புலம் பெயர்ந்த வாழ்வில் ஈழத்தமிழர்

author
0 minutes, 10 seconds Read
This entry is part 6 of 13 in the series 13 மே 2018

சி.வேல்முருகன்,

முனைவர்பட்ட ஆய்வாளர்,

தமிழாய்வுத்துறை,

தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி

திருச்சிராப்பள்ளி -02

முன்னுரை

இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக புலம்பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்வாறான புலம்பெயர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் மனித இனம் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுவருகின்றது.

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகமெங்கும் பரந்து வாழந்து வருகின்றனர். அவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் சமூக அரசியல்,பண்பாட்டு சூழ்நிலைகளால் பொpதும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இருப்பினும் தங்களது இனத்துவ அடையாளத்தையும், பண்பாட்டையும் பேணும் வகையில் பல்வேறு வகை இலக்கியங்களையும் படைத்து வருகின்றனர்.

புலம் பெயர்வுசொல் விளக்கம்

பிறநது; வளர்ந்து பரம்பரையாக இருந்த தங்கள் நிலப்பகுதியில் இருந்து அல்லது நாட்டிலிருந்து பெயர்ந்து, வேறுநாடு சென்று, நீண்ட காலமாகவோ, நிரந்தரமாகவோ குடியமர்தலை அல்லது குடியமராமல் அலைந்து திhpதலைப் புலம் பெயர்வு என்று குறிக்கின்றது.

இரண்டு வேறு நாடுகள், இரண்டு வேறு மொழிகள், இரண்டு வேறு பண்பாடுகள் என்ற ஒரு நிலை இந்தப் புலப்பெயர்வில் காணப்படும் நிலையாகும். இதனுடைய ஆங்கிலச் சொல் னுயைpழசய என்பதாகும். இது னளையிpநயசiபெ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. மொழி, பண்பாடு முதலானவற்றில் பொது அடையாளம் கொண்ட குழுவினர் தம்முடைய பாரம்பாpயமான நிலங்களை அல்லது நாடுகளைவிட்டு அகன்று, வேற்றுப்புலம் அல்லது வேற்றுநாடுகளில் சிதறிப்போதல் என்பது இச்சொல்லின் பொருளாகும்.

புலம்பெயர்வுக்கான காரணங்கள்                                                                                       

சமூக நகர்வுகள்,குடியேற்றங்கள் இருவகைப்பட்ட பண்பாடுகளின் உறவுகள், மொழி உறவுகள் என்ற பொருள் நிலை புலம்பெயர்வு என்ற சொல்லுக்கு உண்டு, பிழைப்பும், பாதுகாப்பு உணர்வும் நாடிச் செல்லுகின்ற சாதாரணக் குடிமக்களிடமிருந்து பொpய பொpய விஞ்ஞானிகள், கணினிப்பொறியாளர்கள், வணிகர்கள் தஞ்சம் அடையும் அரசியல் போராளிகள் என்று புலம்பெயர்வோர் பல வகையினர். பலதரப்பினர்.

புலம்பெயர்வுக்குக் காரணங்களைப் பொதுவாக இப்படிக் கூறலாம். இயற்கையின் சீற்றம், வறுமை, உள்நாட்டுப் போர், வேற்றுநாட்டு ஆதிக்கங்கள். இனக்கலவரங்கள், அரசியல் தரும் நெருக்கடிகள். இவை அனைத்தும் பொதுவான காரணங்கள் ஆகும். வெவ்வேறு சூழல்களின் பின்னணியில் நடைபெறும் வெவ்வேறு வகையான புலம்பெயர்வுகளாலும், வாழ்நிலை, சூழ்நிலை வேறுபாடுகளும், பொருளாதாரப் பண்பாட்டுப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. புலம்பெயர்ந்தோர் படைக்கும் இலக்கியங்களை புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று அழைப்பர்.

ஈழத்தமிழிhpன் புலம்பெயர்வுகள்.

ஈழத்தமிழ் மக்கள் புலம்பெயர்வது என்பது நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. அத்தகைய பெயர்வுகள் பொருளாதார மேம்பாட்டுக் காரணங்களாலும், வாழ்வாதாரம், அரசியல் சுதந்திரம், அடிப்படை உhpமைகள் போன்ற ஏனைக் காரணங்களினாலும் புலம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால், பொருளாதாரக் காரணங்களுக்காக விரும்பிப் புலம்பெயர்ந்தவர்களுக்கும் அரசியல் குழப்பத்தால் புலம்பெயர நிர்பந்திக்கப்பட்டவர்களுக்கும் நாம் வேறுபாடு காண வேண்டும்.

ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொ. இந்த நிலைமையை இப்படி வருணிக்கிறார். “புலம்பெயர்ந்த தமிழர்களை அ.மு., அ.பி., என்று பிhpக்க வேண்டும். அ.மு. என்றால் அடிக்கு முந்தியவர்கள். அ.பி. என்றால் அடிக்குப் பிந்தியவர்கள்.1983ஆம் அண்டு இன சங்காரத்தைத் தான் ‘அடி’ என்று சொல்லுகிறேன். அடிக்கு முந்திச் சென்றவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, கணக்காளர்களாக நல்ல உத்தியோகம் பார்த்தவர்கள். மண்ணைத்துறந்து தங்களுடைய தமிழ்க கலாச்சாரத்தையும் துறக்கவும் தயாராகி டாலர் ஒன்றை மட்டுமே நேசித்துப் புலம் பெயர்ந்தவர்கள். அடிக்குப் பிந்தியவர்கள் தங்களுயை மானத்தை, தங்களுடைய உயிரை, இனத்துவ அடையாளத்தை எங்கே சென்றாலும் கொண்டு சென்று தக்க வைக்க வேண்டும் என்ற  அவதியில் ஓடியவர்கள். அப்படி ஓடியவர்கள் அதிகம் படித்தவர்கள் அல்ல. நிர்பந்தத்தினால் புலம்பெயர்ந்தவர்கள். இவர்தாம் புலம் பெயா;ந்த நாடுகளில் தமிழ் வாழவும் வளரவும் சேவிக்கவும் தயாராக இருக்கும் கூட்டம். இவர்கள் மூலம்தான் தமிழ் 21ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்லப்டுகிறது” என்று புலம் பெயா;ந்த தமிழர் நிலையை விளக்கியுள்ளார்.

ஈழத்தமிழர்கள் புலம் பெயா;ந்த நாடுகள்

ஈழத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்று பல்வேறு நாடுகளில் வாழந்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் இங்கிலாந்து, பிரான்சு, செர்மனி, சுவிட்சர்லாந்து, நார்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், வடஅமொpக்காவில், கனடாவிலும் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் மிக அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் புலம்பெயா;ந்த தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பண்பாடும் புலப்பெயர்வும்

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆங்கில மரபுள்ள நாடுகளுக்கு செல்கின்ற போது அந்த நாடுகளில் உள்ள பல்வேறு தொழில்துறைகளில் மருத்துவர்களாகவும், ஆசிhpயர்களாகவும் இருந்தனர். ஆனால் அந்த மொழிகளை உள்வாங்கிக் கொள்ளும் திறமை பெயற்றவர்களாக புலம்பெயர்ந்த தமிழர்கள் விளங்கினர்.

ஆனால், பிரான்சு, இத்தாலி செர்மனி, சுவிட்சர்லாந்து சென்றவர்கள் சற்று வேறுபட்டவர்கள் அங்கு சென்றவர்களுக்கு அந்த மொழிகள் தொpயாது. அந்த மொழிப்பண்பாடு தொpயாது. இவர்களுடைய குழந்தைகள் அங்கு கல்வி கற்று  ஒருவேளை மேலிடத்துக்குப் போக முடியுமே தவிர இவர்கள் அங்கு மேல்நிலைக்குப் போக முடியாது. இவர்களுடய பண்பாடு பற்றிய தகவல்களும் கூட அந்தந்த நாட்டவர்களுக்கு மிகக் குறைவு. இவர்கள் தங்ள் பண்பாட்டினை மேம்படுத்தவோ, அல்லது தங்கள் பண்பாட்டை மேல்நிலை உடையதாக இருப்பதற்கான வாய்ப்புகளோ இல்லை எனலாம்.

பண்பாடும் சமூகமும்.

தமிழர் புலப்பெயர்வின் வழி ஏற்பட்ட ஒரு முக்கிய தாக்கம் என்னவெனில் தமிழப்பண்பாடு தனது பலத்தின் அடிப்படையான சமூகத்தின் பங்களிப்பை இழந்துவிட்டமையாகும். புலம்பெயாந்த தமிழரைப் பொறுத்தவரை அவர்களர் பண்பாடு ஒர் ஆதரவற்ற குழந்தையாக விடப்பட்டமையை அறியலாம். புலம்பெயாந்த தமிழ்மக்களுக்கும், தாய்த்தமிழ்ச் சமூகத்திற்கும் இடையிலான உறவு சிலபல காரணங்களினால் முற்றாகவே துண்டிக்கப்படக் கூடிய நிலைமை உருவாகியமை ஆகும். முந்தைய காலகட்டத்தில் பொருளாதாரமேம்பாடு கருதிப் புலம்பெயர்ந்தவர்கள் வேறொரு நாட்டில் வசித்தும் தமது தாய்ச் சுமூகத்துடன் சிறிதளவேனும் தொடர்பு கொண்டிருந்தனர். ஆனால் ஒரு சில நாடுகளுக்குச் சென்ற புலம்பெயர்ந்த தமிழர்களால் தங்களுடைய சமூகத்துடனான தொடர்பினை முற்றிலும் இழந்து விடுகின்றனர்.

புலம்பெயா;ந்தோhpன் பண்பாட்டுப் பேணல்

புலம்பெயர்நு;த சென்ற தமிழர்கள்ஓரு புறத்தில் தங்கள் பண்பாட்டைப் பேணலாம்.இன்னொரு நிலையில் புலம பெயர்ந்த நாட்டுடன் இணைய வேண்டும். முதலாவது விடயத்தில் சில வாய்ப்புகள் இவர்களுக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக தங்கள் மொழியிலேயே இவர்கள் எழுதலாம். தங்கள் மொழியிலேயே வானொலி நடத்தலாம். இவர்கள் மேலும் தங்களுடைய மதங்களைக் கூட பகிரங்கமாகப் பின்பற்ற முடியும். புலம் பெயர்ந்த தமிழர்கள்; இன்று மிகப்பெரும்பாலானோர் ஊடகங்களின் வளர்ச்சி, போக்குவரத்து வளர்ச்சிகள் காரணமாக தமது பண்பாட்டையும், உணவுப்பழக்கங்களைபட பேணுவதற்கும் உதவுகின்றன.

புலம்பெயர்ந்தோன் இலக்கியப்பாடுகள்.

ஈழத்தில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் காரணமாக அந்நாட்டை விட்டு வெளியேறிவட்ட லட்சக்கணக்கான தமிழர்கள் தாங்கள் புதிதாகக் குடியேறிய நாடுகளில் தாய்நாட்டின் ஏக்கம் தீராத நிலையிலும் தங்கள் புதிய வாழ்வு ஏற்படுத்தியுள்ள சவால்களை உணர்ச்சிபு+ர்வமாப் பதிவு செய்யும் உந்துதலினாலும் எழுதிப் பதிப்பித்தவையே புலம்பெயர் இலக்கியங்கள்.

கடந்த இருபது ஆண்டுகளாக இந்த  இலக்கியங்கள் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் எதிர்பார்த்திருக்க முடியாத புதிய நாடுகளிலிருந்து பிறந்துள்ளன. டென்மார்க், நார்வே, இங்கிலாந்து, செர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்சு. கனடா, ஆஸ்திரேலியா, அமொpக்கா ஆகிய நாடுகளிலிருந்து தமிழ்ப் படைப்பிலக்கியம் தமிழிலேயே வபருவது வரலாற்றில் இதுவே முதன்முறை.

புலம் பெயர்ந்த இந்தப் படைப்பாளிகளும் முன்னைய காலனித்துவ காலக் குடியேற்றத் தமிழர்களுக்கு  மாறுபட்படவர்கள். அவா;கள் உடலுழைப்புத் தொழிலுக்காக ஓட்டிச் செல்லப்பட்டவர்கள். இவர்;களோ நன்கு படித்துத் தங்கள் நாட்டில் மூளைத் தொழிலாளர்களாக இருந்தவர்கள். இவர்களின் சிந்தனை தெளிவானது. சுதந்திரமானது. ஆகவே தான் இவர்கள் படைப்புகள் முதிர்ச்சியுடனும் வீறுகொண்டும் காணப்படுகின்றன. இவா;களின் சொல், பொருள் மிக நுணுக்கமானது.

இவர்கள் தமிழில் மட்டுமல்லாது தாங்கள் தேடிக்கொண்ட இருப்பிட நாட்டுமொpகளிலும் எழுதுகிறார்கள். இங்கிலாந்தில் வாழும் ஏ. சிவானந்தனின் ‘றுhநn அநஅழசல னுநைள’ என்னும் நாவலும் கனடாவில் வாழும் சியாம் செல்வதுரையின் ‘குரnலெ டீழலள’ என்னும் நாவலும் எடுத்துக்காட்டுகளாகும்.

பத்திரிக்கை வெளியீடு

புலம்பெயா;ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் அவர்கள் வாழுகின்ற நாடுகளில் வெளியாகும் சிறுபத்திhpக்கைகளில் அதிகம் வந்துள்ளன. இந்தச் சிற்றிதழ்கள் தோன்றுவதும் மறைவதுமாக உள்ளன. பிரான்சில் இருந்து ‘மௌனம்’, ‘எக்ஸில்’ ‘உயிர்நிழல்’ போன்றவை. இலண்டனிலிருந்து ‘லண்டன் முரசு’ ‘நாழிகை’ முதலியவை. ஆஸ்திரேலியாவிலிருந்து ‘வெண்ணிலா’ முதலியவை குறிப்பிடத்தக்கவை. மற்றும் ;சமர்’, ‘சக்தி’ காலம் ஆகிய சஞ்சிகைகளும் நீண்ட காலமாக வெளிவருகின்றன.

சிறுகதை

புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் இலக்கியங்கள் அவ்வப்போது தொகுக்கப்பட்டுள்ளன. இந்திரா பார்த்தசாரதி மற்றும் எஸ்.பொன்னுத்துரை ஆகியோhpன் தொகுப்பு முயற்சியில் ‘ பனியும் பனையும்’ என்ற தலைப்பில் பல சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நார்வேயில் வெளிவந்த ‘புது உலகம் எமை நோக்கி’(199ஃ200) என்னும் புகலிடப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்கது. இதன் முக்கியக் கருப்பொருள் இவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளது. “ ஈழத்தில் நடைபெறும் அரசியல் படுகொலைகளை விடக் கொடுமையானதாக இருக்கிறது ஈழத்துப் புலம் பெயர்;ந்த பெண்கள் நம்பி வந்த கல்யாணங்களின் கொடுமைகள்”.  புலம் பெயர்ந்த சிறுகதை எழுத்தாளர்களான அ.முத்துலிங்கம், பார்த்திபன், புவனன்,மகாலிங்கம், முருகபு+பதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவா;கள்.

கவிதை

இதுவரை வெளிவந்துள்ள புலம்பெயர்ந்தோர் படைப்புகளுள் கவிதைத் தொகுப்புகளே அதிகமானவையாகும். கவிதைகள் அவை பாடுகின்;ற பொருட் பரப்பிலும் அவற்றின் புனைதிறன் உத்தியிலும் புதிய நுட்பங்களை காட்டி நிற்கின்றன. அந்த வகையில் சேரன், ஜெயபாலன், செழியன், அரவிந்தன், சக்ரவா;த்தி போன்றோர் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் ஆவார்கள்.

சிறுவர் இலக்கியம்

புலம்பெயர் நாடுகளில் சிறுவர் இலக்கியத்துக்கும் தனியிடம் உண்டு. கனடாவில் வாழும் கவிஞர் சபாஅருள் சுப்பிரமணியம் அந்த வகையில் குறிப்பிடத்தக்கவர்.

மொழிபெயர்ப்பு

ஒரு படைப்பிலக்கியம் உருவாகிய மண்ணில் இருந்து கொண்டே அந்த வாழ்விடச் சூழல், பண்பாட்டுக்குள் தம்மையும் உட்படுத்தி அவ்விலக்கியங்களை தமிழில் மொழிமாற்றம் செய்வதன் மூலம் மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் புதிய பாpமாணம் ஒன்றை தந்து வருகிறார்கள்.

ஹன்ஸ்கிhpஸ்hpயன் அனசன் என்பவா; எழுதிய ‘ எனது வாழ்க்கை ஒரு அழகான கதை” மற்றும் இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை டெனமார்க்கில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளா; டேனி‘; மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

அகராதி

இவற்றோடு நின்று விடாது பல அகராதிகளையும் படைத்து வருகிறார்கள். டெனி‘; – தமிழ் அகராதி, தமிழ் – செர்மன் என்பன புலம்பெயர் எழுத்தாளர்களான ஜீவகுமார், சரவணபவன், இராமலிங்கம் போன்ற புலம் பெயர் படைப்பாளிகளால் படைக்கப்பட்டுள்ளன.

கட்டுரை

புலம்பெயர்ந்தோர் கட்டுரையைப் பொருத்தவரை இலக்கியக் கட்டுரைகள், அரசியல் சார்ந்தவை, ஆன்மீகம், விஞ்ஞானம் எனப் பல்வேறு செய்திகளைப் பேசுவதாகக் கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கந்தவனம், கனகசபாபதி, சிவானந்தன் ஆகியோர் கட்டுரை எழுத்தாளர்கள் ஆவர்.

நாவல்

1980களின் இறுதிப்பகுதியில் இருந்தே புலம்பெயர் படைப்பாளிகளிடம் இருந்து  நாவல்கள் வெளிவரத் தொடங்கின. தொடக்கத்தில் வெளிவந்த நாவல்கள் தாயக நினைவுடன் தொடர்புடையதாகவும், சாதிப்பிரச்சனை, காதல், திருமண உறவுகள், இனப்போராட்டத்தின் அவலம் என்பவற்றையே மையமாகக் கொண்டிருந்தன. சிறிது காலத்தின் பின்னரே தாம் வாழுகின்ற சூழலைச் சுட்டும் படைப்புகளை எழுதத்தொடங்கினர். புலம்பெயர் நாவல்களை படைத்த படைப்பாளிகளில் எஸ்.பொன்னுத்துரை, சோபாசக்தி, முல்லைஅமுதன், தியாகலிங்கம்,கி.செ.துரை ஆகியோரைக் குறிப்பிடலாம்.

நிறைவுரை

புலம்பெயர்ந்த தமிழன் தமிழ் உணர்வாளனாக வாழ்தல் தவிர்க்க முடியாதது. தமிழ் உணர்வினாலும், தமிழன் என்கிற அடையாளத்தைத் தக்க வைக்கும் வேள்வியினாலுமே அவன் பிறந்த நாட்டிலேயே அகதியாகி, வாழ்;க்கை தேடி உதிர்ந்த சருகாக அலைக்கழிந்து, இறுதியிலே புலம்பெயர் வாழ்வை மேற்கொண்டான். புலம்பெயர்ந்த தமிழர் படைத்த இலக்கியம் எதிhகாலத்தில் மொழியியல் பற்றிய ஆய்வுகளுக்குப் புதிய பார்வையும் வெளிச்சமும் கொடுக்கும்; மரபின் தொடர்ச்சியும் மாண்பும் அப்பொழுதுதான் தெளிவாகப் புலனாகும்.

 

 

பார்வை நூல்கள்

1)                பனிக்குள் நெருப்பு                             – எஸ்.பொன்னுத்துரை

2)                விமர்சன முகம்                                                         – ரெ.கார்த்திகேசு

3)                ஈழத்து தமிழிலக்கியத்தடம்    – கார்த்திகேசு சிவத்தம்பி

4)                திண்ணை இணைய இதழ்

Series Navigationஇராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 2இரக்கம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *