மீனாட்சி கோபாலகிருஷ்ணனின் மின்னும் கைவண்ணங்கள்!

This entry is part 8 of 21 in the series 27 ஜூன் 2016

திருமதி மீனா கோபாலகிருஷ்ணனும் அவர் கணவர் திரு கோபாலகிருஷ்ணனும்

இளம் வயதிலேயே வேலைக்குச் செல்ல ஆரம்பித்து 40 வருடங்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஸ்டெனோகிராஃபராக, செக்ரடரியாகப் பணிபுரிந்துவந்தவர் திருமதி மீனாட்சி கோபாலகிருஷ்ணன். எந்த வேலையைச் செய்தாலும் அதில் 100% அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் ஈடுபடுவது அவர் இயல்பு. இரண்டு வருட்னக்களுக்கு முன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு என்றால் இளைப்பாறுவதும், உறங்குவதும் இல்லை. மனதுக்குப் பிடித்த வேறு வேலைகளில் ஈடுபடுவது என்கிறார் மீனாட்சி.

பெங்களூரிலுள்ள தன் தங்கை லட்சுமி ஆர்வத்தோடு ஈடுபடும் கைவேலைகளைப் பார்த்து அவற்றில் ஆர்வம் கொண்டார். குந்தன் கோலம்கள், ஆரி எம்ப்ராய்டரி போன்ற கைவேலைப்பாடுகளைக் கற்றுக்கொண்டு அவற்ற ஆர்வமாகச் செய்துவருவதைப் பார்த்து தானும் அவற்றைக் கற்றுக்கொள்ளும் முயற்சியில் ஆர்வத்தோடு ஈடுபட்டார். தன் அன்புத் தங்கையிடமிருந்து குந்தன் வேலைப்பாட்டைக்க் அற்றுக்கொண்டார். குந்தன் கோலங்கள் தாள்களில் குந்தன் வண்ணக்கற்களால் பல்வேறு நுட்பமான வடிவங்களில் செய்யப்பட்டு பூஜையறையில் ஆங்காங்கே வைக்கப்படலாம்; அலங்காரத் தோரண வடிவில் வீட்டு நுழைவாயிலில் தொங்கவிடப்படலாம். அகல்விளக்குகள், குத்துவிளக்குகளைச் சுற்றிலும் வட்டமாக வைத்து அழகுபடுத்தலாம். வண்ண வண்ண குந்தன் கற்களால் கலைநயத்துடன் செய்யப்பட்ட ஈந்தக் கோலவடிவங்கள் கண்ணைக் கவர்பவை.

 

குந்தன் கோலங்கள், தோரணங்கள்:

குந்தன் வேலைப்பாட்டில் உருவான தோரணம்!

 

 

குந்தன் வேலைப்பாட்டில் உருவான கைவண்ணங்கள் 2

 

குந்தன் வேலைப்பாட்டில் உருவான கைவண்ணங்கள் 1

 

குந்தன்  கோலங்களைச் செய்யும் முறையைக் கற்றுத்தேர்ந்த பின் ‘ஆரி’ எம்ப்ராய்டரி தையல்கலைப் பயிற்சி வகுப்புக்குச் செல்ல ஆரம்பித்தார் மீனா. இரண்டு மாதகாலம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஆரி கிரியேடிவ்ஸ் பயிற்சி மையத்தில் ஆரி எம்ப்ராய்டரி தையற்கலையில் அடிப்படைப் பயிற்சியும், மேநினைப் பயிற்சியும் பெற்றார்.

 

வாரத்திற்கு மூன்று நாட்கள் வகுப்புகளுக்குச் சென்றவர் பயிற்சி காலத்திலும் பயிற்சி முடித்த பின்னும் வீட்டில் பல வடிவமைப்புகளைத் துணியில் உருவாக்கும் முயற்சியில் முனைப்பாக ஈடுபட்டார். பெண்கள் அணியும் சட்டைகளின் கழுத்துப்பகுதி, முதுகுப்புறப் பகுதிகளில் செய்யப்படும் அலங்கார வேலைப்பாடுகள், சுரிதாரில் கழுத்து, கை, ஆடையின் முன்புறப்பகுதி ஆகியவற்றில் ஆரி தையற்கலையில் அலங்கார வேலைப்பாடுகளை வடிவமைத்தல் என இவருடைய கைவண்ணங்கள் அழகே உருவாக அமைந்து கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்கின்றன!

 

பட்டு இழைகள் மற்றும் வண்ணக் கற்களைக் கொண்டு வளையல்களும் தயாரித்திருக்கிறார். புடவைத் தலைப்பு, துப்பட்டா நுனி போன்ற வற்றில் சின்னச் சின்ன அலங்காரக் குஞ்சங்கள் செய்து தொங்கவிடுகிறார்!

 

சின்னச் சின்ன அலங்காரக் குஞ்சங்கள்(1)

 

 

 

 

கையிலே கலைவண்ணம் செய்துவரும் மீனாட்சி கோபாலகிருஷ்ணனுடன் ஒரு சிறிய நேர்காணல்:

 

 

கேள்வி: 40 வருடங்களாக சுருக்கெழுத்தாளர், செயலர் என பணிபுரிந்த உங்களுக்கு இந்த குந்தன் கோலம்கள், ஆரி வேலைப்பாடுகளில் எதனால் ஆர்வம் ஏற்பட்டது?

 

மீனா: எனக்கு எப்பொழுதுமே நேர்த்தியான, கலாபூர்வமான ஆடைகள் அணியப் பிடிக்கும்.  என் தங்கை லஷ்மீ இந்த வேலைப்பாடுகளையெல்லாம் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்தது. வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் இதில் ஈடுபடத் தொடங்கினேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையதளங்களில் பார்த்தும் என் ஆர்வம் அதிகரித்தது.

 

கேள்வி: இந்த அலங்ககர வேலைப்பாடுகளெல்லாம் மிகவும் நுட்பமானவையாக இருக்கிறதே – இவை செய்யப்பட்டிருக்கும் ஆடைகளைத் துவைப்பது கடினமாயிற்றே

 

மீனா: கவனமாகத்தான் செய்யவேண்டும். ஸர்ஃப் துணியில் போட்டு கொஞ்சம் ஊறவைத்துப் பின் அப்பைட்யே எடுத்து ஒரு நிழலான பகுதியில் காயவைக்கவேண்டும். கசக்கவோ பிழியவோ கூடாது.

 

கேள்வி: இவை விலை அதிகமோ?

 

மீனா: வேலைக்கான விலைதான். செய்யும் வேலை மிக நுட்பமானது. பெண்கள் அணியும் சட்டை ஒன்றுக்கு இந்த ஆரி எம்பிராய்டரி வேலை செய்ய ஒரு வாரம் தேவைப்படும். திருமணம் போன்ற விழா நாட்களில் இந்த குந்தன் கோலம்கள் மற்ரும் ஆரி எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்த ஆடை அலங்காரங்களைப் பயன்படுத்துவதில் பெண்கள் ஆர்வமாயிருக்கிறார்கள்; ஆனந்தமடைகிறார்கள்.

பெண்களுக்கான சட்டைத்துணி ஒன்றுக்கு ஆரி வேலைப்பாடுகள் செய்ய 1500 முதல் 2500, 3000 அதற்கு மேலும்கூட ஆகும். வேலைப்பாடுகளின் நுட்பம், அடர்வு, செறிவு, நீள அகலம், வடிவமைப்பு போன்ற பல அம்சங்களின் அடிப்படையில் செலவும் அதற்கேற்ப விலையும் அமையும்.

 

இந்த வேலைப்பாடுகளை செய்வது மிகவும் நேரம் எடுத்துக்கொள்ளுமே – உங்களுக்கு சிரமமாக இருக்காதா?

 

நேரம் எடுத்துக்கொள்ளும்தான். ஆனால் சிரமமாக இருக்காது. நம் கைகளின் இயக்கத்தில் பல்வேறு வண்ணங்களின் சேர்க்கையில் உண்டாகும் வடீவமைப்புகளின் கலைநேர்த்தி மிகுந்த மனநிறைவைஇத் தரும். புதுப்புது வடிவங்கள், வண்ணச்சேர்க்கைகள் மனதில் உருவாகும்.

 

கேள்வி: இதில் வருமானம் உண்டா? இதை சுய வேலைவாய்ப்பாகக் கொள்ள முடியுமா?

 

அதற்கான சில முன்னேற்பாடுகளையும் செய்துகொண்டு நிரந்தர வாடிக்கையாளர்களும் கிடைப்பார்களெனில் ஈதை சுய வேலைவாய்ப்பாகவும் கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரையில் எனக்குத் தெரிந்தவர்கள், நெருங்கியவர்கள், உற்றார் உறவினர்களுக்கு இந்த வேலைப்பாடுகளை, பிறந்த நாள், மணநாள் போன்ற நாட்களில் அன்பளிப்பாகத் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். யாரேனும் ‘ஆர்டர்’ கொடுத்தால்  விற்பனைக்கும் செய்துதருகிறேன்.

 

கேள்வி: உங்களுடைய இந்தக் கலைப்பணிக்கு உங்கள் கணவர் கோபாலகிருஷ்ணன் உதவுகிறாரா?

 

மிகவும் உதவியாக இருக்கிறார். ‘எதற்கு இதெல்லாம்? வீண்வேலை’ என்பதாய் அங்கலாய்ப்பதில்லை; முட்டுக்கட்டை போடுவதில்லை.  ஆரி எம்ப்ராய்டரிக்கான வண்ணங்களையும் வடிவங்களையும் அவற்றிற்கான துணிகளையும் இவர்தான் தேர்ந்தெடுக்கிறார்; வாங்கிவருகிறார். இந்தக் கலை பற்றிய விவரங்கள்டங்கிய நூல்களை எனக்கு வாங்கித் தந்து உத்வேகப்படுத்துகீரார். அவற்றிற்கென இயங்கும் இணையதளங்களை எனக்குப் பரிச்சயப்படுத்துவதும் உண்டு. என் கணவர் கோபாலகிருஷ்ணனின் ஆதரவும் துணையும்தான் என்னை இந்தக் கலாபூர்வப் பணியீல் உற்சாகத்தோடு இயங்கச் செய்கிரது.

 

 

பல்வேறு டிசைன் புத்தகங்களைப் பார்த்து அவற்றிலுள்ள வடிவமைப்புகளையும், வண்ணக்கோர்வைகளையும் என் கற்பனையில் பல்வேறு ‘permutations and combinationsஐப் பயன்படுத்தி புதிய வண்ணக்கலை வடிவமைப்புகளை உருவாக்கும்போது ஒரு பெரிய கலாநிறைவு கிடைக்கிறது என்று மனப்பூர்வமாகக் கூறுகிறார் மீனா!

 

(தொடர்புக்கு : tkgmeena@gmail.com

Series Navigationநைல் நதி நாகரீகம், பிரமிடைக் காண வந்த பிரெஞ்ச் போர்த் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 10ஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள் எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *