பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013

This entry is part 31 of 34 in the series 10 நவம்பர் 2013

பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013
பேனா பதிப்பகம் அதன் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து 2013 முதல். ஆண்டு தோறும் ஈழம் மற்றும் புலம் பெயர் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பேனா கலை இலக்கிய விருதை அறிமுகப்படுத்துகிறது.இதன் அடிப்படையில் 2013ல் வெளிவந்த சிறுகதைஇகவிதைஇநாவலஇ;சிறுவர் இலக்கியம் போன்ற சிறந்த நூல்களுக்கும் மற்றும் உயர் கலை இலக்கிய விருது என ஆறு விருதுகளை வருடம் தோறும் வழங்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2013 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நூல்களை படைப்பாளிகள் அனுப்பி வைக்கலாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறது.
சிறுகதை:- எழுத்தாளர் கலாபூசணம் ஏ.எம்.எம்.அலி பேனா விருது.(சிறந்த நூல் பணப்பரிசு 5000 ரூபா) நான்கு நூல்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கவிதை:- கிண்ணியா அண்ணல்(சாலிஹ்)பேனா விருது.(சிறந்த நூல் பணப்பரிசு 5000 ரூபா) நான்கு நூல்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
நாவல்:- எழுத்தாளர் ஏ.சீ.ஜரீனா முஸ்தபா பேனா விருது.(சிறந்த நூல் பணப்பரிசு 5000 ரூபா)நான்கு நூல்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
சிறுவர் இலக்கியம்:- இலக்கிய ஆர்வலர் பதிஸ் பாரூக் பேனா விருது. .(சிறந்த நூல் பணப்பரிசு 5000 ரூபா) நான்கு நூல்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வாழ்நாள் சாதனையாளர் உயர் கலை இலக்கிய விருது (பணப்பரிசு 6000 ரூபா)
சாதனையாளர் பேனா உயர் கலை இலக்கிய விருது(பணப்பரிசு 6000 ரூபா)

போட்டி நிபந்தனைகள்:-
ஈழம் மற்றும் புலம் பெயர் படைப்பாளிகள் இப்போட்டியில் பங்கு பெறலாம்.
போட்டிக்கு அனுப்பும் படைப்புக்கள் தனது சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்.
போட்டிக்காக நூல்களில் இரு பிரதிகள் அனுப்பப்படல் வேண்டும்.
நூல்கள் அனுப்ப வேண்டிய இறுதித் திகதி:- 2014.பெப்ரவரி 28ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு:-
பேனா கலை இலக்கிய விருது 2013
செயலாளர்
பேனா பதிப்பகம்
92ஃ4 உமர் ரழி வீதி
மஹ்ரூப் நகர்
கிண்ணியா -03
இலங்கை.
கை பேசி:-9477 93 00 397இ 9477 67 51 5

firosmi.pena@gmail.com,nambiapi@gmail.com

Series Navigationநீங்காத நினைவுகள் – 22அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
author

அறிவிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *