைய நடைமுறையில் இந்து மதத்தின் பல நிலைகளில் பக்தி மார்க்கம் தான் பெரும்பான்மையினரை சென்று அடைந்துள்ளது. பக்தி  மார்க்கம் மிகத் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. மனிதர்கள் அற்புதங்களை எதிர் நோக்கி இன்ஸ்டன்ட் பலன்களை விரும்புகிறார்கள்.

    மதம் மாறுபவர்கள் பொதுவாகச் சொல்வது நாங்க கும்பிட்ட சாமி எங்களை கை விட்டுவிட்டது. அவங்க சொன்ன கடவுள் வழிமுறை எங்களுக்கு பிடித்தது. 

    பாவங்கள் பரம்பரையாகத் தொடரும் என்பதை விட பலருக்கும் பாவத்தை ஏற்றெடுக்கும் ஒரு கடவுள் சிறப்பாகத் தெரிகிறது.  அப்படி ஓன்று இருக்க முடியாது என்று சொன்னால் நம்புவதை விட அப்படி ஓன்று இருப்பதாக நம்ப அவர்கள் விரும்புகிறார்கள். 
    செயலின் பலன்களை (பாவ புண்ணியங்கள் ) அவனிடம் விட்டுவிடுதல் என்ற கீதையின் உபதேசத்தை அரைகுறையாக எடுத்துக் கொண்டு அழுவாச்சி ஆக்கி வைக்கிறார்கள். பார்க்க கொடுமையாகத் தான் இருக்கிறது.
    ஆனால் ஆதீத சுயநலம் கலந்து விட்ட பக்தி மார்கத்தின் பின் விளைவு தான் இந்த மத மாற்றங்கள்.   இந்த விஷயத்தில் விழிப்புணர்வு தருவதற்கு இந்து மத அமைப்புகள் ஏதாவது செய்கிறதா தெரியவில்லை.  அதில் கவனம் செலுத்தலாம்.
    மற்றபடி இணையத்தில் யாரவது வந்து இந்து மதம் குறித்து எதிர்க் கருத்து தெரிவித்தால் அதையெல்லாம் ‘காவ்ய’மாக கருத்தில் கொண்டு உங்களைப் போன்றோர் விவாதத்தில் ஈடுபட்டு உங்கள் ஆக்கப் பூர்வமான நேரத்தை செலவழிப்பது வருத்தத்தை அளிக்கிறது.

    1. Avatar
      Kavya says:

      வாத்தியார்தான் பரீட்சைபேப்பர் திருத்த வேண்டும். மாணவன் முடியுமா ?

      கடவுள் பாவங்களைச்சுமப்பார் அல்லது சுமக்க மாட்டார் என்று விருட்சத்துக்கு எப்படித் தெரிந்தது ?

      சுமப்பார் என்பது ஒரு நம்பிக்கை. சுமக்க மாட்டார் என்பதும் ஒரு நம்பிக்கை. மனிதன் நம்ப மட்டுமே செய்ய முடியும். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.

      விருட்சம். இந்து மதத்தை விட்டு விட மூலகாரணங்கள் பல.; அதில் முக்கியமானது சுவனப்பிரியன் சொன்னது என்று நான் நினைக்கிறேன். மதக்கொள்கைகள் பிற்பாடே.

      அதாவது, உங்கள் மதம் மக்களைப்பிரிக்கிறது. குணவாரியாக எனபது ஒரு டேமேஜ் கன்ட்ரோல். வருணக்கொள்கை இந்துமதத்தை நாசப்படுத்திவிட்டது. வருணக்கொளகை ஒரு எலீட்டிசத்தை உரம் போட்டு வளர்த்துவிட, மதத்தால் இலாபமடைந்தோர் அம்மதத்துக்காக அதாவது அந்த இலாபத்தைத் தக்க வைத்துக்கொள்ள போராடுகிறார்கள். வேதம் கோபாலில் இக்கட்டுரை ஒரு சான்று. இலாபமடைந்தோர் எலீட்ஸ்கள் எனலாம். இவர்களே கடவுளர்களை பணக்காரக்கடவுளர்களாக ஆக்கிவிட்டார்கள்.

      இடைக்காலத்தில் இதை உணர்ந்த பெரிய இந்துக்கள் பலர் இதை மாற்ற முனைந்தனர். ஆனால் அம்முயற்சி அவர்க்ள் காலத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அவர்களுக்குப்பின் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது.

      இன்று உம்மதத்தில் சாமியார்கள் பணக்காரகளின் பணத்துக்காக கண்டம் பார்க்கிறார்கள். வேள்விப்பார்ப்ப்னரை விலைக்கு வாங்கலாம். கோயில்கள் பரம ஏழைகள் அண்ட முடியா கவர்ச்சி மாளிகைகள். திருப்பதியைத்தவிர. பார்ப்ப்னருக்கு என்று எல்லாம் தனியாக. பிறருக்கென்று தனியாக (இதுதான் பெரியாரைப்பாடாய படுத்தியது. இதைப் பார்ப்ப்னத்துவேசம் என்று ஜோடித்தார்கள் இந்துமத வியாபாரிகள்)

      சுருங்கக்கூறின், பாமரர்களுக்கல்ல உமது மதம். அதே வேளையில் இசுலாமும் பெந்தோகோஸ்தோவும் கத்தொல்லிக்கமும் அப்படியல்ல. ஒரு பரம் ஏழை எந்தவித லஜ்ஜையும் படத்தேவையில்லை.

  24. Avatar
    Paramasivam says:

    Are Govinda Gocha and Vritcham are moderators for this website?Govinda Gocha could not reply about Manusmiriti quotes cited by Suvarnapriyan.But talks about Labbai and Rowther.First,you remove dirt from your back.Then you can laugh about other religions.

  25. Avatar
    Kavya says:

    இப்படி பார்ப்பன ஆதிக்கமும் திமிரையும் அதன் வழியாக வந்து எலீட்டிசத்தையும் (மேட்டிமைத்தனத்தையும்) கண்டு கொதித்தவர் நாராயண குரு. இவர்களின் மேட்டிமைத்தனம் தாழ்ந்த ஜாதியினரை இந்து மதத்திலிருந்து விரட்டியதையும் கணடவர், தானெ அவர்களுக்காக ஒரு சிவன் கோயில் கட்ட, அதைக்கண்ட பார்ப்ப்னர்கள். “ஓய், தெரியாதா உனக்கு,. நாங்கள்தான் \சிவன் கோயில் கட்ட வேண்டும். நாங்கள்தான் பூஜை பண்ணவேண்டும். நாங்கள் வைத்தால்தால் சிவன்!’ என்று சொல்லி ஊரைக்கூட்ட, நாராயண குரு, ‘ஒத்துக்கொள்கிறேன். அப்படியே நீங்கள் ஒரு சிவனைப்பிரதிஸ்டை பண்ணிவைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் எங்கள் சிவனிடம் வராதீர்கள் ஒதுங்கிப்போங்கள். இச்சிவன் தாழ்ந்த ஜாதியினரின் சிவன்! என்றார். இது ஒரு முக்கியமான நிகழ்வு.

    இதன்படி, இந்து மதம் பார்ப்ப்னருக்கும் அவர்களை அடிவருடும் மேட்டுக்குடியினருக்கும் தனியாக இருப்பதைப்ப்பற்றி மற்றவர்கள் சட்டை பண்ணவேண்டியதில்லை. பார்ப்ப்னனை அவன் போக்கில் விட்டுவிட்டு உன்சாமியைக்கும்பிடு என்கிறார் நாராயண குரு.

  26. Avatar
    vedamgopal says:

    @ Govind Gocha
    // இன ,சாதி, அடையாளம் என்பது குடும்பத் தொடர். அதில் ஜீன்களின் தொடர் இருக்கும். மதம் என்பது வாழ்வு நெறி. ஒருவனுக்கு பிற நெறி பிடித்தால் மாறுவது அவனது இஷ்டம். //
    இனம் என்கிற (ரேஸ்) மட்டும்தான் ஜீன்கள் தொடர்பு இருப்பதாக நீரூபணம் அகியுள்ளது அதுவும் உடற்கூறு சம்பந்தப்பட்டது மற்ற காரணிகளின் ஜீன் தொடர்புகள் பற்றி முழுமையாக எதுவும் நிறுபணம் ஆகவில்லை. ஆகவேதான் பரம்பரையாக பின்பற்றிய தமிழ் இன ஜாதி மத தேசிய அடையாளங்கள் மாற்றகூடாது என்கிறோம். ஒன்றை மாற்றலாம் என்றால் எல்லாவற்றையும்தான் மாற்றலாம் ஜாதியை சேர்த்துதான். அதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்குமா ?
    // முருகன் என்ற கடவுளே இந்து மதத்தில் கிடயாது.. ஆனால் தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது //
    முருகன் ஒரு ஒரிஜினல் அக்மார்க் இந்து கடவுள் என்பது நிருபணமான உண்மை. தனி தமிழ் கடவுள் என்பதற்கு எந்த ஆதாரமுமே இல்லை. மேலும் மதம் மாறுவதில் தவறு இல்லை என்று சொல்லுகிறீர்கள். பார்த்து கொள்ளுங்கள் திருப்பதி மலைமேலேயே மாதா சிலையை நிறுவ முயற்ச்சித்த கிருஸ்துவர்கள் முருகன் குடிகொண்டிருக்கும் மலையிலிருந்து அவரை கிழே தள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ? ஜாக்கிரதையாக பேசுங்கள்.?

    1. Avatar
      Kavya says:

      வேதம் கோபால்

      ஜாதிகள் என்ற அடையாளங்கள் இன்று வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஜாதி வெறி பிடித்தாடும் தென் தமிழகமும் மக்கள் ஜனத்தொகையில் ஆங்கு மாறுதல் வரும்போது – தொழிற்சாலைகளிம் பிறமக்களும் கிராமங்களில் பட்டண வாழ்க்கை முறையும் சேரும்போது, அங்கும் ஜாதிகள் கலக்கும். எனவே ஜாதி அடையாளம் மாறக்க்கூடாது என்பது உங்கள் கற்பனையில் மட்டுமே என்பதை எதிர்காலம் சீக்கிரம் காண்பிக்கும். உங்களுக்கு ஆசை மாறக்கூடாதென்று. ஏனெனில் பிராமணர் என்று சொல்லி ஏமாற்ற் முடியாதே ஜாதிகள் தொலைந்து விட்டால் ?

      ஒரே இரத்தம் என்பது எதிர்காலத்தில் இல்லாமல் போகலாம். நீங்கள் எவ்வளவுதான் கத்தினாலும் இயற்கை செய்யும் மாற்றங்களை தடுத்தி நிறுத்த முடியாது.

      போகட்டும். உங்கள் ஆசைக்கே வருவோம். ஜாதிகள் மாறாமல் இருக்கவேண்டும். அது போல இன அடையாளம் மாறாமல் இருக்கவேண்டும் என்பவை இரத்த சம்பந்தப்பட்டவை. அதாவது ஜீன்ஸ். ஆனால், மதம் உணர்வு தொடர்பானவை. ஆன்மிகம் அது. நீங்கள் சொல்லும் இரத்த அடையாளங்களை மாற்றாமலும் ஒருவன் கிருத்துவன் இசுலாமியன் ஆகலாம். தமிழ்நாட்டில் கிருத்துவர்களோ இசுலாமியர்களோ வெள்ளைக்காரனைப்போல வாழ்வதில்லை. எனவே உங்கள் வாதம் அடைப்படையையே சிதைக்கப்பார்க்கிறது.

      மதம் எதையும் சிதைக்காமல் இருக்க முடியும். எனவேதான் கத்தோலிக்கர்கள் வேட்டி சட்டை சேலை பொங்கல் என்று எல்லாமே அப்படியே. உங்களுக்கும் அவர்களுக்கும் ஆன்மிகம் வழியில் மட்டுமே வேறுபாடு.

      திருப்பதி மலையில் மாதா சிலையை யாரும் வைக்கவில்லை. சுவிசேசப் பிரச்சாரம்தான் முயற்சி பண்ணப்பட்ட்து என்றறிகிறேன். பின்னர் ஆந்திர அரசு சட்டம் போட்டு மலையில் அப்படி அன்னிய மதப்பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டது.

      கீழ் திருப்பதியில் தாராளமாக சுவிசேசக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன/. ஆந்திராவில் கிருத்துவம் நன்றாகச் செழிக்கிறது. காளகஸ்தி செல்லும் வழியில் உள்ள கிராமங்களிலெல்லாம் சுவிசேச கூட்டங்களில் மக்கள் அமர்ந்திருப்பதைக் காணலாம். கிராமவாசிகள், மற்றும் ஏழைமக்களெல்லாம் இந்துக்களல்ல. பணக்காரர்களும் உங்களைப்போன்ற பிராமணாளும்தான் இந்துக்கள். இன்றைய இந்து மதம் இன்றைய தமிழ்நாடு காங்கிரசு கட்சி மாதிரி: பண்ணையார்க்கட்சி. பாமர மக்களை விட்டு ஓடி விட்டது.

      இதையெல்லாம் தடுப்பதற்கு ஒரே வழி, ஆந்திர முழுவதும் இந்துக்களைத்தவிர வேறு எவருமே வாழக்கூடாது என்று சட்டம் போட்டால் மட்டுமே சாத்தியம்.

      திருப்பதி மலையில் மத மாற்றம் என்று சொல்லும் நீங்கள் ஒன்றைக்கவனித்தீர்களா ? அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறீர்களா ? திருப்பதி மலையில் இருப்பவர் திருப்பதி வெங்கடாஜலபதி. ஆனால் ஒரிஜினல் கடவுள் புத்தர். அச்சிலையை இரவோடு இரவாக வெங்கடாஜலபதியாக மாற்றிவர் இராமானுஜர் என்று சொல்கிறார்களே. உண்மையா பொய்யா ?

      ஆக, நீங்களே டுபாக்கூர் வேலைபாரத்து, பவுத்தர்களையும் ஜைனர்களையும் விழுங்கினீர்களே ? அவர்கள் சிலைகளையெல்லாம் உடைததீர்கள். விகாரங்களையும் சமணக்கோயில்களையும் இந்துக்கோயிலகளாக மாற்றவில்லையா ? திருமங்கை யாழ்வார் புத்தர் சிலைகளை உடைத்தெறிந்து தங்க புத்தர் சிலையைக்கொள்ளையடிக்கவில்லையா ? சமணர்களை மதுரையை விட்டே விரட்ட வில்லையா சம்பந்தர் பாண்டியனின் மனைவியோடு சேர்ந்து. அச்செயலுக்காகவே பாண்டிய ராணியை நாயனாராக்கி விட்டீர்களே ?

      இன்று தமிழ்கத்தில் ஏராளமான புத்த விகாரங்களும், சமணக்கோயில்களும் இருந்திருக்கும். அவர்கள் உங்களை விட சிற்ப்பாக தமிழ் இலக்கியம் படைத்திருப்பவர். இருந்த காலத்திலும் அசத்தினார்கள்; அவர்கள் எழுதிய நூற்களையெல்லாம் வைகையாற்றில் தூக்கியெறிந்து அழித்தவர்களான நீங்கள் பிறமதங்களைப்பற்றிப்பேசிகிறீர்கள். மத மாற்றங்களைப்பற்றிபேசுகிறீர்கள். சாத்தான் வேதம் ஓதுகிறது.

  27. Avatar
    உமர் says:

    வாழ்த்துக்கள் சுவனப்பிரியன்…இந்த கேடுகெட்ட வேதம் கோபாலுக்கு தெரியுமா ???இந்த வேதம் பேசும் பார்ப்பனர்களே இந்தியாவை ஆண்டொளித்த ஆங்கிலேயர்களுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் என்று??? …பாராட்டுக்கள் தாங்கள் இந்த பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக உண்மையை எடுத்துரைத்ததாற்காக …..வாழ்க மனிதனின் கண்ணியம் ..ஒழிக சாதிய பிரச்சாரங்கள் ….

  28. Avatar
    Kavya says:

    ஏன் மங்கையர்க்கரசியார் நாயனார் ஆக்கப்பட்டார் ?

    போரில் வீர தீரச்செயல்கள் புரிந்தோருக்கு பரம் வீர் சக்கரா விருதை வழங்கி வருகிறது அரசு. அதே போல இந்து மதத்தில் வீர தீர்ச்செயலகள் புரிந்தோர் நாயனார் பட்டம்போலும்.

    சமண மதத்தைத் தழுவிய பாண்டியன் சைவர்களையும் மீனாட்சிக்கோயில் பூஜாரிகளையும் அடித்து விரட்டினான். அப்பூஜாரிகளின் ஒரு கூட்டம்தான் கோவை தாண்டி சேர நாட்டுப் பாலக்காடுக்கு உயிர் பிழைக்க ஓடியது. இன்று அவர்கள் பாலக்காட்டுப்பார்ப்ப்னர்கள் எனவழைக்கப்படுகிறார்கள்.

    பரன்சோதி என்ற சோழர்படைத்தலைவர், காவியுடையணிந்த துறவி சம்பந்தர், மற்றும் பாண்டியனின் பட்டத்து மகா ராணி – இவர்களின் கூட்டுச்சதி நடந்தது. ராணியை வைத்துப்பாண்டியனைப்பிடித்தார்கள். பின்னர் பாண்டியன் மதம் மாறி, ராணியில் சொற்படி, சமணர்களை விரட்டினான். அவர்கள் நூற்களை ஆற்றில் எறிந்தார்.

    இவ்வீர தீர செயல்களுக்காக, பரஞ்சோதிக்கும் மங்கையர்க்கரசியாருக்கும் நாயனார் பட்டம். காவியுடையணிந்த சாமியார் சம்பந்தருக்கு ஆரிய மதத்தையும் பார்ப்ப்னர்களையும் காப்பாற்றிய பட்டம். அவ்வெற்றியக்க்கொண்டாடுகிறார் சம்பந்தர்.

    வாழ்க அந்தணர் ! வானவர் ஆனினம் !
    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக‌
    ஆழ்க தீயதெல்லாம் ! அரண் நாமமே !
    சூழ்க வையகமும் துயர் தீர்கவே !.

    இதுதான் சம்பந்தரின் ஆனந்தப்பள்ளு. தீயதெல்லாம் என்று சொன்னது சமணர்களைப்பார்த்து. வேதம் கோபாலின் ஜாதிக்காரர்களையெல்லாம் காப்பாற்றி இந்து மதத்தைக் காப்பாற்றிவிட்டேன் சமணர்களிடமிருந்து. அதற்கு உதவி செய்த வேந்தன் வாழ்க. கடைசியாக சொக்கரும் வாழ்க (அரண் நாமமே !) இச்சாமியார் சமணர்களை அசிங்கமான சொற்களில் வைகிறார் பலப்திகங்களில்.

    இப்படி காவியுடையணிந்த சாமியாரே இவர்கள் ஜாதித்தலைவராக இருக்கும்போது வேதம் கோபால் இந்து மதத்திற்காக இப்படிக்கட்டுரை வரையாமல் இருப்பாரா ?

    திராவிட இயக்கத்தைச் சேர்ந்ததனால், அவர்கள் எழுதியவை இலக்கியமாகாது என்று பார்ப்பனர்களும் இந்துத்வாக்கூட்டதினரும் எழுதி வருகிறார்கள். பாரதிதாசனுக்கு கவியுணர்வே கிடையாது. அண்ணாத்துரைக்குத் தமிழே தெரியாது என்பதுவே இவர்களின் பிர்ச்சாரம்.

    அதே போல சமணர்கள் எழுதினால் இலக்கியமாகாது. அவை இருக்கவே கூடாது என்று ஆற்றில் வீசினார்கள் மேலே சொன்ன மூவரடங்கிய கூட்டணி செய்த சதியால். தமிழ் இலக்கியத்துச் சேரவேண்டிய சொத்துக்கள் ஏராளமழிந்தன. எஞ்சியவை நாலடியார், ஏலாதி, சிறுபஞ்ச மூலம், திரிக்டுகம் போன்ற சிறுனூல்களே. .

    இவையெலாம் மதுரை வரலாறு. இதை எவரும் அழிக்கமுடியாது. சமணர்களின் கல்வெட்டுக்களும் குடவரைக்கோயில்களும் மதுரையைச்சுற்றி நிற்கின்றன‌ சாட்சிகளாக.

  29. Avatar
    vedamgopal says:

    காவ்யா அவர்கள் 1 2 3 என்று முதல்லிருந்து சங்கு ஊதி பொய் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார்கள். திருஞான சம்பந்தர் மேல் காழ்பு ஊணர்வு பொறாமை அவர் பார்பானக இருந்து தமி்ழ் மொழியை வளர்ததும் இந்து மதத்திற்காக பாடுபட்டதும் பிடிக்கவில்லை. ஏன் உ.வே. சாமிநாத ஐயர் என்று ஒருவர் இருந்தார் தெரியுமா ? அவரை தமிழ் தாத்தா என்பார்கள் !! அவரை பற்றியும் ஏதாவது சரடு இருக்குமானால் அவற்றையும் எழுதுங்கள். சமணம் பௌதம் என்தெல்லாம் இந்து மதத்தின் ஒரு அங்கம் என்றுதான் அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. ஏன் இந்த தமிழனால் பௌத்தர்களுடன் இலங்கையில் ஒற்றுமையாக வாழ முடியவில்லை. இன படுகொலைகள் நிகழ காரணம் என்ன ? கிருஸ்துவர்களாக மாறிய தமிழர்களின் கூடா நட்பு அன்றி வேறு என்ன ? அதே கூடா நட்பினால் தானே சுயநலத்துடன் இன படுகொலைகளை வாய் மூடி வேடிக்கை பார்த்தார் பச்சை தெலுங்கு தமிழரான தஷ்சினாமூர்தி.
    பார்பான் எல்லோரையும் கேள்வி கேட்கிறான் என்பதனாலேயே அவன் மீது வெறுப்பு கல்விகற்றவனாக இருக்கிறான் என்று பொறாமை காழ்புணர்வு. இது ஏன் என்றுதான் வெட்டு புலி இலக்கியம் அலசுகிறது.
    ஆக்ரமித்துள்ளான் ஆக்ரமித்துள்ளான் என்று சொல்லியே இன்று எல்லா தளங்களிலிருந்தும் பார்பானை துரத்தியாகிவிட்டது. அந்த இடங்களை இன்று சிறுபான்மையினரான கிருஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் ஆக்ரமித்து கொண்டுள்ளார்கள். அதனால் பெரும்பாண்மையினருக்கு பாதிப்பு வராது என்று எண்ணி மௌனம் சாதிக்கிறார்கள்.
    கல்வியையும் நல்வொழுக்கதையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் பலபேர் இன்று தண்ணி அடிப்பது தம் அடிப்பது காதல் செய்வது எப்படி என்று சொல்லிகொடுத்து கொண்டிருக்கிறார்கள். பாலகர்களிடம் காம சேஷ்டைகளிலும் ஈடுபடுகிறார்கள்.
    சட்டத்தை காக்க வேண்டிய வக்கீல்கள் பலர் பேட்டை ரௌடிகள் போல் தெருவில் இறங்கி கற்களையும் சோடா பாட்டில்களையும் எறிந்து பொதுசொத்தை நாசம் செய்கிறார்கள்.
    நீதியை நிலைநாட்டவேண்டிய நீதிபதிகள் சில பேர் லஞ்சம் பெற்றுக்கொண்டு தீர்பை மாற்றி நிரபராதிகளை குற்றவாளிகளாக சித்தரிச்கின்றார்கள்.
    அரசில்வாதிகளை பற்றி சொல்ல வே நா கூசுகிறது. ”ஆ” நாகரீகம் என்ற எல்லையையே தாண்டிவிட்டார்கள். சபையில் வேட்டியையே அவி்ழ்துவிட்டார்கள் இன்னம் ஜட்டியை அவிழ்காததுதான் ஒரு குறை !!
    ஏன் இதை சொல்லவில்லை என்ற குறை வேண்டாம் – போலி சாமியார்களது எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது. இதில் கிருஸ்துவத்திற்குதான் முதல் இடம்.
    பார்பன வெறுப்பு ஜாதிசண்டை போன்ற சரடுவிட்டு தூண்டில்போட்ட காலம் மலையேறிவிட்டது. இன்று தலீத்துகள் சிறுபான்மையினர்கள் என்ற சரக்குதான் விலைபோய் கொண்டிருக்கிறது.

  30. Avatar
    Paramasivam says:

    Rajapakshe may invite Mr.Vedham Gopal and honour him with a doctorate for inventing such reasons for the Srilankan problem.Even Rajapakshe himself has not told this reason for the conflict.This is the trait that earns the Brahmins the bad name.With this peculiar trait only,wherever they are,either in Govt or media they show partiality between Brahmins and Nonbrahmins.They refuse to reform themselves.

  31. Avatar
    vedamgopal says:

    // Rajapakshe may invite Mr.Vedham Gopal and honour him with a doctorate for inventing such reasons for the Srilankan problem.Even Rajapakshe himself has not told this reason for the conflict.//

    திரு.பரமசிவம்
    இது 2 ஆண்டுகளுக்கு முன் சில வலை தளத்திற்கு அனுப்பிய மறுமொழி. இதை தவிற நிறைய இலங்கை தமிழர்கள் எழுதிய கட்டுரைகள் கிருஸ்துவ சூழ்சிதான் இன படுபொலைகளுக்கு காரணம் என்று கடுமையாக சாடியுள்ளார்கள்.
    // இன்று இலங்கையில் நடந்தது என்ன ? பல தமிழர்களும் சிங்களத்தவர்களும் படி படியாக கிருஸ்துவர்களாக மாற்றப்பட்டார்கள்.
    இவர்கள் இருவரிடைதிலும் அவர்களே அறியாமல் பகைமை தீயை ஏவி விட்டார்கள், நஞ்சு விதைகளை அங்கே வித்திட்டாற்கள். (தமிழ் நாட்டில் ஆரியன்-திராவிடன், தமிழ்-சமஸ்கிரதம், பிராமிணன்- பிராமிணன் அல்லாதாவர் என்பதுபோல்). இரண்டுபிரிவிலும் தலை ஆட்டி பொம்மைகளை உருவாக்கினார்கள். இலங்கையை 30 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டுவருவது கிருஸ்துவர்களாக மாறிய சிங்களத்தவர்கள் ஆவார்கள். ( சாலமன் பண்டாரநாயகா சூலியஸ் ஜயவர்தனே சந்திரிகா குமாரதுங்கா சிரில் மகேந்திர ராஜபிராகாசே). ஆனால் இவர்கள் தாங்கள் கிருஸ்துவர்கள் என்று அடையாளம் காட்டி கொள்வதில்லை. எல்டிடியிலும் மற்ற தமிழ் பேராளிகளிலும் பலர் கிருஸ்துவர்களாக மாறியவர்கள். (லஷ்மன் கதிர்காராமன் டக்லஸ் தேவாநந்தம் பிராபகரன் மற்றும் பலர்). இப்படி கிருஸ்துவர்களாக மாறியவர்கள் தங்களுக்குள் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. குரங்கு ஆப்பதத்தை பங்கிட்ட கதை உங்களுக்கு தெரியாதா ! (சர்சிலும் அப்பம் கொடுப்பார்கள்)

    ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாடம் என்பதை புரிந்துகொள்ள வேண்டாமா. சிறந்த தலைஆட்டி ராஜபிராகாசேவா அல்லது பொன்சேகாவா என்று அமெரிக்கா முடிவு செய்கிறது. முன்னேரிய நாடுகள் இவ்வாறு முன்னேரிவரும் நாடுகளில் மதமாற்றத்தை செய்து தலையாட்டி பொம்மைகளை உருவாக்கி (இங்கே சோனியாவின் கைதடிக்கு மன்மோகன்சிங் ஆடுவதுபோல்) அவர்கள் அறியாமலே மொத்தஇனத்தையும் முன்னேறவிடாமல் தடுப்பதே கிருஸ்துவத்தின் குறிக்கோள் ஆகும். அப்படி செய்தால்தான் அவர்கள் நாடு சுபிஷ்ஷமாக இருக்கமுடியும். நமது முதல்வர் பதவி ஆசையை விட்டு காங்கிரஸ் ஆட்டியிலிருந்து விலகியிருந்தால் இலங்கையில் இறந்த பாதி உயிரை காப்பாற்றியிருக்கலாம். தமிழன் உயிரைவிட பதவி பெரிது. இதை ஏன் இந்த திராட-கிருஸ்துவர்கள் உணரவில்லை. குஷ்பூ ஜயராமன் போன்றோர் ஏதோ வாய்தவறி தமிழர்களை பற்றி கூரிய வார்தைகளுக்கு மன்னிப்பு கேட்ட பின்பும் அவர்கள் வீட்டை தாக்குகிறார்கள் ஆர்பாட்டம் நடத்துகிறார்கள். செத்த பாம்பை அடிக்கும் சூரபுலிகள். இவர்களுக்கு உண்மையான தமிழ் உணர்வு இருந்தால் ஏன் ஐயா கிருஸ்துவ விஜய் டிவியில் தாலி அணிவதைப்பற்றி தரகுறைவாக வாக்குவாதம் செய்ததற்கு எதிர்பு தெரிவிக்கவில்லை. எங்கேபோனார் ராமதாஸ் !

    கிருஸ்துவம் அராஜகத்தை துண்ட அடியாட்களை தயார்செய்கிறது. அதற்கு அரசாங்கமும் துணைபோகிறது. (சிறுபான்மை ஓட்டு) சட்டத்தைகாக்கவேண்டிய வக்கீல்களே பேட்டைரவுடிபோல் தெருவில் இறங்கி கற்களையும் சோடாபாட்டில்களையும் எறிகிறார்கள். இவர்கள் எல்லாம் திராவிட கிருஸ்துவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் //

  32. Avatar
    G. Elangovan says:

    Áì¸û ¦¾Ç¢Å¨¼óРŢ¼ìܼ¡Ð ±ýÀ¾¢ø «¨ÉÅÕõ
    ¦¾Ç¢Å¡¸ þÕ츢ȡ÷¸û. þ¨Å¦ÂøÄõ Áì¸û ÍÂÁ¡¸ º¢ó¾¢òÐ
    ÓÊ× ¦ºö §ÅñÊ Ţ„Âí¸Ç¡Ìõ. þóÐ Á¾¦ÁýÚ ´ýÈ¢ø¨Ä.
    «ÅÃÅ÷ Í ¾÷Áõ ( «¾¡ÅÐ ¾ý ¯ûÇõ ÜÚõ ¸ÕòÐ) ±Ð§Å¡
    «Ð§Å «ÅÃÅ÷ Á¾Á¡Ìõ. þЧŠ¯ñ¨ÁÂ¡É Í¾ó¾¢ÃÁ¸×õ
    «¨ÁÔõ.

  33. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    திண்ணை ஒரு தரமான இலக்கிய தளம் என்பதுதான் என் மனப்பதிவு. எனவேதான் எத்தனையோ வேலைப்பளுவுக்கு இடையிலும் கிடைக்கும் சிறு ஓய்வில் அவ்வப்போது வந்து மிகுந்த ஆர்வத்தோடு இதன் பதிவுகளைப் படிப்பது என் வழக்கம். ஆனால் இதுபோன்ற பக்கசார்பான, இன்னொரு தரப்பினரைப் புண்படுத்தக்கூடிய பிரயோகங்களுடனான ஆக்கங்கள் மற்றும் கருத்துக்களை உரிய தணிக்கை இன்றி வெளியிடுவது ஆழ்ந்த வருத்தமளிக்கிறது.மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. :(

Leave a Reply to GovindGocha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *