மனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு

This entry is part 12 of 45 in the series 9 அக்டோபர் 2011

மலர்மன்னன்

“பிறர் கட்டுரைகளுக்கு மறுமொழியாக உனது கருத்துகளைத் தெரிவிப்பதைவிடத் தனிக் கட்டுரைகளாகப் பதிவு செய். ஏனெனில் காலப் போக்கில் பிறர் கட்டுரைகளுக்கு அடியில் மற்றவர்களின் மறுமொழிகளுக்கு இடையே உனது மறுமொழிகள் புதைந்து மறைந்துபோய்விடுகின்றன. மேலும் உனது பல கருத்துகள் மறுமொழி வடிவில் அமைவதால் கவனத்திற்கு வராமலும் போய்விடுகிறது. வந்தாலும் சேகரித்து வைத்துக்கொள்ள முடிவதில்லை” என்று சில நண்பர்கள் எழுதுகிறார்கள். யோசிக்கும் வேளையில் அவர்கள் சொல்வது சரியாகவே படுகிறது.

திண்ணை இணைய இதழின் அக்டோபர் 2, 2011 தேதியிட்ட
பிரதியில் டாக்டர் காலித் சோஹைல் என்பவர் முகமதியத் திலிருந்து வெளியேறி அதற்கு விளக்கமும் அளிக்கும் கலந்துரையாடல் கட்டுரை வடிவில் வெளியானது. ‘இஸ்லாமா அல்லது மதச் சார்பற்ற மனித நேயமா’ என்று அதற்கு வெகு பொருத்தமாகத் தலைப்பும் இடப்பட்டிருந்தது. ஏனெனில் டாக்டர் சோஹைல் மிகத் தெளிவாகத் தன்னிலை விளக்கம் அளிக்கையில் தாம் முகமதியத்தைத் துறந்தமைக்கான காரணங்களை அடுக்குகிறார். உரையடலில் அவரது கவனம் தாம் அனுசரித்து வந்த முகமதிய மதத்தின் மீதே குவி மையம் கொண்டிருந்தது. மதம் என்று அவர் பேசும்போது அவரது நினைப்பு தாம் சார்ந்திருந்த மதத்தைப் பற்றிய பிரக்ஞையிலேயே இருந்திருப்பதும் இயல்பே. அந்த அவதானிப்பில் இஸ்லாமல்ல, மதச் சார்பற்ற மனித நேயமே வேண்டுவது என்கிற சரியான முடிவுக்கு அவர் வருகிறார்.

ஆனால் இக்கட்டுரைக்கு மறுமொழி அளித்த சில வாசக நண்பர்கள் டாக்டர் சோஹைல் பொதுவாக மதம் என்று சொல்லும்போது அதில் ஹிந்து மதமும் சேர்த்தி என்று கருத்துத் தெரிவித்தார்கள். இதையொட்டி நானும் சில கருத்துகளை மறுமொழிகளாக வைத்தேன். இதற்கு எதிர்வினையாக மறுமொழி வேண்டாம், தனிக் கட்டுரை, தனிக் கட்டுரைதான் வேண்டும் என்று மின்னஞ்சல்களும் தொலைபேசி வழி ஆணைகளும் வரத் தொடங்கிவிட்டன.

முதலில் டாக்டர் சோஹைலின் பின்னணியைப் பார்ப்போம்.
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் 1947-ல் முஸ்லிம் லீக், இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற இரு அரசியல் கட்சிகளின் பதவிப் பேராசையின் விளைவாகப் பிளக்கப்பட்டு, ரத்தக் களறியில் ஒரு செயற்கை தேசமாக உருவான பாகிஸ்தானில் பிறந்தவர், சோஹைல்.

முக்கியமாகச் சுற்றுச் சூழலின் தாக்கமே மனித மனத்தில் கருத்தாக்கங்கள் முளைவிடுவதற்குத் தூண்டுகோலாக இருக்கிறது.

பாகிஸ்தானில் ஹிந்து தேசத்தையும் ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் துவேஷிப்பது ஒரு பாடத் திட்டமாக ஆரம்பப் பாடசாலையிலிருந்தே அனுசரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்தச் சூழலில்தான் சோஹைல் வளர்ந்து, கல்வி கற்று, இறைச் சக்தி மிகுந்த கருணையுடன் வழங்கியுள்ள சுய சிந்தனையைப் பயன்படுத்தி முகமதியத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார் என்கிற பிரக்ஞையுடன் அவரது கருத்துகளைக் கவனிக்க வேண்டும்.

டாக்டர் சோஹைல் மதத்தைப் பற்றிப் பேசுகிறபொழுது அவரது கவனத்தில் அவருக்கு நன்கு பரிச்சயமான மத்தியக் கிழக்கு ஆசிய வறண்ட பாலை நிலங்களில் தோன்றிய ஆபிரகாமிய மதங்களே இருந்திருக்கின்றன. அவரது தர்க்க விசாரத்தில் மதம் என்கிற அம்சம் இடம் பெறுகிறபோது, இயல்பாகவே ஆபிரகாமிய மதங்களே அவரது சிந்தனைப் போக்கை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அதற்கு இணங்க மிகச் சரியாகவே அவர் மதங்கள் மனித நேயத்தை வளர்க்க உதவாது, மனிதர்களைப் பிரித்துவைப்பதே அவை செய்கிற வேலை என்கிறார்.
ஹிந்து தர்மத்தின் மறைகள், உபநிடதங்கள், ஹிந்துஸ்தானத்தில் படைக்கப்பட்ட சமயம் சார்ந்த திரு மந்திரம் போன்ற தத்துவங்களை டாக்டர் சோஹைல் ஆழந்து படித்திருப்பார் என்று கருத இடமில்லை. புனித ஹிந்துஸ்தானத்து மண்ணில் தோன்றிய சமண, பவுத்த, சீக்கிய சமயக் கோட்பாடுகளையும் அவர் படித்திருப்பதாகத் தெரியவில்லை. இவற்றைப் பற்றி அவர் அறிந்திருக்கும் பட்சத்தில் மதம் என்று பொதுப்படையாகப் பேசும்போது அவற்றை விலக்கிவிட்டு ஆபிரகாமிய மதங்கள் என்று அடையாளப் படுத்தியே பேசியிருப்பார் என்று கொள்ளலாம்.

பூமியும் பூமியில் உள்ள சகலமும் மனிதனாகப் பிறந்த தனக்காகப் பிறந்தவை என்கிற சுய நலக் கோட்பாட்டை மனித வர்க்கத்தின் அடிமனத்தில் வேரூன்றச் செய்பவை ஆபிரகாமிய மதங்கள். அடிப்படையிலிருந்தே இவ்வாறான மனநிலை யிலேயே வளர்ந்தமையால்தான் மேற்கத்திய மனப்பான்மையும், அறிவியல் உள்ளிட்ட பல துறைகளும் சுற்றுப் புறச் சூழலையோ பிற ஜீவராசிகளையோ கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மனித வர்க்கத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்க நேரிட்டிருக்கிறது. எண்ணிறந்த உயிரினங்கள் இன்று இல்லாமலே போவதும், பல உயிரினங்கள் அழியும் நிலையில் இருப்பதும், இயற்கை வளங்கள் மள மள வெனக் குறைவதும், நீரும் காற்றும் வெளியும் மாசு படுவதும், யார் பெரியவர் என்கிற போட்டா போட்டிகளும் பலப் பரீட்சைகளும், இதனால்தான் நிகழ்கின்றன. பூமியில் தனக்கே சகல அதிகாரமும் என்று மனித வர்க்கம் மமதை கொள்ளப் பழக்கியவை ஆபிரகாமிய மதங்கள். எல்லாவற்றையும் உனக்காகவே படைத்தேன், எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்துப் பல்கிப் பெருகுவாயாக என இறைவன் ஆதி மனிதனுக்குச் சொன்னதாக அவை பிரகடனம் செய்கின்றன.

ஹிந்து சமயக் கோட்பாடு இதற்கு முற்றிலும் மாறாக, ஒரு நீண்ட, எண்ணிறந்த சேதன, அசேதனப் பொருள்களின் சங்கிலி வளையத்தில் மனித வர்க்கம் ஒரு கண்ணியே என்று சொல்லித் தருகிறது. இந்த ஒரு கண்ணி ஏறுமாறாகப் போனாலும் அது மற்ற எல்லாக் கண்ணிகளையும் பாதிக்கவே செய்யும் என்கிறது.
இந்த அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் அன்றாடம் புழங்கும் மேஜை, நாற்காலி, கட்டில் முதலான சகலத்துக்குள்ளும் மிகவும் நுட்பமாகவும் மந்த நிகையிலும் ஆன்மா உறைந்திருக்கிறது என்று ஸ்ரீ அரவிந்தர் சொல்வார். இதேபோல் பாறைகள் உள்ளிட்ட அசேதனப் படைப்புகளிலும் ஆன்மா உறைந்து ஆழ்ந்த மவுனம் சாதிக்கிறது. மலைகள், நதிகள், தாவரங்கள், பிராணிகள் என சகலத்திலும் ஆன்மா ஒவ்வொரு படிநிலையில் குடிகொண்டுள்ளது. எனவேதான் ஹிந்து சமயம் மலைகள், காடுகள், நதிகள் மரம் செடி கொடிகள் மிருகங்கள் எல்லாவற்றையும் இறைச் சக்தியாகவே காணச் சொல்கிறது. இந்த பூமியில் உள்ள சகல அம்சங்களுடனும் ஒருங்கிணைந்து ஒத்துப் போகுமாறு ஹிந்து சமயம் மனித வர்க்கத்துக்கு அறிவுறுத்துகிறது. ஹிந்து சமயக் கோட்பாடுகள் பூமியின் பாரம் கூடுதலாகக் கூடாது, அதனால் கேடு விளையும் என்று சொல்லும் போது, குறிப்பாக மனித வர்க்கத்தையே சுட்டுகின்றன. பூமியின் பாரத்தைக் குறைக்க மனித வர்க்கத்தில் கணிசமான அளவுக்கு அழிவு விளைய வேண்டும் என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் பூமிக்கோ அதில் உள்ள பிறவற்றுக்கோ ஏதேனும் சேதாரம் விளையுமானால் அதற்கு மனித வர்க்கமே காரணமாக இருக்கும் என்று ஹிந்து சமயம் உணர்ந்துள்ளது. ஹிந்து சமயப் புராணங்களயும் இதிஹாசங்களையும் ஆழ்ந்து படித்தால் இந்த உண்மை இலை மறை காய்களாக ஒளிந்திருப்பதைக் கண்டு கொள்ளலாம். இவற்றை வக்கிர புத்தியின்றி வாசிக்கப் பழகவேண்டும்.

ஹிந்து சமயம் இவ்வாறாக மனித நேயத்திற்கும் ஒரு படி மேலே சென்று, ‘அதென்ன படைப்புகளில் மனிதன் மட்டும் உயர்த்தி? அசைவன, அசையாதன, உயிர்த்துடிப்புள்ளவை, இல்லாதவை போலத் தோன்றுபவை சகலத்தினுள்ளும் ஆன்மா ஒவ்வொரு தரப்படி விழிப்பு நிலையிலும், அரைத் தூக்கமாகவும் ஆழ்ந்த உறக்கமாகவும் மறைந்து கிடக்கிறது. இவை இல்லாமல் நீ இல்லை. ஆகையால் ஆன்ம நேயம் செய்’ என்கிறது.

உண்மையில் அஹிம்சை என்பதாக ஒன்று இல்லை. குறைந்த பட்ச ஹிம்சைதான் உண்டு. உயிர்த்திருத்தலுக்கான சாத்தியக் கூறே ஹிம்சித்தல் மூலம் பெறப்படுவதுதான். எந்தவொரு நிகழ்விலும் ஹிம்சையின் பங்கு இருந்துகொண்டுதான் உள்ளது. அதுவே மூலாதாராமாகக் கூட இருக்கிறது. வலியில்லாமல் பிறவியில்லை, வலியில்லாமல் மரணமும் இல்லை. குழந்தை பிறக்கும்போது தானும் வலியை அனுபவித்து, தாய்க்கும் வலியை உண்டு பண்ணுவது இயற்கை நியதி. செயற்கை முறைகளில் இதை மீற முடியலாம், ஆனால் நியதியை மாற்றவியலாது. அவ்வாறு மீறுகையில் பின்விளைவுகளை அனுபவிக்கவும் நேரிடும். பின் விளைவின்றி இயற்கை நியதியை மீறுதல் சாத்தியமில்லை.

உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததாக உள்ள உணவை உண்பதே ஹிம்சையின் அடிப்படையில் நிகழ்வதுதான். சுவாசித்தலும்கூட ஹிம்சையின்றி சாத்தியமில்லை. ஆகையால் எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்த அளவு ஹிம்சையைப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவுக்குப் பயன்படுத்திக்கொள்வதே ஆன்ம நேயம். மிருகங்களின் இறைச்சிக்குப் பதிலாக தாவரங்களை உண்ணுதலுக்கு இதுதான் காரணம். தாவரங்களுக்கு வலியை உணரும் மூளையோ வலியை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்புகளோ இல்லை. எனவே ஒரு தாவரம் ஹிம்சைக் குள்ளாகிற போது எதிர்பாராத அதிர்ச்சிக்குள்ளாவதோடு அதன் இயக்கம் முற்றுப் பெற்றுவிடுகிறது. எனவேதான் தவிர்க்க இயலாத நிலையில் மிகக் குறந்த பட்ச ஹிம்சையைச் செய்து தாவரங்களை உணவாகக் கொள்ளும் வழக்கம் பழக்கப்படுத்தப் பட்டது. இது நிச்சயமாக சமணக் கோட்பாட்டின் தாக்கம்தான் ஆனால் இதற்கான மூல வேர்களை ஹிந்து சமயத் தத்துவங்களில் காண முடியும்.

சக மனிதரை மட்டுமின்றி சகல ஜீவராசிகளையும், உயிரில்லாதவைபோலத் தோன்றும் அனைத்தையுங்கூட
நேசிக்குமாறு ஹிந்து சமயம் கற்றுக் கொடுப்பதாக இருந்தால் விலங்குகளை வெட்டி எறியும் யாக குண்டங்கள் எப்படி வந்தன என்கிற கேள்வி இயல்பாகவே பலருக்கும் எழுவதைத் தவிர்க்க வியலாது.

ஒரே சொல் பல பொருள்களைக் குறிக்கும் நிலை எல்லா மொழிகளிலும் உண்டு. ஸமஸ்க்ருதத்தில் இது கொஞ்சம் அதிகம்.
மஹிஷி என்றால் அது பட்டத்து ராணியைக் குறிக்கலாம், எருமையையும் குறிப்பிடலாம். ஸர்ப்ப என்றால் பாம்பு என்று அர்த்தம் சொன்னால் அதற்கு சீக்கிரம் என்றும் ஒரு பொருள் உண்டு என்று பண்டிதர் சொல்வார். அச்வ என்றால் குதிரை மட்டுந்தான் என்று எண்ண வேண்டாம். ஏழு என்ற இலக்கத்தையும் அது குறிக்கும். அநாமிகா என்றால் பெண் என்றும் மோதிர விரல் என்றும் இரு அர்த்தங்கள் சொல்லலாம். இப்படி இன்னும் பல சொற்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆக, வேள்வி நியமங்களை விமர்சிக்க முனைந்தால் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்கிற கதையைத்தான் சொல்ல வேண்டும். ஆரிய சமாஜத்தை நிறுவிய ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி இதுபற்றி நிறையவே எழுதி யுள்ளார். அவர் இயற்றிய ஸத்யார்த்தப் பிரகாசன் படிக்கப்பட வேண்டிய படைப்பு.

மேலும் ஹிந்து சமயம் பன்முகப் பண்புகளின் சங்கமமாக இருக்கிறது. எனவே அதில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாகத் தோன்றுகிறது. வனவாசிகளின் உணவுப் பழக்கத்தில் இறைச்சி தவிர்க்க முடியாததாகிறது. கடலோர வாசிகளுக்கு மீனும் மேலும் பல நீர் வாழ் பிராணிகளும் உணவாகின்றன. நம்முடையது தொன்மையான பழங்குடியாதலால் இவ்வாறான பழக்கங்கள் நம்மிடையே நீடிக்கின்றன.

பயன்பாட்டுக்குரிய எதையும் நன்றியறிதலாக முதலில் இறைச் சக்திக்குப் படைக்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் கோயிலில் பலி பீடத்தை நிறுவி விட்டது. உள்ளே நுழையுமுன் உன் ஆணவத்தையும் அகந்தையையும் சுய நலன்களையும் பலியிட்டுவிட்டு சரணாகதியாக உள்ளே வா என்று சொல்வதற்கு அடையாளமாகத்தான் பலி பீடம் உள்ளது. ஆனால் அப்பாவி விலங்குகளைப் பலியிட்டு ரத்தம் குடிப்பதும் வழக்கமாகிப் போனது. இறைச்சி உண்ணும் பழக்கம் எப்படியும் நீடிக்கவே செய்யும். ஆகவே கிடா வெட்டிப் பொங்கலிட்டுத்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்றிருந்தால் விவேகம் வரும் வரை அதுவும் நீடிப்பதில் முரண் இல்லை. ஈவிரக்கமின்றித் துன்புறுத்துதலும் குருர இச்சையுடன் வேதனைப் படுத்தி மகிழ்தலும் தகாது என்று உணர்த்தவே ஆன்ம நேயம் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், ஹிந்துஸ்தானம் இடைவிடாமல் அந்நிய சக்திகளின் படையெடுப்புகளுக்கு ஆளாகிக்கொண்டே வந்துள்ளது. இப்படி வெளியிலிருந்து ஆக்கிரமித்த அந்நிய சக்திகள் மூர்க்க குணம் வாய்ந்த மத்திய ஆசிய இனக் குழுக்களாகவும் தர்ம நியாயம் அறியாத முரட்டு மேற்கு ஆசிய இனக் குழுக்களாகவுமே அமைந்துவிட்டன. கடல் மார்க்கமாய் மேற்குக் கரை சேர்ந்தவையும் அவ்வாறே இருந்தன. அவற்றில் சில அந்நிய கலாசாரங்களை ஹிந்து சமூகம், கவனியுங்கள், சமயம் அல்ல, சமூகம் சிறுகச் சிறுக உள்வாங்கிக்கொண்டது. இதன் காரணமாக வும் பல்வேறு அந்நிய சம்பிரதாயங்கள் சமயத்தின் பேரால் சமூக நடைமுறைகளில் வலிந்து திணிக்கப்பட்டுவிட்டன.

ஹிந்து சமயம் பிரபஞ்சம் முழுவதையுமே ஒன்றெனக் கொள்கிறது. எல்லாமே பிரபஞ்சத்தின் கூறுகளாக, அவை எவ்வளவு நுண்ணியவையாக இருந்தாலும் பிரபஞ்சத்தின் உறுப்புகளாகக் காண்கிறது. இந்த மனப் போக்கிலேயே வாழ்ந்து பழகிய முந்தைய ஹிந்துக்கள் தேசபக்திக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கத் தவறிவிட்டனர். இதன் விளவாகவே ஹிந்து சமூகம் அடிமைப்பட்டுப் போனது.

தர்மம் இன்னதென்று அறியாதோரிடம் நம் முன்னோர் தர்மப்படி நடந்ததும் அந்நிய கலாசாரங்கள் இங்கு ஊடுருவியதற்கு ஒரு காரணம். பாரதிக்கும் ஸ்ரீ அரவிந்தருக்கும் ஊழியம் செய்த பாக்கியவான் வ. ராமஸ்வாமி என்கிற வ. ரா. இதைப்பற்றி ‘நம் முன்னோர்’ என்ற கட்டுரையில் எழுதுகையில், ‘டில்லியில் அரசாண்ட ப்ருத்வி ராஜருடைய வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆறு தடவை அவர் முகமது கோரி என்பவனை தானேச்வரம் என்ற க்ஷேத்தித்தில் தோற்கடித்தார். போர்க் களத்தில் ஆறு தடவையும் ப்ருத்வி ராஜர் கோரிக்கு அபயங் கொடுத்து ஊருக்கு அனுப்பினார். முடிவு என்ன? ஏழாம் தடவை கோரி தானேச்வரத்தில் சந்தித்து சண்டை செய்து அவரைக் கொன்றுவிட்டான். ப்ருத்வி ராஜர் காண்பித்த கருணை சிறிய தவறாகும். அது எவ்வளவு ப்ரம்மாண்டமான குற்றமாக ஆகிவிட்டது என்பதைச் சரித்திரம் ருசுப்படுத்திவிட்டது’ என்று குறிப்பிடுகிறார்.

நாம் இன்று அடிமைகளாக இருப்பது நம் முன்னோர்களின் தவறுகளினால் என்பதில் சந்தேகமேயில்லை என்று அவர் எழுதுகிறார். ‘நம்முடைய முன்னோர் காண்பித்த மதியீனத்தை மனச்சாட்சி லவலேசமும் இல்லாத அந்நியர்கள் தங்களுக்குச் சாதகமாக உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள்’ என்று வ. ரா. மேலும் ஞாபகப்படுத்துகிறார். எந்த அந்நியரும் அவர்களின் சொந்த புஜ பல பராக்கிரமத்தால் நம்மை அடிமை கொள்ள வில்லை. எமது முன்னோர் செய்த பிழைகளால்தான் அந்நிய சக்திகள் ஹிந்துஸ்தானத்திற்குள் நுழைந்தன என்று அந்த முன்னோரின் வழித் தோன்றல் என்ற உரிமையுடன் வ.ரா. குற்றம் சாட்டுகிறார். இதை இன்றைய தலைமுறையினரான நமக்குத் தரப்பட்டுள்ள சூசகமான முன்னெச்சரிக்கை என்று புரிந்து கொள்ள வேண்டும். நமக்குப் பின்னால் வரப் போகும் சந்ததிகள் நம்மையும் இப்படிக் குற்றம் சாட்டுவதற்கு நாம் இடமளிக்கப் போகிறோமா?

ஆன்ம நேயம் என்பது எத்தகைய முறைகேட்டையும் பெருந்தன்மையுடன் சகித்துக் கொண்டிருப்பதல்ல. சாத்விகம் என்பதும் கோழைத்தனமாக இருப்பதல்ல. பகைவனுக்கு அருளுதல் என்பது அவனுக்கு வெற்றிபெற வாய்ப்பளிப்பதல்ல. மாறாக துவேஷமோ வெறுப்போ இன்றி ஒரு கடமையாக அவனை சம்ஹரிப்பதாகும். ஆன்ம நேயத்துக்கு அது முரண் அல்ல. பெரும்பாலானோர் நலன் கருதி களை எடுப்பதும், கிருமிகளையும் பூச்சிகளையும் அழிப்பதும் ஆன்ம நேயத்துக்கு முரண் அல்ல. உன்னால் தீமையே விளைகிறது, ஆகையால வேறு வழியின்றி உன்னை அழிக்கிறேன் என்கிற மனோபாவத் துடன் அவ்வாறான செயல்களில் இறங்க வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள சடங்காச்சாரங்களை எல்லாம் சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு ஹிந்து சமய அடிப்படைக் கோட்பாடுகளை ஆழ்ந்து நோக்கினால் மனித நேயத்தையும் கடந்து ஆன்ம நேயத்தை வளர்த்துக் கொள்ளும் பக்குவம் தானே வரும்.

இன்றைய நிலவரங்களை வைத்து ஹிந்து சமயக் கோட்பாடு களை முரண்பாடுகளின் மொத்தக் கலவை என்கிற முடிவுக்கு வந்துவிடுவது சரியாகாது. என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத இரு தொன்மைச் சமயம் எல்லா அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு இன்றளவும் நீடித்திருப்பதே ஒரு பேரதிசயம். காலப் போக்கில் ஒட்டிக் கொள்ளும் கசடுகளை யெல்லாம் அகற்றி ஹிந்து சமயம் தொடர்ந்து முன்போல பிரகாசித்துக்கொண்டிருக்க முயற்சி எடுத்தால் போதும். அசலான ஹிந்து சமயக் கோட்பாடுகள் இன்றைய தேதியிலும் மனித வர்க்கம் முழுமைக்கும் பயன் படுவதாகவும் நல்ல புத்திமதி சொல்வதாகவும் இருக்கும்.

Series Navigationசயனம்உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி
author

மலர்மன்னன்

Similar Posts

56 Comments

  1. Avatar
    V. Srinivasan says:

    இந்த கருத்துக்களை வெளியிட்ட திண்ணை ஆசிரியர் குழுவுக்கு நன்றி.
    மிக லாவகமாக சரித்திரப் பின்னணியையும் + ஆழத்திலே பொதிந்துள்ள சனாதன சத்தியத்தையும் + முன்ன்னனியிலே நின்று நாம் இப்போ செய்ய வேண்டிய முயற்ச்சிகளையும் அருமையாக நேரடியாகச் சொல்லியிருக்கும் கட்டுரை ஆசிரியருக்கும் நன்றி. இந்தக் கட்டுரையைப் பல தடவை படித்தால் சில விஷயங்கள் மிகச் சரியாகத் தெளிவாக விளங்கும்.
    நமது உலகம் தழுவிய பிரச்சனைகளை இதுபோல ஒரு பரந்துபட்ட விரிந்த அகண்ட நோக்கோடு சரியாக கவனித்து ஒரு முழுப் பரிமாணத்தை நோக்கி பொது கருத்தும் – அதை உந்தும் நடவடிக்கைகளும் வளர, இது போன்ற விளக்கங்கள் அவசியம் தேவை.
    கஞ்சி குடிப்பதற்கு வழி இல்லார். அதன் காரணம் ஈதென்ற அறிவும் இல்லார் என்று வருந்தினார் நம் மாகவி.
    நம்மிடையே உள்ள கசடு என்ன என்று ஒழுங்காகத் தெரிந்தால் புரிந்தால் தானே அதை சரி செய்யவோ, வெளுக்கவோ முடியும் ?
    நம்மை தெளிவு நோக்கி இட்டுச் செல்லும் இது போன்ற கருத்துப் பிரவாகங்களைத் தயவு செய்து திண்ணை தொடர்ந்து வெளியிட்டு , சீரிய சிந்தனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உதவ வேண்டும்.
    திண்ணைக்கு சாயமடிப்பவரகைக் கண்டு கொள்ளாத திண்மை இப்படியே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அந்த இறை அருளைப் பிரார்த்திக்கிறேன்.
    நன்றி.
    வணங்கி மகிழ்கிறேன்.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  2. Avatar
    கிருஷ்ண புத்திரன் says:

    டாக்டர் சோஹைலின் பேச்சு குறித்து காவ்யா எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் இருக்கும் என ஆவலோடு வந்த எனக்கு ஏமாற்றம்.

    டாக்டர் சோஹைல் என்ன சொல்லி இருக்கிறார், காவ்யாவின் கேள்விகள் என்ன என்பவை பற்றிக் கவலை இல்லாமல் தனது வழக்கமான பல்லவியைத்தான் மலர்மன்னன் இங்கே பாடி இருக்கிறார். அதைக்கூட மன்னித்து விடலாம். ஆனால், டாக்டர் சோஹைல் சொன்னதற்கு முற்றிலும் மாறான எதிரான கருத்தை சோஹைல் குறித்துத் தருகிறார். டாக்டர் சோஹைல் என்ன சொல்லி இருக்கிறார் என்பது பற்றி மலர்மன்னன் படித்தாரா என்பதே கேள்வியாகிறது.

    உதாரணமாக, மலர்மன்னன் இந்தக் கட்டுரையில் சோஹைல் குறித்துச் சொல்கிறார்:

    //..ஹிந்துஸ்தானத்து மண்ணில் தோன்றிய சமண, பவுத்த, சீக்கிய சமயக் கோட்பாடுகளையும் அவர் படித்திருப்பதாகத் தெரியவில்லை…//

    படித்தவுடன் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.

    தன்னுடைய கட்டுரையில் மிகத் தெளிவாக புத்தரால் பாதிக்கப்பட்டதை டாக்டர் சோஹைல் சொல்லி இருக்கிறார். அதைப் படிக்கும்போது, புத்தர்தான் சோஹைலின் தைரியமான மனமாற்றத்திற்குக் காரணமாக இருக்கிறார் என்று தெரிகிறது.

    சோஹைலின் கட்டுரையில் இருந்து புத்தர் குறித்த அவர் அனுபவத்தை இங்கு இடுகிறேன்:

    ///இந்த மதச்சார்பற்ற கருத்துக்களில் என்னை கவர்ந்தது சீனாவின் கன்பூஷியஸ், கிரீஸில் சோக்ரடீஸ், இந்தியாவின் புத்தர் ஆகியோர். இவர்களது போதனைகளின் மையக்கருத்துக்களை புத்தரது வாக்கியங்களில் பார்க்கலாம்.

    ஞானவான் என்று சொல்லப்படுபவர் சொன்னார் என்பதால் எதையும் நம்ப வேண்டாம்.

    பொதுவான நம்பிக்கை என்பதால் எதையும் நம்பவேண்டாம்.

    புராதனமான புத்தகங்களில் சொல்லப்பட்டது என்பதால் எதையும் நம்பவேண்டாம்.

    இறைவனின் வார்த்தை என்று சொல்லப்படுவதால் எதையும் நம்பவேண்டாம்.
    மற்றவர்கள் நம்புகிறார்கள் என்பதால், எதையும் நம்பவேண்டாம்.

    நீயே பரிசோதித்து நீயே நீதிபதியாக இருந்து உண்மை என்று உணர்ந்தால் மட்டுமே நம்பு.

    ஒருவனது தனி அனுபவமே அவனுக்கு சிறந்த ஆசிரியர் என்று புத்தர் நம்புகிறார்.////

    ஆனால், மலர்மன்னன் சோஹைல் பவுத்தக் கோட்பாடுகளைப் படித்திருப்பதாகத் தெரியவில்லை என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்.

    //..ஹிந்துஸ்தானத்து மண்ணில் தோன்றிய சமண, பவுத்த, சீக்கிய சமயக் கோட்பாடுகளையும் அவர் படித்திருப்பதாகத் தெரியவில்லை…//

    LOL LOL

    அதனோடு, இந்தக் கட்டுரையில் காழ்ப்புணர்வு நிறைந்த கருத்துக்களையும் முன்வைக்கிறார். மாமிசம் சாப்பிடுபவர்கள் எல்லாம் விவேகமற்றவர்கள், வனவாசிகளும் கடலோரவாசிகளும்தான் மாமிசம் சாப்பிடுவார்கள், சைவ உணவு உண்பவர்களுக்குத்தான் கருணை உண்டு என்பது போன்ற மேட்டிமைக் கருத்துக்களைத் திணிக்கிறார்.

    இதைப் படித்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது:

    //ஆகவே கிடா வெட்டிப் பொங்கலிட்டுத்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்றிருந்தால் விவேகம் வரும் வரை அதுவும் நீடிப்பதில் முரண் இல்லை.//

    மாமிசத்திற்கும் விவேகத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை.

    இந்து ஞான மரபில் புலால் மறுப்பது உயர்வாகக் கருதப்படுகிறது. ஆனால், புலால் உண்பவருக்குக் கருணை கிடையாது விவேகம் வராது என்றெல்லாம் எங்கும் இல்லை.

    புலாலை நன்கு ருசித்துச் சாப்பிட்ட ஒரு மாபெரும் ஞானி தனக்கு வைத்துக் கொண்ட பெயர் “விவேகா”னந்தர். மலர்மன்னன் சிந்தனைப்படி இவருக்கு விவேகம் என்பது கிடையவே கிடையாது. :)

    பாசமுடன் தனக்கு ஒருவர் கொடுத்த பன்றிக்கறியை உண்டு, உயிரைத் தியாகம் செய்த புத்தருக்கு இல்லாத கருணை, சைவ உணவைச் சாப்பிட்டுவிட்டு மனிதர்களை ஏமாற்றிச் சுரண்டி வாழும் சேட்டுகளுக்கு இருக்கிறது என்பது பெரிய ஏமாற்று வேலை.

    நடைமுறையில் இந்துக்கள் அனைவரும் புலால் உண்ணத்தடை இல்லை. அதேபோல புலாலை காருண்யத்தின் அடிப்படையில் ஒருவர் ஒதுக்க விரும்பினால் அதுவும் தடை செய்யப் படுவதில்லை. இப்படித்தான் இந்து மதம் இருக்கிறது. தனிமனித வாழ்க்கை சுதந்திரம் மற்றும் ஆன்மீகம்தான் இந்து மதம். ஆனால், தூய இஸ்லாம் போல ஒரு தூய இந்து மதத்தை மலர்மன்னன் உருவாக்க விரும்புகிறார்.

    அதற்காக, யாக குண்டத்தில் விலங்குகள் பலி கொடுக்கப்பட்டன என்ற உண்மையைக்கூட ஏற்க மறுக்கிறார். விலங்குகள் பலி கொடுக்கப்பட்டன என்று சொல்லும் சம்ஸ்க்ருத நூல்கள், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தைகளைக் கொண்டிருக்கின்றன என்று வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார்.

    அப்படி என்றால் புத்தர் பொய் சொன்னாரா ?

    உண்மையை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லாமல் வெறும் வார்த்தை விளையாட்டு விளையாடிய அண்ணாவின் பக்தர், அண்ணாவைப் போலவே காழ்ப்புணர்ச்சியோடு எழுதவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.

    எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாகக் கடைசியில் வச்சாரய்யா ஒரு பெரிய ஆப்பு.

    //இன்றைய நிலவரங்களை வைத்து ஹிந்து சமயக் கோட்பாடு களை முரண்பாடுகளின் மொத்தக் கலவை என்கிற முடிவுக்கு வந்துவிடுவது சரியாகாது.\

    “முரண்பாடுகள்” என்ற வார்த்தை சமயோசிதமான வார்த்தை. இந்து மதத்தில் இருப்பது “வேறுபாடுகள்”. “முரண்பாடுகள்” இல்லை. வேறுபாடுகளால் பிரச்சினைகள் எழுந்தால்தான் “முரண்பாடுகள்” ஆகும்.

    சைவ வாதிகளுக்கும், அசைவ வாதிகளுக்கும் இடையில் எந்தப் பிணக்கும் இல்லை. மிகத் தெளிவான புரிந்துணர்வும் மதிப்பும் அங்கீகரிப்பும் இருக்கின்றன. ஆனால், இவர்களுக்கு இடையில் “முரண்பாடுகள்” இருப்பதாக மலர்மன்னன் சொல்லுகிறார். இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இல்லாவிட்டால் உருவாக வேண்டும் என்பதற்காகக் கட்டுரைகள் எழுதுகிறார்.

    முரண்பாடுகள் என்பது சுன்னி பிரிவுக்கும், ஷியா பிரிவுக்கும், அகமதியா பிரிவுக்கும் இடையில் இருக்கின்றவை. ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும், குத்திக் கொண்டும் சாகடிக்கச் செய்பவை. இவற்றை டாக்டர் சோஹைல் தனது கட்டுரையில் சொல்கிறார்.

    ஆனால், மலர்மன்னன் இந்த (காலப் போக்கில் ஒட்டிக் கொள்ளும் கசடுகளான) முரண்பாடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு ”அசலான” இந்து சமயக் கோட்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்.

    இதே போலத்தான் 7ம் நூற்றாண்டில் ஒருவர் சொன்னார். இறைவனின் கருத்துக்கள் காலப் போக்கில் தவறாகப் புரிந்துகொண்ட மதத்தலைவர்கள் கெடுத்துவிட்டார்கள் என்றும் ”அசலான” வேத வாக்குகளை நான்மட்டுமே தருகிறேன் என்றும் சொன்னார்.

    அன்று ஆரம்பித்த மதவெறி இன்று உலகம் முழுவதும் ரத்த வெள்ளத்தை ஓடச் செய்கிறது.

    அரேபியாவில் முகமது என்றால், இந்தியாவில் மலர்மன்னன் போல் பலர்.

    தலிபான்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.

    .

  3. Avatar
    malarmannan says:

    மறுமொழி அளித்துள்ள ஸ்ரீ க்ருஷ்னபுத்ரன் என்பவர் மிகவும் பாமரத்தனமான புரிதல் உள்ளவராகப் புலப்படுகிறது. இவருக்கு புத்தர் சொன்ன ஒரு அறிவுரைதான் பவுத்த கோட்பாடு எனத் தோன்றுகிறது. பவுத்த சமயக் கோட்பாடு எனபது நான்கு மகா உண்மைகள், புனிதமான எண்வழிப் பாதை, கருமம், மறுபிறவி, பிறவி குணம், மூன்று உலகளாவிய குணாம்சங்கள், ஐந்து தொகுப்புகள் முதலானவையாகும்.
    ஸ்ரீ க்ருஷ்ணபுத்ரனுக்கு எதையும் குதர்க்கமாவே புரிந்துகொள்ளும் இயல்பும் கட்டுரையில் சொல்லப்படாத கருத்தைச் சொன்னதுபோல் பாவித்துகொண்டு பதில் சொல்லும் பழக்கமும் இருப்பதாகவும் தெரிகிறது. ஆலயத்தில் விலங்குகளை பலி கொடுக்கும் வழக்கம் காலப் போக்கில் மறையும் என நான் நம்பிக்கை தெரிவித்தால் அதை நான் ஏதோ புலால் உண்பதை இழிவாகவும் மரக் கறி உணவுதான் மேன்மையானது என்று எழுதிவிட்டதுபோலவும் திரித்து அதற்கு பதிலும் சொல்கிறார்! ஹிந்து சமயத்தை முரண்பாடுகளின் மொத்தக் கலவை என்கிற முடிவுக்கு வந்துவிடுவது சரியாகாது என்று நான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதன் பொருள் முரண்பாடு இல்லை என்பதுதானே! ஆனால் நான் ஹிந்து சமயத்தில் முரண்பாடு இருப்பதாகச் சொல்கிறேன் என்கிறார்!

    டாகடர் சொஹைலின் மதம் குறித்த பார்வை வட்டத்துக்குள் ஹிந்து மதம் வரவில்லை என்பதும் மனித நேயம் என்பதற்கும் மேல் ஒரு படி இருப்பதைச் சுட்டுவதும்தான் கட்டுரையின் மையக் கருத்து. இதை நான் அப்படியொன்றும் பின் நவீனத்துவபாணியில் எழுதிவிடவில்லையே!

    ஸ்ரீ க்ருஷ்னபுத்ரனின் மறுமொழியைப் படித்ததில் எனக்கு சிரிப்பு வரவில்லை. அவர் மீது அனுதாபமே உண்டாகிறது.

    -மலர்மன்னன்

  4. Avatar
    GovindGocha says:

    அரேபியாவில் முகமது என்றால், இந்தியாவில் மலர்மன்னன் போல் பலர்.—> நண்பர் பாவம்… அரேபியா முகமது பற்றித் தெரியாது போலும்.

  5. Avatar
    malarmannan says:

    //வேள்வி நியமங்களை விமர்சிக்க முனைந்தால் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்கிற கதையைத்தான் சொல்ல வேண்டும். ஆரிய சமாஜத்தை நிறுவிய ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி இதுபற்றி நிறையவே எழுதி யுள்ளார். அவர் இயற்றிய ஸத்யார்த்தப் பிரகாசன் படிக்கப்பட வேண்டிய படைப்பு. //

    மேலே உள்ளது எனது கட்டுரையில் இடம்பெறும் பகுதி. வேள்வி நியமங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விலங்குகள் ஆஹுதியாக அளிக்கப்பட்டன என்பது குறிப்பு. வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களூக்கு இது எலிமெண்டரி. ஆரிய சமாஜம் என்ற சீர்திருத்த அமைப்பைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி என்ற துறவி ஸ்தாபித்தார். அவர் வேள்வி நியமங்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். ஆனால் மிகவும் நேரடியாகவும் எளியமுறையிலும் எழுதுவதையே புரிந்துகொள்ள இயலாதவர்களுக்கு ஸ்ரீ தயானந்தரின் ஸத்யார்த்தப் பிரகாசனையும் பிற கட்டுரைகளையும் புரிந்துகொள்வது சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான்.
    -மலர்மன்னன்

  6. Avatar
    கிருஷ்ண புத்திரன் says:

    ஆரிய சமாஜத்தினர் போல, இஸ்கான்காரர்கள் வேறு சில கருத்துக்களை முன்வைப்பார்கள். ராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்தவர்கள் சில கருத்துக்களை முன்வைப்பார்கள். அரவிந்தரும் சில கருத்துக்களை முன்வைப்பார். அண்ணாத் துரையும் சில கருத்துக்களை முன்வைப்பார்.

    தன் தவறான வாதத்திற்காக, அவற்றில் இருந்து ஒருவர் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து முன்வைத்தால், அவர்கள் எப்படிப் பொறுப்பாவார்கள் ? மலர்மன்னனின் திரித்தலுக்கு தயானந்த ஸரஸ்வதியை எப்படிப் பொறுப்பாக்க முடியும் ?

    மலர்மன்னனின் குறைபாடுகளை மலர்மன்னனின் கட்டுரையில் இருந்த வரிகளின் மூலமே எடுத்துச் சொல்லி இருந்தேன். ஆனால், அந்த வரிகளைப் பற்றிப் பேசாமல் தயானந்த ஸரஸ்வதியைக் கேடயமாக்கித் தப்பிக்க நினைக்கிறார். சுட்டிக் காட்டப்பட்ட வரிகளைப் பற்றிப் பேசாமல், எதை நான் குறை சொல்லவில்லையோ அதைப் பற்றிப் பேசச் சொல்லுகிறார். காஃபிர்களைக் கொல்லுங்கள், அடிமைப்படுத்துங்கள் என்று குரானில் இருக்கிறதே என்று கேட்டால், மற்ற மதத்தவர் மேல் கருணை காட்டுங்கள் என்று குரானில் சொல்லி இருக்கிறதே என்று பேசும் முகமதியர்களைப் போலவே இவரும் தக்கியா செய்கிறார்.

    புலால் சாப்பிடுபவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள், விவேகமற்றவர்கள் என்று அவர் சொன்னால், என் போன்ற பரம்பரை பரம்பரையாகப் புலால் உண்ணும் குலத்தவர்கள் எல்லாம் விவேகமற்றவர்கள், காட்டுமிராண்டிகள் என்று மறைமுகமாகச் சொல்வதுதானே அவரது நோக்கம் ?

    மாமிசம் சாப்பிடும் நாங்கள் எல்லாம் பாமரர்களாகவே இருந்து விட்டுப் போகிறோம். ஆனால், எங்கள் கருத்துக்களையும், உங்கள் கட்டுரையையும் படிப்பவர்களுக்கு எது சரி என்பது தெரியும். அவர்களில் பலர் மாட்டுக்கறியும், பன்றிக்கறியும் சாப்பிடுபவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு “விவேகம்” உண்டு.

    .

  7. Avatar
    கிருஷ்ண புத்திரன் says:

    //ஹிந்து சமயத்தை முரண்பாடுகளின் மொத்தக் கலவை என்கிற முடிவுக்கு வந்துவிடுவது சரியாகாது என்று நான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதன் பொருள் முரண்பாடு இல்லை என்பதுதானே!//

    இந்த வரியின் பொருள் “முரண்பாடுகளே இல்லை” என்பதல்ல. முரண்பாடுகளின் “மொத்தக் கலவை” இல்லை என்பதுதான் மலர்மன்னனின் வாதம்.

    அதாவது, க்ரிஸ்டியன் முஸ்லீம் மதங்கள் போல இந்து மதமும் ஒற்றைத் தன்மை உடைய ஒரு மதம் என்பதுதான் அவர் கருத்து. அதை முஸ்லீம்கள் வந்து கெடுத்துவிட்டார்கள். எனவே தூயமையான ஒரு இந்து மதத்திற்குத் திரும்புங்கள் என்கிறார்.

    ஆனால், அவர் சொன்னதை அவரே மறுப்பதைக் காணுகையில் எனக்கு அனுதாபம் வரவில்லை. சிரிப்புத்தான் வருகிறது.

    அவரது எழுத்தில் உள்ள கோபத்தைப் பார்க்கும்போது அவர் ஒரு இளந்தாரி என்று யூகிக்கிறேன். காலம் அவரைப் பக்குவப்படுத்தும்.

    .

  8. Avatar
    காவ்யா says:

    A synopsis of his essay in English as culled out by me. Because, his essay is a potpourri of many points mixed confusingly. He purported to write on Sohail; but ended up in a confusing mixture about Hindu religion, that too, full of conflicting versions. Now, read on what he says and find out how he confuses us.

    “According to Hindu religion, God is omnipresent in all forms of nature: both living and non-living. So, a follower of Hindu religion won’t harm all forms of nature, including fellow humans. He lives in harmony with nature and a protector of flora and fauna and fellow human beings.

    So, Hindu religion is both man-loving and animal and nature loving.

    Malarmannan goes on to say a conflicting point: Without violence, there is no life for anyone. As we live off natural objects like plants and animals killing them for food. violence is unavoidable. However, killing of animals for food is generally not likable. So, Hindu religion adopted the Jain’s concept of non killing of animals for food although such concept is really original to Hindu religion

    The question arises as to how animal sacrifice came to be accepted in Hindu religion while it insists on non violence to animals and nature. For this, he says it is due to some conflicting thoughts and their adoption in practical life. This conflict is natural or unavoidable. But he concedes that such non veganism or sacrifice of animals will go away once the persons concerned are mature enough to understand that the religion’s core principle is non violence.  Not only such inherent conflicts in the religion are responsible for killing of animals, but also the ingress of foreign religions into India with their violent creeds, is responsible for Hindus to imitate their violent way of life.

    As Hindus saw God everywhere, they had not acquired the habit of hating anyone even if the foreigners are known barbarians and cruel. This naivete was exploited by the invaders who imposed themselves on Hindus and finally invaded Hindus and their culture. Please note, the invading religions which came from Middle East (abrahamites) are barbarous. But please note, only upon Hindus as a community, not on Hindu religion proper. Malarmannan implies Hindu society and Hindu religion are separate.

    No national spirit developed among Hindus due to their religious belief in seeing God everywhere which broadminded principle naturally led them to see God in the cruel and barbarous foreign invaders and tolerating all their cruelty. (This reminds one of Jesus Christ’s teaching of love and forgiveness, ironically 
    He quotes Vaa. Raa (who is better known as a progressive thinker unfortunately born among the conservative society of Brahmins and his progressive thinking led CN Annadurai to call him Agrharaththu Athisaya manithar). Va .Raa wrote that his Hindu forefathers went down to foreign invaders because of their tolerant nature – and, ah, yes – for having the same religious principle of love thy neighbour as thyself; forgive your enemies, show your cheek to whosoever who has slapped your other cheek etc. (Pl note this view of Va Ra is nothing but the view of extreme elements in the religion, which are generally or loosly called ‘Hindutva forces’. Malarmannan passes it to Va. Ra in order to give a respectable veneer !)

    Malarmanna concludes, we must repulse our enemies using their method of violence. Anama neyam (I don’t know what he means here.) is not to show your left cheek to the slapper when he has already slapped your right cheek. Instead, slap him back. In other words, anma neyam means violence for violence, bullet for a bullet, tooth for a tooth, eye for an eye – in short, the ancient Jungle law Anma neyam means therefore adopting the Jungle law against your enemies since they originally threw such \law upon us, Hindus. In other words, exactly what Jihadis say.

    Then in the last two paras, he bores us saying there is no conflict in his religion. If you cast aside all existing practices, and look closely into the religion, you, as a Hindu, will develop both love of fellow humans (manitha neeyam) and love of ????(anmaya neyam) i.e love that goes above maitha neyam.

    (I tried hard to understand the essay, as he has made it into potpourri of variety of thoughts which conflict one another at times. As a commenter put it, his attempt is to make a new Hindu religion of hatred and violence and for that noble task, he picks up some here and some there from the religion itself, and makes out a strong case. He uses Tamil in the fashion of elderly person’s address – dagger in a velvet glove!)

  9. Avatar
    anony says:

    மலர்மன்னன் ‘கிருஷ்ண புத்திரன்’ என்ற பெயரை ‘ஸ்ரீ க்ருஷ்னபுத்ரன்’ என்றும் இந்து என்பதை ஹிந்து என்றும் எழுதுவதன் பின்னுள்ள அரசியல் என்ன?

  10. Avatar
    காவ்யா says:

    சோஹைலைப்பற்றி மலர்மன்னன் சொல்வது ஒன்றே ஒன்று: இந்துமதத்தைப்பற்றி சோஹைல் அறியவில்லை.
    மலர்மன்னன் கருத்தின்படி, அப்படி அறிந்திருந்தால் அவர் இந்து மதத்தில் மனித நேயம் உண்டு என்று இந்து மதத்தை ஏற்றிருப்பார்.

    மலர்மன்னன் சொல்லாதது: “இந்து மதத்தின் உள்ள அடிப்படை கொள்கையான ‘விண்ணுலகம் புகுவது மண்ணவர் விதியே’ என்பது. இவ்வுலக வாழ்க்கை அவ்வுலக வாழ்க்கைக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்வது. அப்படிக்கொள்வதன் வழிகளில் ஒன்றே ஒன்றுதான் மனிதனேயம்.”

    சோஹைல் இந்து மதத்திற்கு வந்து மனிதனேயத்தைக் கண்டால் மட்டும் இந்துவாகி விடுவாரா ?

    மேலும் மலர்மன்னன் இன்றைய காலகட்டத்தில் இந்துக்களுக்கு வன்முறையே சரியான வழி; இல்லையென்றால் பிறர் அவர்களை அழித்துவிடுவார்கள். அப்படி வன்முறையை எடுக்காததனாலே இந்து முன்னோர்களை வெளி தேசத்தார்கள் அடிமைப்படுத்தினார்கள். எனவே வன்முறையே ஒரே வழி.

    வன்முறையே சிறந்த வழி என்பது ஜிஹாதிகளில் வழி. மாவோயிஸ்டுகளின் வழி. இது மனித நேயத்துக்கு எதிரானது. சோஹைல் ஜிஹாதிகளைக்கண்டு வெறுப்படைந்துதானே ஐரோப்பியத் தத்துவத்துக்குள் மனித் நேயத்தைத் தேடுகிறார் ?

    உடன்பிறந்தோராயினும் நமக்கு நன்மையென்றால், அல்லது ஒரு பொது நன்மையென்றால், அவர்களைத் தயங்காமல் கொல்ல வேண்டுமேன்பது பகவத் கீதை. இதுவும் ஜிஹாதி வழியே. அவர்களும் இதைத்தான் ஏற்கிறார்கள்.” இசுலாமே ஒரே வழி. அதுவே உலக நன்மை. எனவே உலக நன்மைக்காக இசுலாத்தை ஏற்க மறுப்பவர்களையும் பிறமத்ததினரையும் கொன்று விடுவோம்” என்கிறார்கள்; செய்தும் வருகிறார்கள் இது கீதை சொன்ன வழியில்லாமல் வேறென்ன ?

    இதுவும், மலர்மன்னன் இன்று சொல்லும் வன்முறையே சிறந்த வழி எதிரிகளை அடக்க என்பதெல்லாம் மனித நேயத்துக்குள் வருமா ?

  11. Avatar
    malarmannan says:

    நிறைய திக்விஜய சிங்குகள் திண்ணைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்!
    -மலர்மன்னன்

  12. Avatar
    malarmannan says:

    //என்றைக்குத் தோன்றியது என்று அனுமானம் செய்வதற்கே இயலாத இரு தொன்மைச் சமயம் எல்லா அத்துமீறல்களையும் தாங்கிக்கொண்டு இன்றளவும் நீடித்திருப்பதே ஒரு பேரதிசயம். //

    இரு என்பது ஒரு என்பதாக இருக்க வேண்டும்.
    -மலர்மன்னன்

  13. Avatar
    காவ்யா says:

    இசுலாமும் கிருத்துவமும் காட்டுமிராண்டிக் கலாச்சாரத்தை இந்தியாவுக்குள் நழைத்ததால் இந்துக்கலாச்சாரத்திலும் வன்முறை பெருகியது.

    இந்து தர்மமமான எங்கேயும் இறைவனைக்காணல் ஒரு பெரும் இடைஞலாக இந்துகளுக்கும் இருந்தது. எனவே காட்டுமிராண்டிக்கலாச்சாரத்தைக் கொண்டு வந்த அன்னிய மதங்கள் இந்துக்களின் மேல் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டின.

    இதைத் தடுப்பது எப்படி? இந்துக்கள் தங்கள் பழைய தர்மத்தை விட்டுவிட்டு வன்முறைக்கு வன்முறையே பதிலாகும் எனப் புதிய இந்துமதக்கோட்பாடை இங்கே எழுதியது மலர்மன்னந்தானே?

    மலர்மன்னன் ஏன் திகவிஜய்யை எடுக்கிறார்? இங்கே மலர்மன்னனின் கட்டுரையா டாண் என்று நிற்கிறதே ? தமிழில் குழப்பமாக எழுதியதை ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கேனே !

    பல உயிர்கள் பலியாக வேண்டும் ? பல மண்டைக்காடுகளும் தென்காசிகளும் உருவாக வேண்டும் என்ற கொடிய ஆசைதானே இந்துக்களை வன்முறையைக்கையிலெடுக்க என எழுதத் தூண்டுகிறது. இந்த வயதில் இந்த ஆசை தேவையா ? இதுவா மனித நேயம் ?

    எல்லோரும் மலர்மன்னன் கட்டுரையைப்படியுங்ங்கள் தெளிடில்லையெனில் என் ஆங்கில ஆக்கத்தைப் படியுனங்கள் நான் சொல்வது பொய்யா ?பெரியவரின் பதில் சொல்லட்டும்.

    1. Avatar
      காவ்யா says:

      அவர் சொல்லும் பதிலென்ன என்று கேட்க ஆவலாய் இருக்கிறார்கள். ஏன் தடுக்கிறீர்கள் ? வன்முறையைத்தூண்டுவதும் இசுலாமியரும் கிருத்துவரும் காட்டுமிராண்டிக்கலாச்சாரங்களைக்கொண்டு வாழ்கிறார்கள்; திணிக்கிறார்கள் என்று எழுதும் நேரம் பொன்னானதல்ல. பயங்கரமானது.

      மலர் மன்னன் விளக்கட்டும்.

      If u can, explain. If not, dont prevent others from explaining.

  14. Avatar
    anony says:

    ஹிந்து என்னும் சொல் தமிழ்ச்சொல்லே அல்ல. இதிலிருந்து அறிவது யாதெனில் தமிழர்கள் இந்துக்கள் அல்லர். இந்து மதம் வடநாட்டிலிருந்து இங்கு வந்து புகுந்தது என்பதாகும். மேற்கு நாடுகளிலிருந்து வந்த புறச் சமயங்களான கிறித்துவத்தையும் இஸ்லாத்தையும் விரட்டுவதற்கு முன் வட நாட்டிலிருந்து இங்கு வந்து புகுந்த இந்து மதத்தை விரட்ட மலர்மன்னன் போன்ற பண்பாட்டுத் தூய்மையாளர்கள் முன்வர வேண்டும்.

  15. Avatar
    GovindGocha says:

    அனானி, தமிழர் தலைவர்களாக கொண்டாடும் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, வை.கோ, விஜய்காந்த், எம்.ஜி.ஆர், இவர்கள் தமிழர்களா..? என்று கூட கேட்பீர்கள் போலிருக்கு….

  16. Avatar
    Rama says:

    SHRI Krishnaputhrian is nit picking. It is clear that the gentleman from Pakistan had not studied Hinduism. At the best, (my guess,) at the very best, he would have had a very limited, superficial knowledge of Hinduism and of our scriptures.Otherwise he wouldn’t have included our Dharmic age old religion in the same category with the violent Arabian desert cults.
    Comparing Mohamed with Shri Malarmannan Ji shows (1) Krishnaputhran’s attempt at mischief (2) pettiness of his mind .
    Is it payback time for him for past insults/drubbings he received from one and all, for his diatribes against Shri Malarmanna Ji? I think so.

  17. Avatar
    கிருஷ்ண புத்திரன் says:

    Rama,

    நான் மேற்கோளிட்ட வரிகளுக்கு வேறு பொருள் இருந்தால் நீங்கள் சொல்லுவது போல நிட்பிக்கிங் என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர் எழுதியது இங்கே இருக்கிறது. அதன் பொருள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

    ஆனால், சிறுமதி பிடித்தவன், விவரம் தெரியாதவன் என்று நீங்களும் மலர்மன்னனும் தனிப்பட்ட தாக்குதலில்தான் இறங்குகிறீர்கள்.

    இளைஞர்களான நீங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

  18. Avatar
    கிருஷ்ண புத்திரன் says:

    //நிறைய திக்விஜய சிங்குகள் திண்ணைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்!//

    இதைவிட மோசமாக திண்ணை வாசகர்களைத் திட்ட முடியுமா ? :(

    தப்புதப்பாக எழுதிய கட்டுரை என்று சொன்னால், குறை சொல்பவர்களெல்லாம் திக்விஜய் சிங்குகள் என்று மோசமான பெயரால் அழைப்பது நாகரிகம் இல்லை.

    திராவிடர் கழக மேடைப் பேச்சாளர் போல மலர்மன்னன் எழுதுகிறார்.

    .

  19. Avatar
    anony says:

    {அனானி, தமிழர் தலைவர்களாக கொண்டாடும் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, வை.கோ, விஜய்காந்த், எம்.ஜி.ஆர், இவர்கள் தமிழர்களா..? என்று கூட கேட்பீர்கள் போலிருக்கு….}
    திரு கோவிந்தன் அவர்களே, இந்த வரிசையில் கிறித்துவர்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்து தமிழர்களாகவும், இந்தியர்களாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே. அதில் என்ன தவறு?
    (கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சுற்றிவளைக்கும் தந்திரம் உங்களுக்குக் கைவந்த கலை)

  20. Avatar
    GovindGocha says:

    இஸ்லாமியர்களிடம் கேளுங்கள் நீங்கள் யார் என்று…. கிறிஸ்துவரக்ளிடம் கேளுங்கள் நீங்கள் யார் என்று…. >>> தமிழர்கள் / தெலுங்கர்/ மலையாளி என்று எத்தனை பேர் சொல்வார்கள் என்று பாருங்கள். சுற்றி வளைக்கும் தந்திரமல்ல… சிந்திக்க வைக்கும் முறையில் பதில் சொல்கிறேன்… :)

  21. Avatar
    anony says:

    கோவிந்தன் அவர்களே,
    கேள்வியை விட்டு நீங்கள் வெகு தூரம் வந்துவிட்டதால் மீண்டும் கேட்கிறேன்.
    (ஹிந்து என்னும் சொல் தமிழ்ச்சொல்லே அல்ல. இதிலிருந்து அறிவது யாதெனில் தமிழர்கள் இந்துக்கள் அல்லர். இந்து மதம் வடநாட்டிலிருந்து இங்கு வந்து புகுந்தது என்பதாகும். மேற்கு நாடுகளிலிருந்து வந்த புறச் சமயங்களான கிறித்துவத்தையும் இஸ்லாத்தையும் விரட்டுவதற்கு முன் வட நாட்டிலிருந்து இங்கு வந்து புகுந்த இந்து மதத்தை விரட்ட மலர்மன்னன் போன்ற பண்பாட்டுத் தூய்மையாளர்கள் முன்வர வேண்டும்.)

    இதற்கு மறுமொழி என்ன?

    நீங்கள் குறிப்பிட்ட யாரும் என் தலைவர்களலல்லர். நான் எந்தக் குறிப்பிட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளனும் அல்லேன். நாடு, இன, மொழி முதலிய எந்தப் பற்றும் எனக்கில்லை.
    (இந்தப் பின்னுரைக்கு விளக்கமோ, எதிர்க்கேள்வியோ எழுப்பாமல் மேலே உள்ள கேள்விக்கான நேரடி விடையை உங்களால் தரமுடிகிறதா பார்ப்போம்)

  22. Avatar
    காவ்யா says:

    கிருத்துவமும் இசுலாமும் தமிழருக்கு எவ்வளவு அன்னிய மதங்களாக வந்ததுவோ அப்படியே வைதீக இந்து மதமும் அன்னியமாகத்தான் வந்தது. முதலில் சொன்ன இரு மதங்களுக்கு முன்னர் வந்தது என்று மட்டுமே இந்து மதத்தைச் சொல்லலாம். இந்து மதம் தமிழரின் தாய் மதமன்று.

  23. Avatar
    anony says:

    இந்து மதம் என்று கூறிக்கொள்ளும் மதத்துக்கு ‘இந்து’ மதம் என்று பெயரிட்டதும் வெளிநாட்டினரே.

  24. Avatar
    களிமிகு கணபதி says:

    //இந்து மதம் என்று கூறிக்கொள்ளும் மதத்துக்கு ‘இந்து’ மதம் என்று பெயரிட்டதும் வெளிநாட்டினரே.//

    அனானி,

    1. ஏற்கனவே உள்ள ஒன்றிற்கு மற்றவர்கள்தான் பெயரிடுவார்கள். புதிதாக உருவான ஒன்றிற்குத்தான், அதை உருவாக்குபவர்கள் பெயரிடுவார்கள்.

    2. மற்றவர்களிடம் கிடைக்கும் பட்டம் அடையாளமாகிறது – ஹிந்துக்கள், ஹிந்து மதம், மஹாகவி பாரதியார், செக்கிழுத்த செம்மல், மஹாத்மா காந்தி, வீர சாவர்க்கர் என்பவை போல. தனக்குத் தானே தன் அடியாட்களை வைத்துச் சூட்டிக் கொள்ளும் பட்டம் பீற்றலாகிறது – ”பிக்பாக்கெட்” பெரியசாமி, “சந்தனக் கடத்தல்” வீரப்பன், “தந்தை” பெரியார், ”ஆட்டோ” சங்கர், “கலைஞர்” கருநாநிதி, “சைக்கிள் செயின்” சந்தானம், “அண்ணன்” அழகிரி, “பொட்டு” சுரேஷ், “தன்மானத் தலைவர்” வீரமணி, “நாய்” சேகர், என்பவை போல.

    2. ஹிந்து எனும் வார்த்தையை ஹிந்து இலக்கியங்களிலும் காணலாம்.

    ப்ருகஸ்பதி ஆகமத்தில் உள்ள ஸ்லோகம் கீழே:

    हिमालयं समारभ्य यावदिंदुसरोवरम् ।

    तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।

    ஹிமாலயம் ஸ்மாரம்ய யாவதிந்துஸரோவரம் |

    தம் தேவனிர்மிதம் தேஷம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்‌ஷயதே ||

    இமாலயத்தில் இருந்து ஆரம்பித்து இந்துக் கடல் வரை நிலம் பரந்திருக்கிறது |

    இயற்கைசக்திகளால் (தேவர்களால்) உருவான இந்த நிலத்திற்கு ‘ஹிந்துஸ்தானம்’ என்று பெயர் ||

    3. அடுத்தவர்கள் பெயர் வைத்தால் தப்பு என்று நீங்கள் நினைத்தால் அம்மா அப்பா குழந்தைகளுக்கு வைக்கும் பெயரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

    .

  25. Avatar
    களிமிகு கணபதி says:

    //கிருத்துவமும் இசுலாமும் தமிழருக்கு எவ்வளவு அன்னிய மதங்களாக வந்ததுவோ அப்படியே வைதீக இந்து மதமும் அன்னியமாகத்தான் வந்தது.//

    திருமதி. காவ்யா,

    இந்த முடிவிற்கு ஆதாரங்கள் தாருங்கள்.

    .

  26. Avatar
    GovindGocha says:

    அடுத்தவர்கள் பெயர் வைத்தால் தப்பு என்று நீங்கள் நினைத்தால் அம்மா அப்பா குழந்தைகளுக்கு வைக்கும் பெயரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

    — அருமை…

  27. Avatar
    காவ்யா says:

    Thiru கணபதி!

    ஆதாரங்கள் என்றால் எந்த ஆதாரங்களின் மேல்கட்டப்பட்டதோ அவையே ஆதாரங்களாகும். வைதீக மதம் அல்லது சனாதன மதம் என்பது வேதங்கள், உபனிசத்துக்கள், ஸ்மிரிதிகள், மகாபாரதம், இராமாயணம், பாகவதம் போன்றவைகளின்அடிப்படையாக எழந்தது. இவைகளுள் இது முக்கியமல்லை. அது முக்கியம் என்றுதான் உங்களால் வாதாடமுடியும்; ஆனால் இவையில்லாமல் சனாதனமதமேயில்லை என்பதை மறுக்க முடியாது. இவை வடமொழியில் அதாவது சமஸ்கிருத்தத்திலேயே உள்ளன. மேலும், அம்மொழியே தேவபாசை அதாவது வைதீகக்கடவுளர்கள், அல்லது அம்மத வழிபாடுகள் நடத்தப்படும் மொழியாகும். இம்மொழியிலேயே மந்திரங்கள் இருப்பது மட்டுமல்லாமல், இம்மொழியில் ஓதும் மந்திரங்களுக்கே தேவ சக்தியுண்டு என்றும் இம்மதம் நம்புகிறது.

    தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னாட்டவற்கும் இறைவா போற்றி

    என்று பறைசாற்றும் சைவ சித்தாந்தவாதிகள் தோன்றிய காலம் பத்திலிருந்து பதினாறு வரைதான். (சித்தாந்த நூலகள் பல களப்பிரர்கள் காலத்தில் தோன்றியவை: எ.கா. சிவஞான போதம்.) சித்தாந்தவாதிகள் வைதீக மதக்கூறுகளையும் வருணாசிரத்தையும் ஏற்றுக்கொண்டார்கள்.

    “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
    ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
    சூழ்க! வையகம் துயர் தீர்கவே!’

    என்று அந்தணர் புகழ்பாடி, வருணக்கொளகையை தமிழகத்தில் கோலோச்சச்செய்தவர் சைவசமயக்குரவரான சம்பந்தர். இன்றைய உரையாடல் மொழியில் சொன்னால், இவர் ஒரு தீவிர வைதீக இந்து. இப்பாடல் சமணர்களைப் பாண்டியன் துணையோடு வீழ்த்திய பின் வெற்றிக் களிப்பில் பாடியது.

    என்றிலிருந்து வந்ததோ, அன்றிலிருந்தே சனாதன மதம் வேறூன்றி, எப்போதாவது அதற்கிடர் வரும்போது, தமிழ்மன்னர்களின் துணைக்கொண்டு வீழ்த்தி இந்த அன்னியம் மதம் தமிழரின் மதமானது.

    வேதங்கள், உபனிசத்துக்கள், வடமொழி இன்னபிற- இவையனைத்தும் தமிழ்நாட்டில் தோன்றியனவா ? இல்லவே இல்லை. வடநாட்டிலிருந்து வந்தவர்களே இவற்றைக் கொண்டு வந்தார்கள். தமிழருக்குப் புதியது இம்மதம். வடநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு முன்பேயே தமிழர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் எல்லாருக்கும் சமஸ்கிருதமே, வேதங்களோ, உபனிசத்துக்களோ தெரியா.

    எனவே, சனாதன மதம் ஒரு அன்னிய மதம் தமிழர்களுக்கு. ஆனால் பழங்காலத்திலேயே வடநாட்டிலிருந்து வரத்தொடங்கி, தமிழ் மொழி, இலக்கியம், தமிழர்தம் அன்றாட வாழ்க்கை, மத வாழ்க்கை அனைத்தையும் பாதித்து பின்னர் நீக்கமற கலந்துவிட்டது. சனாதன மதத்தை தமிழ்ப் பார்ப்ப்னர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ள, மற்றவர்கள் சனாதனமும் தமிழர்களின் தொல் இறை வணக்க முறைகளும் கலந்த கலவையை ஏற்றுக்கொண்டனர். பார்ப்ப்னரல்லாத் தமிழர்களில் இவ்வைதீக மதத்தின் கூறுகள் கிச்சித்தும் இல்லாமல் இறைவழிபாடு செய்வோர்கள் ஏராளமிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக தலித்துகள். அவர்களின் இறை வழிபாட்டிலோ திருமணச்சடங்குகளிலோ வைதீக முறையென்று ஒன்று கூட கிடையாமலும் இருக்கிறது. பட்டணங்களில் வாழ்பவர்கள் மட்டுமே வேறுபடுவார்கள். எனவே இவர்களை ஆதி திராவிடர்கள் எனவழைப்பதில் ஒரு உட்பொருள் இல்லாமலில்லை.

    எப்போது வைதீக மதம் தமிழரின் வாழ்க்கையில் கலந்தது என்ற கேள்வியில் மட்டும்தான் அறிஞர்களுக்கிடையே சர்ச்சையே தவிர, வெளியிலிருந்து வந்தது என்பதில் எவருக்கும் கருத்து பேதமில்லை. வைதீக மதமே இன்று இந்துமதம் என்ற பெயரில் வழங்குகிறது. எனவே இந்து மதம் தமிழரின் தாய்மதம் கிடையாது. பின்னே தமிழரின் தாய்மதம் எஃது என்று ஆராய நம்மிடம் ஏதுக்கள் இல்லை. ஆராய்ச்சியுமில்லை. காரணம், அது நினைப்புக்கெட்டா நெடுஙகாலத்துக்கு முன் நடந்த வாழ்க்கை. அஃது அழிந்தபட்டது. அல்லது அழிக்கப்பட்டது. அல்லது விரும்பாதோரில்லாமல் தானே காலாவதியாகி விட்டது.. அதன் எச்சங்கள் மட்டும் இன்றும் இருக்கலாம். வைதீக மதம் தமிழர்களின் தாய்மதம் என்ற போலிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு உலா வருவதை எவரும் கேள்வி கேட்பதில்லை. கேட்கவும் விரும்பவில்லை.

    கிருத்துவர்களிடமும் இசுலாமியர்களிடமும் உங்கள் மதம் வெளியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது என்றால் அவர்கள் வெட்டிப் பேசுவதில்லை. பேச முடியாது. “அதனால் என்ன இப்போ ?” என்றுதான் கேட்பார்கள். அவ்வளவுதான். நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

  28. Avatar
    களிமிகு கணபதி says:

    திருமதி காவ்யா,

    ஸம்ஸ்க்ருதம் எனும் மொழியில் இருப்பதுதான் இந்து மதம் என்ற புரிதல் தவறானது. ஸம்ஸ்க்ருதத்திற்கு இணையான பழைய மொழி நம் தெய்வீகத் தமிழ். தமிழ் இலக்கியத்தில் ஆதி இலக்கியங்களாகக் கருதப் படுகிற சங்கப் பாடல்களில், இந்து தெய்வங்கள் போற்றப்படுகின்றனர். இந்துச் சடங்குகள் பற்றி பல குறிப்புகள் இருக்கின்றன. எனவே, வைதீகம் என்பது பிற்காலத்தியது என்று சொல்ல எந்த ஆதாரங்களும் கிடையாது.

    ஸம்ஸ்க்ருதம் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் உள்ள ஆன்மீக இலக்கியங்களும் இந்து மத இலக்கியங்களே. தமிழரிடம் இருந்து பல ஆன்மீக விஷயங்கள் இந்தியாவெங்கும் பரவி இருக்கின்றன. வடக்கில் இருந்தும் பல ஆன்மீக விஷயங்கள் தமிழகம் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் அனைத்திற்கும் பரவி இருக்கின்றன.

    மொழி அடிப்படையில் சுருங்கித் தமிழர்களோ அல்லது வேறு இந்திய மொழி பேசுபவர்களோ என்றும் வாழ்ந்ததில்லை.

    அப்படிச் சுருங்க வேண்டும் என்று கிறுத்துவப் பாதிரிகள் ஆசைப் பட்டு புத்தகங்கள் எழுதி, பொய்களைப் பரப்பி வருகின்றனர்.

    அந்தப் பொய்களை முகமதியர்களாக மாறிய பழைய இந்துக்களும் பயன்படுத்துகின்றனர் – தரிசு மதச் சாக்கடையில் விழுந்தாலும் தாடியில் மண் ஒட்டவில்லை என்று சொல்லவும் ஒரு காரணம் வேண்டுமே.

    .

    1. Avatar
      காவ்யா says:

      எதற்கெடுத்தாலும் பாதிரியார்கள், கிருத்துவர்கள், இசுலாமியர்கள், திராவிட இயக்கத்தினர், ஈவெரா என்றெல்லாம் இழுத்துவிடுவதை நிறுத்திவிட்டு திண்ணையில் என்ன சொல்லப்படுகிறதை என்பதை மட்டும் எதிர்னோக்கி மறுமொழி வையுங்கள். கருணானிதிக்கு எவர் பட்டம் கொடுத்தார்கள், ஈவெராவுக்கு ஏன் தந்தை பெரியார் பட்டம் ? என்ற ஆராய்ச்சிக்கும் இந்துமதக் கொள்கைகளுக்கும் ஏதாவது தொடர்புண்டா ? உங்கள் காழ்ப்புணர்ச்சிக்கு வடிகாலாக இந்துத்தீவிர அமைப்புக்கள், திராவிட இயக்கத்தைக் கூண்டோடு வெறுக்கும் இணைய தளங்கள் இருக்கவே இருக்கின்றன.

      போகட்டும், உங்கள் தற்போதைய கருத்துக்களுக்கு வருவோம்.

      //ஸம்ஸ்க்ருதம் எனும் மொழியில் இருப்பதுதான் இந்து மதம் என்ற புரிதல் தவறானது//

      முதன் முதலாக, இந்த இந்து மதம் என்ற சொல்லே தவறானது; அது ஒட்டுமொத்தமாக கிருத்துவர்- இசுலாமியரல்லா இந்தியர்கள் அனைவரையும் குறிப்பிட ஆங்கிலேயரும் ஐரோப்பியர்களும் பயன்படுத்திய சொல் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. இதை மறுக்கிறீர்களா ?

      நான் பேசிக்கொண்டிருப்பது வைதீக மதம். இதன் இன்னொரு பெயர் சனாதன மதம். இது தமிழரின் தாய்மதமன்று. ஆனால் கிருத்துவம் இசுலாம் தமிழ் நாட்டுக்கு வருவதற்குமுன் வந்தது. இது வேதங்களையும் உபனிஷ‌த்துக்களையும் அடியாக வைத்து எழுப்பபட்டது. வேத மந்திரங்கள் ஓதப்படாமல் இம்மதம் இல்லை. எனவே இதற்கு சமஸ்கிருதமே ஆணிவேர். சமஸ்கிருதம் தமிழரின் மொழியன்று.

      நீங்கள் பேசிக்கொண்டிருப்பது நான் போன மடலில் குறிப்பிட்டக் கலவைமதத்தையே. இதையே தமிழக மக்கள் இன்று அனுசரிக்கிறார்கள்.

      வைதீக மதம் வடநாட்டிலிருந்து வந்த பிராமணர்களால் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்கள் பின்னர் தமிழையும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் எல்லாச் சடங்குகளிலும் ஏற்கவில்லை. எனவேதான் இன்றும் வைதீக பார்ப்பனர்கள் மற்றவர்களோடு மோதிக்கொண்டிருக்கிறார்கள் வடமொழியா தென்மொழியா என்று. இந்தியாவின் வடக்குப் பகுதியிலிருந்துதான் பிராமணர்கள் வந்தார்கள் என்பது உங்கள் புராணமே ஒரு கதையாக சொல்கிறது. அகத்தியரைச் சிவனே இங்கனுப்பினான் என்று. அகத்தியரைத் தமிழ்ப்பார்ப்பனர்கள் தங்கள் முதல் மூதாதையராகப் பார்க்கிறார்கள். அகத்தியர் வடக்கிலிருந்து சிவனால் அனுப்பப்பட்டார் என சங்க நூல்களே சொல்கின்றன.

      அகத்தியர் எழுதிய அகத்தியம் கிடைக்காத பட்சத்தில் தொல்காப்பியமே தமிழின் முதநூல் காலக்கணிப்பின் படி. சங்க நூல்கள் அல்ல. தொல்காப்பியம் வடமொழிச்சொற்களைக் கையாளுகிறது. வைதீகச்சடங்குகளைக் குறிப்பிடுகிறது. வடசொற்களையும் தமிழ் ஏற்றாக வேண்டுமென ‘திசைச்சொல்’ இலக்கணத்தை முன் வைக்கிறது. பின்னர் எழுதப்பட்ட சங்க நூல்களில் தொடங்கி கீழ்க்கணக்கு நூல்களிலும் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த காப்பியங்களான சிலம்பு, மணிமேகலை இவைகள் வைதீக மதச்சடங்குகள் ஊடுறிவி விட்டன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ‘முது பெரும் பார்ப்பான்” மறையோத அம்மி மிதித்து அருந்ததி பார்த்துத் தீவலம் வந்துதான் கண்ணகி-கோவலன் (இவர்கள் பிராமணர்கள் அல்ல; செட்டியார்கள்) மணம் நடைபெற்றதாக இளங்கோ குறிப்பிடுகிறார். க-கோ தம்பதியர் ஒரு கற்பனைப் பாத்திரங்கள் என்று எடுத்துக்கொண்டாலும், இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி எனவே இளங்கோ அக்கால வழக்கத்தை அழகாகக் காட்டுகிறார என்பது தேற்றம். பவுத்தக் காப்பியமான மணிமேகலை வைதீக மதத்தின் முன் மண்டியிட்டு வருணக்கொளகையை ஏற்றுக்கொண்டது என்பது சில அறிஞர்களின் குற்றச்சாட்டு. என் கணிப்பின்படி அதுவும் காலத்தின் கட்டாயங்களைக் காட்டுகிறது.

      எனவே வைதீக மதம் தமிழர்கள வாழ்க்கையை ஆக்கிரமித்து தமிழையும் எடுத்துக்கொண்டது என்பது திண்ணம். , இம்மக்களின் ஆதிக்கடவுளர்களை வைதீக கடவுளர்களோடு இணைத்து ஒரு கலவை மதத்தை உருவாக்கியது. கலவை – எடுத்தலும் கொடுத்தலும் – ஒரு மக்கள் கூட்டத்தில் இன்னொரு கூட்டம் நிரந்தரமாகச் சேரும்போது – நிகழ்வது என்பது வரலாறு காட்டும் வாழ்க்கைச்சித்திரம். ஆனால் இவ்வுண்மையைப்பயன்படுத்தி வைதீக மதம் தமிழர்களின் தாய் மதம் என்பது ஒரு போலிப் பிரச்சாரம். It is modern day politics!

      இந்த வைதீக மதம் எப்போது முதலில் ஊடுருவியது ? கணபதியார் சொல்வது சரியா ?அடுத்த மடலில்

  29. Avatar
    களிமிகு கணபதி says:

    காவ்யா,

    தொல்காப்பியம் என்பது வைதீகர்களால் பாதிக்கப்பட்டது என்பது போன்ற வாதங்கள் எவ்வளவு தவறானவை என்பது தமிழறிஞர்களால் ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்ட ஒன்று.

    தொல்காப்பியக் காலம் 3ம் BCEல் இருந்து ஆரம்பிக்கிறது. அதற்கு முன்பே 600ம் BCEல் இருந்து சங்க இலக்கியங்கள் கிடைக்கின்றன. அந்தச் சங்க இலக்கியங்களில் வைதீகப் பழக்கஙக்ள் என்று நீங்கள் சொல்லுகிற விஷயங்கள் இருப்பதை அவர்கள் சுட்டுகிறார்கள். எனவே, இல்லாத ஒன்று வெளியில் இருந்து வந்தது என்பது அடிபட்டுப் போய்விடுகிறது.

    (பார்க்க: கல்வெட்டு ராமச்சந்திரனின் கட்டுரைகள்)

    முக்கியமாக, இஸ்லாமியரான நீங்கள் மதம் என்பதற்கான வரையறையை இஸ்லாமியப் புரிதலுடன் தருகிறீர்கள். அந்தப் புரிதலின் வரையறைக்குள், நீங்கள் எடுத்தாளுகிற வாதங்களின் அடிப்படை அனுமானங்கள் ஓரளவு சரியானவையே.

    ஆனால், இந்து மதம் எனும்போது அதன் வரையறை/பொருள் வேறு. அது ஒரு நிறுவனத்தன்மையற்ற “தரிசனங்களின்” செயல்வெளி (the open source religious platform).

    இது நிறுவனம் என்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்துக்களின் பார்வையில் (செம்மொழியிலும்) ‘மதம்’ என்பதன் பொருள் ‘கருத்து’, ‘சிந்தனை’, ‘தரிசனம்’ என்பதாகத்தான் இருக்கிறது.

    அதனால் ஒரு குடும்பத்து அங்கத்தினர்கள் பல மதங்களைச் சார்ந்தவர்களாக இருப்பது சாத்தியமாகிறது. குடும்பம் மட்டுமல்லாது, ஒரு மதப்பிரிவின் துறவியருக்கான மடங்களில்கூட பல சமயங்களைச் சேர்ந்தவர்கள் ஒருசேர இருந்திருக்கிறார்கள். உதாரணமாக, பௌத்த மடங்களில் ஹீனயாணவாதிகளும் மஹாயாணவாதிகளும் ஒருங்கே இருந்திருக்கிறார்கள். வைதீகக் குருகுலங்களில் பல சித்தாந்தவாதிகளும், மதத்தவர்களும் இருந்திருக்கிறார்கள். இந்துக்களின் செழிப்பான பூமியாக ஒரு காலத்தில் இருந்த இந்தோனேஷிய/வியட்நாம் கோயில்களில் சிவலிங்கம், விஷ்ணு, புத்தர் சன்னிதிகள் ஒருங்கே இருப்பதையும் காணலாம்.

    சமண பௌத்தக் காப்பியங்களில் இந்துத் தெய்வங்களும் சடங்குகளும் குறிப்பிடப் படுகின்றன.

    இந்து ‘மதம்’ என்பது பற்றி மேலும் கூறலாம். ஆனால், ஜெயமோகன் மிக அருமையான ஒரு கட்டுரையை எழுதி உள்ளார். அதைப் படிக்குமாறு கோருகிறேன். கட்டுரை இங்கே கிடைக்கிறது: http://www.jeyamohan.in/?p=21656

    ஜெயமோகன் போன்ற் ஒரு சீரிய சமூகவியல்வாதியை உருவாக்கிய நாராயண குரு பரம்பரைக்கு அனந்த கோடி தண்டனிடுகிறேன்.

    டாக்டர் பல்புவின் வழியாக விவேகானந்தர் தூண்டிய வேதாந்த வேள்வி நம் இதயங்களில் விளக்கேற்றட்டும்.

    கலைவாணி அருள் ஜெயமோகன் வளம் பெற மனமுவந்த வாழ்த்துக்கள் !

    (கூயன்ராட் எல்ஸ்டினுடைய “யார் இந்து” என்ற புத்தகம் ஜெயமோகனுடைய காலத்துக்கும் முந்தையது. ஆழமான விரிவான அறிதலுக்கு அது உதவும். இங்கே படிக்கலாம்: Who is a Hindu? )

    .

    1. Avatar
      காவ்யா says:

      ரா.பி சேதுப்பிள்ளையின் The Hisotry of Tami Literature என்ற ஆங்கில நூலைப்படிக்கவும். அவர் அனைத்துச்சங்க நூலகளும் கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருந்துதான் எழுதப்பட்டன என்கிறார்.

      தொல்காப்பியம் வைதீகமதத்தின் தாக்கம் என்ற நான் சொன்னது அது திசைச்சொல் இலக்கணத்தைப் புதிதாக உருவாக்கும் நோக்கம் சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்த வடபார்ப்பனர்கள் தமிழ்க்கலாச்சாரத்தைப் பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. These Vedic Brahmins had been accepted in the society along with their unique and foreign religious customs and manners; and further, started wielding power over society in different ways and they had to be appeased. There was no resistance to their customs which were liked by Tamils and the foreigners were warmly welcomed, according to Neelakanta Shastri (History of South India). Sashtri adds that in Deccan such foreigners were killed as inferred from the story of Agasthiyar, the foreign Brahmin, who encountered the Deccan Kings who wanted to kill him as their usual practice of killing all foreigners, but the foreign Brahmins, using his shrewdness, escaped death and killed the King Vathapi. Tholkpaaiiyar may be one of such Brahmin himself. Even if he was not, he felt it necessary in larger social interest of accommodation of foreigners who came to live permanently with us, to make a new grammar called Thisaisol which asked Tamil ppl Tamil to accommodate Sanskrit words.

      மேலும் சமஸ்கிருதச்சொற்கள் தொல்காப்பியத்தில் உள்ளன என்பதும் வைதீக சமயம் தமிழர்களிடையே ஊடுருவி விட்டது எனப்தைக்காட்டுகிறது.

      தொல்காப்பியம் பலவிடங்களில் தனக்கு முன்பே தமிழ் மொழியில் புலவர்கள் இருந்தனர். அவர்கள் எழுதிய நூற்களை தான் படித்து வழிமொழிகிறதாச் சொல்கிறார். ‘என்மனார் புலவர்’ என்று சொல்லி.

      என்மனார் புலவர் என்றால் அப்படி தனக்கு முன் வாழ்ந்த புலவர்கள் சொன்னார்கள் என்று பொருள். என்மனார் = சொன்னார்கள்

      மேலும் நல்லிசைப்புலவர்கள் என்றும் சொல்கிறார்.. தொல்காப்பியம் இன்று கிடைத்தபடியால், நாம் இலக்கணத்தை அதிலிருந்தே தொடங்குகிறோம். அந்த ‘ந்ல்லிசைப்புலவர்களுக்கும்’ இலக்கணம் வேண்டியிருக்குமல்லவா ?

      இதிலிருந்து என்ன தெரிகிறது ? தமிழர்கள் ஒரு வளர்ச்சியடைந்த நாகரித்தைத் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே கொண்டிருந்தார்கள் என்பது திண்ணம். அக்காலத்தை X என்போம்.

      அந்த X காலத்தில், தமிழர்கள் மதம் எது ? கண்டிப்பாக, அவர்களுக்கு ஒரு இறைவழிபாடு இருந்திருக்கவேண்டும். அஃது எது? அதில் வைதீக மதம் ஊடுருவியதா ?

      எனவே X காலம் என்று ஒன்றிருந்தது. அதற்கு நாம் வரையறை சொல்லமுடியாது. எப்படியிருப்பினும் அக்காலத்தும் எக்காலத்தும் தமிழர்களின் தாய்மொழி தமிழே, வடவிந்தியாவிலிருந்து தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டதே சமஸ்கிருதமும் அதையடியாகக் கொண்ட வைதீக மதமும். வைதீக மதம் தமிழரின் தாய் மதமல்ல. பரிபாடலில் திருமால் பேசப்படுகின்றாரென்றால், பரிபாடல் காலம் கி பி 2. அதிலிருந்து ஆரம்பித்தால், X காலம் என்னவாயிற்று ?

  30. Avatar
    காவ்யா says:

    ராமச்சந்திரன், ஜெயமோகன் இவர்களெல்லாம் இந்துத்வா கூட்டத்தைச்சேர்ந்தவர்கள். இவர்களையெல்லாம் முன்னெடுத்துக் காட்டுவது இங்கு நடக்கும் வாத‌ததில் செல்லாது. ஜெயமோகனை ஒரு குறிப்பிட்ட ஜாதியார்களும், அவர்களின் அடிப்பொடிகளும், இந்துத்வாவினருமே கொண்டாடுகின்றன. எனவேதான் இந்துத்வாவினர் நடத்தும் வலைபதிவுகளில் அவர் எழுத்துக்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன.

    தமிழறிஞர்களே வரலாற்றையெழதும் நிலை தமிழ்கத்தில். அதன்படி இவர்களில் ஒரு சாரார்: வைதீக லாபி. இவர்களின் நோக்கம் நீங்கள் எழுதுவதைப்போல தமிழ்மக்களின் தாய்மொழி சமஸ்கிருதம், தாய் மதம் வைதிகமதம், வேதங்கள், உபனிச்த்துக்கள் என்பவையெல்லாம் தமிழ்மக்கள் என்று தமிழ் மண்ணின் தோன்றினார்களோ அன்றிலிருந்தே அவர்களிடம் இருந்து வருகின்றன என்று பரப்புவது

    இன்னொரு சாரார் இதை எதிர்த்து தமிழ் மக்களுக்கென்று தனியே ஒரு தாய்மொழி இருந்தது; அதன் பெயர் தமிழ். அவர்களுக்கென்று ஒரு தனி இறைவழிபாட்டு முறைகள் இருந்தன. அவர்களுக்கென்ற ஒரு தனி நாகரிகம், கலாச்சாரம் இருந்தது என்கிறார்கள். இவர்களும் தமிழ் கலாச்சாரம் அல்லது பண்பாடும் அக்கலாச்சாரத்தின் இன்றியமையாக்கூறான தமிழ் இலக்கியம் எப்போது தோன்றியதென்பதை வெகு தொலைவில் தள்ளி – அதாவது 6000 ஆண்டுகளுக்கு முன்பென்று கூறுகிறார்கள்/ கி.மு விலேயே திருக்குறள் எழுதப்பட்டது. முதற்சங்கம் லெமுரியாக்கண்டத்திலிருந்தது. என்றெல்லாம் இவர்கள் சரடு விடுகிறார்கள்.

    மூன்றாவது சாராரும் உண்டு. இவர்களே வரலாற்றாசிரியர்களும், தமிழறிஞர்களில் சிலருமாவார். வையாபுரிப்பிள்ளை, இராசமாணிக்கனார், ரா. ராகவையங்கார் (தமிழர் வரலாறு) போன்று. இவர்கள், மேற்சொன்ன இருசாராரையும் ஏற்றுக்கொள்\வதில்லை. இவர்களின் கருத்துப்படி, சங்க நூலகளும் கி.பி க்குப்பின்னரே இயற்றப்பட்டன. முதற்சங்க நூலான தொல்காப்பியம் கி.மு இரண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்.

    நான் உங்களிடம் கேட்பது இக்கேள்விகள் மட்டுமே:
    சமஸ்கிருதம் தமிழ்மக்களின் தாய் மொழியா ?
    வைதீக மதம் வேதங்கள் மந்திரங்கள் இல்லாமலிருக்குமா ? இவை சமஸ்கிருத்ததிலதானே இருக்கின்றன ? மேலும், அம்மொழியில் ஓதினால்தானே இவற்றும் தெய்வத்தன்மை உண்டு ?
    இம்மொழியும் மந்திரங்களையும் அடியாகக்கொண்ட வைதீக மதம் எப்படித் தமிழர்களின் தாய் மதமாகும் ?
    எப்போது ஊடுருவியது தமிழர்கள் வாழ்க்கையில் என்பது இப்போது வேண்டாம். வைதீக மதம் தமிழரின் தாய் மதமா என்பதே கேள்வி.

  31. Avatar
    Chandra says:

    Please stop quoting Jayamohan. It is joke to call him a socialist. He is against Tamils. Ganapathi if you have valid points to counter Kavya bring it up coherently instead of quoting people like Jayamohhan.

  32. Avatar
    காவ்யா says:

    மலர்மன்னன் கட்டுரையிலிருந்து வெகு தூரம் தள்ளி வந்துவிட்டோம். இந்துமதம் மனித நேயத்தையும் அதைக்கடந்து ஆன்ம நேயத்தையும் கொண்டது என்று சொல்லும் இவர், கிருத்துவருக்கும் இசுலாமியருக்கும் எதிராக வன்முறையில் இந்துகள் கையிலெடுக்கவேண்டுமென்று இங்கு சொல்கிறார். இதை களிமிகு கணபதி ஏற்றுக்கொள்கிறாரா ?

  33. Avatar
    காவ்யா says:

    முக்கியமாக, இஸ்லாமியரான நீங்கள்//

    Mr Ganapati

    குறும்புத்தனம்.

    இது ஒன்றை நினைவுபடுத்துகிறது.

    இராமாயணத்தையும் மகாபாரத்தையும் ஆழ்ந்த புலமையுடன் தெரிந்து கொள்ள கருனானிதியிடமும் அண்ணாத்துரையிடமும்தான் போக வேண்டும். அவர்களின் இக்காவியப்புலமை தமிழ் இந்துகளோடு வாதிட உதவும்.

    நம்பாதவர்கள் அண்ணவுக்கும் ரா.பிசேதுப்பிள்ளைக்கும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் நடந்த சொற்போரைப்படிக்கவும். அது இராமாயணத்தைப்பற்றியது. அண்ணாவின் கம்பரசம் படிக்கவும்.

    இதுபோலவே இசுலாமியத்தையும் கிருத்துவதையும் பற்றிக் களிமிகு கணபதி, ஜெயமோகன், மலர்மன்னன், ராமச்சந்திரன், போன்ற இந்துத்வாவினருக்குத்தான் நல்லா தெரியும்

    கொஞ்சம் சொல்லுங்க சார் இசுலாம் பற்றி தெரிஞ்சுக்கிறேன் !

  34. Avatar
    களிமிகு கணபதி says:

    //..கிருத்துவருக்கும் இசுலாமியருக்கும் எதிராக வன்முறையில் இந்துகள் கையிலெடுக்கவேண்டுமென்று இங்கு சொல்கிறார். இதை களிமிகு கணபதி ஏற்றுக்கொள்கிறாரா ?//

    காவ்யா,

    அவரது கட்டுரைகளை நான் பல வருடங்களாகப் படித்து வருபவன். எனவே, அவர் கருத்து என்ன என்பது பற்றிய தெளிவு எனக்கு உண்டு. மலர்மன்னன் சொல்லாத ஒன்றை அவர் சொன்னதாகச் சொல்லாதீர்கள்.

    முகமதிய, கிறுத்துவத் தீவிரவாதத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள இந்துக்கள் தங்களை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே அவர் எழுதி வருகிறார்.

    உதாரணம் சொல்கிறேன். சதாம் ஹூஸைனை அமெரிக்கா தூக்கில் போட்டதைக் கண்டித்து பெங்களூரில் முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஊர்வலம் நடத்தினார். ஊர்வலத்தினர், பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து இங்கே சொல்ல முடியாத நாச வேலைகள் செய்தனர். தொலைக்காட்சியில் குடும்பப் பெண்கள் கண்ணீருடன் தங்களுக்கு, தங்கள் வீடுகளுக்கு நடந்த அநியாயங்களைச் சொன்னார்கள். அனைவரும் பதின்ம வயது இளைஞர்கள், “அல்லாஹோ அக்பர்” கோஷம் போட்டுக்கொண்டு கொடுமை இழைத்தார்கள் என்று சொன்னார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்துக்கள்.

    சதாம் ஹூஸைனை அமெரிக்கா தூக்கில் போட்டதற்கும், அப்பாவி இந்துக் குடும்பங்களுக்கும் என்ன சம்பந்தம் ?

    அவர்கள் வசித்த ஏரியாவுக்கு அருகில் இருந்த ஏரியாவின் வழியாக அதே ஊர்வலத்தினர் சென்ற போது, எந்த அசம்பாவிதங்களையும் செய்யவில்லை. ஏனெனில், அது கிறுத்துவர்களின் ஏரியா.

    இந்த வித்தியாசத்தையே மலர்மன்னன் விளக்குகிறார்.

    .

    1. Avatar
      காவ்யா says:

      கட்டுரையைத் திரும்ப ஒருமுறை படியுங்கள். வ.ரா சொன்னதாகச் சொல்வது வன்முறையை வைத்தே ஜிஹாதி தீவிரவாதம் எதிர்க்கப்படவேண்டும்; கிருத்துவப்பிரச்சாரர்களை மிரட்ட வேண்டும் என்று சொல்கிறார். இந்துக்களிடையே வன்முறை வேண்டும் என்கிறார். எனவேதான் இவர் ஒரு புதிய இந்துமதத்தை உருவாக்க முயற்சி செய்கிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மலர் மன்னனின் கட்டுரைகள் நான் சமீபகாலமாகத்தான் படித்துவருகிறேன். .

      இந்துக்கள் தங்கள் வலிமையை ஒன்று சேர்த்து இசுலாமியத் தீவிரவாதத்தை எப்படி எதிர்கொள்வது என்று களிமிகு கணபதிதான் சொல்ல வேண்டும். அம்மதங்களையும் அதன் மக்களையும் நாக்கூசாத சொற்களில் திட்டவேண்டுவதா வலிமையைக் காட்டுவது? அஃதை அவர் கட்டுரைகளில் செய்கிறார். சமீபத்தில் அவர் தமிழ் இந்து காமில் எழுதிய கட்டுரைகளை நான் படித்தேன். ஒரு வயதானவர் இப்படியெல்லாம் அசிங்கமாக பேச மாட்டார். அவர் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் கால்டுவெல்லால் மதமாற்றம் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஜாதியாரை கால்டுவெல்லின் வைப்பாட்டியின் பிள்ளைகள் என்று எழுதியிருக்கிறார். சவேரியாரை நாக்கூசாதா சொற்களால் அவன் இவன் என்று வைகிறார். இந்துதுவாவினர்களாக நீங்களும் மலர்மன்னனும் நிரந்தர எழுத்தாளர்கள.

      இப்படியா வலிமையக்காட்டுவது? இதைவிட நேரடியாக சென்று மல்லுக்கட்டிவிடலாமே மலர்மன்னன ? மண்டைக்காடு கலவரங்களை ஆராய்ந்தால் மலர்மன்னனின் பங்களிப்பு இருக்கும். அவரே திண்ணையில் எழுதியிருக்கிறார். நான் அங்கு செல்லவிடாமல் எம்.ஜி.ஆர் தடை செய்தார் என்றும், அதையும் மீறி நுழைந்தேன் என்றும் மார் தட்டியிருக்கிறார். துக்ளக் சோவோ என் கட்டுரைகளைத் தடை செய்தார் என்றார் எவ்வளவு கொடூரமான தீவிரவாதம் இவரது. ! இப்படிப்பட்டவரிடமிருந்து இந்து மதத்தின் கொள்கைகளைப் பிறர் கற்றுக்கொள்ள வேண்டுமா ? மனித நேயம், ஆன்ம நேயம் என்று எழுதி இந்து மதத்தைப் பற்றிப்பேச என்ன யோக்கியதை?

      சதாம் ஹீசேனைத்தூக்கில் போட்டுக்கொன்றதற்காக இந்துக்களும் சேர்ந்தல்லவா அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டும்? அமெரிக்கா உலகப்போலீசுக்காரனாக செயல்பட அதற்கு ஏன் நீங்கள் வெண்சாமரம் வீசுகிறீர்கள்? தன் சுயநலத்திற்காக ஒவ்வொரு நாட்டிலும் புகுந்து போலிசுக்காரத்தனம் பண்ண அமெரிக்கா யார் ? இந்தக்கேள்வியை நீங்கள் ஏன் கேட்கவில்லை ?

      மதச்சண்டைகளுக்கு முடிவேயில்லை. அச்சண்டைகளை வைத்து எந்த மதத்தையும் வளர்க்க முடியாது. இதைப்போய் நான் ஜிஹாதிகளிடம் சொல்ல முடியாது, உங்களிடம் சொல்லலாம். தமிழ்நாட்டு முசுலீம்கள்தான் நன்றாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள்தான் விநாயகர் ஊர்வலத்தையும் அனுமாரை மல்யுத்த வீரனாக பெரிய படம் போட்டு மார் தட்டுகிறீர்க்ள் ? நிம்மதியாக வாழும் தமிழ் இந்துக்களை, தமிழ் நாட்டில் இல்லாத வழக்கங்களை இங்கு இறக்குமதி செய்து தமிழர்களின் வாழ்க்கையையே கெடுக்கப்பார்க்கிறீர்கள். இசுலாமியர்கள் ஊர் ஊராக மீலாடி நபி ஊர்வலம் நடத்துகிறார்களா ? விநாயகர் ஊர்வலம் என்ன சங்ககாலத்திலிருந்து வருகிறதென்றா சொன்னார் உ.வேஎ.சா. விநாயகர் வணக்கமே அப்போது கிடையாதென்றல்லவா சொல்லியிருக்கிறார் ?

      உங்கள் மதத்தின் கொள்கைகள் மக்களுக்குப்பிடிக்குமானால் அவர்கள் சேர்ந்து அதை ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் பிறமதங்களைத் திட்டிவிட்டால் அங்குள்ளவர்களெல்லாம் உங்களிடம் வந்து விடுவார்களா ?

      நீங்கள் இந்து மதத்தைப்பற்றி, தரிசனம் என்றெல்லாம் எழுதியது எல்லாருக்கும் தெரியும். மலர்மன்னனும் உங்களைப்போன்றவர்களும் சொல்வது வெறும் காப்பி. மற்றவரை முசுலீகள் என்றும் கிருத்துவர்கள் என்றும் பொய் பேச்சு வேறு. இந்துவாக இருந்தால் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டுமா ?

      மலர்மன்னனின் இந்துமதத்தைப் பற்றி எழுதுவது ஓசாமா பின் லேடன் இசுலாமைப்பற்றி சொல்வதைப்போல. இந்து மதத்தில் எவ்வளவோ நல்லவர்கள் அனுபவஸ்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்துமதத்தைப்பற்றிச் சொல்லட்டும். ஆனால் வன்முறை சரியென்று இந்துக்களைத்தூண்டிவிடும் தீவிரவாதிகள் இந்து மதத்தைப்ப்ற்றிப் பேசினால் இம்மதத்துக்கே கேடு.

  35. Avatar
    களிமிகு கணபதி says:

    //இசுலாமியத்தையும் கிருத்துவதையும் பற்றிக் களிமிகு கணபதி, ஜெயமோகன், மலர்மன்னன், ராமச்சந்திரன், போன்ற இந்துத்வாவினருக்குத்தான் நல்லா தெரியும்.//

    காவ்யா,

    உங்களுக்கு சாதகம் இல்லாத கருத்துக்களைச் சொன்னார்கள் என்பதற்காக மார்க்ஸிய வரலாற்று அணுகுமுறை உள்ள, நேர்மை உணர்வு மிக்க அறிஞரான கல்வெட்டு ராமச்சந்திரன் அவர்களை ‘இந்துத்துவர்’ என்ற ஒரு சிறிய முத்திரை குத்தி ஒதுக்கிவிடுகிறீர்களே. :(

    அதே போல ரா.பி. சேதுப்பிள்ளை உங்களுக்குச் சாதகமற்ற கருத்தைக் கூறினால், அவருக்கும் முத்திரை குத்துதல் நடத்தி ஒதுக்கிவிடத் தயக்கம் இருக்காது, இல்லையா ?

    ரா. பி. சேதுப்பிள்ளையோ, கருநாநிதியோ, அண்ணாவோ அவர்கள் சொல்வது சரியா தவறா என்பதைத்தான் நான் பார்ப்பேன். மாறாக, அவர்கள் எல்லாம் கிறுத்துவச் சர்ச்சின் எச்சில் இலைக்கு ஆசைப்பட்டுத் தன்மானத்தை இழந்தவர்கள் என்று முத்திரை குத்தி ஒதுக்க மாட்டேன்.

    இந்து இலக்கியங்கள், தெய்வங்கள், நம்பிக்கைகளைப் பற்றி மட்டமான விமர்சனங்களை அண்ணாவோ, கருநாநிதியோ வைத்தபோது, இதுவரை நீங்கள் “இந்துத்துவர்கள்” என்று சொல்லுகிற யாரும் உங்களைப் போல முத்திரை குத்தி ஒதுக்கவில்லை என்பதையும் கவனிக்கிறேன்.

    அவர்கள் சொன்னது சரியா தவறா என்பது பற்றித்தான் அவர்கள் விமர்சனம் இருந்து வருகிறது.

    நமக்கு இந்துத்துவர்கள் பற்றி வேறு என்ன விமர்சனங்கள் இருந்தாலும், நாகரிகமாகப் பழகுவது உரையாடுவது எப்படி என்பதை அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

    பிற மதத்தினரைக் காஃபிர்கள் என்று இழிபெயர் வைத்து அழைக்காத பண்பாட்டின் விளைவாகவே இதை நான் பார்க்கிறேன்.

    நீங்கள் காழ்ப்பு உணர்வு இல்லாதவர் என்ற நல்ல நம்பிக்கையோடுதான் நான் உங்களுடன் உரையாடுகிறேன். என்ன ஆனாலும், நீங்கள் ஒரு இந்தியர்.

    .

    1. Avatar
      காவ்யா says:

      அண்ணா, கருநானிதி, என்பவர்கள் எழுதியவை, பேசியவையெல்லாம் இங்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவை ஒரு எடுத்துக்காட்டுகளாகவே சொல்லப்பட்டவை.
      அவர்களின் கருத்துக்களைப்பற்றி விவாதம் இங்கு பொருத்தமற்ற ஒன்று.

      மதவரங்கிலும் சமூகவரங்கிலும் இன்று கோஷ்டிகள் உண்டு. ஏன்! வரலாறு எழுதுவதிலும் கோஷ்டிகள் உண்டு. இந்துத்வாக் கொள்கைகளுக்குச் சார்ப்பாக வரலாறு எழுதுவோர், மார்கிச்சிய கருத்துக்களை முடிபாக வைத்து எழுதுவோர், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வரலாறு படைப்போர் என்று வரலாறு எழுத்துக்களிலும் கோஷ்டிகள் உண்டு. இதைப்போல தமிழ் சமூக எழத்துக்களிலும். இதை யாராலும் மறுக்க முடியாது. ஜெயமோகன் உங்கள் கோஷ்டியைச்சேர்ந்தவர் என்பது யாவராலும் ஒப்புக்கொண்டவொன்று.

      நீங்கள் எந்த கோஷ்டியைச்சேர்ந்தவர் எப்படி எதற்குச்சசார்ப்பாக எழுதி வாணாளைக்கழித்துக்கொண்டிருப்பவர் என்பது உங்கள் பிறதள எழுத்துக்கள் பறை சாற்றிக்கொண்டிருக்கின்றன‌.

      என்னை முசுலீம் என்று பொய் சொன்னதே காழ்ப்புணர்வின் வெளிபாடுதானே ? பொய் சொல்லல் காழ்ப்புணர்வு இல்லாமல் வராது

  36. Avatar
    காவ்யா says:

    //இந்த வித்தியாசத்தையே மலர்மன்னன் விளக்குகிறார்.//

    He wrote the essay. Let him come back and clarify that he is not saying that Hindus shd not resort to violence. He shdnt quote this or that write. Instead, let him say it directly.

  37. Avatar
    GovindGocha says:

    மலர்மன்னன் படிப்பறிவு தாண்டி , ஆழ்ந்த நீண்ட அனுபவம் உள்ளவர். கூட்டத்தில் ஆயிரம் பேர் இருந்து ஒவ்வொருவருக்கும் பதில் என்றால் சர்ச்சில் கூட கருத்துக்கள் கூற முடியாது…. எழுத்து என்பது விவாத மேடை அல்ல… பின்னூட்டம் என்பது வாக்குவாத வெளி அல்ல…

    1. Avatar
      காவ்யா says:

      No 1000 ppl r here. Just one person s accusing him. He can easily reply to him. His learning, knowledge and deep experience all have led him to provoke ppl to violence. Is this the proper use such knowledge and experince should be put to ? Sad, very sad!

  38. Avatar
    GovindGocha says:

    காவ்யா , நீங்களும் எழுதுங்கள்… படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும்… மமவும் எழுதட்டும்… தட்ஸ் ஆல்…

    1. Avatar
      காவ்யா says:

      கோவிந்த்

      கிழவர்கள் ஆபத்தானவர்கள் என்பது என் அனுபவம். அவர்கள் நேரடியாகச் செயலில் இறங்க மாட்டார்கள். அதற்கு உடல் வலிமை இடம் தராது. எனவே தூண்டித்தான் விடுவார்கள். பாபர் மசூதியில் ஏறி உடைத்தவர்கள் வாலிபர்களே. ஆனால் அவர்களை செய்யத் தூண்டியவர்கள் கிழவர்கள். மத சார்ந்த விடயங்களிலும் சமூகப் பிரச்சினைகளிலும் கிழவர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது. Such religious bigots do not mellow with age; rather, get more and more frozen in their bigotry. The young do not think coolly and are easily radicalised and misled to do anti-social acts by the vicious old. The old play the role of agent provocateurs. The deleterious consequences of Babri Masji demolition are still not dead in India. The fair name of India was tarred adversely world wide after the event.

      போகட்டும். இந்த கட்டுரைக்கு வருவோம். மம அவர் கருத்தைச் சொல்லி கட்டுரையைப் போட்டுவிட்டார். அதை அப்படியே படித்துவிட்டு வாய்மூடிச் செல்லுங்கள் என்ற நோக்கத்தில் திண்ணையோ எந்த பத்திரிக்கையோ போடாது அது பத்திரிக்கை தர்மமல்ல. It is not journalistic ethics. படித்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது மிக முக்கியம். அதற்காகத்தான் லெட்டர்ஸ் டு த எடிட்டர் என்றும், உங்கள் கருத்துகளைப் பதியுங்கள் என்றும் வைத்திருக்கிறார்கள்.

      மமவின் கட்டுரை கிருத்துவர்களுக்கும் இசுலாமியருக்கும் எதிராக வன்முறையை இந்துக்கள் எடுக்க வேண்டும் என்று சொல்கிறது என்று எச்சரிப்பதுவே படிப்பவரின் கடமை. இங்கு மட்டுமல்ல பலவிடங்களில் அவர் இதைச்செய்து வருகிறார். இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை இந்துக்கள் கைவிட வேண்டும் எனப்புதிய மதமே இங்கு படைக்கிறார். இக்கட்டுரையைப் படிப்போருக்கு இது தெரியாமலிருக்குமா ? உலகம் முழுக்க இணையதளம் திண்ணைப் படிக்கப்படுகின்றது. இதைப் போன்ற கட்டுரைகளைப்படிக்கும் இந்து இளைஞர்கள் வன்முறைக்குத் தூண்டப்படுகிறார்கள். ஜிஹாதிகளும் செய்வதும் இவர் செய்வதும் ஒன்றே. He does it under cover of explaining Hindu thoughts or principles of manitha neeyam and anma neyam. That was y, I described it: a dagger in velvet gloves.

      என் கருத்துகள் தவறென்றால் மலர் மன்னன் விளக்கட்டும்

  39. Avatar
    Rama says:

    Shri Malarmannan should not waste his time and energy in answering idiotic imbecile questions from every Tom, Dick and Harry and in this case, Kaviya. The onus is on Kaviya and Co to PROVE that Sanskrit did not co exist with Tamil in the south and that the Brhamins came from north and his other delusional comical assumptions.
    Kaviya is nothing but another annoying internet troll.Let the dogs bark, but the caravan will move on.

    1. Avatar
      காவ்யா says:

      The context, insofar as MM is concerned, s different from the context insofar as others, esp. Ganapathi s concerned. Ancient Tamil lit s discussed only for Ganapathi.

      For MM, the qn still remains and that qn s only in the context of the para in his essay, which quotes Va Ra endorsing violence.

      So, it is for MM to make himself clear. Let him speak.

      If Rama wants to say something, may he reply to the same qn from his own perspective:

      Do u support MM in his view that Hindus shd take to violence to counter Muslims and Christians ? Yes or No ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *