நான் குற்றவாளி இல்லை!!!

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 9 in the series 29 அக்டோபர் 2017

ஜெய்கிஷென் ஜே காம‌த்
ஒரு வாழை இலை வைத்த பிளாஸ்டிக் தட்டை கையில் ஏந்தி நான் நின்றிருந்தேன், வெளியேறிய நீராவி கண்ணாடியை மறைத்தது. சங்கரன் சேட்டன் தனது சூடான கனமான தட்டையான
தோசை கல்லில் தண்ணீரை தெளித்து, ஒரு மெல்லிய விளக்குமாறு கொண்டு தேவையற்ற துகள்களையும் மற்றும் எண்ணெயை வெளியே எடுத்தார். ஒரு தட்டையான அடி கொண்ட
கிண்ணத்திலிருந்து ஒரு சிறிய கையளவு குமிழாக மாவு ஊற்றப்பட்டது. தட்டையான அடி முக்கியமானது. எவ்வளவு தட்டையோ , அவ்வளவு மெலிதான தோசை. இந்த கோப்பையால்
மாவை வட்டமாக பரப்ப முடிந்தது.

சூடான தோசை கல்லில் ஒரு மெல்லிய காகிதம் போல மாவு உலர்ந்ததும் , சுற்றிலும் ஷங்கரன் சேட்டன் தேங்காய் எண்ணெயை ஊற்றி சரியான பொன்னான பழுப்பு தோற்றத்தை
மேற்பரப்பில் கொண்டு வந்தார். சில வேடிக்கையான காரணங்களுக்காக, என் பள்ளி நாட்களின் காலை கூட்டம் எனக்கு நினைவு வந்தது, மாணவர்கள் அனைவரும்
ஒரே சீருடையில் இருந்தனர், உயரங்களின் வரிசையில் நேராக நிற்கிறார்கள் அந்த கடுமையான வெய்யலிலும் . என் பள்ளி தலைமை ஆசிரியர், சூரிய ஒளியில் இருந்து பெறப்படும்
வைட்டமின்கள் மாணவர்களுக்கு சிறந்தது என்று நினைத்ததால் வந்த வினை இது. இதன் விளைவாக பள்ளியின் மிக வெளிறிய குழந்தையை கூட தங்க பழுப்பு நிறமாகமாகவும் மயங்கிய
நிலையிலும் அவருடைய நன்னடத்தை பற்றிய பேச்சு முடிவதற்குள் மாற்றி விடுவார் .

பின்னர் சங்கரன் சேட்டன் ஒரு நீண்ட தோசை கரண்டியால் தோசையை மெதுவாக இழுத்து, ஒரு மெல்லிய குழாய் அமைப்பதற்காக சுற்றுவார், தோசை சுருண்டுபோய்,
ஒரு அலை போல உள்ளே ஒரு சிறிய எறும்பு மனிதன் அலை மேல் மிதந்து விளையாடுவதுபோல் கற்பனை செய்தேன். அவர் அதை எடுத்து, என் தட்டில் வைத்தார். குழாயின்
இருபுறமும் இருந்து நீராவி வீசுகிறது. நான் சூடான தோசை என் லேசான பசுமை வாழை இலை வெப்பம் காரணமாக கரும் பச்சையாக மாறுவதை பார்த்து கொண்டு நின்றேன் . இன்னும் இருக்கிறது …

இது வெறும் தோசை. பத்து ரூபாய் கூடுதல் கொடுத்தால் இன்னும் பல வகை தோசைகள் உள்ளன. கேரட் தோசை, கோஸ் தோசை, வெங்காய தோசை, தக்காளி, மிளகாய் மசாலா, வெள்ளரிக்காய்
மற்றும் மிளகாய் தோசை, சிவப்பு மிளகாய் மைசூர் மசாலா தோஸா, கீரை தோசை, குடிசை சீஸ் மற்றும் நூடுல்ஸ் தோசை, ஒருதோசை உடன் சேர்த்து நூடுல்ஸ் நன்றாக ருசிக்கலாம் என்று யார்
நினைத்திருப்பார்கள், பின்னர் அனைத்து தோசை்களுக்கு அரசன் கிங் காங் தோசை, பொறித்த உருளைக்கிழங்கு மசாலா தோசை. ஐந்து விநாடிகளில் சங்கரன் சேட்டன் மேலே உள்ள மெனுவையும்
பட்டியலிடுவார் என்பது உண்மைதான். அவ்வாறு செய்வதன் மூலம், அது என் வாயில் உமிழ்நீர் கடலை உருவாக்கி ஒரு கப்பலை விட ஏதுவாக்கி இருக்கும் என்று அவர் அறிந்திருந்தார்! என்
சுவை மொட்டுகள் மூலம் மின் அதிர்ச்சி அலைகள் பரவியது. பின்னர் எதை எடுப்பது எதை விடுவது நான் குழம்பிப்போய், நிற்பதை பார்த்து ஒரு பிசாசை போல் சிரித்து இருப்பார்.

ஒரு தாய் தன குழந்தைகளுக்குள் தேர்வு செய்யலாமா? முடியவே முடியாது! எப்படி என்னை என் குழப்பத்திற்கு குற்றம் கூற முடியும்?

நான் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன் எனும் போது நான் அடுத்த முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவேன். ஆனால் இன்னும் தோசை முழுமையாக தரப்படவில்லை. தொட்டு கொள்வதற்கு முதலில்
தேங்காய் சட்னி, பிறகு தக்காளி சட்னி, மூன்றாவதாக பச்சை நிறத்தில் கொத்தமல்லி சட்னி கடைசியாக புதினா சட்னி. கூடவே தென்னிந்திய பாரம்பரிய பெருமைக்குரிய சாம்பார். எனக்கு இப்போது
இருபத்தி மூன்று ஆகிறது. என் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்னை நெருக்கிறார்கள் வாழ்க்கையில் முடிவு எடுக்க பழகு என்று. இந்த தோசைக்காக எடுக்கும் முடிவு என்னை
சிறுமை பட வைக்கும்.

இறுதியாக நான் ஒரு முடிவு எடுத்தவுடனே, சங்கரன் சேட்டன் அந்த கடைசி ஆணியை சவ பெட்டியில் அறைவார். “வெண்ணை வேண்டுமா? வேண்டாமா?” வெட்கமில்லாமல் கூறுவேன்
“வெண்ணெயுடன் தான்”. உடனே சங்கரன் சேட்டன் கொஞ்சம் வெண்ணையை தோசை குழலின் மேல் வைத்து விடுவார். வெண்ணை தோசையின் மீது உட்கார்ந்ததும் உலக வெப்பத்தில் பனி மலைகள்
கரைவதைப் போல் கரைய தொடங்கும்.அதை பார்க்க என் வாயில் இருந்த கப்பல் மூழ்க தொடங்கும்.

தீபாவளி வந்து விட்டது. விடுமுறைக்காக வீட்டுக்கு போகிறேன். தோசையை சாப்பிட்டு பேருந்தை பிடித்தேன். ஐந்து மணி நேரத்தில் என் ஊர் வந்து விட்டது, கடைசியாக என் பெற்றோரை போன மாதம்
தான் பார்த்தேன். வீட்டு மணியை அடித்தேன், கதவை திறந்த என் தாய் என்னை பார்த்தார், நெடிய பெருமூச்சிருக்குப்பிறகு, கன்னத்தில் கையை வைத்து “அட கடவுளே! என்னமா வெய்ட்டு போட்டு
இருக்கே..” என்றார். அம்மாவே இப்படி சொல்கிறார் என்றால். “என்னாலே உன்னை அடையாளம் காண முடியலை, தடி மாடே! போய் உடற் பயிற்சி செய்” என்று சொல்லாமல் சொல்லுவதுதான்.

என் கண்ணையே மறைத்த நீராவி போல என் தோசை ஆசை என் மனசாட்சியை, மன உறுதியை மறைத்து விட்டது. என் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒரு கோணங்கி வாய் நிறைய தோசை அடைத்து,
முகமெல்லாம் சட்னி பூசி, விரலில் இருக்கும் சாம்பாரை உறிஞ்சி “ஹா ஹா….நான் குற்றவாளி இல்லை” என்று கத்துவது கேட்டது.

ஜெய்கிஷென் ஜே காம‌த்

gopalar@hotmail.com

Series Navigationபராமரிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *