பையன் அமெரிக்கன்

author
0 minutes, 1 second Read
This entry is part 5 of 22 in the series 22 ஏப்ரல் 2018

Delmore Schwartz

தமிழில் : எஸ். ஆல்பர்ட்

ஒரு ஏப்ரல் ஞாயிற்றுக் கிழமை வழக்கம்போல்
ஐஸ்க்ரீம் பார்லரில் ,
சாக்லேட் கேண்டி , பனானா ஸ்ப்ளிட்
எதுவேண்டும் உனக்கென்று ,
எரேமியாவைக் கேட்டபோது
பளீரென்று வந்தது பதில்.
யோசிப்பதற்கென்ன, பெருந்தனக்காரன்,
சுத்தமான அமெரிக்கன்.
தொடங்கிய வழியிலேயே தொடர்ந்து
செல்லும் தீர்மானம் .
அறிஞர் கியர்க்க கார்டு, அவரன்ன பிற
ஐரோப்பியர்க்கெல்லாம்  தோன்றிய
‘இதுவா அல்லது அதுவா ‘ என்னும்
மனித இருப்பின் ஐயத்துக்கு  இடம் தராது,
மாறி மாறி வரும் சந்தர்ப்பம் கருதாது,
நல்லது கெட்டதெனப் பாகுபடாது,
தேர்ந்து பாராது, சற்றும் கலங்காது,
சர்வ நிச்சிந்தையில்,
மரணமும் முடிவுமில்லாது,பெருவெளியாக,
பொன்னாக விரியும் மேற்கை அறிந்தவன்,
‘இரண்டும் எனக்கு, இரண்டும் வேண்டுமென்று ,
பிரகடனம் செய்தான்.
அவன் அமெரிக்கன், அசல் அமெரிக்கன்,
பெருந்தனக்காரன்.

(அமெரிக்கக் கவிதை.)
(மூலக் கவிதையும், மூலக் கவிஞரின் பெயரும் அகப்படவில்லை )

Series Navigationபாரதி யார்? (நாடகம் குறித்து சில கருத்துகள்)குப்பையிலா வீழ்ச்சி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *