யேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு

author
14
0 minutes, 1 second Read
This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014
 ayaan
ரிக் லிஜார்டோ
மூன்று வாரங்களுக்கு முன்னால்,  யேல் முதல்வர் பீட்டர் ஸாலோவே(Peter Salovey) தனது உரையில் சுதந்திர கருத்து பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருந்தார். வுட்வர்ட் அறிக்கை எவ்வாறு “தெளிவாகவும் விவாதத்துக்கு இடமின்றியும்” சுதந்திர கருத்து பரிமாற்றத்தின் தேவையை கூறுவதையும், “பல்கலை முழுக்க அப்படிப்பட்ட கருத்து வெளிப்பாடு” எவ்வளவு தேவை என்பதையும் பேசுவதை குறிப்பிட்டார்.
அந்த உன்னத குறிகோள்களை நடைமுறை படுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. பக்லி புராக்ராம் (Buckley Program) என்ற இளங்கலை மாணவர்கள் குழுமம் சமீபத்தில் அயான் ஹிர்ஸி அலி அவர்களை பேச அழைத்திருந்தது.  சாதனையாளரும், துனிச்சல மிக்கவருமான அயான் ஹிர்ஸி அலி ஒரு அசாதாரணமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர். குழந்தை பருவத்தில் பெண்குறி சிதைப்புக்கு உள்ளானவர். கட்டாய திருமணத்துக்கு உட்பட மறுத்து நெதர்லாந்துக்கு தப்பிச் சென்றவர். சில அமைப்புகள் கூறுவன போல, இந்த  நிகழ்வுகள் “துரதிர்ஷட வசமான நிகழ்வுகள் ” மட்டுமே அல்ல. . நெதர்லாந்தில் இருந்தபோது இவர் அகதிகள் முகாமில் பணி புரிந்தார். பிறகு அரசியல்வாதியாக ஆனார். மனித மான்புக்கும், பெண்கள் உரிமைக்குமாக போராடினார். இறுதியில் தனது இஸ்லாமிய நம்பிக்கையை துறந்தார். அதன் பின்னர் தனது படைப்புகள் மூலம், இஸ்லாமுக்கு எதிரான கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார். இந்த படைப்புகளால், தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்திருக்கிறார்.
வில்லியம் எஃப் பக்லி ஜூனியர் ப்ரோக்ராமின் தலைவராக இருக்கும் நான் எவ்வாறு இந்த பிரச்னை தொடங்கியது என்பதை கூறுகிறேன். செப்டம்பர் 15ஆம் தேதி அவர் பேசுவது பற்றி  பிரசுரிக்கப்பட்டதும்,  முஸ்லீம் மாணவர்கள் அமைப்பின் மாணவர் பிரதிநிதி என்னை அணுகி சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். முதல் பேச்சிலேயே, அயான் ஹிர்ஸி அலியை பேச அழைக்கக்கூடாது என்றார். நான் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டேன்.(இவ்வாறு கேட்டுகொண்டதை அவர் பின்னால் மறுத்தார். பல்கலைக்கழக மேலாண்மையாளர்கள் அந்த சந்திப்பில் இருந்தார்கள்)
இந்த பிரதிநிதி ஹிர்ஸி அலியை பேச அழைக்கக்கூடாது என்றும், அப்படி அழைத்தால்,  இந்த துறையில் தகுதி உள்ள இன்னொரு  பேச்சாளரையும் அழைத்து இவரது கருத்துக்கு மறுப்பு சொல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார் என்பதை நான் தெளிவாகவே நினைவில் வைத்திருக்கிறேன். யேல் பல்கலைக்கழகத்துக்கு  அயான் ஹிர்ஸி அலி வருவது பற்றி சில  அமைப்புகள்(அயான் ஹிர்ஸி அலிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் என்று கருதுகிறேன்) ஆர்வம் கொண்டிருக்கின்றன என்று கூறினார். அயான் ஹிர்ஸி அலி யேல் பல்கலைக்கழகத்துக்கு வருவதை பிரச்னையாக  மாற்ற இந்த அமைப்புகள் முயலும் என்று நான் அதனை புரிந்துகொண்டேன். ப்ராண்டய்ஸ் பல்கலைக்கழகம் அயான் ஹிர்ஸி அலிக்கு அளிக்கவிருந்த கௌரவ பட்டத்தை திருப்பி பெற்றுகொண்டதற்கு தான் ஆதரவளிப்பதாகவும் இவர் என்னிடம் தெரிவித்தார்.  சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சியைத்தான்  முதல்வர் ஸாலோவே  தனது உரையில் குறிப்பிட்டார். ( ப்ராண்டய்ஸ் பல்கலையில் அயான் ஹிர்சி அலிக்கு சிறப்பு விருது அளிக்கப் படவிருந்தது. முஸ்லிம் அமைப்புகளும், சில “இடதுசாரி” பேராசிரியர்களும், பல்கலையை நிர்ப்பந்தப் படுத்தி இதைத் தடுத்துவிட்டனர். – மொழி பெயர்ப்பாளர் குறிப்பு.)
இந்த மாணவரும், முஸ்லீம் மாணவர் அமைப்பும், இன்னும் சில 30க்கும் மேற்பட்ட அமைப்புகளும், அயான் ஹிர்ஸி அலியை பற்றி எதிர்மறையான  கருத்துக்களை பரப்பும் ஒரு பிரச்சார கடிதத்தை எழுதி, மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால், இந்த மாணவர், பல்கலைக்கழகத்தின் குறிக்கோளையும் , அதன் பொருளையும்,  சுதந்திர கருத்து பரிமாற்றத்தின் தேவையையும் புரிந்துகொள்ளவில்லை.
சுதந்திர கருத்து பரிமாற்றம் என்பது தன்னோடு ஒத்துப்போகிறவர்களின் கருத்துக்கு மட்டுமேயானது என்பது மூடிய மனதை காட்டுகிறது.  சுதந்திர கருத்து பரிமாற்றம் என்ற பெயரில், பேச வந்தவரின் கருத்துக்களை சரி செய்வது என்பது நகைப்புக்கிடமானது.  ஒரு மாணவர் அமைப்பு மற்றொரு மாணவர் அமைப்பு எப்படி தன் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று எதேச்சதிகாரம் செய்வது வெட்கக்கேடானது.  துறையில் ”நிபுணர்களுக்கு” மட்டுமே அழைப்பு அனுப்பப்பட வேண்டும் என்பது அபத்தமானது. (அல் ஷார்ப்டன் என்ற மனித உரிமை போராட்டக்காரர், மரண தண்டனைக்கு எதிராக சென்ற வாரம் இதே பல்கலையில் பேசியபோது யாரும் அவருக்கு கிரிமினல் சட்டத்தில் நிபுணரில்லை என்று போராடவில்லை)
எவ்வளவுதான் விவாதத்துக்குரியதாக இருந்தாலும், தன் கருத்தை சொல்வதற்கு ஒருவருக்கு உரிமை வேண்டும் என்பதும், அதனை பாதுகாக்கவேண்டும் என்பது முக்கியமானது.
 அயான் ஹிர்ஸி அலி சொல்லும் ஒவ்வொன்றையும் ஒத்துகொள்ளாதவர்களும், அவரது குரல்  பல்கலையில் சுதந்திர கருத்து பரிமாற்றத்தை முன்னெடுக்கிறது என்பதை ஒப்புகொள்வார்கள். முதல்வர் ஸாலோவே, “நாம் புண்படுத்த வேண்டும் என்பதற்காக புண்படுத்தக்கூடாது. அக்கறையான  முற்சிந்தனையுடன் அல்லாது நாம் விவாதத்தை கிளப்பக்கூடாது” என்று கூறினார்.  அயான் ஹிர்ஸி அலியின் படைப்புக்களை நாம் பரிசோதித்தோமேயானால்,  மிகவும் தர்க்கப்பூர்வமான வாதங்களுடன்,  தன் கருத்துக்களை வைக்கிறார் என்பதையும்,  ஒப்புகொள்ளவில்லை என்றாலும், அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்பதற்காக அவர் பேசவில்லை என்பதையும், அவருக்கு வந்திருக்கும் பல கொலை அச்சுறு த்தல்கள் தெளிவாக காட்டுகின்றன.
அவரது எழுத்துக்கள், இந்த இஸ்லாமிய மாணவர்கள் எழுதியது போல, வெறுமே “அவதூறுகள்” அல்ல.   அதனை “வெறுப்பு பேச்சு” என்றும் வகைப்படுத்தவியலாது. மாறுபட்ட கருத்துகளை அடக்க நினைப்பவர்கள் , இந்த “வெறுப்பு பேச்சு” என்ற ஆயுதத்தை இவர்கள் பிரயோக்கிறார்கள்.  முஸ்லீம் மாணவர் அமைப்பு சொல்வது போல, கொந்தளிக்கக்கூடிய பேச்சுக்களை பேசும் மூன்றாம்தர அரசியல்வாதி அல்ல அயான் ஹிர்ஸி அலி என்பதை நடுநிலையான பார்வையாளர்கள் அறிவார்கள்.  உலகெங்கும் அடக்குமுறைக்கு ஆளான லட்சக்கணக்கான பெண்களின் மரியாதையும் மாண்புக்குமான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுத்திகொண்ட போராளி இவர் என்பதை உணர்வார்கள்.
நாங்கள் நடத்தும் நிகழ்ச்சியை நீக்க வேண்டும் அல்லது எப்படி நடத்தவேண்டும் எப்படி  மாற்றவேண்டும் என்று முஸ்லீம் மாணவர் அமைப்பு எங்களை வற்புறுத்தியது எந்த விதத்திலும் சுதந்திர கருத்து பரிமாற்றத்துக்கு ஏற்புடையது அல்ல. முஸ்லீம் மாணவர் அமைப்பு வேறு யாரையும் அழைத்து பேச வைத்தால், அதனை பக்லி புரோக்ராம் தடுக்காது. யேல் பல்கலையில் வேறு யாரேனும் எங்கள் நிகழ்ச்சியை தடை செய்ய முயன்றால், பல்கலை நிர்வாகம் எங்கள் பக்கம் நின்று “சிந்திக்க முடியாதவற்றை சிந்திக்கவும், பேச முடியாததை பேசவும்,  எதிர்க்க முடியாது என்று நம்பப் படுவதை எதிர்க்கவும்” எங்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்.

இதுவே அந்த நிகழ்வில் அயான் ஹிர்ஸி அலி அவர்கள் பேசியது.

Series Navigationவாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
author

Similar Posts

14 Comments

  1. Avatar
    arun narayanan says:

    It is really great that Thinnai is bringing in such nice articles and about authors one normally doesn’t get easy opportunities. Such varied articles are always welcome. We do not want Thinnai to be a partisan medium.

  2. Avatar
    I I M Ganapathi Raman says:

    Principles of freedom of speech is the main theme of this article, not Ms Ali’s speech. அலி என்ன பேசினார் என்று தெரிந்தால் மட்டுமே நன்று.

    பேச்சு சுதந்திரத்தைப் பற்றி ஏகப்பட்ட விவாதங்கள் நடந்தேறியுள்ளன. ஒரு விவாதத்தில் எவரெவர் அச்சுதந்திரத்தை உணர்ச்சிகரமாக‌ ஆதரிக்கிறார் என்று பார்த்தால், பேசப்படும் பொருள் அவருக்கு உவப்பானதாகும்போது மட்டும். அப்படி ஆதரிக்கிறவர் அப்பொருள் அப்படியில்லையென்றால், அதாவது வேறொரிடத்தில் விவாதத்தில், அவர் அச்சுதந்திரம் எப்படியிருக்கவேண்டுமென ஆல்டஸ் ஹக்ஸிலியை எடுத்துக்காட்டுவார். அதாவது, உன் சுதந்திரம் என் மூக்கு நுனி வரைக்குமே. மூக்கைத்தொட அன்று.

    முகமூடிமொழிபெயர்ப்பாளர் இதை உணரவில்லைபோலும். ஓவியரை வெளிநாட்டுக்கு விரட்டும்போது எங்கே போயிற்று இச்சுதந்திரம்? வெண்டி டோனிகரின் புத்தகம் எரிக்கப்பட்ட போது எங்கே போயிற்று இச்சுதந்திரம்?
    ஹார்வர்டு பலகலைக்கழகம் சுப்பிரமணியம் சுவாமியை ஆசிரியர் பதவியிலிருந்து விலக்கியது. காரணம். அவர் மும்பை பத்திரிக்கையொன்றில் இசுலாமியர்கள் இந்தியாவை விட்டு போய்விட வேண்டும் என்று எழுதியதாக ஞாபகம். ஏன் ஹார்வர்டு பலகலைக்கழகம் அப்படிச்செய்தது? அவர்கள் கருத்துச்சுதந்திரத்துக்கு எதிரிகளா?

    யேல் இசுலாமிய மாணவரமைப்பு அலியை அழைக்கவேண்டாமெனச் சொன்னது அலியில் மனித உரிமைப்போராட்டங்கள் பிடிக்கவில்லையென்பதற்காகவன்று; அவர் தொடர்ந்து இசுலாமையும் முஹமது நபியையும் தாக்கி வருவதால் என நினைக்கிறேன். இயலபான எதிர்பார்ப்புத்தானே? ஏதாவது மிரட்டலா விட்டார்கள்? ஓபன் லெட்டர் எழுதித்தானே கேட்டார்கள்? கேட்டும் அலியை பேசவைத்தார்கள் பேச்சு சுதந்திரம் என்று. என்ன பேசினார் என்று பார்த்தால், அதில் நாம் எல்லாரும் நினைப்பதைத்தான் பேசினார் என்று யேல் பலகலைக்கழக நாளேடு சொல்கிறது. அதாவது, தீவிரவாதிகள் கருதி கடைபிடிக்கும் இசுலாமுக்கும், மற்ற் மக்கள் கடைபிடிக்கும் இசுலாமுக்கும் வேறுபாடு உண்டு. மற்ற மக்கள் கடைபிடிக்கும் இசுலாமே உண்மை. என்பதாகத்தான் சொல்கிறார்.

    Rick Lizardo makes a mountain out of a molehill. The translator here naively assumes he has revealed the truth! Amusing :-)

  3. Avatar
    I I M Ganapathi Raman says:

    Liberty of free speech is very very delicate matter in a society where people attach their religion, caste and race with flames of passions. இந்தப்பேருண்மையை நாம் உணர்ந்தே ஆக வேண்டும். ஜனநாயக சமூதாயங்கள் இந்த உண்மையை உணர்ந்தே செயல்படவேண்டும். ஏனென்றால், அங்கும் மத, இன உணர்வுகள் உண்டு. நம் நாட்டிலோ ஜாதி உணர்வு மட்டுமன்று; வெறியும் உண்டு. முத்துராமலிங்கத்தேவரைப்பற்றி கருத்துச்சுதந்திரம் என்று நினைத்தபடி மதுரையில் மேடைபோட்டு பேசமுடியுமா? அல்லது மதுரை காமராசர் பலகலைக்கழகத்தில் பேசமுடியுமா?

    எப்படி இசுலாமைப்பற்றி விமர்சனம் பண்ண முடியாதோ அப்படி இந்துமதத்தைப் பற்றியும் நாம் பேசமுடியாது எனப்து வெண்டி நூலெரிப்புக்காட்டியது அல்லவா?

    பேச்சு சுதந்திரம் முழுக்கமுழுக்க வருவதற்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாய அமைப்பு வேண்டும். நம் நாட்டில் அது இல்லை. அமெரிக்காவிலும் இல்லை.

    I doubt such a society will ever be born. Even Thinnai censors comments, don’t you have noticed? They even refused one of my articles: அதன் மையக்கருத்து: சங்ககாலம் வரை பொது அல்லது சமயம் சாரா இலக்கியம் (secular literature) தழைத்தோங்கியது. பின்னர் மதவாதிகளில் எழுச்சியால், சமய இலக்கியம் உருவாகியது; தவறில்லை. ஆனால், மக்கள் சமய சாரா இலக்கியமே வாழ்க்கையின் பாழ் எனக்கருதும்படி ஆகி, சமயம் சாரா இலக்கியவாதிகள் படைக்கவே பயப்பட்டு காணாமல் போனது அவ்விலக்கியம்.

    Just a common point as I saw. But it appears to hurt certain religious people. எனவே லிபர்டி ஆஃப் ஸ்பீச் இஸ் இன்ஃபிரிஞ்ஜிட். Amerca understands it. Thinnai understands it.

  4. Avatar
    Rama says:

    I hope my comments get published. For all the bleeding hearts, the heroes for “The Right and freedom speech”, where were you when Taslima Nasrin was hounded out of India? Why did not you protest in large numbers on the streets when fatwa issued against Salman Rushdie? What exactly did you do when Islamic mob went on burning buses during the Danish carton episodes? I can go on forever. Selective amnesia, eh?

    1. Avatar
      I I M Ganapathi Raman says:

      Well done! Add the following questions also:
      எங்கே போனார்கள் இந்த கருத்து சுதந்திரவாதிகள் வெண்டி டோனிகரின் நூல் அழிக்கப்பட்ட போது?

      ஓவியர் ஒருவர் இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு வெளிநாட்டில் மரித்த போது?

      கேரளாவில் இயேசுவின் இரண்டாவது முறி என்ற நாடகம் தடை செய்யப்பட்ட போது?

      அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர், இந்து தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட போது? (பட்வர்தனின் குறும்படத்தைப்பார்க்கவும்)

      ஆக, இராமா என்ற பெயரில் எழுதுபவரே!

      செலக்டிவ் அமினீசியா ஒருவருக்கு இருவருக்கோ இல்லை. எல்லா மதத்தவருக்குமே இருக்கிறது. உண்மையா பொய்யா?

      அதற்கு காரணத்தை அலச உங்களுக்கு மனமில்லை பாருங்கள்; அதுவும் இந்த அம்னீசியாவகைகளில் ஒன்றுதான்.

  5. Avatar
    Rama says:

    As usual and as expected, the Psecularists are coming out of their woodwork.For the bleeding heart liberal psecularists with selective amnesia, when was the last time you raised your voice when Hindus ( majority of the time, even you have to admit this)were at the receiving end of Islamic terrorism? Or on Christian bigotry? Or on the genocidal massacre of Hindus in Bangladesh during Ayodhya issue? Do you think that all the Hindu temples just fell down by themselves during the Mogul invasion? My dear chap, Islam has a continuous history of violence against other religions, more so against Hinduism.On the other hand,you can count with fingers on one hand the atrocities committed by Hindus against Muslims and Christians in the name of their religion.And you very well know it. Please spare us your preaching and your political correctness. We have heard it all before and it is simply nauseating. If there was retaliation by the Hindus, more than likely there would have been a earlier trigger by the Muslims in the first place. Hinduism as such has no dogma. You cannot be a fundamentalist if you do not have hard core dogmas. (Example, Jesus is the only way, Allaha is the only God).Jumping up down to protect Islamist’s interests will only earn brownie points and probably a Padma Shri from a future UPA government.

  6. Avatar
    I I M Ganapathi Raman says:

    My dear guy, We here are not talking about the atrocities one religious group committed against the other. We are talking about liberty of free speech.

    பேச்சு அதாவது கருத்து சுதந்திரத்தைப்பற்றித்தான் இந்த மொழிபெயர்ப்பு கட்டுரை பேசுகிறது. மிஸ் அலிக்கு அந்தச்சுதந்திரம் உண்டா இல்லையா? என்பதுதான் கட்டுரைப்பொருள். உண்டு என்றும் அதை எதிர்த்த இசுலாமிய மாணவரமைப்பு கண்டனத்துக்குரியது என்றும் சொல்லாமல் சொல்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

    அலிக்கு உண்டு என்று சொன்னால் சரி. அதே நேரத்தில் வெண்டி டோனிகருக்கும் உசேனுக்கும் ஏன் மறுக்கப்பட்டது என்பதுதான் என் கேள்வி.

    பதில் சொல்லுங்கள். நினைவிற்கொள்க: கொடுக்கவேண்டுமென்று நான் சொல்லவில்லை. சொல்லாமலுமில்லை. My own opinion is not said, although adumbrated a little earlier in my messages.

    My one and only Question for you is:

    அலிக்கு கருத்துச்சுதந்திரமென்றால், ஏன் வெண்டிக்கும் உசேனுக்குமில்லை? ராமா என்பவரே, கதையை மாற்றாமல் நேரடியாகப் பதில் சொல்க!

  7. Avatar
    Rama says:

    I I M Ganapathi Raman
    Sear Sir,You seem to be concerned about the ” right to speak” rather than the SUBJECT Ms Ali is talking about. The topic is not about right to speak. It is about the intolerance of Islam. Please listen to her speech first.

    1. Avatar
      I I M Ganapathi Raman says:

      First of all, you don’t seem to read my messages closely. Nowhere have I revealed which side I am.

      அலிக்கு உரிமை மறுக்கப்படலாமா கொடுக்கப்படவேண்டுமா என்பதில் என் கருத்து reserved. நான் இன்னும் சொல்லவில்லை. அது தேவையுமில்லை.

      என்னை மட்டுமன்று, இக்கட்டுரைப்பொருளையும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இக்கட்டுரை பேச்சு சுதந்திரம் பற்றியே. கட்டுரையாளர் அலியை பல்கலைக்கழகத்தில் பேச அழைத்த அமைப்பின் தலைவர். யேல் பலகலைக்கழகத்தவர். அவர் சொலவது: இப்பல்கலைக்கழகம் அனைவருக்கும் பேச்சு சுதந்திரத்தைத் தருகிறது. எனவேதான் அலிக்கும் தருகிறது.

      ஆக, என்ன தெரிகிறது? அவருக்கு அலியோ, அவரின் பேச்சின் உள்ளடக்கமோ பொருட்டல்ல. பேச்சு சுதந்திரமே பொருட்டு. அலிக்கு இசுலாமியரை பிடிக்கவில்லை. அதே போல இந்துக்களுக்குப் பிடிக்கா இன்னொருவரை அழைத்திருந்தால், அதை இந்துமாணவர்கள் எதிர்த்திருந்தாலும் அமைப்பாளர் இதையே சொல்லியிருப்பார்.

      நீங்கள் எழுதியதிலிருந்து தெரிவது அவர் இசுலாமிய மாணவரைப்புக்கு மட்டுமே எதிராளர். தவறு. இக்கட்டுரைப்பொருள், அவரின் நோக்கம் எல்லாமே பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் சமமாக வழங்கபபட வேண்டும் என்பதுதான்.

      என் நிலை அவரின் நிலைக்கு மாறானது பேச்சு சுதந்திரத்தை அவ்வளவு சுலபமாக வழங்க இயலாதபடி காரணங்கள் இருக்கின்றன. அவற்றை உதாசீனம் பண்ணவேண்டுமானல் ஒரு தக்க சமூகச்சூழல் இருக்கவேண்டும். அது அமெரிக்காவிலும் கூட கிடையாது. ஒரு உ-ம்; முத்துராமலிங்கத்தேவரைப்பற்றியோ, அம்பேத்கரைப்பற்றியோ மதுரையில் பொதுமேடைபோட்டோ, மதுரைக்காமராஜர் பலகலைக்கழகத்திலோ கடுமையான விமர்சனம் வைக்க கலெகடர் விடமாட்டார். அதாவது அரசே தடுக்கும். அதே நேரத்தில், அவ்விமர்சனத்தை யேல் பல்கலைக்கழகத்து மேடையில் வைக்கலாம். புரிந்ததா?

      ஆனால் உங்கள் நிலை? இசுலாமிய எதிர்ப்பாளர்களுக்கு மட்டும் பேச்சு சுதந்திரம். அது எதிர்க்கப்படும்போது அதைப்பற்றிய கட்டுரைகளை மட்டும் மொழிபெயர்த்து திண்ணையில் போடுவோம். வெண்டி டோனிகரின் கருத்துச் சுதந்திரத்தையும், இராமனுஜனின் கருத்துச் சுதந்திரத்தையும், ஜயபாரதனின் கருத்துச்சுதந்திரத்தையும் எதிர்ப்போம். இல்லையா?

      Note on Ramanujan: An Indo-Anglian poet. From Mysore Iyengar clan. He wrote an essay saying there are upteen Ramayanas written by many during the course of many centuries and went on explaining a few which deeply hurt some sections of fanatical Hindus as the details showed Ramayana characters in bad light. Student wing of BJP and VHP launched agitations, and the essay was removed from the syllabus of Delhi University.

      We shall give freedom to criticise Islam; but won’t give it to criticize Hinduism.

  8. Avatar
    ஷாலி says:

    தீனாநாத் பத்ரா, வித்யாபாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர். பத்ரா போட்ட வழக்கைத் தொடர்ந்து பென்குயின் வெளியீட்டு நிறுவனம் வென்டி டோனிகர் எழுதிய “இந்துமதம் – ஒரு மாற்று வரலாறு” என்ற நூலின் அச்சிட்ட பிரதிகள் அனைத்தையும் சென்ற பிப்ரவரி மாதம் அழித்தது. அடுத்து பிளாக் ஸ்வான் என்ற புத்தக நிறுவனம் வெளியிட்ட “மதவெறியும் பாலியல் வன்முறையும், அகமதாபாத் கலவரங்கள் பற்றிய ஆய்வு-1969 முதல்” என்ற நூலும் “நவீன இந்தியாவின் வரலாறு, பிளாசி முதல் பிரிவினை வரை” என்ற நூலும் சென்ற ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு செல்லாமல் முடக்கப்பட்டன. //It is about the intolerance of Hinduthva// என்று நாம் சொன்னால் நம்ம Rama-கோபித்துக் கொள்வார்.ஏனெனில் அவர் மத சகிப்புத்தன்மையை முஸ்லிம்களிடம் மொத்த குத்தகைக்கு விட்டுவிட்டதால் அவர்களிடம் மட்டுமே அதை எதிர்பார்க்கிறார்.

  9. Avatar
    ஷாலி says:

    // முஸ்லீம் மாணவர் அமைப்பு சொல்வது போல, கொந்தளிக்கக்கூடிய பேச்சுக்களை பேசும் மூன்றாம்தர அரசியல்வாதி அல்ல அயான் ஹிர்ஸி அலி என்பதை நடுநிலையான பார்வையாளர்கள் அறிவார்கள்.//

    Ayaan Hirsi Ali Draws Criticism From Fellow Atheists At Yale!

    (RNS) A campus appearance by Ayaan Hirsi Ali, the outspoken Muslim-turned-atheist activist, is being challenged again, this time at Yale University where she is scheduled to speak Monday night (Sept. 15).
    While her previous campus critics have included members of religious groups, especially Muslims, this time the critics include Ali’s fellow ex-Muslims and atheists.
    “We do not believe Ayaan Hirsi Ali represents the totality of the ex-Muslim experience,” members of Yale Atheists, Humanists and Agnostics posted on Facebook Friday (Sept. 12). “Although we acknowledge the value of her story, we do not endorse her blanket statements on all Muslims and Islam.”
    Those statements include calling Islam “the new fascism” and “a destructive, nihilistic cult of death.” She has called for the closing of Muslim schools in the West, where she settled after immigrating from her native Somalia, and is a vocal advocate for the rights of women and girls in Islam.
    The students’ statement continued: “We believe Ayaan Hirsi Ali represents a sadly common voice in the atheist community that attacks and provokes, rather than contributes to constructive criticism or dialogue.”

    .huffingtonpost.com/2014/09/15/ayaan-hirsi-ali-yale_n_5824828.html

  10. Avatar
    I I M Ganapathi Raman says:

    கேரள தலித் மக்களின் தலைவர் அய்யன் காளி அவர்கள். அவர் வாழ்வும் தொண்டும் கேரள வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியவை. அவரது சிலை திருவனந்தபுரம் சிட்டி சென்டரில் நிற்க காணலாம். அச்சிலையினாலே சிட்டி சென்டருக்கு ஸ்டாச்சு (STATUE) என்ற பெயர் வந்தது. அப்படிப்பட்ட தலித்துகளின் நாயகன் பெயரால் கேரள பலகலைக்கழகத்தில் ஒரு அறக்கட்டளை; அது ஆண்டு தோறும் ஒரு பிரபலத்தை அழைத்து சமூகநீதி தலைப்பில் பேசவைக்கும். இந்த ஆண்டு பேசியவர்: அருந்ததி ராய். அப்பேச்சில் பெரியார் எப்படி காந்தியை விமர்சித்தாரோ அதே விமர்சனத்தை வைத்தார். காங்கிரசு அரசு அவரைப்பிடிக்க போலீசை அனுப்பியது. அவர் பேச்சின் வீடியோவைப் போட்டுப்பார்த்தது. இறுதியில் ஒன்றும் நடக்கவில்லை. கருத்து என்னவென்றால், அப்படி அருந்ததிக்கு பேச்சுரிமை தடுக்கப்பட்ட போது ஏன் திண்ணையில் மொழிபெயர்ப்புக் கட்டுரையைக்காணேம் ?

Leave a Reply to arun narayanan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *