நெஞ்சிற்கு நீதி

This entry is part 30 of 37 in the series 23 அக்டோபர் 2011

— மன்னார் அமுதன்

கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று – பணம்
காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு – என
நெஞ்சினைக் கல்லாக்கி நீதி சொல்லும் -அந்த
நீதிமான்களைக் காலம் வெல்லும்

கிஞ்சித்தும் அஞ்சாமல் கொடுமை செய்யும்
கீழான மனிதர்தம் பாதம் தொட்டு – நல்ல
மேலான பதவிகள் கேட்டுநிற்கும்- இவர்கள்
நிலையினைப் பார்த்தாலே உள்ளம் வெட்கும்

பாருக்குள் எங்கோவோர் மூலையிலோ -நல்ல
பண்புகள் கொண்டவரைச் சாலையிலோ -கண்டு
கதைக்கையில் ஒருதுளி நீர்திரளும் -அந்த
நீரினில் ஒருபுறம் நீதி தவழும்

Series Navigationபவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…ஜென் ஒரு புரிதல் – பகுதி -16
author

மன்னார் அமுதன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    chinnappayal says:

    கண்டு கதைக்கையில் ஒருதுளி நீர்திரளும் -அந்த
    நீரினில் ஒருபுறம் நீதி தவழும்

  2. Avatar
    காவ்யா says:

    Mr மன்னார் அமுதன் இளையவராய் இருப்பார் போலிருக்கு.

    சாலையில் பண்புகள் நிறைந்த ஒருவனை அல்லது ஒருவரை எப்படிக் கண்டுபிடித்தார்? அல்லது எப்படிக் கண்டுபிடிப்பது? அவரை முன்பே தெரிந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

    இது நிற்க.

    “நெஞ்சுக்கு நீதி” என்றுதான் சொல்வார்கள். நெஞ்சிற்கு என்று வருமா ?

    வெட்கம் என்று சொல்லை வெட்கி என்று குறுக்கி பிற சொல்லோடு இணைப்பார்கள். (வெட்கித்தலை குனிந்தாள்) வெட்கும் என்று போட்டால் பொருள் மாறும் என்பது என் ஐயம். நான் தமிழ் வாத்தியார் இல்லப்பா அவங்ககிட்ட கேட்டுகோங்க. வெட்கும் என்பதற்கு நீங்கள் நினைக்கும் பொருள் வராது.

    “கதைக்கையில்” என்ற சொல்லை என்ன பொருளில் கையாளுகிறீர்கள் இங்கே ? அவருடன் உசாவி உசாவிப் பேசுதலே கதைத்தல். Or discussing a matter animatedly. ஆங்கே கண்களில் ஒருத்துளி ? அவர் என்ன நினைப்பார் அமுதன்?

    அவரைப் பார்த்தாலே வந்து விடவேண்டுமே அத்துளி ? அவ்வளவு லேட்டா அமுதன் உணர்வுகள்?

    இதுவும் நிற்க.

    கவிதை ஒரு லிரிக். இசையுடன் கூடியது. A lyric is sung always to the accopmpaniment of a musical instrument. The word lyric comes from the word lyre, a musical instrument, yaazh.

    ஒரே வசன கவிதைகளா ஃப்ரீ வெர்ஸ் (Free verse) திண்ணையிலே படிச்சு எனக்கு உணர்ச்சிகள் மரத்து விட்டன. ஒரு மரபுக் கவிதையைப் வாசிக்கும் அனுபவத்தைத் தந்ததற்கு அமுதனுக்கு a BIG thanks.

    என் விமர்சனத்தைப் படித்து வேறெதுவும் நினைக்காமல், தொடர்ந்து எழுதவும். கவிதைப் புனையத்தெரிந்தவன் எழுதுகிறான்.

    தெரியாதவன் இப்படி விமர்சனம் என்கிற பேரில் வயிற்றெரிச்சலைக் கொட்டுகிறான் என்று ஒரு அறிஞர் சொன்னார். B4 u write like this, I do it.

Leave a Reply to chinnappayal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *