வால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்

This entry is part 4 of 29 in the series 12 மே 2013

 

Walt Whitman 

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

  

காலமும், வெளியும் மெய்யென

ஞானம் வரும் இப்போது !

புல்லின் மேல் திரிந்த போது

முன்பு நான் ஊகித்தது  !

படுக்கையில் நான் மட்டும் தனியே

கிடந்த போது யூகித்தது !

கடற்கரையில்

தாரகைப் பந்தல் வேலியின் கீழ்

நடக்கையில் மறுபடி என்

பாரங்கள், பந்தங்கள் அற்றுப் போயின !

ன் முழங்கை கடல் தீவுகளில்

ஓய்வெடுக்கும் ! 

ன் உள்ளங்கை  

உலகக் கண்டங்களைத்

தழுவிச் செல்லும் !

என் இடுப்புச் சுற்றாடை

கரடு முரடான மலைப் பகுதியில்

உரசிச் செல்லும் !

விழித்துக் கொண்டேன் என்

உள்ளொளி யோடு !

 

 

தாரணிப் பழத் தோப்புகளைப்

பார்வை இடுகிறேன்.

விளைச்சலை நோக்குகிறேன்

கனிந்து தொங்கும்

கோடான கோடிப் பழங்களைப்

காண்கிறேன்.

கோடான கோடி பச்சைக்

காய்கறி களைக்

காண்கிறேன்.

விழுங்கிக் கொண்ட

ஆத்ம ஆவியை நோக்கி

தாவிப் பறக்கிறேன் !

என் படிப்பு முறை

கீழ்நிலை மக்கள் சூழ்நிலையில்

நடந்தேறும் !

பொருளுக்கும்

பொருளற்ற வைக்கும் என்னை

உருவாக்கிக் கொள்கிறேன்.

அடைத்துப் போட முடியாது

என்னை,

எந்த காவற் துறையும் !

தடுக்க முடியாது

என்னை

எந்த விதி முறையும் !

 

 

நங்கூரம் பாய்ச்சி யுள்ளேன்

என் கப்பலுக்கு

சிறிது காலம் மட்டும் !

என் தூதர்கள் தூரத்தில்

தொடர்ந்து பயணம் செய்கிறார்.

அல்லது திரும்பி வருகிறார்

எனக்கவர்

வெகுமதி யோடு ! 

வேட்டைக்குச் செல்கிறேன்

துருவத்தில்

சீல் மீன்,

மிருகக் குளிர்த்தோல்

பெறுவதற்கு !

 

+++++++++++++

 

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (May 8, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. !தூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    Adaikalaraj says:

    வால்ட் விட்மன் கவிதைகள் காலத்தால் அழியாதவை. அவற்றை தமிழ்ப் படுத்தும் தங்கள் முயற்சிக்கு என் பாராட்டுதல்கள்.

Leave a Reply to Adaikalaraj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *