படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

This entry is part 9 of 9 in the series 10 ஜூலை 2022

 

 

……………………………………………………………………………………………………………………

கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்

 

_ லதா ராமகிருஷ்ணன்

 

………………………………………………………………………………………………………………..

சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT (ஓரினப்புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் முதலியவர்களின் உரிமை களுக்காகப் போராடும் அமைப்பு) பதாகையைப் பிடித்திருப்பதாகவும் சித்தரிக் கப்பட் டிருப்பது. இந்து மதக் கடவுள் காளிமாதாவை இந்தச் சித்தரிப்பு அவமதிப்பதாய் ஆவணப்பட இயக்கு னரும், அதில் நடித்திருப்பவருமான கவிஞர் லீனா மணிமேகலை ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்களில் பேசுபொருளாகியிருக்கிறார். அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள்.

 

படைப்புச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களுக்கு அடி பணிய மாட்டேன் என்று கவிஞர் லீனா மணி மேகலை கூறியிருக்கிறார். கனடாவில் தன் மீது வந்திறங்கும் காளி பல இடங்களை அங்கு சுற்றிப் பார்த்து, பல மனிதர்களோடு பேசிப் பழகி ‘அன்பு செழிக்க வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்துவதாகவே தன் படம் அமைந்திருப்பதாகத் தெரிவித் திருக்கிறார். ‘

 

புகைபிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பது என்பது உண்மையே ஆனால், அதற்காக அது அத்தனை பாவகரமான செயலா? காளி மாதா புகை பிடிப்பதாகக் காண்பிப்பது அத்தனை அடாத செயலா? தீயவர்களின் ரத்தத்தையே குடித்தவளல்லவா அவள்!

 

படைப்புகளில் கடவுளர்களை, குறிப்பாக இந்துக் கடவுளர்களை கேலி செய்வது இழிவுபடுத்துவது என்றிருக்கும் வழக்கத்தைக் கண்டனம் செய்ய வேண்டுமானால் எத்தனையெத்தனையோ திரைப்படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகள், சமூக ஊடகங்களில் இடம்பெரும் பதிவுகள், அரசியல் தலைவர்களின் பேச்சுகள், அறிவுசாலிகளின் கருத்துரைகள் என நிறைய இருக்கின்றன.

 

எதேச்சையாகப் பார்க்கக் கிடைத்த பாடகி சுதா ரகுநாதன் பதிவேற்றியுள்ள காணொளி ஒன்றைக் காணநேர்ந்தது. அதில் காளியின் பல்வேறு தோற்றங்கள் காணக்கிடைக் கின்றன. https://www.youtube.com/results?search_query=kaali+video+by+sudha+raunathan

வேற்று மதங்களின் கடவுளர்களைப் பழிப்பதில்லையே என்ற கேள்வி அநாவசியம். யாருடைய நம்பிக்கைகளையும், பற்றுக்கோடுகளையும், ஏன், தாம் சார்ந்த மதத்தின் நம்பிக்கைகளையும்கூட யாரும் ஏன் பழிக்க வேண்டும்? அப்படியே அவற்றில் ஆகாதன இருந்தாலும் அவற்றை கண்ணியமாகச் சுட்டிக்காட்ட முடியும். நாத்திக வாதத்தை பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் அத்தனை தர்க்கபூர்வமாகப் பேசியிருப்பார்!

 

லீனா மணிமேகலை நுண்ணுணர்வு வாய்ந்த கைவ்ஞர் – திரைப்பட இயக்கு னர். அவர் தன்னுடைய திரைப்படங்களை வெற்றுப் பிரச்சார மேடைகளாக உருவாக்குவதில்லை என்பதற்கு அவருடைய சமீபத்திய படம் மாடத்தி சிறந்த எடுத்துக்காட்டு.

 

அவருடைய கருத்துகள் சிலவற்றோடு _ அரசியல்ரீதி யானவையும் மற்ற வையும் _ நாம் உடன்படாமல் இருக்கலாம். அதற்காக, அவர் காளியை மதிப் பழிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சித்தரித்திருப்பதாக, அவருடைய ஆவணப்படத்தைப் பார்க்காம லேயே கூறுவது நியாயமல்ல.

 

அவருடைய சில படைப்புகள் சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரின் கண்டனத் தையும் எதிர்ப்பையும் சந்தித்திருக்கின்றன. அவருடைய சமீபத்திய படம் மாடத்தியே கூட அத்தகைய எதிர்ப்பைச் சந்தித்தது. எனவே, ஒரு குறிப்பிட்ட மதத்தை, பிரிவினரை மதிப்பழிப்பது அவருடைய நோக்கம் என்று சொல்ல வியலாது. அவர் தனக்கு சரியெனப் பட்டதை எழுதுகிறார்; படைக்கிறார். அவ்வளவே.

 

அவரை இப்போது எதிர்ப்பவர்கள் அவருடைய சமீபத்திய காளி ஆவணப் படத்தைப் பார்த்திருப்பார்களா, தெரியவில்லை.

 

இந்துக் கடவுளர்களை அவற்றின் சாராம்சம் தெரியாமல் சகட்டுமேனிக்குக் கேவலம் செய்யும் போக்கு அதிகரித் திருக்கிறது என்பது உண்மையே. அதே சமயம் காளி உட்பட கடவுளர்கள் எல்லோரையும், எல்லாவற்றையும் உள்ள டக்கியவர்கள். நம்பிக்கையாளர் களும் சரி, அவநம்பிக்கையாளர்களும் சரி அவர்களை குத்தகைக்கு எடுத்திருப்பதாய், கொத்தடிமைகளாய், பாவிக்கவோ, நடத்தவோ இயலாது; நடத்தவும் கூடாது.

 

கடவுளின் அல்லது கடவுள் என்ற கருத்தாக்கத்தின் சாராம்சத்தையும் வீச்சையும் விரிவையும் ஒடுக்கி குறுக்கி கடவுளைத் தங்கள் துருப்புச்சீட்டாய்ப் பயன்படுத்தும் போக்கை கடவுள் மறுப்பாளர்களும் சரி, கடவுள் பற்றாளர்களும் சரி, கைவிட வேண்டியது அவசியம்.

 

ஒருவரின் மதத்தை, கடவுள் நம்பிக்கையைப் பழித்தல் ஒருவகையில் அவரு டைய பிறப்பை, பெற்றோரை, முன்னோர்களையெல்லாம் பழிப்பதாகிறது. இந்த உளவியல் புரிந்துகொள்ளப் படவேண்டியது இன்றியமையாதது.

 

பொது மேடைகளில் பேசுபவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்கள், படைப்பாளிகள், அரசியல்வாதிகள், அறிவுசாலிகள் என அனைவருமே இவற்றையெல்லாம் மனதில் கொண்டு செயல்பட்டால் மிகவும் நல்லது.

 

ஏனெனில், ஊரில் அமைதி குலையும்போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது சாமானி யர்களே.

 

படைப்புச் சுதந்திரத்தின் மீது தற்போதைய மத்திய அரசு தொடுக்கும் தாக்குதல் என்று கவிஞர் லீனா இதைக் குறிப்பிட்டுள்ளார். இதில் எனக்கு வேறுபட்ட கருத்து உண்டு. எந்த அரசும் சரி, அமைப்பும் சரி, கட்சியும் சரி – அடுத்தவர் அளவில் உயர்த்திப்பிடிக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை, வெளிப்பாட்டுரிமை போன்றவற்றைத் தம் அளவில் கடைப் பிடிப்பதில்லை என்றே தோன்றுகிறது.

 

கவிஞர் லீனா மணிமேகலையைப் பொறுத்தவரை தனக்கு சரியென்று பட்டதை நேரிடை யாகவும் படைப்பு மூலமாகவும் செய்கிறார். அவை நமக்கு ஏற்புடையதாக இருக்கலாம்; இல்லாமல்போகலாம். அது வேறு விஷயம். ஆனால் அவர் தன் மீதான அவதூறுகளை யெல்லாம் தனியொருவராகவே எதிர்கொண்டு வருகிறார்.

 

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்றெல்லாம் பார்க்காமல்தான் அவர் தன் கருத்துகளை வெளி யிடுகிறார்.

 

கவிஞர் லீனா மணிமேகலைக்கான ஆதரவாளர்கள் தமிழ் இலக்கிய உலகில் கணிச மாகவே இருக்கிறார்கள். ஆனால், தமிழ் இலக்கிய உலகின் பொதுக் குரலாக அது வெளியாவது அரிதாகவே உள்ளது.

 

கவிஞர் லீனா மணிமேகலை தற்போதைய மத்திய அரசை எதிர்ப்பவர் என்பதாலேயே அவருடைய படைப்பைப் பார்க்க முற்படாமல், பிறர் பார்க்க வழிவகுக்காமல் அதை முடக்குவது இந்திய அரசுக்குப் பெருமை சேர்ப்பதல்ல. சம்பந்தப்பட்ட காளி போஸ்டரை ஆதரித்து பல ஆழமான கட்டுரைகள் வெளியாகிவருகின்றன. நுபுர் சர்மா சர்ச்சைக்கு இணைநிலையில் இந்த காளி போஸ்டர் பிரச்சனையை அணுகும் போக்கும் சரியல்ல.

 

எந்த காளி போஸ்டர் அந்தக் கடவுளை அவமதிப்பதாகச் சொல்லி கண்டனம் செய்தார்களோ, முடக்கினார்களோ அதே போஸ்டரைத்தான் அத்தனை ஊடகங்களும், எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கவிஞர் லீனா மணிமேகலை குறிப்பிட்டிருப்பது உண்மையே.

 

அதேபோல், கவிஞரின் போஸ்டர் காளிமாதாவை எதிர்ப்பதாகப் பேசிய பலர் அத்தனை ஆபாசமாக கவிஞர் குறித்து எழுதியிருப்பதைப் படிக்கும்போது அவர்கள் மீது தான் காளி மாதாவுக்குக் கோபம் வரும் என்பது உறுதி.

 

அதிகாரத்திற்கும், கலாபூர்வ தனி மனிதர்களுக்கும் இடையே நிலவும் ‘தொடர்பின் மையை’ கவிஞர் வைதீஸ்வரன் 2015இல் அவர் எழுதி அம்ருதா இதழில் வெளியான ‘ஊருக்குள் இரண்டு காளி என்ற தனது சிறுகதையில் மிக நுட்பமாகப் பதிவு செய்திருப்பார். (http://vydheesw.blogspot.com/2015/11/blog-post_10.html) இக்கதை பதிவு இணையதளத்தில் இப்போது மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு எழுத்தாளர் அ.ராமசாமி எழுதிய திறனாய்வுக் கட்டுரையும் மிகவும் காத்திரமானது.

 

மாநில அரசு மாறியதுமே பட்டம் கிடைக்குமா, பதவி கிடைக்குமா, பரிசு கிடைக்குமா என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர்களெல்லாம் கவிஞர் லீனா மணிமேகலை யின் காளி படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையை அவருடைய PUBLICITY STUNT என்று கூசாமல் கருத்து வெளியிடுவது வேடிக்கை; வெட்கக் கேடு; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

 

இந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க முடிந்தவர்கள் கொடுக்கலாம். கொடுக்கவேண்டியது அவசியமும்கூட.

 

 

  •  
Series Navigationஇன்று தனியனாய் …
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

19 Comments

  1. Avatar
    smitha says:

    I am not at all surprised at latha ramakrishnan’s defence of Lena mamimekalai. In the last 100 years, no religion has been vilified as much as Hinduism. I am not going to ask the question – Why don’t U criticize other religions? Bcos I know the answer – Let me set my own house in order, only hinduism has caste differences etc., etc., However, the real reason is that you & your ilk just do not have the guts to speak ill of other religions & also do not have the courage to admit it.

    We all know what happened to Salman Rushdie or nearer home, the plight of a professor in kerala who had asked an harmless question about the prophet.
    The so called protectors of freedom of expression raised a hue & cry when artiste M.F Hussein drew Goddess Kali in the nude. Have you seen his paintings of other Gods? Pls do so. Do you also know that he refused to do the same to other Gods?
    He produced a hindi film – Meenaxi – A tale of 2 cuties. On the day of release, some muslim groups raised a hue & cry that that movie offended the religious sentiments of muslims. Immediately, M.F Hussein himself withdrew the film from the theatres & apologized. Why this double standards? What happed to your freedom of expression?
    & what were the so called protectors like latha ramakrishnna & her ilk doing then? Gone for a walk?

    Religion & religious beliefs are solely personal (whichever religion it is). Castigating manimekhalai & abusing her personally is wrong, but that does not, in any way, justify her portrayal of Goddess Kali who is revered by millions. 2 wrongs do not make a right.

    If I put in black & white, whatever I have in mind, & say that this is freedom of expression, sorry, that is not the way. For society to be free from malice & hatred, certain norms will have to be followed.

    But for the so called “protectors” like Latha, Manimekalai & her ilk, perhaps these do not apply.

    So, pls continue to vilify Hinduism. But remember – In spite of your persistent attempts, Hinduism will never die. It will only flourish.

    1. Avatar
      S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா says:

      ////சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர். காளி புகை பிடிப்பதாகவும், கையில் LGBT (ஓரினப்புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் முதலியவர்களின் உரிமை களுக்காகப் போராடும் அமைப்பு) பதாகையைப் பிடித்திருப்பதாகவும் சித்தரிக் கப்பட் டிருப்பது. இந்து மதக் கடவுள் காளிமாதாவை இந்தச் சித்தரிப்பு அவமதிப்பதாய் ஆவணப்பட இயக்கு னரும், அதில் நடித்திருப்பவருமான கவிஞர் லீனா மணிமேகலை ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்களில் பேசுபொருளாகியிருக்கிறார். அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டி ருக்கின்றன. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள்.

      படைப்புச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களுக்கு அடி பணிய மாட்டேன் என்று கவிஞர் லீனா மணி மேகலை கூறியிருக்கிறார். கனடாவில் தன் மீது வந்திறங்கும் காளி பல இடங்களை அங்கு சுற்றிப் பார்த்து, பல மனிதர்களோடு பேசிப் பழகி ‘அன்பு செழிக்க வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்துவதாகவே தன் படம் அமைந்திருப்பதாகத் தெரிவித் திருக்கிறார். /////

      லீனா மணிமேகலை தன் கருத்தை வலியுறுத்த எடுத்துக் கொண்ட மதச்சின்னம் காளி பராசக்தி இங்கு எழுத்துச் சுதந்திரம் என்ற உரிமையில் மிக மிகத் தாழ்வான முறையில் இழிவு செய்யப்பட்டு பல லட்சம் இந்துக்களை, குறிப்பாக வங்காள மக்களைப் புண்படுத்தியுள்ளார். முடிவில் அவர் வலுவான கருத்து காணாமல் போய், இந்துக்களின் வெறுப்புக்கும், கண்டிப்புக்கும் உள்ளாகி, சட்டம் மீறிய ஓர் சமூகக் குற்றவாளியாக சிறை செல்லத் தயார் என்று சவால் விடுகிறார். இது எழுத்துச் சுதந்திரம் அல்ல. கர்வமுடன் தாக்கும் மதச்சின்னம், மத வெறுப்பு இது.

      இப்படித்தான் புகழ்பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து, திருப்பாவை, திருவெண்பாவை எழுதிய ஆண்டாளை தேவதாசி என்று இழிவு செய்து, இந்துக்களைப் புண்படுத்தி அவர்களின் வெறுப்புக்கு ஆளானார்.

      ஜெர்மனி, டென்மார்க் நாடுகளில் முன்பு நபி நாயகத்துக்கு கொம்பு போட்டு இழிவு செய்ய பெரிய கலவரம் உலகெங்கும் பரவியது. இவை எழுத்துச் சுதந்திரம் அல்ல. மதத்தாரைப் புண்படுத்துவது.

      History repeats, but people never learn from it.

      சி. ஜெயபாரதன்

      1. Avatar
        Vinayagam says:

        ////முடிவில் அவர் வலுவான கருத்து காணாமல் போய், இந்துக்களின் வெறுப்புக்கும், கண்டிப்புக்கும் உள்ளாகி…/

        //கவிப்பேரரசு வைரமுத்து, திருப்பாவை, திருவெண்பாவை எழுதிய ஆண்டாளை தேவதாசி என்று இழிவு செய்து, இந்துக்களைப் புண்படுத்தி அவர்களின் வெறுப்புக்கு ஆளானார்.// Two falsehoods.

        வங்க மக்களுக்கு துர்காவும் காளியும் இஷ்ட தெய்வங்கள். துர்கா ஒவ்வொரு வங்க குடுமபத்திலும் மூத்த மகள்.

        ஆனால், வங்காளியர்கள் இந்து வெறியர்கள் அல்ல.

        அவர்கள் மனங்கள் காயப்பட்டிருந்தால், தெருக்களில் இறங்கி லட்சக்கணக்கான மக்கள் போராடியிருப்பார்கள். அப்படி ஒன்றுமே நடக்கவில்லை. எந்த வங்காளியரும் லீனாவின் மேல் வழக்கும் போடவில்லை.

        வழக்கு தில்லியில் பாஜகவினரால் போடப்பட்டது,

        வங்காளியர்களை இந்துவெறியர்களாக மாற்றி ஆட்சிக்கு வரலாம் என்ற பாஜகவின் கனவை வங்காளியர்கள் மம்தாவுக்கு வாக்களித்து ஆட்சியில் மீண்டும் அமர்த்தியதிலிருந்து தெரியும்.

        மமதா கட்சி எம் பி மோஹ்வா மித்ரா, லீனாவுக்கு ஆதரவளித்து ட்வீட் போட்டார். எந்த வங்க இந்துவும் அவரை மிரட்டவில்லை. அவர் காளியை எப்படியும் பார்க்கலாம் என்றார்.

        இது வங்க நிலை. அடுத்து தமிழ்நாடு நிலை…

        1. Avatar
          Vinayagam says:

          ஆழ்வார்களின் பாசுரங்களை தமிழர்களில் வைணவப்பிராமணர்களும் தமிழறிஞர்களுமே வாசிப்பவர்கள். பொதுமக்கள் திருப்பாவை வாசிப்பதில்லை.

          ஆண்டாளைப் பற்றி வைரமுத்து பேசியதும் தமிழ்க இந்துக்கள் கொதிக்கவில்லை. தெருவில் கூடி கோஷமிடவில்லை. அரசை மிரட்டவில்லை.

          ஒரே ஒரு ஜீயர் மட்டும் கொல்வேன் என்றார். திருவல்லிக்கேணி ஐயங்கார்கள் சேப்பாக்கில் த்ரணா நடத்தினார்கள். ஓர் இருநூறு பேர். சென்னை ஜனத்தொகையே 1.1 கோடி. தமிழக ஜனத்தொகையோ 7 கோடி. அதில் 200 பேர்.

          ராஜாஜி ஆண்டாள் என்ற பெண்ணே கிடையாது என்றார். காரணம் ஒரு பெண் தன் காம உறுப்புகளைப் பற்றி பொதுவெளியில் பேசமாட்டார் என்ற அபிப்பிராயத்தினால், பெரியாழ்வாரே பெண் பாவனையில் எழுதினார் என்றார். எவரும் அவரை மிரட்டவில்லை. அவரும் தன் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

          ஏன்? தமிழக இந்துக்கள் பரந்த மனப்பான்மை உடையோர். எதையும் கண்டுகொள்வதில்லை. எனவே மதக்கலவரத்தை தூண்ட முடியவில்லை.

          பெரியாழவார், திருவரங்கத்தில் ஆண்டாளை கொண்டுபோய் கோயிலில் விடுவது (ஒரேயடியாக), பின்னர் ‘செங்கண்மாலே கொண்டுபோனான்’ என்றழுதது ஏன்? எந்த தகப்பனாவது அப்படி செய்வானா? மடங்களின் விடுவது உண்டு. ஆனால் கோயிலில்?

          ஆண்டாளைப் பற்றி எழுதுமுன், கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும்.

    2. Avatar
      Vinayagam says:

      What is that ‘harmless’ question about the Prophet did the Prof ask? Have you seen the Question. Plz shed more light on that to know whether it is ‘harmless’ as decided by you?

      //when artiste M.F Hussein drew Goddess Kali in the nude// 2 errors. Hussein was not an ariste as he was not an actor in a cinema or theare. He was an artist who drew paintings. 2nd error: He did not draw Kali, but Sarawati.

      //Do you also know that he refused to do the same to other Gods?// A surprising news. Nowhere did I come to know he ‘refused’. The question of ‘refusal’ will arise only when when he was asked to draw. Had anyone asked him to draw the Prophet or Jesus? Plz give link. Otherwise it is a patent lie.

      //Immediately, M.F Hussein himself withdrew the film from the theatres & apologized. Why this double standards?// You are creating many falsehoods here. Hindu militant groups did not ask for his apology. They threatened him to put his life in danger. He fled for life to a Gulf country. Now you are making a show here that Hindu groups were peaceful and merely ‘asked for apology’ and he refused. They neither asked for it nor he refused. If they had asked for it, and even if he had given it, they would not have been satisfied with it as they were baying for his blood.

      Hindu religion is not your personal property and you are not its sole spokesperson. As human beings, we don’t know what will happen to us tomorrow. I may go on morning walk tomorrow on a side walk but a drunker driver may run over me. I wa sane but that did not guarantee my life. Thus, when you are not sure of your own future, you are guaranteeing a future for a religion. Note the fact: All religions are man made. They didn’t originate in times immemorial but founded by men. They will metamorphose beyond shape and may disappear to be replaced by some thing better. Change is the law of Nature. Be humbly and live in peace.

      1. Avatar
        smitha says:

        Pls reread the question on the prophet, if you are that sure.

        MF Hussain drew Goddess Saraswathi, not Kali. Accepted. But did he aplly the same yardstick to other deities? Shud anyone ask him to draw other deities like this? That is a moronic question, you have asked. Don’t divert the topic.

        Freedom of expression cannot & shud not be at the cost of offending religious sentiments.

        Hindu releigious groups did not ask for the film ‘Meenaxi”to be removed. In fact, the film angered the muslim community & they protested. Get your facts rights before posting.

        That he was forced to flee India was due to many other reasons. Do not brush everything under this carpet.

        Hindu religion is not my personal property. True. It is not yours too to scandalise it as per your wish. If You are truly against violnce using religion, apply the yardstick uniformly. But you will not , simply bcos you have seen what has happend to Salman Rusdie or nearer home, to the kerala profesor.

        BTW Hinduism is not a man made religion, it is not ascribed any Prophet or messenger of God.

        You are either a believer or an athiest, that is your personal choice. That does not give you the right to criticise any religion.

        Try to be a humanist.

    3. Avatar
      Vinayagam says:

      //Religion & religious beliefs are solely personal (whichever religion it is).//

      A big fat lie. Religions were not founded for a single man but groups. Mohammed founded it for Arabs and Jesus did it for Jews. The latter descendents spread the religions to others. Even then, the religions are for people, not one man. Hindu religion is now abroad. How dare it is to say religion is for an individual.

      For individuals, religions are unnecessary. They may take a thing or 2 or accept it in toto only when they feel it suits with them. Religion practised by individuals is completely free from the venom you sprinkle here. Don’t confuse your brand of religion with everyone’s.

  2. Avatar
    Manithan says:

    அதென்ன “சக கவிஞர்”. உலகில் தமிழ் உலகில் கரப்பான்பூச்சிகளை விட அதிகமாக இருப்பது கவிஞர் எனும் பட்டம். எந்த சமூகத்திலும் கவிஞர் எழுத்தாளர் எனும் பட்டங்களுடன் சுத்தும் கும்பலை பார்க்க முடியாது. லீனா மணிமேகலை கனடா நாட்டிலிருந்து கொண்டு செய்வதற்கு கனடா வாழ் மக்கள் தான் சொல்ல வேண்டும். அருமையாக ஜெயபாரதன் சொல்லியுள்ளார் பதில். வெளிநாடுகளில் குடியுரிமை பெற இருக்கும் சில முறைகளில் இதுவும் ஒன்று. அதை லீனா கையாண்டுள்ளார். வாழும் நெறி முறைகளை பற்றிச் சொன்ன திருக்குறள் பூமியில் தான் இப்படி சிலவும், கருத்துச் சுதந்திரமும். இது சரியெனில் தண்டனை சுதந்திரமும் சரியென விவாதிக்கத் தோன்றும். புத்திசாலி, இந்துமத துவேஷம் செய்தால் கல்லா கட்டலாம் எனத் தெரியும். பிற மதக் கடவுளை பற்றினால் என்னவாகும் எனத் தெளிவாகத் தெரிந்தவர். கனடா நாட்டின் மௌனம் தான் ஏன் எனத் தெரியவில்லை. ஹிசைனுக்கு குடியுரிமை தந்த நாட்டின் பாதையில் போகப் போகிறார்களோ தெரியாது.

    1. Avatar
      Vinayagam says:

      Don’t compare Canada, USA or any European country with India. An Indian origin man was FM and now standing for UK PM post, a Tamil origin woman also standing for PM but dropped out, and is an Attorney General of England and Wales, a Pak origin man was Mayor of London, now a Minister. In Canada and US, such examples are legion. In India, you are calling Sonia and their children foreigners! East and West can never meet.

      Freedom of expression should be judged in the context of the respective country. In Florida beach road a woman can walk in bikini free. Can you allow your women walk like that in Marina beach or Marine drive?

      //அருமையாக ஜெயபாரதன் சொல்லியுள்ளார்// He is not a Canadian in spirit. He has an Indian in mind. He can’t represent a Canadian mind. All his thoughts as seen here are soaked in old world gutter of conservatism. Any new or progressive idea sends butterflies in his stomach. In a new world he has no place.

      //வெளிநாடுகளில் குடியுரிமை பெற இருக்கும் சில முறைகளில் இதுவும் ஒன்று. அதை லீனா கையாண்டுள்ளார்// It is a half-baked knowledge about her. You know little about her.

      She is a student of Theatre and Cinema in a Canadian University, the documentary section is part of her work as a student. She was admitted by the University on the basis of her efforts in documentary field. She earned her qualifications. Whether she will seek Canadian citizenship after her studies, is left to her: a personal matter. You have no business to enter there.

      But surely Canada will welcome her because among women, such documentary film maker of avant garde films is much coveted. One in Million.

      //வாழும் நெறி முறைகளை பற்றிச் சொன்ன திருக்குறள் பூமியில் தான் இப்படி சிலவும், கருத்துச் சுதந்திரமும்// Your knowledge of Thiruvalluvar is poor. He was a revolutionary. Even today his thoughts are against the current. In his times, surely he was an odd man out. He attacked several things held dear by Tamilians then, even today by men like you.

      He talked about women and their independence to choose their way of life – that you wont, as a conservative, allow. It is ironical you are praising a man whom you don’t agree with you. If he were alive, he would be with the Canadian student.

  3. Avatar
    S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா says:

    ///VINAYAGAM///

    Please introduce yourself before making personal remarks of me. Who are you ? Are you an Indo-Canadian like me ? How long do you live in Canada ? Let me learn from you ? What is Canadian mind ? How long do you know me ?

    ///அருமையாக ஜெயபாரதன் சொல்லியுள்ளார்// He is not a Canadian in spirit. He has an Indian in mind. He can’t represent a Canadian mind. All his thoughts as seen here are soaked in old world gutter of conservatism. Any new or progressive idea sends butterflies in his stomach. In a new world he has no place.///

    S. Jayabarathan

    1. Avatar
      Vinayagam says:

      You have been expressing your views on sundry topics in Thinna for several decades and based on your views, you are being judged – it is not a personal remark. If I find your views quite conservative, sometimes irresponsible – as your statements on Vairamuthu and Leena (will explain later). and say so here, it is NOT a personal remark because every reader can comment upon every view posted here. The reader is not commenting upon the size of your nose in your photo – if he does, indeed it is a personal remark.

      It is vainglorious to feel that if one writes with photo, one does some great act of nobility. Nonsense because what you write, not how you look, matters for Thinnai readers. No one is interested to know how you looks. If you believe otherwise, i.e. your photo can ‘influence’ readers positively, you lack Canadian spirit. Because to influence people with photos is a fraud.

      Canadian spirit looks at the views, not the skin and nose of the writer etc. Respect people for their minds, not bodies, Mr Jayabarathan. My ID is useless to you. If you demand it, you lack Canadian spirit. I am a member in British, US and Canadian discussion fora and no one has ever wanted to know how I look and where from I write.

      Now, coming to your views on Vairamuthu and Leena. In both you lied -which was already exposed by me. You said Vairamuthu’s remarks had hurt all Hindus. All Hindus of the world, or India or TN? He wrote in Tamil known only in TN. According to 2011 census (online available), total no of Hindus in TN is 63188168, about 89% of the population. You are saying 63188169 Hindus of TN protested being hurt. Wherefrom did you get your data? He said he took his opinion from a historian of Kerala Naryanan (who was once President of Indian Historical Society) and what is your opinion on that? Further reference is available in Periyalvar’s pasuram. He was foster father of Andal, who took her to Srirangam and dedicated to the Lord. It is the history in Srivaishnavism. No one denied it. When she refused any proposal from any man and insisted she would marry only the Lord, it means she wanted to dedicate herself to Srirangam Lord. What do you call such ‘dedication’? W/o adequate knowledge about Andal, how can you say the story has hurt Hindus?

      About Leena’s short film on Kaali, you again fell by saying all Hindus were hurt. No one except Hindutva fanatics. Even in WB where Durga and Kaali are favorite goddesses, there was no uproar. A TMC MP Mohua Mitra herself said, anyone can view Kaalai in the form she wants. Hinduism allows it.There are legends in the religion that say God came down to please a devotee in the form he wanted. If someone wants to see Kaali as a modern queer woman, Kaali will appear so.

      First go and read about Hindu ethos (which are now being disturbed) and then write about such controversies.

  4. Avatar
    இராய செல்லப்பா says:

    இந்து சமுதாயம் பரந்த மனப்பான்மை கொண்டதாக -யாதும் ஊரே யாவரும் கேளிர்- என்று இயங்குவதை misuse செய்வதே பல பெண் எழுத்தாளர்களின் -அருந்ததி ரை முதல் லீனா மணிமேகலை வரை- சுலபமான விளம்பர உத்தியாக ஆகிவிட்டிருக்கிறது. மேற்கு நாடுகளில் கிடைக்கும் பரிசுக்காகவும் நன்கொடைக்காகவும் இவர்களில் பலர் இந்தியா நாட்டின் பண்பாட்டுக்கூறுகளைச் சிறுமைப்படுத்துவது நிச்சயம் நிறுத்தப்படவேண்டும்.

    இவர்களெல்லாம் தாங்கள் அடிக்கடி சென்றுவரும் பிற நாடுகளில் உள்ள சமுதாயப் பிரச்சினைகளை எழுதும் தைரியம் உள்ளவர்களா?

    ‘இலக்கியக் கள்ளத்தனம்’ கொண்டவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவேண்டும் என்பதே ஆபத்தான வேட்கை ஆகும்.

    1. Avatar
      Vinayagam says:

      அருந்ததி ராய் யாரென்றே இவருக்குத் தெரியவில்லை. ராய் ஒரு களப்போராளி (activist). அவரின் social activism பலருக்கு வலியைத் தந்ததால் பிரச்சினைக்கு உள்ளானது. All activists are like her only. Activism means questioning the establishment. So, they are anti-establishment.

      ராயின் இன்னொரு முகம் இலக்கிய படைப்பாளி. அவரின் முதல் நாவல் Man Booker பரிசை வென்றது. அடுத்த‌ நாவல் சில வருடங்களுக்கு முன் வெளியானது. புக்கர் பரிசு பெற்ற நாவல் (God of Small Things) பல பலகலைக்கழகங்களில் ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு பாட நூலாக வைக்கப்பட்டிருக்கிறது.

      ராயின் இலக்கியம் எந்த பிரச்சினைக்கும் ஆளாகவில்லை. அதாவது இலக்கிய படைப்பாளி என்ற முறையில் அவர் மீது எவருக்கும் எந்த புகாரும் இல்லை. God of Small Things is a great read. மேலும், அவர் எப்போதாவது எழுதும் படைப்பாளி. முதல் நாவலுக்கும் இரண்டாவதற்குமிடையே 20 வருடங்களுக்கும் மேல். I think her social activism prevents her from being a full time writer.

      குறும்படம் படைப்பு கலையின் ஒரு பாகமாதலால் அது பிரச்சினைக்குள்ளாக்கப்படலாம். லீனாவினது அப்படித்தான்.

      ஆனால் ராய் வெறும் எழுத்து இலக்கியப் படைப்பாளி.

      ஒரு நபரைப் பற்றி எழுதுவதற்கு முன்னர் அவர் யார் எனபதைத் தெரிந்து விட்டுத்தான் எழத வேண்டும். இல்லாவிட்டால் குழப்பம்தான்.

  5. Avatar
    Vinayagam says:

    //இவர்களெல்லாம் தாங்கள் அடிக்கடி சென்றுவரும் பிற நாடுகளில் உள்ள சமுதாயப் பிரச்சினைகளை எழுதும் தைரியம் உள்ளவர்களா?

    W/o knowing, he is judgmental about them. Arundati Roy is involving herself with environmental activism and down-trodden activism of other countries too. She is also involved religious activism too. They are international issues. She is courageous.

  6. Avatar
    Vinayagam says:

    //இலக்கிய கள்ளத்தனம்?//

    இவருக்கு இலக்கியம் என்றாலே என்னவென்று தெரியவில்லை. He confuses between Leena, a short film director and Roy, a literary writer. (I leave her persona as an activist out here). Is Roy committing fraud in literature? That is what R Chellappa? It is impossible to commit fraud, Sir. Man Booker prize jury is a big jury comprising 25 persons from a variety of fields, even engineering. She did not even submit her book. Her publishers did. She won the prize w/o any lobbying: pure merits. What Kallathanam did he find in her? May I know? He is writing irresponsibly. An author writes and thereafter it is for readers to judge the book. இதில் என்ன கள்ளத்தனம் இருக்கிறது என்று தெரியவில்லை

  7. Avatar
    smitha says:

    Vinayagam,

    Seems like you have not seen the question asked on the porphet. Pls revisit. The M.F Hussain produced movie was objected to by muslims & not by hindus. Also, M.F.Hussain fleeing India was not due to this incident. Do not try to brush all things under 1 carpet.

    MFH drew Goddess Saraswathi & not Goddess Kail. Fine.

    But what meant was why did he dare not try it on other religious figures? His so called freedom expression was sleeping?

    Why is it that for you & your ilk, freedom of expression is restricted only to criticising hindu religion. When other religions are criticised, you immediately defend the minorites.

    Salman Rushdie coming to mind?

    It is quite simply bcos the so called rationalists & atheists (like U) just do not have the guts to criticise any other religion & are afraid to admit it.

    BTW I did not know that Hindusim had a founder.

    Hinduism is not my personal property, accepted. Neither is it yours to make senseless comments.

    Frankyly, no one is bothered whether you are believer or non believer, try to be a humanist. That is what counts.

    1. Avatar
      Vinayagam says:

      //MFH drew Goddess Saraswathi & not Goddess Kail. Fine.//

      What ‘fine’? You will commit an error and if pointed out, say ‘fine’ and move.

      First apologize or regret. I will continue with your brand of Hindutva Hinduism.

  8. Avatar
    smitha says:

    Vinayagam

    Answer to the post instead of harping on 1 slip.

    Also, you are confused between hindutva & hinduism, clear that first.

  9. Avatar
    Vinayagam says:

    A few years ago, in Covid-panic less times, I went to see a drawing exhibition by Bengali artist Biswas, it was sponsored by Catholic Diocese of Delhi, inaugurated by the Bishop. His pictures depicts the Passion. I was stunned by one picture – it was already drawn by Miachel Angelo famously – depicting the dying body of Jesus in the lap of his mom. The loin cloth was slipping. Mom was looking upwards, perhaps not noted. Biswas showed the public hair. No consternation! No hullabaloo! No fatwa for Biswas’ head from Christians. Why? Biswas’ picture will turn Non Christians into Christians. Unless you see art as art, Biwas will proselytize you. One example only. So many I can adduce from the Renaissance and later Renaissance Italian and German artists.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *