மகாத்மா காந்தியின் மரணம்

This entry is part 19 of 19 in the series 31 ஜனவரி 2016

Gandhi -12

 

[1869-1948]

சி. ஜெயபாரதன், கனடா

அறப் போர் புரிய மனிதர்
ஆதர வில்லை யெனின்
தனியே நடந்து செல் ! நீ
தனியே நடந்து செல் !

இரவீந்திரநாத் தாகூர்

http://youtu.be/QT07wXDMvS8

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14

பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

மகாத்மா காந்தி

Gandhi -1

முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!

கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்!  ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!

Hey Ram

உலக வரலாறு மீள்கிறது [History repeats] ! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த ஐந்து பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!

ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!

Gandhi's last journey -2

அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!

மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்”  என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.

ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார்.  ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!

Nehru and Gandhi

நேர்வழி எதுவெனத் தெரிந்தபின் செய்யாமல் நழுவுவது கோழைத்தனம்

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்கு மாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!

Einstein on Gandhi

டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!

“முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.

Tagore and Gandhi

காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்

காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!

Gandhi and Einstein

40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.

காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.

Gandhi fasting and Indira

மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்

பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடிய வில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.

சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.

Gandhi -9

‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.

மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.

கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!

Gandhi in UK 1931

கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!

இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரிய தல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’

அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’

1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.

Gandhi -10

காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.

இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!

Samarmathi Ashram

ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!

பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர் களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?

வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார் களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மை யினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.

Einstein on Money

காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.

‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்பட வேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!

News

இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?

Gandhi's last journey

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!

பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறை களிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மை யான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!

Gandhi with Ratinam

இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.  அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமி யருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!

Einstein qoutes

அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !

மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்!  இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!

 

Gandhi Memorial

 

கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!

Gandhi in UK 1931

இங்கிலாந்தில் காந்திஜி 1931

வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!

மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார்.   ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார்.  ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’  மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்!  ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது !  பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!

Gandhi -8

Birla House Memorial

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14

http://youtu.be/QT07wXDMvS8

***************************

தகவல்:

1.  Gandhi’s Truth By : Erik H. Erikson (1969)

2.  Gandhi His Life & Message for the World By:  Louis Fischer (1954)

3.  The Life of Mahatma Gandhi By : Louis Fischer  (1950/1983)

4.  http://graysparks.blogspot.com/2011/04/blog-post_18.html

5.  http://en.wikipedia.org/wiki/Mahatma_Gandhi

6. http://www.mkgandhi.org/assassin.htm

7.  http://en.wikipedia.org/wiki/Assassination_of_Mahatma_Gandhi

8. https://mail.google.com/mail/u/0/#inbox/14b3e9d68711e1e0

++++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com]

 

Series NavigationEnglish translation of Tamil Naaladiyaar
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

40 Comments

  1. Avatar
    admin says:

    அற்புதமான கட்டுரை, ஜெயபாரதன்! தாஜ்மஹாலை ஏன் இடிக்கவில்லை என்று என் THE HINDU OPEN PAGE கட்டுரையில் சில ஆன்டுகளுக்கு முன் நான் கேட்டிருந்ததையே நீங்களும் கேட்டிருக்கிறீர்கள்.
    ஜோதிர்லதா கிரிஜா

  2. Avatar
    smitha says:

    Gandhi was no doubt a great leader, but had his flaws. He has unfortunately been deified in our country.

    The decision he took on partition proved to be disastrous. Also, his move in making Nehru as PM was a wrong step.

    He used fasting as a tool to bring around those who did not agree with him, or in other words, emotional blackmail.

    Any article or study of Gandhi should be written objectively, if we are to get the true picture.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      Ms. Smitha,

      When Rama, Sita & Hanuman are being worshiped as Lords or Gods, Gandhiji is not worshiped as a deity in India as he himself wrote his own human biography.

      No doubt, it was Pandit Nehru who planted & developed as the first Prime Minister, Science & Technology, built Dams and Power Plants to establish the Infrastructure of the country deeply as a Pioneer. Atomic Science, Nuclear power plants, Space Science & Exploration of Earth, Moon & Mars advanced India’s name in the forefront. No one exalted or exceeded him in that great role in India till now.

      Whom do you think Gandhiji should have selected as the first Prime Minister for India ?

      You may say Vallabhai Patel, Why ?

      Yes, Gandhiji used Self-torture [Fasting] as his weapon to demand. What would you recommend for Gandhiji to use instead, pistol, sword or hockey stick ?

      Why don’t you start writing objectively his story as his biographer ?

      S. Jayabarathan

  3. Avatar
    ஷாலி says:

    //தாஜ்மஹாலை ஏன் இடிக்கவில்லை என்று….//

    அதற்க்கு பல காரணம் உள்ளது. இன்று இதை உலக அதிசயங்களுள் ஒன்றாக ஆகிவிட்டதால்,இந்தியாவுக்கு பெருமை மற்றும் ஒவ்வொருநாளும் சுமார் 12000 சுற்றுலாவாசிகள் வந்துபோய்,அரசிற்கு அந்நிய செலவாணியை அள்ளித்தரும் திருத்தலம்.

    மற்றொரு காரணம், “தாஜ்மஹால் ஒரு இந்துக்கோவில் “ என்று ஓர் ஆராய்ச்சியை?? “சங்’க சார்புள்ள பேராசிரியர் ஓக் என்பவர் எழுதி தாஜ் மஹால் கட்டிட பெயர் மாற்றத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு அட்வான்ஸ் கொடுத்துள்ளார்.பாபர் பள்ளி மிகப் பழையது,இதில் ஆதாயம் ஒன்றும் இல்லை.இடித்துவிடுவதே அரசியல் ஆதாயம்.ஆனால் தாஜ்மஹால் ஒரு ஆபுத்திரன் கை அட்சய பாத்திரம்,அமுதசுரபி.எனவேதான் இன்றைய கோபுத்திரர்கள் தாஜ்மஹாலை இடிக்காமல் பெயரை மாற்றி புது நாமஹரணம் சூட்டுவதற்காக நேரம் காலம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ராகுகாலம் முடிந்து நல்ல முஹூர்த்த நேரம் வந்ததும் தாஜ்மஹால் கர்வாப்ஸி ஆகிவிடும்.தாஜ்மஹாலை இடிக்காமல் சிவாலயமாக மாற்றுவதால் ஒரு கல்லில் இரு மாங்காய்.மேல்நாட்டு டுரிஸ்ட்களிடம் அந்நிய செலவாணி,உள்நாட்டு இந்துக்களிடம் ஆன்மீக அறுவடை.”ஓம் சிவதாஜ்மஹால்” நமஹா!

  4. Avatar
    smitha says:

    Jayabharathan,

    That is what I am saying. You are getting excited & talking like a Gandhi devotee.

    Nehru’ foreign policy was flawed & still we are feeing the after effects.

    Simply building dams & encouraging science & technology is not enough. It is a very simplistic take of things.

    He became PM purely due to Gandhi’s recommendation & nothing else.

    Gandhi was advised by many senior leaders that Patel was a far better administrator & hence was best suited for PM. Gandhi did not agree.

    Also, Patel was over 70 at that time & did not have many years left. He could have at best been a PM for at best 1 term & made a much better PM than Nehru. His achievements as Home minister stand testimony to that.

    Whenever his colleagues had a difference of opinion, Gandhi resorted to fast & eventually they were forced to agree. He did it even during the partition.

    His famous quote was ” I am not a chaar ana comgressman”. But all the major decisions were taken by him. He supported Siddharamiah’s candidature for the post of Congress President against Bose but Bose won.

    Gandhi should have taken that sportingly but did not. He said ” Siddharamiah’s defeat is my defeat”. Bose resigned.
    He need not have done that since he was legitimately elected but he chose to bcos of his magnanimity & respect for Gandhi.

    As early as in 1942, Rajaji forewarned Gandhi that Jinnah would eventually ask for a separate nation & advised him to hold talks. Rajaji was branded anti national & hounded out.

    But what happened? Thousands died during partition. It was then that Gandhi admitted that he should have listened to Rajaji but it was too late & India paid a very price & are still paying today – with our lives.

    “When Rama, Sita & Hanuman are being worshiped as Lords or Gods, Gandhiji is not worshiped as a deity in India as he himself wrote his own human biography.”

    In this context, deifying means giving the person an exalted status as close to God & brooking no criticism.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      Ms. Smitha,

      Yes I am a patriot in the real sense. My father fought for the freedom the country & put in jail by the British.

      In your view who was the Father of the Nation, Gandhiji or Induthva RSS Leader Veer Savarkar ?

      India has been progressing well & slowly in spite of her many problems, after getting independence. Look at the many sick African Nations.

      India’s health, food, wealth & progress solely depend upon its developed Infrastructure & not in its changing, time-bound foreign policy.

      Indeed, Vallabhai Patel was a good home Minister but he did not have the vision & mission to become India’s Prime Minister.

      S. Jayabarathan

  5. Avatar
    smitha says:

    Shali,

    Looks like you have not read Oak’s book. If you do, you will clearly understand that Taj Maha was indeed a Shiva temple which was demolished.

    As for Babri Masjid, it was used for open defecation & never as a mosque but when it was demolished, a big hue & cry was raised.

    I do not want to go into the politics here but face the facts.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      Ms. Smitha,

      Please read your unthinkable comment on Shali’s point of view. You are loudly saying that the great Ram Mandir may be built on an open latrine site where once Babri Masjid stood once.

      Most of our Godly Hindu Temples are dirty anyway; So you are justified.

      The famous Kanniya Kumari temple at the end of India was used & found as a open latrine, when I visited the site in 1965. Now I do not know.

      S. Jayabarathan

    2. Avatar
      BSV says:

      Preposterous to say if a place owned by someone, or housing something, is let open, you can demolish it. How bizarre it will be I shall give you an example.

      Some years ago, I was in search of Peyazhwar samadhi. I know he was a native of Mylapore. I searched everywhere but none could guide me. Waling alone, serendipitiously I stumbled across a gate with a notice board: It is Peyazhwar samadhi. Gate was locked. Inside thick grwoth of wild vegetation. Through a hold, urchins used to enter for defecation only. Applying your logic, can we demolish it? Tell me please.

      Now the samadhi is cleaned and preserved thanks to efforts of some people.

  6. Avatar
    ஷாலி says:

    ஸ்மிதா அம்மணி! பல வருடங்களுக்கு முன் 1980 ம் வருடமாக இருக்கலாம்.நீங்கள் குறிப்பிடும் பேரா.P.N.ஓக் என்பவர் எழுதிய ஆய்வுத்தொடர். “தாஜ் மஹால் ஒரு இந்துக்கோவில்” தொடராக குமுதம் வார இதழில் பரபரப்பாக வெளிவந்தது.

    இதற்க்கு வரிக்கு வரி மறுப்பு எழுத முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று குமுதம் நிர்வாகத்துடன் கேட்டு அவர்கள்,இத்தொடர் முடிந்தவுடன் மறுப்பு எழுதுங்கள் என்று அனுமதி கொடுத்தனர்.

    பிறை இஸ்லாமிய இதழின் ஆசிரியர் அப்துல் வஹாப் என்பவர் மறுப்புத்தொடரை எழுதி, திரு.ஓக் கொடுத்த அனைத்து ஆதாரங்களையும் சான்றுகளோடு மறுத்தார்.இரண்டையும் நான் படித்திருக்கிறேன்.

    தாஜ்மஹால் ஒரு இந்துக்கோவில் என்ற உங்கள் கருத்திற்கு ஒரு ஆதாரமும் இல்லை என்று உங்கள் பாஜக கலாச்சார துறை அமைச்சர் திரு.மகேஷ் ஷர்மா மறுத்துவிட்டார்.
    http://ezhanaadu.com/?p=8733

  7. Avatar
    Rama says:

    Let us not forget about Gandhi’s bramachari experiments, his ill treatment of his wife and son, his opinion of Blacks of Africa( called them Kaffirs)his support of the Brits in Boer war ( was a Sargent , got decorated by the Poms). To know Gandhi one should read Sri Aurobindo’s opinion of him. If not for Gandhi India would have got her independence 20 years earlier. The book ” Eclipse of the Hindu nation” shows Gandhi for he was. A confused hindu , a Muslim appeaser and a sexual deviant. For the sake of truth and balance,
    I hope my comments get published.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      Ms. Rama,

      The Hindu Kamasutra Research book was written by the great scientist Vatsayana. Gandhiji has written in detail without hiding anything about himself in his experiments with Truth.

      One of the key items was human sexuality. When he was old, he himself wanted to test his intensity of natural urge to have sex with woman. In that physical experiment he came out successful.

      You might think it was odd, stupid & unwanted. But he wanted to verify his control of that urge to discover himself.

      He was not a confused Hindu. You please read his quotations; He was very clear in his Vision & Mission, views & reviews.

      S. Jayabarathan

  8. Avatar
    Prakash Devaraju says:

    Thanks Dr./Mr. Jayabarathan. A well written article. I always enjoy your writing whenever I get to read them here in Thinnai. This one is especially enlightening. The debate on Hindutva and tolerance is also interesting. As for my opinion, I side with you on Nehru’s vision, though some doubts remain about how far he was efficient in executing his vision. Yes, we do need strong religious tolerance in the country and the rise of violent hindutva or of any violent fundamentalist thathuva has to be condemned and uprooted from the society. Please continue your writings and amuse us as always.

  9. Avatar
    ஷாலி says:

    //The famous Kanniya Kumari temple at the end of India was used & found as a open latrine,//

    பேராசிரியர்.திரு.ஜெயபாரதன் அவர்களே! இந்த கக்கா…விசயத்தில் நமது தேசிய ஒருமைப்பாடு காஷ்மிரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒன்றாகவே மணம் வீசும்.நமது இந்தியா ரயில்களில் காலை நேரத்தில் பயணம் செய்தீர்கள் என்றல் ரயில் தண்டவாளத்தின் இருபுறத்து கரைகளிலும் வேட்டியை தூக்கி, குத்தவச்சு “ சன்-பாத்” எடுக்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.

    இதை புரிந்துகொள்ள முடிகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் கழிப்பறை கட்டி கழிக்க, அணு வல்லரசு நாட்டுப் பொருளாதாரம் அனுமதிப்பதில்லை.சரிதான்..

    ஏழை மக்கள் ரயில் தன்டாவாளத்தின் இருபுறங்களிலும் ஒதுங்குகிறார்கள். ஆனால் இந்திய ரயில்வே துறை இயக்கும் புகைவண்டிகள். அனைத்தும் நடு ட்ராக்கில் மலக்கழிவை கழித்து இந்தியாவை ஒரு திறந்தவெளி கழிப்பறையாக கமழச்செய்வதை எங்கு போய்ச் சொல்வது.?

    நமது பிரதமர் மோடி ஜீ….ஏதோ ஒரு திட்டம் கொண்டுவந்திருக்கின்றாராம்.பார்ப்போம்.இந்தியா செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்புவதற்குள்…இந்த “சன்-பாத்திற்கும், ரயில் பேதிக்கும்” சாவுமணி அடிப்பார்களா என்று…..

    ஸ்மிதா அம்மணி! உங்க “சங்”க மந்திரிகளிடம் சொல்லி, எங்க சங்கடத்தை நீக்குங்கோ! செய்வீர்களா?…..

  10. Avatar
    Rama says:

    Thanks Mr Jaybharathan. It seems odd and bordering on sexual perversion for an old man to sleep naked with naked married women and his 18 year old niece. This is all to check out HIS DOUBTS about HIS “Bramacharism”. Never mind that he failed at times in his experiments and talks of nocturnal emissions, etc. Never mind the psychological ( also physical?) trauma faced by the young ladies of sleeping naked with an old man in his quest to prove his perverted notion of being a Bramachari. You do not need to conduct such atrocious experiments to prove something that you already are well aware of. Either you have sexual urges or you don”t. No need for any experiments. Period.( Shri Vallabhai Patel had written to Gandhi against these experiments)
    Confessing about such experiments does not absolve Gandhi of his sexual perversion, however sugar coating one might try to hide this attempt.
    Plus Sir, you have not come to his defence about his contemptuous views of Blacks of Africa. Or his Muslim appeasement. Of advising Hindu women to bite their lips and bear it when being raped by Muslims during Moppala riots. Or his fanatical support for Ali Brothers and Khilafat movements when even the Turkish people themselves rejected this. All to please a particular religious community. I won”t talk about his drive to recruit able bodied men from every village to fight FOR the British in the second world war. Obviously, his ahimsa went out of the window at that time. Why did he not recruit such able bodied men to fight against the British themselves before the break out of WW2? His Ahimsa was selective.And has no basis from Hindu scriptures either, hence I label him a confused Hindu and I am being generous here.
    I sincerely thank Thinnai for publishing my earlier comments and I hope my reply to Shri JB gets published.

  11. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Ms. Rama,

    If you consider human sexual acts, nakedness & experiments as vulgar & perversion, all the 6 billion world population will be examples & will come under that umbrella. You are not a human but a Divine being.

    I will say in almost every one’s life, one must have gone through some kind of sexual unrest, doubt or upset some time like Gandhiji.

    What do you say about the Hindu Guruji’s sex scandals and murder drama that occurred in Tamil Nadu ? Anuradha Ramanan openly accused about him.

    What do say about the hundreds of naked Sadhus that participate in Kumbamela Festival that occurs in India every year ?

    I am not a politician and I do not know the African episode & others.

    S. Jayabarathan

  12. Avatar
    smitha says:

    Jayabharathan,

    You are missing the wood for the tress. If it was indeed a masjid, it should have used for prayers, but it was used for open defecation. Where has the claim gone then?

    As for Gandhi’s brahmachari experiments, it is not related to the topic under discussion. You have not been able to reply to my points.

    As for sexual acts by Hindu Godmen, shall I list out the numerous sexual acts being indulged in by the Christian clergy in India?

    BSV,

    Peyalwar’s topic is in no way connected with this issue. Pls do not get confused.

    Shali,

    Do you know that several parts of the Taj Mahal are locked & kept away from public gaze?

    I reiterate that an objective assessment of Gandhi is needed & not blind worship.

  13. Avatar
    Rama says:

    @Smitha
    All my comments do not get published by Thinnai. I have already responded to Shri Jayabhrathan’s last comments . I agree with you. Blind worship of Gandhi should go. All unsavoury aspects of Gandhi should NOT be swept under the carpet.Delusions and illusions of Gandhi need to be dismantled for good.

  14. Avatar
    BSV says:

    //BSV,
    Peyalwar’s topic is in no way connected with this issue. Pls do not get confused.//

    It gets connected to the first sentence of the above message of yours. There are many temples, all over India, (I have been to many States and lived there quite some time or years – Maharashtra, Assam, Jharkhand, Andhra Pradesh, Telangana, Kerala and Karnataka) which are lying unused. Some are ancient, which were used for open defecation till people asked govt to take care of them; and now ASI is controlling them. Why didn’t we demolish them if they were being used for open defecation and not put to worship? Why only this Babri Masjid got your notice for potential attack or demolition ?

  15. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Ms. Smitha,

    You need not bother or question about the dirty location of the ill-fated Masjid, which was destroyed by the devotees overnight with good planning & well-administered plot.

    Now the devotees can build gloriously the historic Ram Mandir on the same dirty plot.

    Gandhi’s experiments with truth were questioned by Ms. Rama & I have to reply.

    Regards,
    S. Jayabarathan

  16. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    The Greatness of Gandhiji

    A Letter to a Hindu
    From Wikipedia, the free encyclopedia

    https://en.wikipedia.org/wiki/A_Letter_to_a_Hindu
    https://en.wikipedia.org/wiki/The_Story_of_My_Experiments_with_Truth

    “A Letter to a Hindu” (also known as “A Letter to a Hindoo”) was a letter written by Leo Tolstoy to Tarak Nath Das on 14 December 1908.[1] The letter was written in response to two letters sent by Das, seeking support from the famous Russian author and thinker, for India’s independence from British colonial rule. The letter was published in the Indian newspaper Free Hindustan. The letter caused the young Mohandas Gandhi to write to the world-famous Tolstoy to ask for advice and for permission to reprint the Letter in Gandhi’s own South African newspaper, Indian Opinion, in 1909. Mohandas Gandhi was stationed in South Africa at the time and just beginning his lifelong activist career. He then translated the letter himself, from the original English copy sent to India, into his native Gujarati.[1]

    In A Letter to a Hindu, Tolstoy argued that only through the principle of love could the Indian people free themselves from colonial British rule. Tolstoy saw the law of love espoused in all the world’s religions, and he argued that the individual, nonviolent application of the law of love in the form of protests, strikes, and other forms of peaceful resistance were the only alternative to violent revolution. These ideas ultimately proved to be successful in 1947 in the culmination of the Indian Independence Movement.

    In this letter, Tolstoy mentions the works of Swami Vivekananda. This letter, along with Tolstoy’s views, preaching, and his book The Kingdom of God Is Within You, helped to form Mohandas Gandhi’s views about nonviolent resistance.[1]

    In this letter, Tolstoy referred to the Tamil Tirukkuṛaḷ as the Hindu Kural.[2]

  17. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Ms Smitha / Ms. Ramaa,

    குறை நிறைகளை எடைபோட்டு நாம் ஒரு தலைவனின் முழுமையான பிறவிப் பணிகளைத் நிறுக்கும் போது, இக்குறள் நினைவுக்கு வரவேண்டும்.

    தக்கார், தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப் படும்.

    காந்திஜியின் முக்கிய குறிக்கோள் பாரதம் சுதந்திரம் அடைவது, அதற்குப் பிறகு பாரத சமுதாயம் முன்னேறுவது.

    ஆசிய நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில் விடுதலை பெற்ற நாடுகளில் பாரதமே எல்லாத் துறைகளிலும் வளைச்சி பெற்று முன்னணியில் இருப்பதை யாரும் மறுக்க முடியுமா ?

    பூக்களும், கனிகளும் இருக்க ஈ பறந்து போய் எதில் அமர்கிறது ? மலத்தில் !!!

    சி. ஜெயபாரதன்.

  18. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ஒரு திருத்தம்.

    ஆசிய நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில் விடுதலை பெற்ற நாடுகளில் பாரதமே எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி பெற்று முன்னணியில் இருப்பதை யாரும் மறுக்க முடியுமா ?

  19. Avatar
    Rama says:

    MR JB
    My comments mostly do not get published by Thinnai. How can one post a response if it does not see the light of the day at Thinnai?

  20. Avatar
    admin says:

    Rama-
    பின்னூ ட்டங்களை முடிந்த வரை தமிழில் எழுதவும். கட்டுரை பேசு பொருளைக் குறித்து கருத்துகள் எழுதப்படவேண்டும். இணைய இணைப்புகளைத் தரவேண்டாம். தங்கள் கருத்துகளைச் சுருக்கமாய் தரவும்.

    நன்றி
    ஆசிரியர் குழு.

  21. Avatar
    smitha says:

    BSV,

    You are asking another question to my question. The Babri Masjid needed to be demolished because historically it was built where a temple stood earlier. Also, it is a spot where it is believed that Lord Rama was born. If you start questioning the belief, that is a different discussion altogether.

    Jayabharathan,

    Surely I will be bothered about the dirty condition of the Masjid. Do you simply build a mosque to be lying in a state of disuse?

    The point is not whether it was dirty or not. The point is that if it was really a masjid which was built for the purpose of worship, it would not have been in a state as it was at the time of demolition.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      Ms. Smitha,

      ///The point is not whether it was dirty or not. The point is that if it was really a masjid which was built for the purpose of worship, it would not have been in a state as it was at the time of demolition.///

      ஆகவே அதை இடிக்க வேண்டுமா ? அது இஸ்லாமியர் விருப்பம். இப்போது அவ்விடத்தை யாரும் நெருங்கக் கூடாதென்று, சட்ட மன்ற நீதிபதி ஏன் வேலி போட்டுள்ளார் ?

      நாற்றமடிக்கும் நமது தென்குமரிக் கோயில் வணங்கு தளமா ? அல்லது நரகல் கூடமா ? சொல்லுங்கள். சுத்தம் செய்யாமல் மூக்கை மூடிக் கொண்டு நமது இந்துக்கள் குமரி அம்மனை வழிபட வேண்டுமா ?

      வாருங்கள், முதலில் நமது கழிவுகளைச் சுத்தம் செய்து விட்டு, பிறர் கழிவுகளைச் சுட்டிக் காட்டப் போவோம்.

      சி. ஜெயபாரதன்

    2. Avatar
      BSV says:

      ஓரிடத்தில் ஒரு வழிபாடிருக்க வென்ற இனம் அஃதை அழித்து அதன்மேல் தம் வழிபாட்டை நிறுவுவது வரலாற்றில் நடப்பது. மன்னராட்சி காலங்களில் இப்படித்தான் வாழ்க்கை நடக்கும். மக்களாட்சி காலத்தில் நடக்காது என்று உறுதியாகச் சொல்லமுடியாதென்று நம் இக்காலம் காட்டி வருகிறது.

      அயோத்தியில் மட்டுமன்று. மற்றவிடங்களிலும் முகலாய மன்னர்கள் ஆங்கிருந்த கோயில்களை இடித்து அவற்றின்மேல் தம் வழிபாடுகளை நிறுவக்காரணம் அவர்கள் மன்னர்கள்; அவர்கள் விரும்பியதைத்தான் செய்வார்கள்.

      குதுப் மினார் ஒரு நல்ல எ.கா. நாமென்ன குதுப்பினாரை இடித்து விட்டு கோயில் கட்டு என்றா கேட்கிறோம்? குப்தர்கள் கால்த்து இந்துக்கோயிலே அது என்பதை அங்கு போய் பார்த்தோர் அறிவார்கள். ஆனால் ஒருவருமே குதுப்மினாரை இடி என்று கோரிக்கை வைக்கவில்லையே? .

      முகலாயர் இல்லாவிடங்களில் இந்துக்கள் அப்படி செய்திருக்கிறார்கள். இன்றைய தமிழகம் ஒரு சாட்சி. சமணர்கள்; புத்தர்களும் செழித்திருந்த தமிழகத்தில் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள். மக்களின் ஆதரவு இல்லையெனவே காணாமல் போய்விட்டார்கள் எனலாம். ஆனால் அவர்களின் பள்ளிகளும் விஹாரங்களும் எப்படி காணாமல் போய்விட்டன?

      எல்லாவற்றையும் – ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவைகளை – இன்று தேடிக்கண்டுபிடித்துப் பழிக்குப்பழி வாங்கவேண்டுமென்ற்கிறீர்கள்! அஃதையேன் அயோத்தியோடு நிறுத்திவிட்டீர்கள்? நீதி என்றால் எல்லாருக்கும்தானே? அயோத்தியில்தான் இராமர் பிறந்தார் என்று நிறுவுங்கள். பின்னரே பாபர் இடித்தது இராமர் கோயிலா? இல்லை அவ்வூர் மக்களின் நாட்டார் தெயவமா? சமணக்கோயிலா? புத்த விஹாரமா என்று தெரிய வரும்.

      வரலாற்றாராய்ச்சிகளை முடுக்கிவிடுங்கள். திறந்த அலமாரியிலிருந்து சடலங்கள் விழும்.

  22. Avatar
    smitha says:

    Jayabharathan,

    So, you will build a mosque & then not use for worship, but defecate there?

    That too after demolishing a temple that stood at that spot.

    Nice logic.

    Pls do not harp on the same old boring argument of “cleaning my own house first” etc.,

  23. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    Ms. Smitha,

    ///So, you will build a mosque & then not use for worship, but defecate there?

    That too after demolishing a temple that stood at that spot.///

    இஸ்லாமியர் எப்படி வாழ வேண்டும் என்று ஓர் இந்து மாது எப்படி அறிவுரை வழங்கலாம் ?

    இராமர் கோயில் அவ்விடத்தில் இருந்ததற்கு ஏதாவது பழைய பத்திரம் உள்ளதா ?

    இராமன் அவ்விடத்தில் பிறந்தான் என்பதற்குத் தொல்பொருள் துறையினர் ஏதாவது தோண்டி எடுத்துள்ளாரா ?

    சி. ஜெயபாரதன்

  24. Avatar
    smitha says:

    Excavations have been done & they are enough evidence to show that a mosque was built after demolishing a temple.

    Can you give evidence whether Jesus Christ existed?

    Similarly what is the proof that the prophet took instructions from Allah?

    Arguments like these are useless.

    It is a question of faith & must be respected.

    Also, I am not advising muslims on how they should live. I was only questioning why they built a mosque after demolishing a temple & not use it for the purpose intended.

    Do you build a religious shrine just for the heck of it?

    Pls do not give such innane statements.

    The main article is on Gandhi & you have not been able to answer to any of the queries.

  25. Avatar
    .சி. ஜெயபாரதன் says:

    மிஸ். சுமிதா,

    இராம் மந்திர் கட்ட, இரகசியமாக ஓரிரவிலே நின்றிருந்த வரலாற்று மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கிய வீரர்களை என்னவென்று சொல்வீர்கள் ?

    சமீபத்தில் பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் பைபிள் கூறியபடி ஏசுக் குழந்தை பிறந்த போது, வானத்தில் முப்பெரும் ஒளிமிக்க கோள்கள், வியாழன், வெள்ளி, புதன் (?)தென்பட்டதைப் பின்கணக்கிட்டுக் கண்டு சொல்லி இருக்கிறார்கள்.

    சி. ஜெயபாரதன்.

  26. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மிஸ். ஸ்மிதா,

    On December 6, 1992, a large crowd of Hindu Kar Sevaks (“volunteers”) entirely destroyed the 16th-century Babri Masjid mosque in Ayodhya, Uttar Pradesh, India, in an attempt to reclaim the land known as Ram Janmabhoomi (the mythological birthplace of the Hindu god Rama). The demolition occurred after a rally supporting the movement turned violent and resulted in several months of inter-communal rioting between India’s Hindu and Muslim communities, causing the death of at least 2,000 people.

    On 6 December 1992, the RSS and its affiliates organised a rally involving 150,000 VHP and BJP kar sevaks at the site of the mosque. The ceremonies included speeches by BJP leaders such as Advani, Murli Manohar Joshi and Uma Bharti. During the first few hours of the rally, the crowd grew gradually more restless, and began raising militant slogans. A police cordon had been placed around the mosque in preparation for attack. However, around noon, a young man managed to slip past the cordon and climb the mosque itself, brandishing a saffron flag. This was seen as a signal by the mob, who then stormed the structure. The police cordon, vastly outnumbered and unprepared for the size of the attack, fled. The mob set upon the building with axes, hammers, and grappling hooks, and within a few hours, the entire mosque was leveled.

    Hindus also destroyed numerous other mosques within the town.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply to smitha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *