வடகிழக்கு இந்திய பயணம்  8

This entry is part 2 of 8 in the series 8 மே 2022

 

 

சுப்ரபாரதிமணியன்

மேகாலயா என்பது மேகங்களின் கூடாரம் என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம்.பேபே நீர்வீழ்ச்சி, கிராங்க் சூரி நீர்வீழ்ச்சி ஆகியவை அடர்ந்த மலைகளின் மத்தியில் அமைந்துள்ளவை . எங்கும் குளிக்க இயலாது

குற்றாலம் அல்லது  கோவைக்குற்றாலம், திருமூர்த்தி மலை போன்ற நீர்வீழ்ச்சிகள் தரும் குளியல் இன்பத்தை இவைதரவில்லை. பார்வையில் பிரமாண்டமும் வியப்பும் பயமும் தரக்கூடியவை

பயம் தந்த இன்னொரு விசயம் குளிர்.இவை கடந்து ஷில்லாங்கின் பகுதிகளைக் குளிரூடே அடைந்த இரவு நேரத்தில் சரியானகுளிர் பாதுகாப்பு  உடை இல்லாததால்  உடம்பு நடுங்க ஆரம்பித்துச் சிரமம் தந்தது எனக்கு . 9டிகிரி சி யில் உடம்பு நடுங்க ஆரம்பித்தது.குளிர் மட்டுமா நம்மைப் பிரிக்கிறது , எல்லைப் பிரச்சினை எப்போதும் இங்கு மனிதர்களைப் பிரித்து வைத்திருக்கிறது என்றார் வாகன ஓட்டுனர்.

மேகாலயா எல்லைப்பிரச்சினை சக மனிதர்களையும் இடம் பெயர்ந்தவர்களையும் கூறு போட்டுத் தனியே பிரித்து வைத்திருப்பதையும் நான் மொழிபெயர்த்த சாகித்ய அகாதமி வெளியிட்ட “ பூமியின்  பாடல்கள்”  நூலில் மூன்று கதைகள் வெளிப்படுத்துகின்றன

அசாம்  மாநிலத்திலிருந்த நாகாலாந்து 1963லும், மேகாலயா 1972லும், அருணாச்சலப் பிரதேசம் 1975லும், மிசோரம் 1987லும் புதிய மாநிலங்களாக அமைக்கப்பட்டது.[2] மணிப்பூர் மற்றும் மேகாலயாப் பகுதிகள் மாநில அங்கீகாரம் பெறும் வரை, 1956 முதல் 1972 முடிய இந்திய ஒன்றியப் பகுதிகளாக செயல்பட்டது.

இவர்களுக்கான எல்லைப் பிரச்சினை தொடர்ந்து இருந்து கொண்டே  இருக்கிறது. அஸ்ஸாம், மேகாலயா முதல் அமைச்சர்களைக்கொண்டு மத்திய அமைச்சர்  அமித்ஷா நடத்திய மாநில எல்லைகள் சார்ந்த பிரச்சினைகள் பற்றியச் செய்திகளை அங்கிருக்கும் போது  பத்திரிக்கைகளில்  படித்தேன். காங்கிரஸ் கட்சியினரும் மேகலாயா அரசாங்கம் எல்லைப்பிரச்சினைகளைப் பற்றி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது . அதைக்கண்டிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டிருந்த்தைக் காண முடிந்தது.

கொரானா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு இந்த மாநிலங்களில் இடம் பெயரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை  அதிகமாகியிருப்பதையும் அவர்களின் அடையாளங்கள்- அடையாள அட்டைகள், உரிமங்கள் சார்ந்து- எதுவுமில்லாமல் இருப்பதையும் கண்டித்தும் குரல்கள் எழுப்பியதைப்பார்க்க முடிந்தது.

உக்ரேனிலிருந்து போர் சூழலில் தப்பித்து வந்த இரண்டு மாணவர்கள் கவுகாத்தி வருவதற்குப் பணமின்றி சிரமப்பட்டுக்க்கொண்டிருப்பதாக சில செய்திகள் செய்தித் தாள்களில் வெளியாகியிருந்தன.நாங்கள் அங்கிருந்த மார்ச் மாத்த்ஹ்டின் இரண்டாம் வாரம் வரி சுமார் 110 பேர்  உக்ரேனிலிருந்ஹ்டு தப்பித்து வந்து  ஊர் சேர்ந்திருந்தார்கள் . கடைசியாக வந்தவர்கள் டெல்லி, காசியாபாத்தில் அடக்கலமாகியிருப்பதையும் அஸ்ஸாம் வர அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதையும்  செய்திகள் சொல்லின. உக்ரேனில் சாப்பாட்டு வசதியில்லாமல் குண்டு போடும் சத்தங்கள் கேட்டபடி இருந்தவர்கள் தங்கள் நிலைகளை  வீடியோ மூலம்  சமூக ஊடகங்களுக்குத் தர அவர்கள் வெளியேற சமூக ஊடகங்கள் உதவியதை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்

டெல்லி, காசியாபாத்  கூட அவர்களுக்கு நெடுந்தொலைவு ஆகி விட்டது

 பொதுவாகவே, வடகிழக்குப் பிராந்தியம் மலைப் பாங்கானதால் சாலைப் பயணம் சிரமமானது. தூரம் குறைவாய் இருந்தாலும் மலைப் (மழைப்?) பாதையில் நேரம் அதிகம் எடுக்கும். தவிர, மேற்கு வங்கத்தில், உதாரணமாக, கொல்கத்தாவிலிருந்து சாலை மார்க்கமாகச் செல்ல வேண்டுமென்றால், இடையில் பெருமளவுக்கு வங்க தேசம் வந்து விடுகிறது. எனவே நீங்கள் மிகவும் சுற்றித்தான் குவாஹாத்தியை அடைய முடியும்.இவற்றை விட மிக எளிதானது, சிக்கனமானது விமானப் பயணம் என்று  முன்பே முருகன் வேம்பு தெரிவித்திருந்தார்.

நியூஜல்பைகுரி…அப்புறம்…கவுஹாத்தி..திமாபூர்..நியூடின்சுகியா.அத்தோடு இந்தியா பார்டர்.ஒரே இரயில் செல்லும் பாதை (கிழக்கு-மேற்காக) தவிர மற்ற அனைத்தும்(வடக்கு, தெற்கு)மலைப்பிரதேசங்கள் வளைந்து வளைந்து சாலை செல்லும்.ஒரு மலையில் ஏறி இறங்கி அடுத்த மலையில்…ஏற வேண்டும். பொழுதுபோக விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சி. மற்றவர்களுக்கு…..

சாலை போடுவதுபராமரிப்பது கடினம். இரண்டு சமயங்களிலும் அதிக நேரம் காத்திருந்து செல்லவேண்டும்.

ஆனால் இயற்கையின் அழகை ரசிக்க இதை விட அருமையானச் சந்தர்ப்பம் கிடைக்காதல்லவா.

மேகாலயா : 30 லட்சத்திற்கும் கீழ் தான் இங்கு மக்கள் தொகை. பேசப்படுகிற மொழி காசி மற்றும் காரோ. இங்கு ஒரு 1% மக்கள்தான் ஹிந்தி பேசுகிறார்கள்.

சிறப்புஞ்சி இந்த மாநிலத்தின் சிறப்பம்சம்.

இம்மாநிலத்தின் ஒரு சிறப்பு மனிதரைப் பற்றி கண்டிப்பாக கூற வேண்டும் அவர் பெயர் ராம் சிங் இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.

இவர் தினமும் 10 கிலோ மீட்டர் நடந்து சென்று உள்ளூர் விவசாயிகளின் பொருட்களை வாங்கிக்கொள்வார் தன் தேவைக்கேற்ப.

கூடவே நாட்டிற்கு தேவையான விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொள்கிறார்.

சிறிய மாநிலங்களின் சாபக்கேடு என்னவென்றால் மத்திய அரசின் கவனத்தை அவர்களால் ஈர்க்க முடியாது. காரணம் அவர்களின் ஓட்டு வங்கி மிக மிக குறைவு.

பெரிதான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அங்கு விளையாட்டு வீரர்களும், கலைத்துறை சார்ந்தவர்களும் அங்கு வளர்வது அரிது.

வடகிழக்கு மாநிலங்களில் பெரிய பலவீனம் அவர்களுக்கு துறைமுகங்கள் கிடையாது. அதனாலேயே பெரிய தொழிற்சாலைகள் ஏற்றுமதிக்கு ஏதுவாக இருப்பது இல்லை. அதனால் விவசாயத்தை மட்டும் நம்பி அங்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறப்பான சீதோசன நிலை எப்போதும் அங்கு காணப்படுகிறது. அதனால் சுற்றுலாத்துறை அங்கு சிறப்பாக செயல்படுகிறது.

மெத்த படித்தவர்கள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி மற்ற மாநிலங்களில் குடியேறும் அவலநிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும், இது போல் உள்ள சிறிய மாநிலங்களில்.

லாட்டரி சீட்டு நாடு முழுதும் தடை செய்யப்பட்டாலும் 13 மாநிலத்தில் இன்றும் லாட்டரி தொழில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த 13 மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று.

செந்தில்நாதன் அவர்கள் தெரிவித்த தகவலையொட்டி லாட்டரி சீட்டு வாங்கி விடுவது , அதிஷ்ட்த்தைப் பரிசோதித்து விடுவது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் லாட்டரி சீட்டுகள் கண்ணில் படவில்லை

 

  • எப்போதும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் மேகங்களின் ஆலயம் ‘மேகாலயா” என அழைக்கப்படுகிறது.
  • மேகாலய மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழி பேசப்படுகிறது.
  • மேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. 21 ஜனவரி 1972 ல் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. மேகாலயா முழு மாநிலத் தகுதியை அடைவதற்கு முன், 1970 இல் அரை தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது.
  • 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இன்றைய மேகாலயா அசாமின் இரண்டு மாவட்டங்களாக அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சுயாட்சியை அனுபவித்து.
  • பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், “காசி”கள், “சைந்தியா”க்கள், “காரோ”க்கள் என்னும் இனத்தவர்களாவர்.
  • மேகாலயாவின் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளது.
  • மலைகளாலும் காடுகளாலும் சூழ்ந்த இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளான்மைத் தொழிலையே நம்பியுள்ளது.

தகவல் தந்த அஜய் சாய்க்கு நன்றி

0

பிரம்மபுத்திரா ஆறு (Brahmaputra River) 2900 கிலோ மீட்டர்கள்

பிரம்மபுத்ரா ஆறு சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் வழியாக பாய்கிறது. திபெத்திலுள்ள கயிலாய மலையில் ‘ஸாங்-போ’ என்ற பெயரில் ஆரம்பித்து நாம்சா- படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு சேர்ந்து மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.

அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடைசியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 2900 கிலோ மீட்டர்.

பிரம்மபுத்திரா ஆற்றின் அழகை பல படகுப் பயணங்களில் கண்டேன் . எங்கு போனாலும் அக்ண்ணில் படும் அதன் அழகு மன்திற்கு இதம் தருவது. அது தரும் வெள்ளம், அழிவு  சார்ந்த விசயங்கள்  மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் அழகை கவிதைகளால், ஓவியங்களால் சரியாகச் சொல்லி விடமுடியும்

வங்கதேசத்தின் எல்லை ஓரத்தில் இது தூய்மையானதாக ஓடி வியப்புகளை அள்ளி வழங்குகிறது

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 270 ஆம் இதழ்தக்கயாகப் பரணி  [தொடர்ச்சி]
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *