பிரக்ஞை குறித்தான ஒரு வேண்டுகோள்

This entry is part 17 of 45 in the series 4 மார்ச் 2012

கசட தபர வெளிவந்த காலத்தில் பெரிதும் பேசப்பட்ட இதழ் பிரக்ஞை. ஆனால் அதில் தொடர்புடையவர்கள் இன்று வயதாகி கண்டங்களில் பல மூலைகளில் இருக்கிறார்கள்.
சமீபத்தில் அகிலனின் மருமகனும் கவிஞருமான பாரவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ பிரக்ஞை இதழ் ஏதும் கைவசம் இருக்குமா? நான் அதைப் பார்த்ததே இல்லை ‘ என்றேன். ‘ இப்பதான் வீடு சுத்தம் பண்ணும்போது எல்லாத்தையும் எடுத்து காஞ்சிபுரம் அனுப்பி விட்டேன் ‘ என்றார் ரவி. ஆதிகாலத்தில் காஞ்சிபுரத்தில் இலக்கிய ஆர்வம் மிக்க இளைஞர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இதழ் அது.
‘ திண்ணையில் எழுதலாம் என்று கேட்டேன்.. இல்லையா? ‘
‘ மூத்த எழுத்தாளர், அவருக்கு இப்போது எண்பது வயது இருக்கும், விருத்தாச்சலம் வே. சபாநாயகம், அவரிடமிருந்து அத்தனை இதழ்களையும் நகலச்சு செய்து கோ.ராஜா ராமுக்கு அனுப்பி வைத்தோம். அவர் ‘ எனி இன்டியன் பப்ளிகேஷன் ‘ நிறுவனத்தின் மூலம் தொகுப்பாகப் போடுவதாகச் சொன்னார். அவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். கூடவே அந்தக் காலத்தில் துடிப்புடன் செயல்பட்ட ரவிஷங்கரும் அங்கேதான் இருக்கிறார். அவர்கள் நினைத்தால் உங்களுக்கு உதவ முடியும். ஆனால் ஒன்று, தொகுப்பாக வெளியிடும்போது எதையும் சுருக்கக் கூடாது, எடுக்கக் கூடாது, அப்படியே வெளியிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். ‘
பாரவி சொன்ன இன்னொரு தகவலும் எனக்குப் புதிது. கோ.ராஜாராம்தான் அமெரிக்காவிலிருந்து திண்ணை டாட் காம் இணைய இதழை நடத்துகிறார்! பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக, கண்டவரிடம் கேட்பதை, கொண்டவரிடமே கேட்டு விடலாமே என்று இதை எழுதுகிறேன்.
சென்னையிலுள்ள கிழக்குப் பதிப்பகம், இந்தத் தகவலைக் கேட்டால் அள்ளிக் கொள்ளும். ஆனால் கை வைக்காமல் போடுவார்களா என்று தெரியாது. அதனால் ராஜாராமே முயலலாம். எங்களுக்கு கொஞ்சம் பிரக்ஞை வந்த மாதிரி இருக்கும்.
இப்படித்தான் சா. கந்தசாமியை ‘ கசடதபர ‘ இதழ் கேட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் கைக்கு வரவில்லை. ‘ கொல்லிப்பாவை ‘யை கவிஞர் ராஜ மார்த்தாண்டன் கடைசி வரை கண்ணில் காட்டவேயில்லை. ‘ ழ ‘ வின் சில இதழ்களைத் தந்த ராஜகோபால் என் நன்றிக்குரியவர்.
சிற்றிதழ் களத்தில் இயங்குபவர்களுக்கு பழைய நல்ல இதழ்களைக் கண்ணுறுவது ஒரு டானிக் மாதிரி. சில சமயம் ஏகலைவன் மாதிரி அதிலிருந்து பல விசயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
‘ அருவி ‘ அடுத்த இதழ் ஹைக்கூ இதழாக வெளிவரப்போகிறதாம். முடிந்தவர்கள் அனுப்பலாம். முகவரி: 14, நேரு பஜார், திமிரி – 632 512. வேலூர் ( மா).
#

Series Navigationசிலப்பதிகாரத்தில் காட்சிக்கலைமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 16
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    R. Jayanandan says:

    அன்பு சிறகு,
    கணையாழி, கசடதபற, ழ, வானம்பாடி, ப்ரக்கை போன்ற இலக்கிய இதழ்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. அதனை திண்ணை கோ.ராஜாராம் செய்வது மேலும் மெருக்கூட்டும். ஏனெனில்,அவரது இலக்கியத்தடம், நீண்ட வரலாற்றை உள்ளடக்கியது.

    இச்செய்தி, என்னை 20- 30 ஆண்டுகளுக்கு முன் இழுத்து செல்கின்றது.

    இரா. ஜெயானந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *