வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)

author
0 minutes, 18 seconds Read
This entry is part 24 of 33 in the series 3 மார்ச் 2013

வால்ட் விட்மன் வசனக் கவிதை -13

என்னைப் பற்றிய பாடல் – 6

(Song of Myself)

Walt Whitman

(1819-1892)
(
புல்லின் இலைகள் -1)

மூலம் : வால்ட் விட்மன்

தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

+++++++++++++++++++++++++++++

 

 

இவை யாவும் மெய்யாய்

எல்லா மனிதரின் சிந்தனைதான் !

எல்லா காலங் களிலும்,

எல்லா நாடுகளிலும் உதித்தவை தான் !

எனது மூலப் படைப்புகள் அல்ல

உன்னைச் சேரா தாயினும் அவை

என்னைச் சேரா தாயினும்

ஒன்றும் பயனில்லை !

புதிரில்லை யாயினும், அவை

புதிரை விடுவிக்கா திருப்பினும்

மதிப்புறுவ தில்லை !

அப்பால் இருப்பவை

அருகில் இல்லை யாயினும் அவை

பொருளற் றவை தான் !

நிலம் எங்கு இருக்குமோ

நீர் எங்குள்ளதோ அங்கெல்லாம்

இந்தப் புல்லினம் முளைக்கும் !

பூகோளத்தைக் குளிப்பாட்டி வைக்கும்

பொதுக் காற்று இதுதான்

 

 

சமமாகப் பரிமாறப் பட்டிருப்பது

நமக்கெல்லாம்

இந்த உணவு தான் !

இயற்கையாய் எழும் பசிக்கு ஏற்றது !

இந்தப் புலால் உணவுதான்

நல்லவர்தீயவர் எல்லோ ருக்கும் !

எல்லாரையும் சந்திக்க நான்

முன்வருவேன் !

ஒருவர் கூட இகழப் பட்டு

ஒதுக்கப் படார் !

வைப்பு மாது,

குப்பை கூட்டுவோன்திருடன் கூட

வரவேற்கப் படுவார் !

உதடு தடித்த அடிமையும்

உடலுறவு நோயாளியும்

வரவேற்கப் படுவார் !

அவருக்கும் பிறருக்கும் வேறுபா டிருப்பது

தவறு தான் !

இந்த நேரத்தில் சொல்லப் போவதை

இரகசிய மாய்ச் சொல்வேன் !

எல்லோ ருக்கும் சொல்வ தில்லை

சொல்வது உனக்கு மட்டும் !

 

+++++++++++++

தகவல்:

1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

3. Britannica Concise Encyclopedia [2003]

4. Encyclopedia Britannica [1978]

5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 27, 2013)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationநிழல்‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *