நானும் பி.லெனினும்

This entry is part 22 of 29 in the series 25 டிசம்பர் 2011

 

பா வரிசை படங்களை எடுத்து புகழ் பெற்ற இயக்குனர் பீம்சிங்கின் மகன் எடிட்டர் பி.லெனின். பீம்சிங் அவர்களே எடிட்டராகத்தான் திரை வாழ்வுதனை ஆரம்பித்திருக்கிறார்.
எடிட்டர் லெனினன நான் சந்தித்தது முதலில் எடிட்டராகத்தான். அப்போது தான் அறிந்தேன் அவர் ஒரு புகழ் பெற்ற எடிட்டராக இருந்தாலும் எல்லாப் படங்களையும் அவர் எடிட் செய்வதில்லை என்று. முதலில் அவரிடம் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. புகழ் பெற்ற எடிட்டரின் மகன். அவரே அன்றைய முன்னணி நடிகர்களின் படங்களை எடிட் செய்பவர். நாம் ஆர்வக் கோளாறு காரணமாக ஏதாவது கேட்டுவிட்டு அவர் கோபித்துக் கொண்டால்.. அப்புறம் தான் தெரிந்தது அவருக்கு கோபமே வருவதில்லை என்று.
கிரேஸி மோகனின் ‘ கல்யாணத்துக்கு கல்யாணம் ‘ சென்னை தொலைக்காட்சியில் ( அப்போதெல்லாம் சன் டிவி கிடையாது ) ஒளிபரப்பான பொழுது அதற்கு எடிட்டிங் செய்தவர் லெனின். பிரபல எடிட்டர் தொலைக்காட்சி சீரியலுக்கு எடிட் செய்ய எப்படி ஒப்புக்கொண்டார்?
” கண்ட குப்பை படங்களை எடிட் செய்வதைவிட இது எவ்வளவோ மேல் ”
ஆச்சர்யமாக இருந்தது. நிறைய படங்களை ஒப்புக்கொண்டு காசு பார்க்கும் ஒரு கனவு உலகத்தில் இப்படி ஒருவரா? அதற்கப்புறம் எனக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாம் என்னை இன்னமும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு போனது. மனதில் நினைப்பதை எல்லாம் காமிராவால் சுட்டுக் கொண்டு வரும் அரை வேக்காட்டு இயக்குனர்களின் முதல் படங்கள் எல்லாம் லெனினின் கைப்பட்டுதான் பார்க்கக் கூடிய படங்களாக ஆகி இருக்கின்றன. முதல் படமே ஓடவில்லை என்றால் இன்று அவர்கள் ரோட்டில்தான் நின்றிருப்பார்கள்.
இன்று பரவலாக எல்லா மெகா சீ¡¢யல்களிலும் காட்டப்படும் ஸ்லோ மோஷன் காட்சிகளை முப்பது வருடங்களுக்கு முன்பே செய்து காட்டியவர் லெனின்.
எங்கள் குழுவை ரொம்பவும் பிடித்துப் போய் அடுத்த தொலைக்காட்சி சீ¡¢யலை இயக்க ஒப்புக்கொண்டார். அதுதான் வேதம் கண்ணனின் ” சொல்லடி சிவசக்தி ” சுருக் என்று தைக்கக் கூடிய வசனங்கள், நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் என ஏற்கனவே மேடையேற்றப்பட்டு பிரபலமான ஒரு நாடகம். இது தொலைக்காட்சி தொடராக வரும்போது நாடகம் பார்க்கிறொம் என்கிற எண்ணம் வரக்கூடாது. அதிக செலவு செய்யவும் எங்கள் குழுவால் முடியாது.  லெனின் வைத்த காமிராக் கோணங்கள் ஆதிசயமூட்டுவதாக இருந்தன. இத்தனைக்கு ஒரு ஓட்டு
வீட்டுக்குள்ளேயே நடக்கிற கதை. சென்னை தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பானபோது ஏகத்துக்கு பாராட்டுக்கள்.
செல்வி ஜெயலலிதா நடித்த ‘ நதியைத் தேடி வந்த கடல் ‘ படத்தின் இயக்குனர் லெனின் என்றால் நம்பமுடிகிறதா? அதையடுத்து அவர் இயக்கிய ‘ மெல்லத் திறந்தது மனசு ‘ படத்தை எங்களுக்குப் போட்டுக் காண்பித்தார். ஆனால் படம் ஓடவில்லை. பலா¢ன் குழப்பங்களை தெளிவாக்கியவர், தனது இயக்கத்தில் தெளிவைக் கொண்டுவரத் தவறி விட்டார். இத்தனைக்கும் பொ¢ய நட்சத்திரங்கள். கதாநாயகி புதுமுகம். ஒரு நடனப்பெண்ணாக இருந்தவர். படம் ஓடியிருந்தால் எங்கேயோ போயிருப்பார்.
லெனின் ஒரு கட்டத்தில் திரை எடிட்டிங் செய்வதில்லை என்று முடிவெடுத்தார். எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. என்ன பண்ணுவார் ஜீவனத்திற்கு? ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. ஜெயகாந்தனின் அன்பிற்கு உ¡¢யவர். இளையராஜாவின் நெருங்கிய தோழர். நினைத்திருந்தால் நிறைய பணம் பண்ணியிருக்கலாம். ஏன் இப்படி செய்தார்?
லெனின் ஒரு புதிரான மனிதராகவே எனக்குப் படுகிறார். பவா செல்லதுரை தன் கட்டுரையில் எழுதியது போல அவர் ஒரு குருவிடம் தீவீர ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது கட்டளைக் கேற்ப அவரது இன்னொரு சீடா¢ன் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அதற்கு சாட்சியாக இருந்தது இளையராஜா மட்டுமே என்று பவாவின் கட்டுரை வாயிலாக நான் அறிந்து கொண்டேன். அதற்குப் பிறகுதான் எனக்கு அறிமுகமானார் லெனின். எண்பதுகளின் பின்பாதியில் அவர் குரோம்பேட்டையில் ஒரு வீடு எடுத்து குடியிருந்தார். தன் தந்தையின் வீட்டை இடித்து அவர் வா¡¢சுகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டியபோது இவருக்கும் அங்கு ஒரு குடியிருப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் தன் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதால் அவர் தன் மனைவியுடன் தள்ளியே வசித்தார்.
ஏறக்குறைய ஒரு சித்தரைப் போலவே வாழ்ந்தார் லெனின் அக்காலங்களில்.. இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். வெள்ளை உடையிலேயே எப்போதும் இருப்பார். படப்பிடிப்பு  சமயங்களில் அவர் உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. எப்போதும் நின்று கொண்டே இருப்பார். இரவு ஒன்பது படப்பிடிப்பு முடிந்தபின் அவர் கிளம்புவார். எங்களுடன் கா¡¢ல் வரமாட்டார்.
” இப்படியே போயிக்கிறேன்.. ”
” பஸ்ஸா? ” மெலிதாக புன்னகை பூப்பார். ” நடந்து ” எனக்கு ஆச்சர்யம். ” ரொம்ப தூரமாச்சே.. கால் வலிக்காது? ” அதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சர்யமானது. ” நெனச்சா வலிக்கும் ”
கால் வலிக்கு அவரது நிவாரணம் நானும் செய்து பார்த்து குணமடைந்தது தான். ஒரு அகல டப்பில் மிதமான சுடு நீ¡¢ல் கல் உப்பைப் போட்டு கலக்கி கால்களை அதில் முழுவதும் முங்கி உட்கார வேண்டும். பதினைந்து நிமிடங்களில் வலி போயே போஸ் ..
திரைப்படங்களை மறுதலித்து அவர் குறும்படங்களை இயக்க ஆரம்பித்தார். குத்துச்சண்டை வீரனைப் பற்றிய ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நாக் அவுட் என்று அவர் எடுத்த குறும் படமும், பிணத்தை மையமாகக் கொண்டு அவர் எடுத்த குறும்படமும் நான் பார்த்த சில படங்கள். ஜெயகாந்தனின் ‘ எத்தனைக் கோணம் எத்தனை பார்வை ‘ என்ற கதையை அவர் குறும்படமாக எடுத்தார். தேக வலிமை கொண்ட குஸ்தி வீரனுக்கு குழந்தை இல்லை என்ற ‘ கரு ‘ என்ற கதைதான் அது என்று நினைவு.
குறும்படங்கள் பால் அவர் கொண்ட ஈர்ப்பு அலாதியானது. சமீபத்தில் கூட உலகத் திரைப்பட விழா சென்னையில் நடைபெற்ற போது லீனா மணிமேகலையின் ” செங்கடல் ” தேர்வு செய்யப்படவில்லை என்று கிளம்பிய போராட்டத்தில் அவரும் கலந்து கொண்டார். ஆனால் எப்போதும் போலவே மனிதர் போராட்ட வாசகங்கள் எழுதிய தட்டியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறார்.
இலக்கியக் கூட்டங்களில் அவரை சில முறை சந்தித்திருக்கிறேன். இருட்டில் கடைசி வா¢சையில் உட்கார்ந்திருப்பார். இத்தனைக்கும் அவரது பெயர் மேடையில் இருப்பவர்களால் பலமுறை உச்சா¢க்கப்படும். தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் உட்கார்ந்திருப்பார். ஒரு யோகியின் மன நிலை இது என்பது அவரைத் அறிந்தவர்களுக்குத் தொ¢யும்.
ஐ ஆம் பிரவுட் டு ஹாவ் பீன் அஸோஸியேட்டட் வித் ஹிம்.

Series Navigationசுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘ராபர்ட்டின் கிறிஸ்துமஸ்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    ஓர் அருமையான மனிதர் பற்றி அறியத்தந்த சிறகு ரவிச்சந்திரனுக்கும், திண்ணைக்கும் நன்றி.

  2. Avatar
    Ramesh Kalyan says:

    எடிடர் லெனினின் எடிட் செய்யப்பதாத கட்டுரை. சுவாரசியம். ஆச்சரியம். பகட்டின் வெளிச்சம் தன் மேல் படாமல் – பட விடாமல் – இருப்பது ஆச்சரியம் மட்டுமல்ல. யோசிக்க வைப்பதும் ஆகும். இத்தகைய மனப்பக்குவமும் அணுகுமுறையும் உள்ள இவரிடமிருந்து வெளிப்படும் கலைப் படைப்புகள் நிச்சயம் மதிப்பு மிக்கவையாக இருக்கவே செய்யும்.

  3. Avatar
    punai peyaril says:

    ஆனால், கட்டுரையாளர் எழுதிய விதத்தை லெனினே ரசிக்க மாட்டார். லெனின் இல்லாமலே, எடுத்ததையெல்லாம் கோர்த்து பல நல்ல படங்களும் வந்துள்ளன. ஒருவரை பாராட்டுவதற்காக பிறரை மட்டப்படுத்த வேண்டாம். லெனின் மட்டுமல்ல, அவர் சகோதரர் காமிராமேனும் நல்ல பழகும் குணமுள்ளவரே… திறமையான எடிட்டர் எனினும் இவர் டைரக்‌ஷ்ன பண்ணிய படம் அந்த பிற முதல் பட இயக்குனர் படங்கள் மாதிரி ஓகோ என்று ஓடியிருக்க வேண்டியது தானே… ( நான் சொல்வதற்கும் லெனின் குணத்திற்கும் சம்பந்தமில்லை…. எழுதியவரின் முறையில் லெனின் மேல் எதிர்மறை கருத்தே வரும்… ) இக்கட்டுரையை யாராவது லெனினிடம் காண்பித்து கருத்து பெறலாம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *