மகளிர் தினமும் காமட்டிபுரமும்

This entry is part 3 of 45 in the series 4 மார்ச் 2012

இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 4 பெண்கள் பாலியல் தொழில்
செய்ய ஆரம்பிக்கிறார்கள், அவர்களில் 3 பேர் நிர்பந்தம் காரணமாக இத்தொழில்
செய்ய வந்தவர்கள் .அதிலும் 35.47% பெண்கள் 18 வயது கூட நிரம்பாதவர்கள்
என்பதை இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பக அமைச்சர்
ரேணுகா சவுத்ரி ஒத்துக்கொள்கிறார்.
அடிமைத்தனத்தையும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து பணம்
சம்பாதிப்பதையும் எதிர்த்து சட்டங்கள் பல எழுத்தில் இருக்கின்றன. இப்பெண்களின்
புனர் வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்கள், சட்டங்கள், ஆய்வுகள்,
அறிக்கைகள், தொண்டு நிறுவனங்கள் என்று வரிசையாக ஒரு பக்கம்
அணிவகுப்பு நடந்தவண்ணம் இருக்கின்றது.
எனினும் சுதந்திரம் பெற்று சட்டங்கள் மனித உரிமைகள் என்ற தளத்திற்கும்
அப்பால், கற்பு என்ற பெண் ஒழுக்கத்தை அதி தீவிரமாக கொண்டாடும்
இந்திய மண்ணில் இன்னும் இருக்கின்றன வேஷியா கிராமங்கள்.
தமிழில் அப்படியே சொல்வதனால் தேவடியா கிராமங்கள்.அப்படித்தான்
அவை அழைக்கப்படுகின்றன.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து 210 கி,மீ தொலைவில் இருக்கும்
வாடியா கிராமம் தான் வேஷியா கிராமம் என்றழைக்கப்படுகிறது.
பல நூறு வருடங்களுக்குப் பின் வருகின்ற மார்ச் மாதம் 11 ஆம் தேதியில்(11/3/2012)
தான் முதல் முறையாக இங்கிருக்கும் பெண்கள் 15 பேருக்கு முறைப்படி
திருமண வைபவம் நடக்க இருப்பதாகவும் அதற்கு அழைப்பிதழ் தயாராகி
அனுப்பப்பட்ட பின், இத்திருமண நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும்
தொண்டு நிறுவனத்திற்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவமும்
நிகழ்ந்திருக்கிறது. செய்திகளுக்காக அலையும் இன்றைய ஊடகங்களுக்கு
இச்செய்தி பெருந்தீனியாக இருப்பதும் என்னவோ இந்த ஓரிடத்தில்
மட்டுமே இம்மாதிரி கிராமம் இருப்பது போலவுமான தோற்றம்
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மனித இன வரலாற்றின் மிகப் பழமையான இத்தொழில் நடக்காத
மாநில்மே கிடையாது என்பது தான் உண்மை. பாரதமாதாவும் இதற்கு
விதிவிலக்கல்ல.
ஆடலும் பாடலுமாக வாழ்ந்த பெண்கள் பேரரசர்களின் ஆசைநாயகிகளாக
இருந்தார்கள் என்பதும் அவர்கள் அரசியலிலும் பொருளாதரத்திலும்
மிகவும் செல்வாக்குடையவர்களாக விளங்கினார்கள் என்பதும்
வரலாற்றில் மறுபக்கமாக இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
ஜஹாங்கீர், அவுரங்கசீப் முதல் தஞ்சையை ஆண்ட அரசர்களுடன்
மிகவும் அதிகாரம் செலுத்திய அக்காமார்கள் வரை … …
மும்பையை இன்றுவரை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தாதாக்களின
காதலிகளைப் பற்றி வெளிவந்திருக்கும் ஹூசைன் சைதியின்
மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற சமகால வரலாறுவரை
பாலியல் தொழிலும் பெண்களும் பற்றிய பல்வேறு செய்திகளையும்
அதற்கான காரண காரியங்களையும் அவரவர் பார்வையில்
பார்த்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் இருக்கின்றோம்.

இச்சூழலில் தான் வாடியா கிராமம் குறித்த மேற்கண்ட செய்தி
பத்திரிகை உலகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருப்பதை
நாம் கவனிக்க வேண்டும்.
இப்பகுதியில் வாழும் 80 சரனியா ஆதிவாசி குடும்பங்களில்தான்
இத்தொழில் த்லைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது.
தொடர்ந்து போரில் ஈடுபட்ட ரஜபுத்திரர்களின் பிறப்பு விகிதம்
போர் ம்ரணங்கள் காரணமாக மிகவும் குறைந்த நிலையில் குழந்தை
இல்லாத பெண்ணுடன் , அவள் விருப்பத்துடன் இன்னொரு ஆண்
உடலுறவு கொள்ளவும் குழந்தையைப் பெற்றெடுக்கவும் இச்சமூகம்
ஏற்படுத்திக்கொண்ட ஒரு சடங்காகவே ஆரம்ப காலத்தில் இம்முறை
இருந்தது என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால்
அம்மாதிரி ஏற்பாடுகள் காலப்போக்கில் மறக்கப்பட்டு கைவிடப்பட்ட
நிலையில் இப்பழக்கம் மட்டும் மாறாமல் அச்சமூகத்தில் இருந்ததாகவும்
பின்னர் அதுவே அவர்களுககான தொழிலாக மாறியதும்
அச்சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் இத்தொழில் செய்ய
நிர்பந்திக்கப்பட்டதும் நிக்ழ்ந்தது.
கொடா வழக்கம் , (goda system) என்றழைக்க்ப்படும் வழக்கத்தில்
நாக்ரா செருப்பை அப்பெண்ணின் படுக்கையறை வாசலில் வைத்திருந்தால்
அப்பெண் வேறொரு ஆடவனுடன் படுக்கையறையில் இருக்கிறாள் என்பதை
உணர்த்தும். அதிலும் குறிப்பாக அப்பெண்ணின் கணவனுக்கு இம்முறையால்
இது அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்ததாக தெரிகிறது.
அரச ப்ரம்பரை, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், நிலக்கிழார்கள்
முதல் இன்றைய அரசியல் வாதிகள், தாதாக்கள் வரை இதில் அடக்கம்.
குஜராத் அரசாங்கம் 208 ஏக்கர் நிலத்தை இச்சமூகத்தின் ந்லத்திட்டத்திற்கு
கொடுத்து உதவியது. ஆனால் அத்திட்டமும் முழுமையாக வெற்றி பெறவில்லை.
இத்தொழில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது, இருக்கிறது.
ஒவ்வொரு இரவும் 3 முதல் 4 ஆண்கள் வரை இப்பெண்களின்
படுக்கையறைக்கு வருகிறார்கள், மாதவருமானம் 2000 வரை
இதன் மூலம் இப்பெண்கள் சம்பாதிக்கிறார்கள்.

பாரிய பெண்கள், நாட் பெண்கள், கொல்டா & டாம் பெண்கள், டெராடூனிலிருக்கும்
ஜானுசர், வடகாசியிலிருக்கும் ரபைய் பெண்கள் என்று பல்வேறு ஆதிவாசி
இனக்குழு பெண்கள் தங்கள் பெற்றொரால், கண்வனால், சகோதரனால்
இத்தொழிலுக்கு கொண்டுவரப்படுகிறார்கள். 1000 ரூபாய் கடன் வாங்கி
இவர்களில் ஒருத்தியைத் திருமணம் செய்பவன் இரண்டொரு ஆண்டுகளின்
வாங்கியக் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் இப்பெண்களை
ஆடு மாடுகளைப் போல விற்றுவிடுகிறான். வாங்கியவன் பயன்படுத்திவிட்டு
அவனும் விற்றுவிடுகிறான், இப்படியாக இந்த விற்பனைச் சங்கிலி மாநில
எல்லைகளை மட்டுமல்ல, எல்லைக்கோடுகளைத் தாண்டி பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் என்று நீண்டு கொண்டே போகிறது

வாங்குபவன் இருக்கும் வரை எந்த ஒரு பொருளின் விற்பனையையும்
எந்த ஒரு சட்டமும் தடை செய்துவிட முடியாது.! பெண் விற்பனைப் பொருளா?
கேட்காதீர்கள்… விற்கப்படுகிறாள் என்பது தான் உண்மை.
இந்தக் கசப்பான உண்மையை கற்பொழுக்கத்தை த்லையில் வைத்துக்
கொண்டாட கற்றுக் கொடுத்திருக்கும் இசசமூகம் அவ்வளவு எளிதில்
வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில்லை.
அத்னால் தான் இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு முறையான
ஆயுள்காப்பீடு வசதியும் மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்பட
வேண்டும் என்ற குரல் எழுந்தப் போது அப்படிக் குரல் கொடுப்பவர்களை
எல்லாம் வேசியராக விமர்சிப்பதன் மூலம் தங்கள் கற்பைக்
காப்பாற்றிக் கொண்டது நம் பண்பாடு..

இதோ அவள் பேசுகிறாள்:

.
உங்கள் கற்பை பிரசவித்தக்
கருவறையில் தான்
நானும் பிறந்தேன்.
உங்கள் கண்ணகி
என்னுடன் பிறந்தவள்
என்பதால்
எனக்கு எதுவும்
பெருமை வரப்போவதில்லை.

ஏகபத்தினி விரதனாக
உங்கள் ஸ்ரீராமனை
கட்டாயப்படுத்தியக்
காரணத்தாலேயே
சீதை நான்
பாஞ்சாலியாகப் பிறந்து
பரிதவித்தேன்
உங்கள் பாண்டவர்பூமியில்

கற்பு(உ)டன் பிறந்த
என்னை
இருட்டடிப்பு
செய்வதன் மூலமே
தங்கள் கற்பைக்
காப்பாற்றிக் கொண்டன
உங்கள் காவியங்களும்
கதைகளும்.

என்னிடம் முதலில் வந்தவன்
உங்கள் ஆதிசிவன்.
இப்போது வந்துப் போனவன்
அவன் வாரிசுகளின்
வப்பாட்டி பேரன்
காமவேட்டையில்
கிழிந்து தொங்கும் யோனிகளுக்கு
எப்போதுமே வயதாவதில்லை!

என் பெயர் பத்ரகாளி
என்றாலும் பயப்படாதீர்கள்
என் பெயருக்கும்
உங்கள் தேவிக்கும்
சம்பந்தமே இல்லை.

பாரதநாடு பழம்பெரும்நாடு
அதையும்விட
பழமையானது
என் தொழில்
என் மூலதனம்
என் சந்தை
என் கதை.
நான் –
உங்கள்
பத்தினிக்கு முன்பிறந்த பரத்தை.

பெண்கள் தின வாழ்த்து சொல்லும்
பெண்டீரே..
எனக்காக நீங்கள் போராட வேண்டாம்
கற்புடைய உங்கள் கணவன்மார்
உங்களைத் தீக்குளிக்க வைத்துவிடும்
அபாயத்திற்கு நீங்கள்
அச்சப்படுவது நியாயம்தான்.
காந்திய தேசத்தில்
ஆண்டுக்கு ஒருமுறையாவது
மதுவிலக்கு இருப்பது போல
இன்று மட்டுமாவது
எனக்கும்
விடுமுறை வேண்டும்

“மகளிர்தினம் கொண்டாட”
——————————

Series Navigationகாற்றின் கவிதைநன்றி கூறுவேன்…
author

புதிய மாதவி

Similar Posts

14 Comments

  1. Avatar
    virutcham says:

    ஒரு பிரச்சனையை முன் வைக்கும் போது ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளியாக்கி எல்லோருமே பொறுப்பு என்று சொல்ல முயலும் முயற்சி ஒரு கழிவிரக்கம் அல்லது நீங்கல்லாம் இதெல்லாம் தெரியாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்ற ஒரு வகைப் பாய்ச்சல். இது கட்டுரையின் நோக்கத்தை முற்றிலும் திசை மாற்றும்.
    ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்ணை அவள் உறவுகள் ஒரு தொழிலுக்குள் தள்ளுவதற்கு அதற்கு சம்பந்தம் இல்லாத மக்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது எந்த விதத்தில் உதவக் கூடும் என்ற நோக்கில் ஒரு சமூக ஆர்வலர் கருத்தை முன் வைத்தால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இப்படி ஆதி சிவனில் இருந்து தெருக் கோடி பரமசிவம் முதல் பாரத மாதவில் இருந்து அவரவர் வீட்டு மாதா மற்றும் அவரவர் குடும்பமே அதற்கான குற்ற உணர்வை பழியை சுமக்க வேண்டும் எனும் தொனியில் கட்டுரையை முன் வைப்பது நியாயம் இல்லை.

    அடுப்படியில் அடையும் பெண் முதல் இப்படி படுக்கையில் வியாபாரப் பொருளாக்கப் படும் பெண் வரை யாரா இருந்தாலும் வெளி வர வேண்டும் என்ற முயற்சி அவளில் இருந்து வர வேண்டும்.

    சில வருடங்கள் முன் ஒரு மலையாளச் சேனலில் இது போல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்களை அழைத்து வந்து பல தரப் பட்ட மக்களோடு விவாதத்தில் ஈடுபடுத்திய போது அதில் கேட்கப்பட்ட ஒரு முக்கிய கேள்வி, உங்களுக்கென்று ஒரு வேலை ஏற்படுத்திக் கொடுத்தா நீங்க இந்த தொழிலை விட்டு விடத் தயாரா ? பதில்: என்ன வேலை கொடுப்பீங்க பத்துப் பாத்திரம் தேய்க்கும் வேலையா? அது இன்றைய எங்கள் பொருளாதார நிலைக்கேற்ற வசதியைத் தராது. வெளியூரில் எங்கள் பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் செய்யும் தொழில் அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் கொடுக்கும் வேலையை ஏற்றுக் கொண்டால் அவர்களை எங்களால் இப்போது செய்வது போல் படிக்க வைக்க முடியாது… தொழிலை விட்டாலும் எங்களுக்கு கிடைத்த அவப் பெயர் போகப்போவதில்லை. அதனால் விட விரும்பவில்லை…

    எங்கள் தெரு முனையில் ஒரு பெண் இந்தத் தொழில் தான் செய்கிறாள். அவள் கணவனால் அவள் இதில் ஈடுபடுத்தப்பட்டு இருக்க வேண்டும். பிள்ளைகளை படிக்க வைக்க வில்லை. முதலில் அவள் எங்கள் தெருவில் வீட்டில் வேலைக்குத் தான் வந்தாள். பிறகு நின்றுவிட்டாள், அவள் கணவன் வேலை செய்த கடை உரிமையாளர் மூலம் அவர்கள் வீட்டுத் தேவைகள் நிறைவேற்றப்படத் துவங்கியவுடன். இப்போது பூ விற்கத் துவங்கி இருக்கிறாள் . வயசாகிக் கொண்டு வருகிறதே. இதற்கு எங்கள் தெரு மக்கள் எந்த விதத்தில் பொறுப்பாகிறார்கள்? அவளைத் தேடி எங்கள் பகுதி ஆண்கள் செல்வதில்லை. அவர்களை வாடகைக்கு இங்கே வைக்கக் கூடாது என்று எந்த வீட்டுப் பெண்ணும் இதுவரை வீட்டு உரிமையாளரிடம் சண்டைக்கு செல்லவில்லை . அவளைக் கண்டால் முகம் சுளிப்பதில்லை.

  2. Avatar
    R. Jayanandan says:

    இரா. ஜெயானந்தன்.

    இந்தியாவின் பெருநகரங்களில், சிகப்புவிளக்கு என்ற தனி இடம் உருவாகி, அதையே தொழிலாக ஏற்றுக்கொண்டு, குடும்பம் நடத்தும் அளவிற்கு, இந்திய சமூக அமைப்பு சென்றுக்கொண்டுதான் இருக்கின்றது.
    அதனை இந்திய அரசும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.
    ஒரு பக்கம், எய்ட்ஸ் தலைவிரித்தாடுகின்றது, இன்னொரு பக்கம் வறுமையும், அரசியலும்-தாதாக்களின் நெருக்கடியும் பெண்களை சூறையாடுகின்றது.

    மேலை நாட்டு கலாச்சாரமும், மேல்தட்டு பெண்களும் வேசித்தனம் செய்தால், அது நாகரீகம். கீழ்தட்டு பெண்கள் , வறுமையில் ஓடிப்போனல்,அது வேசிதனம்.

    வேசி தனத்திற்கு யார் காரணம் ? சமூகமா ? அரசியலா ? தாதாக்களா?
    சிந்திப்போம்.
    r. jayanandan.

  3. Avatar
    jayashree shankar says:

    புதிய மாதவி…அவர்களுக்கு….

    புரட்சிகரமாக எழுதி இருக்கிறீர்கள்…..என்றாலும்…
    புரிந்து கொள்ள முடியவில்லை…இதற்கு முதல்
    காரணம் என்று நீங்கள் யாரை குறிப்பிட்டு சொல்கிறீர்கள்?
    நீங்கள் எழுதி இருக்கும் கட்டுரையில்…சிகப்பு…நீலம்..
    பச்சை…கருப்பு என்று பல வர்ணங்கள் பிரகாசிக்கின்றது..
    இருந்தும் கூட அனுதாபப்பட முடியவில்லை….

    //////பெண்கள் தின வாழ்த்து சொல்லும் பெண்டீரே..
    எனக்காக நீங்கள் போராட வேண்டாம்
    கற்புடைய உங்கள் கணவன்மார்
    உங்களைத் தீக்குளிக்க வைத்துவிடும்
    அபாயத்திற்கு நீங்கள்
    அச்சப்படுவது நியாயம்தான்.
    காந்திய தேசத்தில
    ஆண்டுக்கு ஒருமுறையாவது
    மதுவிலக்கு இருப்பது போல
    இன்று மட்டுமாவது
    எனக்கும் விடுமுறை வேண்டும்
    “மகளிர்தினம் கொண்டாட”/////

    இரண்டு முறைப் படித்தேன்…சிரிப்புதான் வந்தது….

    /////ஒவ்வொரு இரவும் 3 முதல் 4 ஆண்கள் வரை இப்பெண்களின்
    படுக்கையறைக்கு வருகிறார்கள், மாதவருமானம் 2000 வரை
    இதன் மூலம் இப்பெண்கள் சம்பாதிக்கிறார்கள்.
    அதனால் தான் இத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு முறையான
    ஆயுள்காப்பீடு வசதியும் மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்பட
    வேண்டும் //////

    இதில் நீங்கள் யாரைக் குற்றம் சுமத்துகிறீர்கள்…?
    இதையே…. பணத்துக்காக….தொழிலாக செய்பவரையா?
    அல்லது….????!!! இதற்க்கெல்லாம் கூட அவர்களிடையே..
    சங்கம்..குழுமம்..என்று எல்லாம் இருக்குமே..வேறு யார்
    வந்து எங்கு குரல் கொடுக்க வேண்டும்..?

    பெண்களுக்கு தங்களை தாங்களே காத்துக் கொள்ளும் சக்தியும் உண்டு…
    எதிர்க்கும் திறனும் உண்டு….அவர்கள் மனம் ஒத்துழைக்காமல் எதுவும்..
    நடக்க முடியாது..இந்த நரக வாழ்வு வேண்டாம் என்றால் உயிரை மாய்த்துக்
    கொள்ளவும் துணிபவள்… தான் பெண்….!
    உதாரணத்திற்கு…..திரை உலகை கலக்கிக் கொண்டிருந்தவர்….சில்க் ஸ்மிதா..
    அவர்கள் மனம் மேற்கொண்டு வாழ விருப்பம் இன்றி உயிரையே மாய்த்ஹ்டுக்
    கொள்ளவில்லையா..? விருப்பம் உள்ளவர்கள் பணம் மட்டுமே பிரதானமாக
    எண்ணி அப்படியே வாழ்க்கையை கடந்து விடுவார்கள்…இன்னும் சிலர் அதில்
    இருந்து வெளி வந்து.வேறு கௌரவமான வேலைகள் செய்து காப்பாற்றிக் கொள்வார்கள்.
    அவரவர் வாழ்வை அவரவர் தான் மனம் போல் வாழ்ந்து கொள்கிறார்கள்…

    முடியாது…வேண்டாம்..என்றால் ஆயிரம் வழிகளின் கதவும் திறக்கும்.

    எந்தக் கழிவிரக்கமும் தேவை இராது. நீங்கள் கதை முடிந்தவர்கள் பற்றி கவலைப் படுகிறீர்கள்..

    ஆனால்…இன்றைய நாகரீகம் என்ற பெயரில்….இளம் பெண்கள்…உலகம் புரியாமல்…வாழ்வின்
    அர்த்தம் தெரியாமல்…வார இறுதி நாள் கொண்டாட்டம் என்ற பெயரில்….கெட் டு கெதர்…
    லிவிங் டு கெதர்…பார்ட்டி….பப்…டேடிங்…கீ…ஸ்விங்…(இன்னும் என்னவெல்லாமோ..)
    பணத்துக்காகவும்….சந்தோஷத்துகாகவும்..வழுக்குப் பாறையில் கால் வைத்துப் பார்கிறார்களே..
    அவர்களைக் காப்பாற்ற….வருங்காலத்தை…..காப்பாற்ற நம்மால் என்ன செய்ய இயலும் என்று
    கேளுங்கள்….நியாயமாகப் படும். சிந்திக்க வைக்கும்..வேரோடு அழிக்க….செயல்பட துணியலாம்.
    இது என் எண்ணம் மட்டும் தான்…தவறாகவும் இருக்கலாம்..

    இவண்….
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  4. Avatar
    Ramesh says:

    பொங்கலுக்கு தமிழ்ர திருநாள் கவிதை எழுதுவது போல இருக்கிற ஒரு (ஸ்டாக்) கவிதைக்கு ஒரு கட்டுரை.. அம்புட்டுதான்..

    இங்கன அங்கன புரட்டு நாலு நியூஸ் போட்டு கட், பேஸ்ட் பண்ணின முடிஞ்சது.. புதுசா.. நாலு வார்த்தை போட்டு.. சுடச்சுட மகளிர் தின செய்தி..

    ஆகா.. மகளிருக்குனு கண்ணீர் விட என்னமா சமூக அக்கறையிருக்கனும்னு.. நாலு பேரு சொன்னா போதாதா..ஒரு கட்டுரை போதுமே..

    எவ்வளவு ஆழமா பேசவேண்டிய டாபிக்கை, மொட்டைத்தலை தாத்தா குட்டைல விழுந்தாணும்னு சொல்ற மாதிரி (??) எழுத எப்படித்தான் முடியுமோ..

    ஐயோ. ஐயோ..

  5. Avatar
    puthiyamaadhavi says:

    yes ramesh, the purpose of this article is just to share
    that march 11th wedding plan of that village girls.
    nothing more than that. iam just connecting that march 11th news with march 8 , womens day, . thats all!

    regarding this issue i have already wrote many articles. search u will get it. don’t run like a horse and comment there is nothing in the road sides!
    i agree with maa.senthamizhan , the concept of Paraththai VS vipasaari,
    means paraththai is not vipasaari.

    have a good day.

  6. Avatar
    puthiyamaadhavi says:

    கட்டுரைகள் பலவிதம். ஷோபா டி எழுதும் பத்திகள் செய்திகளை அவர் பார்க்கும் பார்வையை மட்டும்
    கொடுக்கும். சேட்டன் பகத் பத்திகள் செய்தியில் அவரின் உணர்வை பதிவு செய்யும். இப்படி சொல்லிக்கொண்டே
    போகலாம். எல்லாவற்றையும் ஆய்வு மனப்பான்மையில் எப்போதும் எழுதுவதோ அல்லது அப்படி
    எழுதிதான் ஆக வேண்டும் என்றோ அவசியமில்லை.
    இதெல்லாம் தெரியாதவர்கள் அல்ல நீங்கள் யாரும்! ஆனால் புதியமாதவி அப்படியெல்லாம்
    எழுதவே கூடாது.???!!!!!.. ஓகே !
    எப்போதும் ஆய்வு கட்டுரை தான் எழுதி ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது ?
    ok anyhow thanks for all ur comments friends.

    1. Avatar
      paandiyan says:

      திராவிட இயக்க வழி வந்தவர்களின் முதல் பாடம் “தன்னை தான பாராட்டி கொள்ளுவது” இருண்டு விமர்சனம் பன்னுவர்களை ஒரு வழி பண்ணிவிடுவது . ஒரு வழி பண்ணிவிடுவது என்றால் சாதரணமாக எடுத்து கொள்ளாதீர்கள் பஸ் ஏரிப்பு, பத்திரிக்கை அலுவலக ஏரிப்பு வரை பயங்கரமானது. நல்ல வேலை நாம் இணயதளத்தில் விமர்சனம் பண்ணுவதால் உயிர் பயம் இல்லை !!!!!

  7. Avatar
    Paramasivam says:

    The people who are secured in life may laugh at the poem.It is the reality.So many years ago Poet Kaamaraasan wrote,”Naangal nirvaanatthai virkirom,yengalukku aadai vaanguvadharkaaga,naangal rajaniyin(iruttin)makkal”It is always said that this profession is the oldest.As pointed out by Pudhiyamaadhavi,many women were brought to this profession by coersion and coming out of the notorious brothels of Mumbai is not so easy.If anybody shows sympathy,well and good. .Why laugh at the poem?

  8. Avatar
    jayashree says:

    திரு.பரமசிவம்…..அவர்களுக்கும்….
    திருமதி.புதிய மாதவி அவர்களுக்கும்…
    வணக்கம்.
    தங்களின் கவிதையையோ..கட்டுரையையோ..தவறெனச் சொல்லவில்லை…
    யதார்த்தமாக..புரட்சிகரமாக எழுதி இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.
    நான் சிரித்தது…என் சிந்தனையை எண்ணி….இந்த வரிகள்….
    ///ஆண்டுக்கு ஒருமுறையாவது
    மதுவிலக்கு இருப்பது போல
    இன்று மட்டுமாவது
    எனக்கும் விடுமுறை வேண்டும்
    “மகளிர்தினம் கொண்டாட”/////
    இரண்டு முறைப் படித்தேன்…சிரிப்புதான் வந்தது….

    அப்படி யார் இந்த மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்…?
    அதற்கெல்லாம் பெண்களுக்கு எங்கே நேரம்….?
    மது விலக்கு எங்கே நடை முறையில் இருக்கிறது….?
    மது தட்டுப் பாடு தான் இனி இருக்க வேண்டும்….முன்பெல்லாம் ஆண்கள்
    மட்டும் தான் குடிப் பழக்கத்தில் அவதிப் படுஆர்கள்…இப்போது இந்தியாவில்
    இளம் பெண்கள் இதன் பிடியில்….அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்….
    மெரீனா பீச் பக்கம் ஒரு நடை சென்று வந்தால்…தெரியும்….
    பாண்டிச்சேரி பீச் பக்கம் ஒரு நடை சென்று கவனித்தால் தெரியும்…
    பெண்கள் இப்போதெல்லாம் தங்களை தங்கள் சுயநலத்திற்காக
    தாங்களே இழிவு படுத்திக் கொள்ளும் அவலத்தில் இருப்பது.
    எங்கேயோ…பாம்பே..கல்கத்தா…என்கிறீர்கள்..இது கதைக்கும்
    சினிமாவிற்கும்… மட்டும் கதைக்காக கவலைப் படும் வகையில் சித்தரித்திருப்பார்கள்.
    நிஜ வாழ்வில்…அந்தப் பெண்கள் போல் அராஜகம் பண்ணுபவர்களை….????
    கால காலமாக ரத்தத்தில் ஊறிய ஒன்றை நாம் ஏதும் செய்ய இவயாது.
    இனிவரும் சமுதாய அவலங்களை அழிக்க ஆயத்தப் படுவதில் அர்த்தம் உள்ளது.
    நாகரீகம் என்ற பெயரில்…பண்பாட்டு வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்துகொண்டு
    வருகிறது ஒரு பக்கம்….ஆணாதிக்கம் அமுங்கிக் கொண்டும்…பெண்ணாதிக்கம்….
    நிமிர்ந்து கொண்டும் வந்துகொண்டிருக்கிறது….தற்போது….பெண்களின் நிலை தற்போது
    நிறைய மாற்றங்களோடு அதீத சுதந்திரத்தோடு தான் வளர்கிறது….சமூகத் தடைகளை
    தகர்த்துக் கொண்டிருக்கிறாள் பெண். ஒவொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும்
    தற்காப்பு மனதோடு தான் வளைய வருகிறாள்…
    உடன்படுபவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனதை தயார் படுத்திக் கொண்டு தான்..
    அந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள்…வாழ்வின் சராசரி..மற்றும் உயர் மட்டத்தில் இருந்தாலும்
    கூட….உதாரணத்திற்கு…..ஒரு நடைகள்..திருமதி.புவனேஸ்வரி அவர்கள்….பலவித
    சர்ச்சைக்கு ஆளானாலும்….இறுதியில்….ஒரு முக்கிய பதவியில் அமரவில்லையா?
    இதை எல்லாம் நினைத்தேன்…சிரித்தேன்…..இதை எல்லாம் நீங்களும் அறியாததில்லை.
    திருமதி.புதிய மாதவி அவரது கருத்தை கட்டுரையாகச் சொல்லும்போது…..
    அதைப் படிப்பவர்கள் தங்களின் கருத்தையும் சிநேகமாகச் சொல்லத் தடை ஏதும்
    இல்லை அல்லவா? இதில் உங்கள் மனதை புண்படுத்தும் நோக்கம் அல்ல.
    தவறாக இருப்பின்…மன்னித்துக் கொள்ளுங்கள்.
    நன்றி.
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  9. Avatar
    puthiyamaadhavi says:

    டியர் ஜெயஸ்ரீ
    உங்கள் விமர்சனம் தனிப்பட்ட முறையில் தாக்கும் எண்ணத்தில் எப்போதும் இல்லை
    என்பதை நான் அறிவேன். கட்டுரையின் மையக் கருத்தை விட்டு விலகாமல்
    விமர்சனம் இருப்பது தான் சரியாக இருக்கும். இல்லை என்றால் முகநூல் போல
    ஆகிவிடும் ஆபத்து உண்டு.

    ஆண்டுக்கு ஒரு முறையாவது மதுவிலக்கு என்பது
    அக்டோபர் 02௦ காந்தி பிறந்த நாளில் இந்தியா முழுக்க மதுக்கடைகள் மூடப்படும்
    அதைதான் குறிப்பிடுகிறேன்
    மிக்கக நன்றி

    1. Avatar
      Govind says:

      The article was a views/expressions of an individual after reading/knowing about the women in Wadia. She has the freedom to express her views. What we need to discuss is what we do as an individual to help/avoid these kind of atoricities on women. Talk to your friends/relatives and spread the awareness and tell everyone that women are not “products” for use and throw.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *