மருத்துவக் கட்டுரை மயக்கம்

This entry is part 20 of 24 in the series 8 செப்டம்பர் 2013

 

                                                 டாக்டர் ஜி . ஜான்சன்
          நாம் அனைவருமே எப்போதாவது மயக்கம் அடைந்திருக்கலாம். அதனால் மயக்கம் என்பது என்ன என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.            சிலருக்கு சில நிமிடங்கள் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு சில மணி நேரங்கள் மயக்கம் நீடிக்கலாம்.சிலருக்கு எந்த விதமான நோய்கள் இல்லாமலும் மயக்கம் வரலாம். சரியான நேரத்தில் உணவு உணவில்லையெனில் மயக்கம் வரலாம். போதிய உறக்கம் இல்லாமலும் மயக்கம் வரலாம். அல்லது அளவுக்கு அதிகமாக உண்டபின்னும் மயக்கம் உண்டாகலாம். அதிக வேலை, களைப்பு , மன உளைச்சல் காரணமாகவும் மயக்கம் ஏற்படலாம். இவை அனைத்தும் நோய்கள் இல்லாவிடினும் உடல் தொடர்புடைய மயக்கங்கள்.

இதுபோல் உள்ளம் தொடர்புடைய மயக்கமும் உள்ளது.

அழகையும் இயற்கையின் எழிலையும் கண்டு மயங்குகிறோம். கலைஞன் ஓவியம், சிற்பம் , கவிதை, பாடல் என கலை அம்சங்களில் மயங்குகிறான். படைப்பாளன் படைப்பிலக்கியங்களில் மனதைப் பறிகொடுத்து மயங்குகிறான்.

காதலர்கள் காதலில் கட்டுண்டு மயங்குகின்றனர்.

கண்ணன் மீது காதல் கொண்ட ராதை மயங்கி நின்றதாக கீதகோவிந்தம் இவ்வாறு கூறுகிறது.

” கேசவா ! நீ மறைந்து நிற்கிறாய் ! அவள் மயங்கி நிற்கிறாள் ! ” இந்த மயக்கம் இனிமையானது. இதற்கு மருந்து தேவை இல்லை!

ஆனால் மருத்துவ ரீதியான மயக்கம் வேறு வகையானது. இது பல்வேறு காரணங்களால் உண்டாவது.

மயக்கம் , தலை சுற்றல் , கிறுகிறுப்பு என்பதும் என்பதெல்லாம் ஒன்றுதான்.

மயக்கத்தை dizziness , giddiness என்பர் . மயக்கம் வந்து நினைவு இல்லையேல் அதை fainting என்பர்.

வயது முதிர்ந்தவர்களுக்கு அடிக்கடி மயக்கம் வருவது இயல்பு. பெண்களுக்கும் அதிகமாகவே மயக்கம் வருவதுண்டு.

நமது உடல் சமநிலையில் இல்லாவிடில் மயக்கம் உண்டாகும். இந்த சமநிலை உணர்வை மூளைக்கு உணர்த்துவது காதுகளின் உள்ளேயுள்ள வெஸ்ட்டிபுல்லார் லேபிரின்த் ( vestibular labyrinth ) என்ற உறுப்பு. நமது சுற்றுச் சூழலைப் பற்றிய தகவல்கள் இதன்மூலமே மூளைக்கு கொண்டு செல்லப் படுகிறது.

உடலின் தொடு உணர்ச்சியையும், மூட்டுகளின் செயல்பாட்டையும் பற்றிய செய்திகளைக் கொண்டு செல்பவை சோமோட்டோசென்சரி ஆஃப்பரன்ட்ஸ் ( somatosensory afferents ) என்ற நரம்புகள். இவை முதுகுத் தண்டு நரம்புகள் ( spinal cord ) வழியாக மூளைக்கு செல்கின்றன.

இத்தகைய வெளி உணர்வுகள் மூளையில் உள்ள வெஸ்ட்டிபுளார் நியூக்ளியஸ் ( vestibular neucleus ) என்ற

பகுதியை வந்தடைகின்றன . இது சிறு மூளை, எக்ஸ்‌ட்ரா பிரமிடல் சிஸ்டம் ( extra pyramidal system ) என்ற மூளைப் பகுதியுடன் தொடர்புடையவை.

இங்கிருந்து உள் உணர்வுகள் கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் , கழுத்து, கால்கள் பகுதிகளுக்கும் நரம்புகள் வழியாகச் செய்திகள் அனுப்புகின்றன.

இவ்வாறு வெஸ்ட்டிபுளார் சிஸ்டம் என்ற அமைப்பு இரண்டு வகையான செயல்களில் ஈடுபடுகிறது. அவையானவை:

* தலையை அசைக்கும்போதும் , திருப்பும்போதும் , பார்வையை அதற்கு ஏற்ப சம நிலைக்கு கொண்டு வருகிறது. உதாரணமாக நடந்துகொண்டே படிக்க முடிகிறது.

* உடல் அசைவின்போது கீழே விழுந்து விடாமல் சம நிலையில் இருக்க உதவுகிறது.

இத்தகைய மிகச் சிக்கலான அமைப்பில் எங்கேயாவது குறைபாடு உண்டானால் சம நிலை பாதிப்புக்கு உள்ளாகி தலை சுற்றலும் மயக்கமும் ஏற்படுகிறது.

சில உதாரணங்கள் வருமாறு :

* வயதானவர்களுக்கு பார்வை குறைவு காரணமாக உண்டாகும் மயக்கம் .

* நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் பாதிப்பு காரணமாக உண்டாகும் மயக்கம் .

* தலை, காது பகுதியில் அடி பட்டால் உண்டாகும் மயக்கம்.

 

மயக்கம் வருவதற்கு 3 முக்கிய காரணங்கள் கூறலாம் :

* காது தொடர்புடையது ( otological )

* மூளை தொடபுடையது ( neurological )

* பொது மருத்துவ காரணங்கள் ( general medical )

1. காது தொடர்புடையவை – நடுக் காது பிரச்னை

* காயம் ( trauma )

* நீர்க் கசிவு ( discharge )

* கட்டிகள் ( tumours )

சுற்றுவட்ட வெஸ்ட்டிபுலார் குறைபாடு –

லேபிரந்த் வீக்கம்

காயம்

இரத்தக் குறைவு

மூளையைச் சுற்றியுள்ள திரை வீக்கம்

Benign paroxysmal positional vertigo – இந்த வகையான தலை சுற்றுதல் வெர்ட்டைகோ என்பது பலருக்கு உண்டாவதாகும். இது ஏற்பட சில காரணங்கள்:

தலையில் அடிபடுதல்

இரத்த ஓட்டத்தில் தடை

வைரஸ் கிருமிகள் தொற்று

ஒற்றைத் தலைவலி

Meniere’s syndrome எனும் தலை சுற்றும் குறைபாடு

2 .மூளை தொடர்புடைய காரணங்கள் –

நரம்பு கட்டிகள்

மூளைக் கட்டி

வலிப்பு நோய்

ஒற்றைத் தலைவலி

மது , மருந்துகள்

multiple sclerosis எனும் நோய்

 

3. பொது மருத்துவக் காரணங்கள் –

குறைவான இரத்த அழுத்தம்

நீரிழிவு நோய்

காதுகளில் இரைச்சல்

இரத்த சோகை

இருதய வீக்கம்

இருதய வால்வு நோய்கள்

இருதயத்திலிருந்து குறைவான இரத்த வெளியேற்றம்

குறைந்த இனிப்பு

தொடர்ந்த களைப்பு

இதர நோய்கள்

ஆகவே மயக்கம் உண்டாவது இவ்வளவு சிக்கல் நிறைந்ததா என்பதைக் காணும் நமக்கும் மயக்கம் வருகிறதல்லவா?

( முடிந்தது )

Series Navigationகறுப்புப் பூனைதிலீபன் கண்ணதாசன் கவிதைகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்பு நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,

    நமது ஊர்களில் நேரும் கொடூரப் போலியோ அட்டாக் பாதிப்பு பற்றியும், பார்கின்சன் நோய் பற்றியும் கட்டுரைகள் எழுதும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.

    எனக்கு தெரிந்த, வேலை பார்க்கும் ஓர் ஏழை மாதுக்கு [35 வயது இருக்கலாம்] சிறு வயதில் ஏற்பட்ட போலியோ தாக்குதலால், இரு கால்கள் பாதிக்கப்பட்டு ஊன்றுகோல் வைத்து நடக்கிறார். அவருக்குச் செயற்கைக் கால்கள் பொருத்த உதவி செய்யும் கிறித்துவ அறக்கட்டளை ஏதாவது தமிழகத்தில் உள்ளதா ? அவர் திருவண்ணாமலையில் வசிக்கிறார்.

    உங்கள் மின்னஞ்சல் முகவரி /ஃபோன் எண் தாருங்கள். மேலும் விபரம் எழுதுகிறேன்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்,
    அண்டாரியோ, கனடா.
    jayabarathans@gmail.com
    Ph: 519-396-4968

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *