வால்ட் விட்மன் வசனக் கவிதை – 74 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 என்னைக் கவர்ந்த புதியவன் நீயா ?

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 74
(1819-1892)

ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
(Are You the New Person drawn toward Me)

என்னைக் கவர்ந்த புதியவன் நீயா ?

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என்னைக் கவர்ந்த புதியவன் நீயா ?
எச்சரிக்கை முதலில்;
நிச்சயமாய் நான் வேறானவன்
நீ நினைப்பது போலின்றி !
எனக்குள்ளே
உன் சிந்தனைக் கொள்கை
உள்ளதென நீ
எண்ணு கிறாயா ?
என்னை உன் நேசனாக்க
எளிதென்று நீ
எண்ணுகி றாயா ?
எனது நட்பு
கலப்பற்றுத் தனித் திருப்தியை
அளிக்கு மென்று நீ
நினைக்கிறாயா ?

நேர்மை யானவன் என்றும்
நம்பிடத் தகுந்தவன்
நானென்றும்
நீ கருது கிறாயா ?
சகிப்பு முகத் தோற்றம்,
சாந்த குணத்தைத் தாண்டி
ஆழ்மனதில் உள்ளதை நீ
காண வில்லையா ?
உத்தமன் ஒருவனைத் தேடி
ஓர் மெய் நெறியில் முன்னேற
ஆர்வம் உள்ளதா ?
அந்தோ !
கனவிலே புரள்வோனே !
இவை யெல்லாம்
மாயை என்றும்
போலிக் காட்சி என்றும் நீ
யோசிப்ப தில்லையா ?

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *