நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு நிகழ்ச்சி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 7 in the series 11 டிசம்பர் 2022

 

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு நிகழ்ச்சி

நாடக நூல்கள் அறிமுகம் நடந்தது சங்கரதாஸ் சுவாமிகள் நாடக முயற்சிகளும் அதற்கு பின்னாலும் இன்றைய திருப்பூர் பழைய பேருந்து நிலைய இடத்தில் நாடகக் கொட்டாய்கள் அமைக்கப்பட்டு நாடங்கள் நடத்தப்பட்டதும் பின்னால் நகர மண்ட மைதானத்தில் நாடகங்கள் இடம் பெற்றதும் காலம் மாற்றத்தினால் நாடகங்களும் அதன் தொடர்ச்சியாக திரைப்பட இயக்கங்களும் மாறி இருப்பதை பற்றி சி சுப்பிரமணியம் அவர்கள் விரிவாக பேசினார் .நாடகங்கள் என்பவை மக்களின் கலை உணர்ச்சிகள். அவை மக்களுக்கு தான் திரும்ப தரப்பட வேண்டும் என்பதை அருணாசலம் குறிப்பிட்டார் .பாதல்சர்க்காரின் தமிழக வருகைக்குப் பிறகு திருப்பூரில் நடத்தப்பட்ட நாடகம் முயற்சிகளைப் பற்றி சுப்ரபாரதி மணியன் விரிவாக எடுத்துரைத்தார். தங்கராணி என்ற வேலுசரவணன் நாடக நூல் நாடகங்கள் பற்றி மூன்றாம் வகுப்பு படிக்கும் தமிழ் இனியன் விரிவாக பேசினார்.

 

நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு

  • திருப்பூர் மக்கள் மாமன்றம், 04/12/22 ஞாயிறு காலை 11 மணி

மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் . நடைபெற்றது .

 

  • நாடக நூல்கள் அறிமுகம்:

* நாடகவியலாளர்கள்  அ.ராமசாமி., கே. ஏ குணசேகரன்.,                                    மு. ராமசாமி, வேலு சரவணன் நாடக நூல்கள்

* சுப்ரபாரதிமணியனின் இரு  நாடக நூல்கள் : மணல்வீடு, பசுமைப்பூங்கா

  • தலைமை: சி.சுப்ரமணியம் ( நிறுவனத் தலைவர் , திருப்பூர் மக்கள் மாமன்றம்
  • கனவு/ திருப்பூர் மக்கள் மாமன்றம்

 

 

 

 

 

திருப்பூரில் நாடக முயற்சிகள் பற்றிய சுப்ரபாரதிமணியன் உரை

 எண்பதுகளில் எங்கள் அனுபவம் இப்படி இருந்தது.பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது ..

அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின்   வயிறு “ , அறந்தை நாராயணனின்   மூர்மார்கெட் “ , ஜெயந்தனின்   இயக்கவிதிகள் உட்பட மூன்று நாடகங்கள்,                   சி ஆர ரவீந்திரனின்  பசு “ ,                           கேஜி சங்கரப்பிளையின்  கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின்  தலைவர் “ ,   ..சாஸ்நல்லா சுரங்கச்  சகோதரர்களே “ , உட்பட சுமார் 20 நடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

இதைத் தவிர பனியன் தொழிலாளர், நெசவாளர் போராட்ட காலங்களிலும் , தேர்தல் காலங்களிலும் பஞ்சப்படி, நெசவு, நாற்காலி, வாக்கு போன்ற பத்துக்கும்  மேற்பட்ட நாடகங்கள் திருப்பூரின் பல்வேறு பகுதி வீதிகளில் நூற்றுக்கணக்கான முறைகள்  நடத்தப்பட்டன.

இவற்றை ஆரம்பத்தில் நானும்,  பின்னர் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரும் இயக்கினோம்., இவர்களில் மற்ற இரு தோழர்களும் பனியன் தொழிலாளிகள் .

இவற்றில்  மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோர் பல நாடகப்பிரதிகளை உருவாக்கினர். ஆனால் அவர்களின் நாடகங்கள் அச்சுருவோ, புத்தக வடிவமோ பெறவில்லை

என் வானொலி நாடகங்களும் , சில மேடை நாடகங்களும்   மணல் வீடு   என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது. இதில் இடம் பெற்ற   பசுமை எனும் தாய்மை   என்ற சுற்றுச்சூழல் சார்ந்த நாடகம் கோவை வானொலி மூலம் தேசிய நாடக விழாவில் இடம்பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட முறைகள் மறு ஒலிபரப்புகள் செய்யப்பட்டன .இதில் உள்ள நாடகங்களும் , “ பள்ளி மறு திறப்பு  என்ற என் சிறுவர் கதைகள் நூலில் உள்ள பல கதைகளும் தாய்த்தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் , பிற பள்ளி மாணவர்களாலும்  பலமுறை நாடகங்களாக நடிக்கப்பட்டன.

 இவற்றில் ஜெயந்தனின்   இயக்கவிதிகள்  நாடகம் பேரா. இராமானுஜம், ஜெயந்தன் ஆகியோரின் மேற்பார்வையிலும், ஞானராஜசேகரனின்   வயிறு “ , ,                           , அயன்ஸ்கோவின்  தலைவர்  ஆகியவை புவியரசின் மேற்பார்வையிலும் ,

அறந்தை நாராயணனின்   மூர்மார்கெட் அறந்தை நாராயணனின்   மேற்பார்வையிலும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

எண்பதுகளின் மத்தியில் நான் என் தொலைபேசி துறைப்பணிக்காக ஹைதராபாத் சென்ற பின்னால் இந்த நாடக முயற்சிகள் குறைந்தன,

ஆனால் இந்நாடகமுயற்சிகள் இன்றும்  அவ்வப்போது தொடர்கின்றன.

மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரின் தடத்தில் நாடக முயற்சிகள் திருப்பூரில் தொடர்கின்றன. 

 

Series Navigationகவிதைத் தொகுப்பு நூல்கள் 4ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் [தொடர்ச்சி -2]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *