மெக்காவை தேடி -1

author
1
0 minutes, 45 seconds Read
This entry is part 19 of 19 in the series 7 பெப்ருவரி 2016

பக்கீர் ராஜா

 

squareமெக்கா பற்றி குரான் மற்றும் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்களும் இன்றைய மெக்காவும் ஒத்துப்போகிறதா என ஆராயும் புத்தகம், Quranic Geography , ஆசிரியர் Dan Gibson

முதலில் மெக்காவை பற்றி குரானில் சொல்லப்பட்டிருப்பதும் இஸ்லாமியர்கள் நம்புவதும் என்ன என பார்த்தால் இன்றைய மெக்கா குரானில் சொல்லப்பட்டிருக்கிறது, சொல்லப்பட்டிருப்பது மட்டுமல்ல புகழப்பட்டுள்ளது. புகழ்ச்சி என்றால் நகரங்களின் தாய் எனவும் உலகின் எல்லா காய்,கனிகளும் கொண்டு வரப்படும் எனவும் மிகவும் புகழப்பட்டுள்ளது.

ஆனால் இன்றைய மெக்கா தான் குரானில் சொல்லப்படும்,புகழப்படும், வர்ணிக்கப்படும் மெக்காவா என டென் கிப்சன் ஆராய்கிறார்.

முதலில் குரானில் மற்றும் இஸ்லாமிய நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் மெக்காவின் வர்ணனைகளை பார்ப்போம்.

3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

3:97. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) – நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.

5:97. அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான்; இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்;) அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன்.

6:92. இந்த வேதத்தை – அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.

6:99 அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக – ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.

6:141 பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

11:83. (எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உங்கள் இறைவனால் அடையாளமிடப்பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதனை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.)

14:37 எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! – தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!

16:11 அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் – நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.

17:1 (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

Yusuf Ali: Glory to (Allah) Who did take His servant for a Journey by night from the Sacred Mosque to the farthest Mosque, whose precincts We did bless,- in order that We might show him some of Our Signs: for He is the One Who heareth and seeth (all things).

22:29. பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும்

23:19. அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.

23:20. இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது)

29:67. அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?

36:33-34 அன்றியம், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள். மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.

39:21 நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.

48:24. அவனே, மக்காவின் பள்ளத்தாக்கில், அவர்களின் கைகளை உங்களை விட்டும், உங்களின் கைகளை அவர்களை விட்டும் தடுத்தான். அந்நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்திருந்தான். மேலும், நீங்கள் செய்துகொண்டிருந்தவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹதீஸ்களை பார்க்கலாம்

புகாரி 1617. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் முதல் வலம்வரும்போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள். பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக்கிடையே உள்ள நீரோடைப் பகுதியில் மட்டும் விரைந்து ஓடுவார்கள். Book :25

புகாரி 1644.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், கஅபாவை முதல் வலம்வரும்போது மூன்று சுற்றுக்களில் வேகமாக ஓடுவார்கள்; நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும், ஸஃபா – மர்வாவுக்கிடையே வலம்வரும்போது ஓடைப் பகுதியில் மட்டும் ஓடுவார்கள்.

உபைதில்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்:

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (தவாஃபின் போது) ருக்னுல் யமானியை அடைந்ததும் நடந்து தானே செல்வார்கள்? என நாஃபிவு இடம் கேட்டேன். அதற்காகவா ‘ருக்னுல் யமானியில் ஜன நெருக்கடி ஏற்பட்டாலே தவிர அவர் நடந்து செல்லமாட்டார்; ஏனெனில் அவர் ருக்னுல் யமானியைத் தொட்டு முத்தமிடாமல் விடுவதில்லை” எனக் கூறினார். Book :25

புகாரி 2731 இப்னு அப்பாஸ்(ரலி)

புதைல் அவர்கள், ‘(முஹம்மத் அவர்களே!) கஅப் இப்னு லுஅய், மற்றும் ஆமிர் இப்னு லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் வற்றாத ஜீவசுனைகளின் அருகே முகாமிட்டிருக்க, அங்கே அவர்களைவிட்டுவிட்டு (தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் தாய் ஒட்டகங்களும் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் கஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப் போகிறார்கள்” என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக, நாங்கள் உம்ரா செய்வதற்காகத் தான் வந்திருக்கிறோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள்.

அப்போதுதான் அல்லாஹ், ‘அவனே மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதையும் தடுத்துவிட்டான்; அப்போது அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்தான். மேலும், நீங்கள் செய்து கொண்டிருந்த யாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்… இறை மறுப்பாளர்கள், தங்கள் உள்ளங்களில் வைராக்கியத்தை (அஞ்ஞான கால மூடச் சிந்தனையை) ஏற்படுத்தியபோது அல்லாஹ், தன் தூதர் மீதும் நம்பிக்கையாளர்களின் மீ

Book : 54

  1. முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார்.

அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், ‘இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள். Volume :2 Book :41

  1. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இன்னோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். “கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். “கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக அல்லது வேட்டையாடுவதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Volume :2 Book :41

  1. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்: சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், ‘நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்” என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராம் விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், ‘எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது” என்று கூறுவான். (நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்கமுடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்” என்று கூறினார். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள். Volume :2 Book :41

புகாரி 3989. அபூ ஹுரைரா(ரலி)

குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கண்டதில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு நாள் திராட்சைப் பழக் குலையொன்றை தம் கையில் வைத்து அவர் சாப்பிட்டுக கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (அந்தப் பருவத்தில்) மக்காவில் எந்தப் பழங்களும் இருக்கவில்லை. ‘அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு” என்று அந்தப் பெண் கூறி வந்தார்

புகாரி 3045. அபூ ஹுரைரா(ரலி)

அல்லாஹ்வின் மீதாணையாக! குபைப் அவர்களை விடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு நாள் தம் கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டு கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவரின் கை இரும்புக் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை

புகாரி 3364. இப்னு அப்பாஸ் (ரலி)

பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கி பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே ஸஃபாவிலிருந்து இறஙகிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்த போது தம் மேலஙகியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமம்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கை கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றிற்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறை செய்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்மாவுக்குமிடையே செய்கின்ற சஃயு (தொஙகோட்டம்) ஆகும். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

புகாரி 3365. இப்னு அப்பாஸ்(ரலி)

‘இப்ராஹீமே! எங்களை யாரிடம்விட்டுச் செல்கிறீர்கள்?’ என்று பின்னாலிருந்து இப்ராஹீமைக் கூப்பிட்டு கேட்டதற்கு அவர் ‘அல்லாஹ்விடம்…’ என்றார். ‘அப்படியானால், அல்லாஹ்வின் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு’ என்றார் ஹாஜர். பின்னர் திரும்பி வந்து தோல் பையிலிருந்து நீர் அருந்தினார். அவரின் குழந்தைக்காக பால் சுரந்தது. பின்னர் தண்ணீர் தீர்ந்தவுடன் அவர் (தமக்குள்), ‘நான் போய் (மலை மீதேறி) நோட்டமிட்டால் எவராவது எனக்குத் தென்படலாம்” என்று கூறினார்கள்; பிறகு, ஸஃபா மலைக் குன்றுக்கச் சென்று ஏறினார். அவர் (அங்கிருந்து) நோட்டமிட்டார்; எவராவது தமக்குத் தென்படுகிறாரா என்று பார்த்தார். ஆனால் எவரும் அவருக்குத் தென்படவில்லை. எனவே, பள்ளத்தாக்கிற்குச் சென்றார். அங்கு சென்று சேர்ந்தததும் ஓடிச் சென்று மர்வாவை அடைந்தார். அப்படிப் பல சுற்றுகள் ஓடினார். பிறகு, ‘நான் போய் குழந்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் (நன்றாயிருக்குமே)” என்று தமக்குள் கூறினார். எனவே, (மலைக்குச்) சென்று நோட்டமிட்டார். ஆனாலும், குழந்தை இஸ்மாயீல் அதே நிலையில் தான் (அழுதபடி) இறப்பற்கு முன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக் கொண்டிருந்தார். அவரின் (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. எனவே, அவர் (தமக்குள்) ‘நான் போய் நோட்டமிட்டால் எவராவது தென்படக் கூடும்” என்று கூறிச் சென்று ஸஃபா மலைக் குன்றின் மீதேறிப் பார்த்தார்; பார்த்தார்; (பார்த்துக்கொண்டேயிருந்தார்.) எவரும் அவருக்குத் தென்படவில்லை. இவ்வாறே ஏழு சுற்றுகளை நிறைவுசெய்துவிட்டார். பிறகு, ‘குழந்தை என்ன செய்கிறது என்று நான் போய் பார்த்து வந்தால் (நன்றாயிருக்குமே)” என்று (தமக்குள்) கூறினார்கள். அந்த நேரத்தில் குரல் ஒன்று வந்தது. (அதைக் கேட்டு) அவர், ‘உங்களால் நன்மை செய்ய முடியுமாயின் நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கூறினார். அங்கே (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் நின்றிருந்தார்கள். தம் குதிகாலால் இப்படி சைகை செய்து பூமியில் தம் குதிகாலை (பள்ளம் விழும்படி) அழுத்தினார்கள். தண்ணீர் பீறிட்டு வந்தது. இஸ்மாயீலின் தாயார் பதறிப்போய் அதை அணைகட்டி வைக்கப் பள்ளம் தோண்டலானார். அபுல் காசிம்(ஸல்) அவர்கள், ‘அவர் அப்படியேவிட்டு விட்டிருந்தால் தண்ணீர் வெளியே ஓடக் கூடியதாக இருந்திருக்கும்” என்று கூறினார்கள்.

புகாரி 4086

குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒரு நாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்து) சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து)” அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு” என்று அந்தப் பெண் கூறிவந்தார்.

  1. அனஸ்(ரலி) அறிவித்தார். “அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்ருப்போர் (நடந்த) நாளில் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைத் தேடிச்) சென்றார்கள். அப்போது அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாக) அவனைத் தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். (அவனை நோக்கி), ‘அபூ ஜஹ்லே! நீயா?’ என்றும் கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உலய்யா(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்: “இப்படித் தான் இந்த நிகழ்ச்சியினை (எனக்கு) அனஸ்(ரலி) அறிவித்தார்” என்று சுலைமான் இப்னு தர்கான்(ரஹ்) கூறினார்கள். மேலும், ‘இப்னு மஸ்வூத் அவர்கள் (அபூ ஜஹ்லை நோக்கி), ‘அபூ ஜஹ்லே நீயா?’ என்று கேட்டபோது, ‘நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக… அல்லது தம் சமுதாயத்தாராலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக.. யாரும் உண்டா?’ என்று (தன்னத்தானே புகழ்ந்தவனாக) அபூ ஜஹ்ல் சொன்னான்” என சுலைமான்(ரஹ்) அறிவித்தார். அபூ மிஜ்லஸ்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘விவசாயி அல்லாத ஒருவன் என்னைக் கொன்றிருந்தால்… (நன்றாயிருந்திருக்குமே!)” என்று அபூ ஜஹ்ல் கூறினான் என இடம் பெற்றுள்ளது. Volume :4 Book :64

  1. & 4161. (உமர் – ரலி- அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமை) அஸ்லம்(ரஹ்) அறிவித்தார். நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களுடன் கடைத்தெருவிற்குச் சென்றேன். அப்போது ஓர் இளம் பெண் உமர்(ரலி) அவர்களிடம் வந்து, ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! சின்னஞ்சிறு சிறுவர்களைவிட்டுவிட்டு என் கணவர் இறந்து போய்விட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆட்டுக் கால் குளம்பைச் சமைப்பதற்குக் கூட அவர்களால் முடியாது. மேலும், எந்த வித விவசாய நிலமோ, (பால் கறப்பதற்குக்) கால் நடையோ அவர்களிடம் இல்லை. (பசியும்) பஞ்சமும் அவர்களை அழித்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். நான் குஅபாஃப் இப்னு ஈமா அல் ஃம்ஃபாரி என்பவரின் மகளாவேன். என் தந்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஹுதைபிய்யாவில் பங்கெடுத்தவர்கள்” என்று கூறினார். அங்கிருந்து நகராமல் அப்பெண்ணுடனே நின்றிருந்த உமர்(ரலி), ‘நெருங்கிய உறவே வருக!” என்று வாழ்த்துக் கூறினார்கள். பிறகு தம் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த ஓட்டகம் ஒன்றை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். பின்பு உணவு தானியங்களை இரண்டு மூட்டைகளில் நிரப்பி, அந்த இரண்டையும் அந்த ஒட்டகத்தின் மீது ஏற்றி வைத்தார்கள். அந்த இரண்டு மூட்டைகளுக்குமிடையே (செலவுக்குத் தேவையான) காசுகளையும், ஆடைகளையும் ஏற்றினார்கள். பிறகு அதன் மூக்கணங் கயிற்றைப் பிடித்துக் கொண்டு, ‘(தற்போது) இதை ஓட்டிச் செல். இது தீர்ந்து போவதற்குள் அல்லாஹ் உங்களுக்கு நன்மையைத் தருவான்” என்று (அப்பெண்மணியிடம்) கூறினார்கள். அப்போது ஒருவர், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இந்தப் பெண்ணுக்கு அதிகமாகவே வழங்கி விட்டீர்கள்” என்று கூறினார். (அதற்கு) உமர்(ரலி), ‘உன்னை உன்னுடைய தாய் இழக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும் சிறிது காலம் ஒரு கோட்டையை முற்றுகையிட்டு அதனை அவர்களிருவரும் வெற்றி கொண்டதை பார்த்தேன். பிறகு அதில் (ம்டைத்த போர்ச் செல்வத்தில்) நமக்குரிய பங்குகளைக் கோரலானோம்” என்று கூறினார்கள். Volume :4 Book :64

புகாரி 4971. இப்னு அப்பாஸ்(ரலி)

‘(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!’ (அதாவது,) ‘தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!’) எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ‘ஸஃபா’ (மலை) மீதேறி உரத்த குரலில், ‘யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!)’ என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், ‘யார் இவர்?’ என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்று கூடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)’ என்று கூறினார்கள்

புகாரி 4972. இப்னு அப்பாஸ்(ரலி)

நபி(ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள ‘ஸஃபா’ எனும்) அந்த மலை மீதேறி, ‘யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள்

முஸ்லீம்

  1. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் “முகாபரா” முறையில் விவசாயம் செய்துவந்தோம். அப்போது (குத்தகைதாரரிடம்) சூடடித்த பின் கதிர்களில் எஞ்சியுள்ள தானியத்தையும் (நீரோட்டம் நன்றாக உள்ள பகுதியின்) இன்ன விளைச்சலையும் பெற்றுவந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யாரிடம் நிலம் உள்ளதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும். அல்லது தம் சகோதரருக்கு (இலவசமாகப்) பயிரிடக் கொடுத்து விடட்டும். இல்லாவிட்டால் அதை அப்படியே வைத்திருக்கட்டும்!” என்று கூறினார்கள்.

Book :21

  1. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பொலி ஒட்டகத்தை வாடகைக்கு விடுவதற்கும், விவசாயம் செய்வதற்காகத் தண்ணீரையும் நிலத்தையும் (அக்கால முறைப்படி) குத்தகைக்கு விடுவதற்கும் இவ்விரண்டுக்குமே தடை விதித்தார்கள்.

Book :22
இந்த வரிகளில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் சொற்கள் மூல நூலில் இல்லை. அது விளக்கதிற்காக எழுதப்பட்டது.
குரான் மற்றும் ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கும் மெக்காவின் வர்ணனைகளில் மிகவும் சிறிதளவே இங்கே தரப்பட்டுள்ளது. இதிலிருந்து நாம் மெக்காவை பற்றி புரிந்துகொள்வது என்ன?

  1. குரானில் மெக்கா ஆனது, அடைக்கலம் புகும் இடம், போர் தடைசெய்யப்பட்ட இடம், புனித இடம், காபா என்றெல்லாம் தான் சொல்லப்பட்டுள்ளது.
  2. குரானிய நில வர்ணைகளிலே மெக்கா பள்ளத்தாக்கின் அருகில் இருந்துள்ளது
  3. மெக்காவின் அருகே நீரோடைகளும் சுனைகளும் இருந்தன
  4. மெக்காவில் விவசாயம் செய்துவந்தார்கள்.
  5. மெக்காவின் அருகே மலைகள் இருந்தன. அதில் ஏறி நெடுந்தூரம் பார்க்கமுடியும்.
  6. மெக்காவாசிகள் மெக்காவில் விவசாயம் செய்துவந்தார்கள்.
  7. மெக்காவிலே ஆலிவ் மரங்கள், திராட்சை தோட்டங்கள் என பலவகையான தோட்டங்கள் இருந்தன.
  8. மெக்காவை சுற்றி முன்பு அனுப்பிய தூதர்களின் சமாதிகள் இருக்கின்றன
  9. மெக்காவை தாக்க வந்த படைகள் மெக்காமேல் கற்களை வீசி எறிந்து தாக்கின.
  10. மெக்காவில் இருந்து ஆயிரக்கணக்கிலே படைவீரர்கள் மற்ற நகரங்கள் மீது போர்தொடுக்க சென்றார்கள்.

இது மட்டுமல்லாது, மெக்காவை பற்றி பின்னைய வரலாற்று அறிஞர்களான அல் தாபரி போன்றோரின் வர்ணனைகளும் உண்டு.

இப்போது கேட்கப்படவேண்டிய கேள்வி, இன்றைய சவூதி அரேபியாவில் இருக்கும் மெக்காவுக்கு இதிலே சொல்லப்படும் விஷயங்கள் பொருந்துகிறதா?

Ref:
http://corpus.quran.com/
http://www.tamililquran.com/

 

தொடரும்

Series Navigationஇனிய மணம் வீசும் இருவாட்சி மலர்
author

Similar Posts

Comments

  1. Avatar
    ஆனந்த் கணேஷ் says:

    விதி வலியது அல்லாஹ்வே ! விதி வலியது ! ஏமாற்றுப் புரட்டையே ஏமாற்றிவிட்டது விதி.

    இவை தெய்வம் இல்லை, நான் சொல்வதுதான் தெய்வம் என்றார் முஹம்மது நபி. கொடூர சாவுக்கு பயந்து இருக்கின்ற தெய்வங்களை விட்டு விட்டு இல்லாத அல்லாவை கும்பிட ஆரம்பித்தார்கள். இருக்கின்ற காபாவை அவர்கள் கண்ணில் இருந்து மறைத்து இல்லாத காபா கட்டிடத்தை வணங்க வைத்துவிட்டது விதி.

    அரேபியாவில் இப்போது இருப்பது உண்மையான மெக்கா/காபா இல்லை என்றால், அது எந்த நாட்டில் இருக்கிறது ?

    இத்தனை நாட்களாக அரேபியாவுக்குப் போய் முகமதியர்கள் யாரை வணங்கி வந்தார்கள் ?

    இப்படி அல்லா அல்லாத வேறு ஒரு தெய்வத்தை வணங்கி ஷிர்க்கைச் செய்துவருபவர்கள், அல்லாவுக்கு இணை வைப்பவர்கள் மதத் துரோகம் அல்லாவா செய்துவருகிறார்கள் ?

    மதத்துரோகம் செய்பவர்களுக்கு மரணம் மட்டுமே தண்டனை என்றல்லாவா முஹம்மது நபி சொல்லி இருக்கிறார்.

    இப்போது அனைத்து முகமதியர்களும் தற்கொலை செய்துகொள்வார்களா இல்லை ஒருவரை மற்றொருவர் கொன்று மார்க்க வழியை நிலைநாட்டப் போகிறார்களா ?

    இப்படி இவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டால், அவர்களை எந்த மதவழியின்படி இறுதிச் சடங்குகள் செய்வது ?

    அல்லாவே, ஏன் இந்த விளையாட்டு ?!

Leave a Reply to ஆனந்த் கணேஷ் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *