பரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?

author
22
0 minutes, 4 seconds Read
This entry is part 9 of 31 in the series 31 மார்ச் 2013

புனைப்பெயரில் 

 

 

danielபரதேசி படத்தில், தேயிலை தோட்டத்தில் கொத்தடிமைகளாக வாழும் மக்களை இனம் புரியா நோய் தாக்கி அவர்கள் பிடுங்கிப் போட்ட செடி போல் செத்து விழுவார்கள்.

அது தொடர்ந்து , அங்கு வரும் ஒரு டாக்டர், அவர்களுக்கு இயேசப்பன் நாமம் சொல்லி வைத்தியம் பார்ப்பார்.

வைத்தியம் பார்ப்பது விட, அவர்களின் நாக்கிலும் நெற்றியிலும் அவரும் அவருடன் வரும் பெண்மணியும் இயேசு நாமத்தை குறியீடாக்குவார்கள்.

அப்புறம், இயேசுவின் நாமம் சொல்லி ஒரு குத்துப்பாட்டு ஆடி பன்களையும் ரொட்டிகளையும் அந்த கொத்தடிமைகள் நோக்கி வீசி எரிவார்கள்.

அந்தக் குத்துப்பாட்டு காட்சியில் தியேட்டர் அதிர அதிர சிரிப்பொலியுடன் ஒரே தியேட்டரின் அமர்க்களம் தான்.

பின், வெள்ளைக்காரன் குடித்தாடி மகிழும் இடம் சென்று, அவர் தம் காலடியில், மது பாட்டில்களை திறந்து டாக்டரும் அப்பெண்மணியும் குடிக்க ஆரம்பிப்பர்…

அப்போது ஒரு வெள்ளைக்காரன் சொல்வான், “மிக ஆபத்தானவன் இந்த ஆன்மீக கங்காணி “ என்று.

இப்படி மதமாற்றம் செய்யும் ஒரு மிசினரிகாரராய்   சித்திரிக்கப்பட்டு தியேட்டர் அதிரும் வண்ணம் மத மாற்ற நிகழ்வாய் கிண்டலிக்கப்பட்டும், ஆன்மீக கங்காணி என்றும் வார்த்தெடுக்கப்பட்ட அந்த டாக்டர் யார் தெரியுமா..?

தேயிலை தோட்ட அடிமைகளுக்கு வைத்தியம் பார்க்க வந்து, அவர்தம் இழி நிலை கண்டு, அவர்களுடனே வாழ்நாள் முழுதும் தங்கியவர்.

அவர்தான் இறைமிகு. டாக்டர். பால் ஹாரிஸ் டேனியல்

தேயிலைத் தோட்ட கொத்தடிமைகளுக்கு ஒரு சங்கம் அமைக்க காரணமாயிருந்தவர்.

அவர்களின் துயர் துடைக்க தன் வாழ்நாளைத் தந்தவர்.

ஆம், RED TEA என்ற புத்தகத்தை தந்து காலமெல்லாம் அத் தொழிலாளிகளின் வேதனை உலகறியச் செய்த மகான்.

இதோ அவரது உருவ புகைப்படம்:

 

 

படத்தில் இவர் உருவ ஒற்றுமையுடன், அதே மாதிரி கண்ணாடியுடன் மூன்றாந்தர கோமாளியாய சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரத்தின் உண்மை பிம்பம் இவர்.

வரலாற்றில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வலியை பதிவு செய்தவர்.

அப்புத்தகம் ”எரியும் பனிக்காடு” என தமிழில் இரா.முருகவேல் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளத்.

கண்டிப்பாக படியுங்கள்.

அப்போது தான், வலியின் உச்சம் புரியும்.

பரதேசி சினிமாவில், இயக்குனரின் தனிமனித திறமை அடையாளத்திற்காக பொது சமூக சோகம் சிதைக்கப்பட்டது புரியும்.

”எரியும் பனிக்காடு” என்ற ”ரெட் டீ” , சினிமாவிற்காக தனது ஜீவனை இழந்ததே உண்மை.

அதையும் விட மன வேதனை, டாக்டர் கதாபாத்திர வடிவமைப்பு.

மதமாற்றம் செய்தது பற்றி நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம்.

கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த வெள்ளையனும்,

இந்துக்கடவுளை கும்பிடும் காட்சியுடன் அறிமுகப்படுத்தப்படும் கங்காணியும்,

எதேச்சிகார மனநிலை கொண்ட வர்க்கம்.

நிலத்திற்காக, பணத்திற்காக அடுத்தவனின் அப்பாவித்தனத்தை, கையாலாகாத நிலையை அட்வாண்டெஜாக எடுத்து,

அனுதாப உதவும் எண்ணத்துடன் இருக்கும் மனநிலை கொண்டோரை அடையாளம் கண்டு,

சிக்கலான ஒப்பந்தம் மூலமும்,

நட்பாடி குடிகெடுக்கும் நம்பிக்கைத் துரோகத்துடனும்,

கேவலமான மனநிலையுடன்

அவர்தம் வாழ்வை சுரண்டி நாசம் செய்தவர்கள் அத்தகைய ஆட்கள்.

மத இன சாதி தாண்டிய ஒரு கும்பல் அது.

அப்படியிருக்கையில், தேயிலை மக்களின் வாழ்வு மேம்பட போராடிய ஒருவரை மத அடையாளத்துடன் படைத்து கிண்டல் செய்யலாமா..?

ஆனால், டாக்டராக தேயிலை தோட்டம் வந்த டாக்டர் டேனியல், அவர்களுக்கு தொண்டு செய்து, பின் வரலாற்றில் அவர்தம் வாழ்வை பதிவு செய்தவர்.

சொல்லப்போனால், இந்த படத்தை பாலா கரு சிதையாமல், ஜீவன் இழக்காமல் பதிவு செய்திருக்க வேண்டும்.

(ஷிண்ட்லர் லிஸ்ட் எடுக்கும் போது, சினிமாவிற்காக என நகைச்சுவை காட்சிகளா ஸ்பீல் பெர்க் வைத்தார்..?)

அது விடுத்து பாலா இந்த துன்பமான வரலாற்று பக்கங்களை பிலேவர் போல் கொண்டு, பாக்ஸ் ஆபிஸ் காமடி கலந்த வெகுஜன படம் போல் எடுத்திருப்பது தவிர்த்திருக்கலாம்.

பாலாவிடம் நாம் எதிர்பார்க்கவில்லை இதை.

அவர் , இதற்காக ஏதாவது பரிகாரம் செய்தல் வேண்டும்.

சாதாரண சினிமாக்காரர்கள் வேண்டுமானால், சினிமாப்படுத்துகிறேன் என்று எது வேண்டுமானாலும் செய்யலாம்,

ஆனால்

பாலா, அளப்பறிய சினிமா வடிவமைக்கும் ஆற்றல் கொண்டவர்,

நம்மைப் போன்ற முகங்களையும் நம் அப்பத்தா முகங்களையும் சினிமாவில் அதே எண்ணெய் பிசுக்குடன் பிரேமில் கொண்டு வருபவர்.

அதுவும் இந்த படத்தில் ஒட்டுப் பொறுக்கியின் ஆத்தா கேரக்டருக்கே அவருக்கு பாராட்டு விழா நடத்தலாம்.

பிசுக்கு தலைமுடிகளுக்கும் பாராட்டு நடத்தலாம்.

ஆனால், இது டீ தோட்ட வேரில்

உரமாய் உதிரம் கொட்டி

வாழ்விழந்த

அப்பாவி கொத்தடிமைகளின் வரலாறு,

அதை நிஜ வாழ்வில் வரலாறாய் வெளிக்கொண்டு வந்த,

அந்த டாக்டரின் கதாபாத்திர வடிவமைப்பை கோமாளித்தன குத்ட்துப்பாட்டு கேரக்கட்டராகாக ஆக்கியது எந்த வகையில் நியாயம்..?

அதில் பெரும்பான்மையானோர், சிவகங்கை பகுதியையும் சேர்ந்தவர்கள். இந்தப் படத்தின் கேமிரா மேனும் சிவகங்கைப் பக்கத்துக்காரர் தான். உலக சினிமா பற்றி விகடனின் தொடர் எழுதியவர் தான்.

இந்தக் கேலிக்கூத்து வடிவத்தை அவராவது தடுத்திருக்கலாமே..?

கலர் டோனில் மட்டுமில்லை உணர்வும், சினிமாவும்..

அதன் ஆன்மாவில் இருக்கிறது என்பது அவர் அறியாததல்ல…

மேலும், அந்த காலகட்டத்தில் நமது தமிழக பகுதி மலைகள் மட்டுமின்றி, இலங்கையிலும் இந்தியத் தமிழர்களின் கொடுமையான நிலை இது தான்.

அவர்தம் வாழ்வும் இலங்கையில் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படியொரு நூற்றாண்டு சோகத்தை,

பாலா தனது அடையாளத்திற்கு பூசிக் கொள்ளும் அரிதாரமாக கையாள்வது எந்த வகையில் நியாயம்…?

எரியும் பனிக்காடு புத்தகம் கிடைக்குமிடம்:

விடியல் பதிப்பகம்

88 இந்திரா கார்டன் நாலாவது தெரு, உப்பிலிபாளையம் போஸ்ட் , கோயமுத்தூர் 641 015

Phone: 0422- 2576772  ; 94434 68758

Vidiyalpathippagam2010@gmail.com

 

பின் குறிப்பு:

சேவைக்காக தன் வாழ்வையே அர்பணித்த ஒரு ஃபாதிரியாரின் வரலாற்றுப் பதிவை வைத்தே , அவரை மிக மிக மூன்றாந்தர ரசனைக் கேடான முறையில் படத்தில் பதிவு செய்ததை கண்டிக்காத, கண்டனம் தெரிவிக்காத, இந்த சமூக கேட்டை என்னவென்று சொல்வது.

* சினிமாபடுத்தவே என்று வியாக்கானம் பண்ணும் கும்பல், LIFE OF PI பார்க்கனும். நம்ம பாண்டிச்சேரி தான் எப்படி உலக அளவு ஆஸ்காராய் ஒரு மஞ்சள் முகத்துக்காரரால் வடிவம் ஆன்மா சிதைக்கப்படாமல் ஆக்கப்பட்டிருக்கிறது என்றுணர வேண்டும்.

 

Series Navigationதமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள்கூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…
author

Similar Posts

22 Comments

  1. Avatar
    IIM Ganapathi Raman says:

    இது பரதேசி பட விமர்சனம்தான். ஆனால் ஒரே ஒரு குறிப்பை மட்டும் எடுத்துச் சொல்கிறார்.

    மருத்துவரின் படத்தைப்பார்த்ததும் இராஜாஜியோ என நினைத்து, பின்னர் கட்டுரையாளரின் பெயரைப் படித்ததும் இராஜாஜியைப் பற்றி ஏதேனும் எழதுகிறாரோ என்று நினைத்தால், அனைத்தும் டாக்டர் டேனியலைப்பற்றி. சரி, கட்டுரையாளர் மதமாற்றிகளை பாலா காட்டியதற்கு பாராட்டு கொடுக்கிறாரோ என்றால் அதுவுமில்லை.

    கட்டுரையின் கடைசியில் மருத்துவர் டேனியலைப் பாதிரி என்றது ஏன்? அவர் வெறும் மருத்துவர் மட்டும்தானே?
    பாலா அப்படி அந்த மருத்துவரை இழிவுபடுத்தியது ஒருவகையில் சரியே. ஏன்?

    இனி எல்லாரும் இந்த டேனியல் யார்? என அறிய விழைவார்கள்; அப்போது பாலா செய்த துரோஹம் தெரியவரும்.

    கட்டுரையாளர் சொல்லியது சரியன்று: கொட்ட்கையில் எவரும் கை தட்டவில்லை. எவருமே மதமாற்றிகள் என்றெல்லாம் சொல்லவுமில்லை.

    பாலா காட்டியது மிகை; ஒரு ஒபனான இந்துத்வா அரசியல் என்றுதான்.

    எனவேதான் நான் எழுதினேன் இங்கே: செய்வன திருந்தச்செய். எதைத் தாக்க விரும்புகிறோமோ, அதுவும் சினிமா என்ற ஊடகத்தில் மூலம், அதை இலை மறை காயாகச் சொன்னால், அது பொய்யாக இருந்தாலும் மக்களை நம்ப வைக்கமுடியும். பொய் சொல்வதும் ஒரு கலை. அதில் தேர்ந்தவனே பாராட்டுக்களை அள்ளுவான்.
    டேனியல் கெட்டவர் என்பதை திறமையாக பாலா செய்திருக்கலாம்.

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    கட்டுரைத்தலைப்பு ஒரு கேள்வி.
    என் பதில்: டேனியல் கெட்டவர்தான். ஐயமேயில்லை.
    எப்படி?
    1939ல் எம் பி பி எஸ் படித்தவர்கள் கிராமங்களில் கிடையா. பட்டணங்களில் இருப்பர். அவர்களுக்குப்பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும். எந்த மருத்துவரும் ஏழையாக இருக்க முடியாது. ஏனென்றால் வெள்ளைக்காரன் காலத்தில் கல்வி மிகவும் சுருக்கிவைக்கப்பட்ட்து அதுவும் மருத்துவப்படிப்பு.
    இன்று எல்லாமே சீப்.
    அப்படிப்பட்ட காலத்தில் டேனியல் நாகர்கோயிலிலோ, நெல்லையிலோ, திருவனந்தபுரத்திலோ – அவர் சொந்த ஊர் அகஸ்தீஸ்வரம் – மருத்துவ வேலையைப் பார்த்துக்கொண்டு, பெரும் தனவந்தராகி இருக்கலாம்.
    செய்தாரா? எங்கோ தொலைதூரத்திலிருக்கும் வால்பாறை தேயிலைத்தோட்டத்துக்கு வந்து அத்தொழிலாளிகளுக்கு வைத்தியம் பார்த்து, தன்னைக் கெட்டவர்தான் என்பதை அறிவித்து விடுகிறார். அதோடு விட்டாரா? அவர்கள் வாழ்க்கையை துயரங்களை எழுத்துவடிவில் அளித்து ரொம்ப ரொம்ப கெட்டவராகி விட்டார்.
    எனவே மஹா ஜனங்களே, மருத்துவர் டேனியல் கெட்டவர்.

    1. Avatar
      paandiyan says:

      தங்களுடைய சீதோசன நிலைக்காக வெள்ளையர்கள் மலை வாசம் விரும்பினார்கள் இங்கு . உங்கள் கற்பனை எல்லாம் வரலாறு செய்தி என்று கிச்சு கிச்சு மூட்டாதீர்கள்

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        Dr Daniel was a Tamilian from Kanyakumari district.

        Why didn’t a single Hindu MBBS doc go there? at least to get a cozy living in the salubrious climate?

        1. Avatar
          paandiyan says:

          அதை நீங்கள் தான் ஆராய வேண்டும் என்னிடம் கேட்டால் ? வெள்ளையர்கள் மலைவாசஸ்தலங்கள் வேண்டும் ஏன் என்றால் வெப்பநிலை அதற்க்கு அவர்கள் நம் மக்களை கொண்டு சென்றார்கள் அவர்களோடு. டேனியல் என் நான் சென்றேன் ஏன் ஹிந்து செல்லவில்லை என்று ஏதும் சொல்லி இருக்கின்றாரா ?

  3. Avatar
    புனைப்பெயரில் says:

    கட்டுரையாளர் ஏன் பாலாவின் தவற்றை, அலட்சியத்தை, அகங்காரத்தினால் ஏற்படுத்திய சிதவை பொட்டென்று எழுதாமல் வழவழா வெண்டைக்காய் போல, தடியும் ஒடையக்கூடாது பாம்பும் சாவனும் என்பது போல் எழுதியிருக்கிறாரோ..? என்று சொல்லும் ஐ ஐ எம் க்ருத்தை ஏற்கிறேன்.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      கட்டுரையை விட இந்தப்பின்னூட்டமே வழா வழா கொல கொலாவென்றிருக்கிறது. ப்ளீஸ் சே எனிதிங் டைரக்ட்லி.

  4. Avatar
    பசுந்தமிழன் says:

    தேயிலைத் தோட்டத்திற்கு – சொர்க்க வாழ்வு என அழைத்துச் சென்று கொடுமைப் படுத்தப்பட்ட கதையைத், ” பி.ஹெச்.டேனியல் எழுதிய ‘ ரெட் டீ’1969 – ”எரியும் பனிக்காடு” நாவலைத் தழுவி படம் உருப்பெற்றது. இதற்கு முன்பு 1937 முல்க் ராஜ் ஆனந்தின் Two Leaves and a bud”” என்ற அசாம் தேயிலைத் தோட்ட கொத்தடிமைத் தொழிலாளிகளின் வாழ்க்கையினை விவரிக்கும் நாவல் உள்ளது.

    //முல்க் ராஜ் ஆனந்தின் நாவல் வெளிவந்தபோது 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ‘ஸ்பக்டேட்டர்’ இதழில் ஆனந்தின் நாவல் சித்தரிக்கின்றபடிக்கு ஒன்றும் அசாம் தேயிலைத் தோட்டங்களின் நிலைமை இல்லை என்று கோல்ட்வின் என்ற தேயிலைத் தோட்ட முதலாளி எழுதினார். அவருக்கு செப்டம்பர் 3, 1937 இதழில் பதிலெழுதிய ஆனந்த் தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆராய அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசின் வைட்லி ராயல் கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி அரசு அறிக்கையே ஆங்கிலேயர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை பாலியல், பொருளாதார சுரண்டலுக்கு உட்படுத்துவதாகக் குறிப்பிடுவதை எடுத்துக்கூறினார். தானே நேரில் சென்று இலங்கை, அசாம் தேயிலைத் தோட்ட நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததாகவும் பதிலளித்தார்.//
    இன்றும் கேரளாவில் உள்ள மூணாறு, வண்டிப்பெரியார், கல்பெட்டா, மேப்பாடி போன்ற தேயிலைத் தோட்டப் பகுதிகளில் தமிழ் தொழிலாளர்களைக் காண்டுள்ளேன். வரிசையான சுகாதாரம் குறைவானபடி தான் தொழிளாளர் குடியிருப்புகள், மேலுள்ள பகுதி மட்டுமின்றி வால்பாறை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, கர்நாடக சிக்மகுழுர், ஹாசன் பகுதிகளில் இன்றும் உள்ளது. அடிப்படைக் கல்வி மற்றும் மருத்துவம், இலவச மின்சாரம் தரப்படுகிறது. மற்றபடி மிகவும் கஷ்டமான வாழ்வு தான்.

    இப்போது ஏன் படத்தின் டாக்டர் கதாபாத்திரம் டேனியலைக் குறிக்கிறது எனப் பல எழுத்தாளர்கள் குதிக்கின்றனர். டாக்டர். பால் ஹாரிஸ் டேனியல் தான் டாக்டர் பரிசுத்தம் பாத்திரம் என பரப்பும் போது, படத்தில் அந்நாவலை மீறி வரலாற்று ரீதியில் நடந்த மதமாற்றத்தையும் சேர்த்துள்ளதைத் தாங்காமல் இந்த எழுத்தாளர்கள் டாக்டர்.டேனியலலை இழிவு படுத்துகின்றனர். பாலா செய்யவில்லை.

    இதுவரை எந்த கிற்சிதுவ சர்ச் வரலாற்றாசிரியரும் இது தவறு எனச் சொல்லவில்லை. கிறிஸ்துவ வலதளம் பாடலைப் புகழ்வது இங்கே.
    http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2570&Itemid=287
    திருநெல்வெலி சர் வரலாறு, தேயிலைத் தோட்ட மதமாற்ற்ப் பிரிவினருடன் எனச் சொல்லும் சர்ச் வலைதளம்.
    http://www.csitirunelveli.org/Pastorate/manjolai.html

  5. Avatar
    புனைபெயரில் says:

    இந்த எழுத்தாளர்கள் டாக்டர்.டேனியலலை இழிவு படுத்துகின்றனர். பாலா செய்யவில்லை. –> பேசாம இத டாக்டரே எழுதவில்லை… பாலா தான் எழுதினார் என்றும் சொல்லிவிடலாமே…

  6. Avatar
    ஷாலி says:

    இராமாயாணம் தொலைத்தொடராக வெளிவந்தபோது அதற்க்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பின.காரணம் நாம் அறிந்த இராமயானத்தில் இல்லாதா காட்சிகளை சுயமாக சேர்த்துள்ளதை கண்டித்தனர்.இதற்க்கு படத்தயாரிப்பாளர் சொன்ன பதில் என்ன தெரியுமா? இது வால்மீகி இராமயாணத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் அல்ல.”இராமானந்த சாகரி”ன் இராமயாணம் படி எடுக்கப்பட்ட படம் என்றார்கள்.அதே பதில்தான் இங்கேயும்.இது டாக்டர் டேனியலின் “ரெட் டீ” (எரியும் பனிக்காடு) நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் அல்ல.”பிதாமகன்” பாலாவின் கதையை தழுவி எடுக்கப்பட்டதே “பரதேசி”.என்பார்கள்.அடுத்தவர் கதையில் கை சரக்கை சேர்க்க முடியாது. கதை, திரைக்கதையாக உருமாறி விட்டால் ஆட்டை கழுதையாக்கலாம்.மிஷனரி டாக்டரை விஷ நரியாக உருமாற்றலாம்.நரியை பரியாக்கிய பூமியில் பாலாவுக்கு இதெல்லாம் பெரிய விசயமில்லை.இந்து சேவை செய்த பாலாவுக்கு தேசிய அவார்ட் தப்பியது எப்படி என்பதே எங்கள் கவலை.

  7. Avatar
    paandiyan says:

    //இந்து சேவை செய்த பாலாவுக்கு தேசிய அவார்ட் தப்பியது எப்படி என்பதே எங்கள் கவலை//

    உங்கள் கூற்றுப்படி award க்கு தகுதி போலி மதசாரிபின்மை மற்றும் ஹிந்து மதத்தை இகழவேண்டும் . இல்லை என்றால் இல்லை. இப்படிதான் ஒரு குறுப்பிட்ட ஜாதி மற்றும் வலதுசாரி எழுத்தாளனுக்கு “பீடம்” award இல்லை என்று அங்கு விற்பனையாகி விட்டது. யாரு கண்ட நீங்கள் சொல்வதுபோல ஒரு இடதுசாரி கொள்கை இங்கும் வராமலா போய்விடும்.கொளுதிபோட்டுவிட்டீர்கள்.. பற்றட்டும்…

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      சிறந்த படத்திற்கான பரிசு வழங்கப்படா காரணம் படத்தின் அமெச்சூர்த்தனத்திற்காகத்தான். ஒப்பனை, நடிப்பு, இசை என்று எல்லாவற்றிலுமே அமெச்சூர்த்தனம். உடையலங்காரத்தைத் தவிர மற்றவை ஜஸ்ட் ஆவ்ரேஜ். எனவே உடையலங்காரத்துக்கு மட்டும் தேசிய அவார்டு கொடுக்கப்பட்டது.

      உடையலங்காரம் பண்ணியவர் நாயுடு மஹால் முதலாளியின் மகள் Tmt or செல்வி ராமசாமி.
      உன்னிப்பாக கவனித்துச் செய்திருக்கிறார். அதாவது தலித்துகள் போடும் மட்டமான துணிகளின் மட்டமாக ஜாக்கெட், புடவை மட்டுமன்றி, அதையும் அவர்கள் போர்வையைப்போர்த்தியது போல அணிந்திருப்பார்கள். அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசு தகுதி வாய்ந்த்து. Lets pay a royal salute to Madam Ramasamy.

  8. Avatar
    punaipeyaril says:

    ஷாலி படம் பார்க்கவில்லை எனத் தெரிகிறது. படத்தின் ஆரம்பத்தில் ரெட் டீ பற்றி டைட்டில் கார்ட் போடப்படுகிறது.

  9. Avatar
    smitha says:

    The basic reason for all this is unfortunately for christians, it is always service with a motive i.e conversion.

    They are obsessed with it.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      That s true. But v r not talking abt conversion per se. Rather, how it has been made into cinema awkwardly.

      But the crude way is not w/o an ulterior motive. It carries the personal prejudice and hatred for Christians by the Director, r he might have been instigated to do that.

      Thus, as a Director, he lacked professional integrity.

      மத மாற்றங்களைப்பற்றிக்காட்டலாமா? கூடாதா? என்பதன்று என் பிரச்சினை. காட்டலாம் அது ஜோடனை செய்யப்ப்பட்டதாகவே இருந்தாலும். Trur or false – a question beyond my purview here.

      ஆனால் செய்வதை சிறப்பாகச்செய்ய வேண்டும். வெறும் கற்பனையைக்கூட நல்ல சினிமாவாக்க முடியும். உண்மையில் அனைத்தையும் அப்படியே காட்டுவது கலையன்று. சேர்த்தலும் நீக்கலும் இறுதியில் ஒரு முழுமைபெற்ற கலைவடிவத்தைப் பார்ப்போருக்கு அளிப்பதே ஒரு தேர்ந்த கலைஞனை நமக்குக்காட்டும்.

      இங்கே பாலா காட்டுவது ஒரு மூன்றாம்தர பிரச்சாரகன் செய்வது. தனக்குப்பிடிககாதவரை எப்படி மற்றவருக்குப்பிடிக்காதவராக்குவது என்ற உள்ளோக்கத்தை அடைய அவர் பிரயாசைப்பட்டது தெளிவு.

      ஒரு சினிமாக்கலைஞர் அரசியல்வாதியாக இருக்ககூடாது. சினிமா ஒரு கலை. பிரச்சார மேடையன்று. பிரச்சாரமும் பண்ணலாம். அப்படிச் செய்யும் போது அது குறும்படம் அல்லது ஆவணப்படமாகும்.

      பாலா ஒரு ஆவணப்படத்தையே எடுத்திருக்கலாம். (In fact as Chinnappayal said the film reminded him all along that it is a docu drama.)

      ஏன் ஒரு மாபெரும் டைரகடர் என்ற பந்தாவைக்காட்டி நம்மைக் கொட்டகைகளுக்கு இழுத்து ஏமாற்ற வேண்டுமென்பதுதான் என் கேள்வி.

      எனவேதான் சொன்னேன்: He lacks professional integrity.

      1. Avatar
        IIM Ganapathi Raman says:

        As Shali pointed out, his earlier films showed him as a carrier of sociological agenda ie. attempting to propel his dear causes using the medium of cinema, as Karunithi and others did in the past. But i hvent seen Bala’s earlier films.

        I went to watch the film on getting captivated by the avant-garde wall posters. And also, with a wide publicity to him as a avant-garde Director.

        He has cheated me. I wd have come out of the cinema hall but for the stern homely warning that I shdnot waste money in buying cinema tickets which I could not see. I had to sit to see the torture unfolding before me in the guise of progressive cinema.

        Now onwards, whatever efforts he takes, his films will be viewed with suspicion.

        He has been typecast. It is a pity.

  10. Avatar
    IIM Ganapathi Raman says:

    //இப்போது ஏன் படத்தின் டாக்டர் கதாபாத்திரம் டேனியலைக் குறிக்கிறது எனப் பல எழுத்தாளர்கள் குதிக்கின்றனர். டாக்டர். பால் ஹாரிஸ் டேனியல் தான் டாக்டர் பரிசுத்தம் பாத்திரம் என பரப்பும் போது, படத்தில் அந்நாவலை மீறி வரலாற்று ரீதியில் நடந்த மதமாற்றத்தையும் சேர்த்துள்ளதைத் தாங்காமல் இந்த எழுத்தாளர்கள் டாக்டர்.டேனியலலை இழிவு படுத்துகின்றனர். பாலா செய்யவில்லை.//

    இது என்ன லாஜிக்கென்று புரியவில்லை. இதை skewed logic எனலாம்.

    மருத்துவர் டேனியல்தான் படத்தில் காட்டப்படும் மருத்துவர் பரிசுத்தம் என்று பரப்பப்படுவதை இவர் (பசுந்த்தமிழன்) ஒத்துக்கொள்கிறார். நாவலை மீறிய சிலவற்றைக்காட்டுகிறார் என்பதையும் ஒத்துக்கொள்கிறார். இதன் பின்னர் இவர் வருத்தம் என்னவென்றால், இப்படிக்காட்டுவதை எதிர்க்கிறார்கள் என்பதே.

    இங்கே பார்க்க வேண்டியது மருத்துவர் டேனியல் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா என்பதுதான். அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா வரலாற்றில்? இல்லாதபோது ”காட்டுகிறார்; எதிர்க்கிறார்கள்” என்பது meaningless talk.

    தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களிடையே மதப்பிரச்சாரம் செய்யப்பட்டது எனபது கிருத்துவர்களாலேயே மறுக்கப்படவில்லை என்கிறார். ஆனால் அக்கிருத்துவர்கள் டேனியலும் செய்தார் என்று சொன்னார்களா? மருத்துவர் டேனியல் செய்யாத போது, அது வரலாற்றுப்புரட்டு என்பது மட்டுமன்றி; அஃதொரு character assassination. ஏன்? இறந்தவர் வந்து thaan செய்யவில்லை என்று மறுக்கப் போவதில்லை. எனவே புகுந்து தன் விருப்பம்போல சண்டித்தனம் செய்கிறார் பாலா.

    அதே வேளையில் மருத்துவர் டேனியல் செய்தார் என்பதற்கு ஆதாரமிருப்பின், அதைச்சொல்வதில் தவறில்லை. ஆயினும் இங்கேயும் ஒரு மட்டமான விடயம் அடங்கும். அது நான் ஏற்கனவே சொன்னதுதான்.

    மதமாற்றம் செய்தோர் எப்படிச் செய்தனர் என்பதை நானும் மற்றவர்களும் அறிவார்கள். எவருமே குடித்துக் கும்மாளமிட்டு ரொட்டித்துண்டுகளைத் தூக்கியெறிந்தார்கள் என்று சொல்லவில்லை.

    மதமாற்றம் இறுதியல் மனமாற்றத்தில் போய்முடியவேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் தாய்மதம் திரும்பிவிடுவர். ஆனால் தொடக்கத்தில் அனைத்துவகை முயற்சிகளும் எடுக்கப்படும். எனினும், ரொட்டித்துண்டுகளை நாய்களுக்கு வீசுவது போல வராது.

    (All that Pasundthamizhan wrote about Mulk Raj Anand’s novel has been lifted from M.D. Muthukumarasamy’s blog.)

  11. Avatar
    IIM Ganapathi Raman says:

    இத்தேயிலைத் தோட்டங்களுக்கு கொத்தடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டவர்கள் யார்? இன்று மாஞ்சோலை, மூணாறு, சிக்மங்களூர், வால்ப்பாறை தோட்டங்களில் வேலைபார்க்கும் தமிழ்த் தொழிலாளர்கள் யார்? தலித்துகள்.

    மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டதனால் அத்தோட்டம் தாற்காலிகமாக மூடப்பட தொழிலாளர்கள் தலித்துக்கட்சியொன்றின் தலைவரான மருத்துவர் கிருஸ்ணசாமியின் நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின்முன் போராட்டம் நடாத்தினார்கள்.. திருனெல்வேலி பாலத்தில் விரட்டியடிக்கப்பட்டு போலீசு துப்பாக்கிச்சூட்டிலும், ஆற்றிலும் குதித்து மாண்டனர். பரவலாக அறியப்பட்ட சோகம்.

    ஆனால் எம்.டி முத்துக்குமாரசாமி சொன்னதைப்போல பாலாவால். அத்தொழிலாளர்களின் ஜாதிகள் வெளியே சொல்லப்படவில்லை. ஒரேயொரு நிகழ்ச்சியின் மட்டும் கதாநாயன் (ஒட்டுப்பொறுக்கி எனக் கேவலாமாக, இதயமில்லாமல் பரிகாசம் செய்யப்படும் ஊருக்கு உழைப்பவன்) ஓட்டல்காரனால அடித்து உதைக்கப்படுகிறான் தலித்து என்கிற காரணத்தால். பெஞ்சின் மீதமர்ந்து டீ கேட்டானாம்!

    மற்றபடி இந்த ஜாதியுண்மையை மறைத்துவிட்டார். அதற்கும் ஒரு ‘மனிதாபிமான’’ காரணம் உண்டு. இவர் தேனிமாவட்ட ஆதிக்கச்சக்தியிலுருந்த வந்தவர். இவர்களைப்பற்றி படமெடுத்துவிட்டு ஊருக்குப்போனால், ‘ப….பயலுகளைப் பற்றிக்காட்டவா மெட்ராசுக்குப்போனே?” என்றால் என்ன சொல்வது? அவர் மாவட்டத்தில்தானே தலித்து பெஞ்சில் அமர்ந்து டீ குடித்தால் அடிக்கப்படுகிறான்? வத்தலக்குண்டும், உசிலமப்ட்டியும் !

    எனவே பாலாவின் தர்மசங்கடமான நிலைக்காகப் பரிதாப்படும் அதே நேரத்தில், ஏன் மதமாற்றத்ததைக் காட்டும்போது அவ்வளவு தீவிரம்? வரலாற்றைத்திரித்துக்காட்ட வேண்டிய உத்வேகம்? குடித்துவிட்டு ஒருவர் மதமாற்றம் பண்ணினால மதமாற்றம் வெற்றிய்டையாது என்ற அடிப்படை ஞானத்தைக்கூட ஒதுக்கித்தள்ளவேண்டிய கட்டாயம்?

  12. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \தேயிலை தோட்ட அடிமைகளுக்கு வைத்தியம் பார்க்க வந்து, அவர்தம் இழி நிலை கண்டு, அவர்களுடனே வாழ்நாள் முழுதும் தங்கியவர்.

    அவர்தான் இறைமிகு. டாக்டர். பால் ஹாரிஸ் டேனியல்

    தேயிலைத் தோட்ட கொத்தடிமைகளுக்கு ஒரு சங்கம் அமைக்க காரணமாயிருந்தவர்.

    அவர்களின் துயர் துடைக்க தன் வாழ்நாளைத் தந்தவர்.\

    பாரபக்ஷமின்றிக் கருத்துச் சமநிலையுடன் சொல்லப்பட்ட கருத்துக்கள்.

  13. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ தடியும் ஒடையக்கூடாது பாம்பும் சாவனும் என்பது போல் எழுதியிருக்கிறாரோ..? என்று சொல்லும் ஐ ஐ எம் க்ருத்தை ஏற்கிறேன்.\

    And there you are sir, have the cake and eat it too.

    thumbsup :-(

    1. Avatar
      punaipeyaril says:

      க்…ர் , சரியாக புரிந்தீர்கள். ஐ ஐ எம்க்கு தான் புரியலை நான் சொன்னது.

  14. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \The basic reason for all this is unfortunately for christians, it is always service with a motive i.e conversion.\

    Not about the film or Rev.Daniel

    but a small correction to the above sentence.

    it is always service with a motive, i.e “proselytisation”.

    Conversion has some iota of genuineness in it. But there is nothing genuine in the proselytisation efforts of soul harvesters.

Leave a Reply to smitha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *