வால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

 

 (Children of Adam)

(Scented Herbage of My Breast)

மெல்லிய இலைகள்

(1819-1892)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

 

 

என்னிதயத்தின் நறுமணக் கொடி

இலைகளை

உன்னிட மிருந்து நான்

சேர்த்தது  

சிறப்பாய் ஆய்ந்திடப் பிறகு !

பிரேதக் குழி இலைகள்,

இறந்த பின்பு

என்னுடல் மீது வளரும்

இலைகள்,

நெடுநாள் இருக்கும் வேர்கள்,

நீண்ட இலைகள் !

அந்தோ !

மெல்லிய இலைகளை

உக்கிரக் குளிர்

உறைந்திடச் செய்யாது !

ஒவ்வோர் ஆண்டும்

இலைகள்

பூத்துப் பொங்கட்டும் !

ஓய்வு எடுத்த இலைகள்

மீண்டும்

புத்துயிர் பெற்று பூக்கட்டும் !

 

 

அந்தோ ! அறியேன்

கடந்து செல்லும் பல நபர்

உன்னைக் கண்பரோ ?

உன் மெல்லிய வசனை நுகர்வரோ ?

ஆயினும் நுகர்வர் சிலரென

நம்புவேன் நான்.

மிருதுவான இலைகளே !

என் குருதியின் மலர்ச்சிகளே !

உள்ளிருக்கும்

உம் இதயத்தை

உமது கருத்துப் படியே

உரைக்க

அனுமதி அளிக்கிறேன்.

என்ன பொருளில் சொன்னீர்

என்று அறியேன்,

உமது உள்ளப் பாதாளத்தில்

உவகை இல்லை

என்பதை !

 

 

என்னை விடப்   

பன்மடங்கு நீவீர்

அடிக்கடி மனக்

கசப்படைவீர் என்பதைத்

தாங்கிட முடியும்

என்னால்.

நாவால் சுடுவீர் !

ஊசியாய்க் குத்துவீர் !  

ஆயினும்

அழகிய தோற்றம் உமக்கு !

மரணம் பற்றிச் சிந்திக்க

வைப்பீர் !

உமது மூலம் மரணமும்

வனப்பாய் உள்ளது !

இறப்பையும் வனப்பையும் தவிர

மெய்யாய் முடிவில்

எது கவர்ச்சி யானது ?

வாழ்வுக் காக நானிங்கு

மந்திரம்

ஜெபிக்க வில்லை !

மரணத்துக் காக

ஜெபிக்க வேண்டும் !

 

 

++++++++++++++++++++++

    

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman  [March 12, 2014]

Series Navigationஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *