வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38

This entry is part 11 of 31 in the series 2 டிசம்பர் 2012

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

 

சொல்வது எளிது. ஆனால் அதன்படி நடப்பது எளிதல்ல

அரிமாசங்கத்தின் திட்ட நோக்கங்கள் அருமையானவைதான். உலக வரலாற்றை நன்கு ஆழப்படித்தவர்களுக்கு இது புதிதாகத் தோன்றாது. மனிதன் தோன்றி லடசக் கணக்கான ஆண்டுகளாகி விட்டன. ஆனால் மொழி தோன்றியது சில ஆயிரவருடங்களுக்கு முன்னர்தான். எழுத்தும், இப்பொழுது நாம் காணும் வடிவில் வந்திருப்பது அதற்குப் பின்னர் தான். ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் சிறந்த சிந்தனையாளர்கள் வாழ்ந்திருக் கின்றனர். அவர்கள் வழி நடத்தலில் வாழும் முறைகளுடன் இவைகள் இரண்டறக் கலக்கப்பட்டு விட்டன.. வாழ்வியல் பற்றி எழுதிய வள்ளுவரும், அறிவுரைகள் கூறும் பதினென்கீழ்க்கணக்கும் இன்னும் பல நூல்களும் இன்று சான்றாக இருக்கின்றன.

காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றது. அந்த வேகத்தில் இல்லறத்திலும் ஆட்டம். எனவே மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம். நமது மண்ணிலும் ஒவ்வொரு திட்டத்திலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டுதான் வருகின்றோம்.

மனித மனம் எப்பொழுதும் புதுமையில் கவர்ச்சியைக் காண்கின்றது. புதிய தலைப்பில் சில மாற்றங்களுடன் கொடுத்தால் ஆர்வத்துடன் அறிந்து கொள்ள முயல்கின்றான். உளவியலார் இதனைப் புரிந்து கொண்டு அரசு ஆனாலும் வேறு எதுவாயினும் புதியதாகத் திட்டம் வகுக்கும் பொழுது எவைகளை மாற்றலாம், புதியதாக எவைகளைச் சேர்க்கலாம் என்று சிந்தித்த பின்னரே திட்டம் தீட்டுவர்.

குழந்தைகள் காப்பக அமைப்பாளருக்குப் பயிற்சி கொடுக்கும் பொழுது அரிமா சங்கத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களூம் அடங்கும். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இத்திட்டம் புதிய வடிவுகள் எடுக்கும் பொழுது இன்னும் பல சிறப்பான இலக்குகள் சேர்க்கப்பட்டன. கல்விக் கூடம் போல் பாடத்திட்டங்கள் கிடையாது. கதைகள், பாடல்கள், விளையாட்டுகள் போன்றவைகளில் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் சேர்க்கப்பட்டன. குறிப்பாக விளையாட்டு மூலம் நிறைய தெரிந்து கொள்ள அதற்கேற்ப விளையாட்டுப் பொருட்கள் உருவாக்கப்பட்டன. ஶ்ரீ சேவா மந்திரில் நோக்கங்களை உள்ளடக்கிய பொருட்களாக உருவமைக்கச் சொல்லப்பட்டது. ஒரு பொருளைப்போல் இன்னொன்று வைக்கவில்லை. காப்பகத்தில் டீச்சர்தான் பிரித்துக் கொடுப்பார்கள். சில சமயங்களில் அவர்களுக்கு விருப்பமான பொருள் இன்னொரு குழந்தையிடம் இருக்கும். அதற்காகச் சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள். பகிர்தல், விட்டுக் கொடுத்தல், காத்திருத்தல் போன்ற பல இயல்புகள் விளையாட்டின் மூலம் அறிந்து கொள்வதற் கேற்ப அமைத்திருந்தோம். LKG, UKG போன்ற பள்ளிகள் அல்ல. நேரிடையாக பள்ளிக்கு வரும் குழந்தைகளைவிட இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதை மதிப்பீட்டில் காண முடிந்தது. இதிலும் திறன் படைத்த அமைப்பாளராக இருந்தால் காப்பகச் சிறூவர்களின் திறனும் மேம்பட இருக்கும். .

காந்திகிராமத்தில் பயிற்சி கொடுத்த பொழுது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, சமுதாயத்தில் அவ்வப்பொழுது ஏற்படும் சுளுக்குகளை எப்படி சரியாக்குவது என்றும் பயிற்சியில் கற்றுத்  தரப்பட்டது. சில படிப்பினைகள் அனுபவத்தினிலிருந்து கற்றுக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானோர் அவைகளில் அசட்டையாக இருக்கின்றனர்

பணிக்குச் சேரும் பொழுது எனக்கு வயது 20.  முதல் இரு நாட்களிலும் எனக்குக் கிடைத்த செய்திகள் அதிர்ச்சியைக் கொடுத்தவை. களப்பணி செய்யும் பெண்கள் வம்புகளில் மாட்டிக் கொண்டு அல்லாடுவதைக் கண்டேன். அடுத்து ராட்டை சுற்றக் கற்றுக் கொடுக்கப் போன ஓர் பெண்ணை ஒருவன் கெடுத்துவிட்ட செய்தி. அவள் சொன்னதுதான் முதல் படிப்பினை

“உலகில் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை.கெட்டது எப்பொழுது நடக்கும் என்று சொல்ல முடியாது. பெண்கள் எப்பொழுதும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ”

எப்பேர்ப்பட்ட சிறந்த பாடம்! பெண்ணியம் பேசுகின்றவள், எதற்கும் அஞ்சாத துணிச்சல்காரிக்குக் கிடைத்த முதல் படிப்பினை. என்னிடம் முதல் பக்குவம் ஏற்பட்டது. படிப்பினைகள் சிறியவர்களுக்கு மட்டுமல்ல எந்த வயதிலும் கிடைக்கும். கல்விக்கும் முடிவு கிடையாது. தெரிந்து கொள்ள வேண்டியவைகளும் கடலளவு.

என் அனுபவங்களில் சில பார்க்கலாம் :

பணிகள் பலவகை. ஆசிரியப் பணியும் ஒன்று. எல்லா ஆசிரியர்களும் ஒரே மாதிரி இயல்பைக் கொண்டிருப்பார்களா? எல்லோருக்கும் இருக்கும் திறன்கள் ஒரே அளவுடையதா?

எட்டயபுரப் பள்ளியில் படித்தேன். பாரதி படித்த பள்ளி. சுவமி சிவானந்தர் படித்த பள்ளி.

நான் எட்டாவது படிக்கும் பொழுதுதான் இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. எங்களுக்கு கே.பி.,எஸ் நாராயணன் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடம் படித்தவர்கள் யாரும் அவரை மறக்க முடியாது. சுதந்திரம் பெற்ற சமயத்தில் ஒரு திட்டம் போட்டு அதனைச் சிறப்பு வகுப்பாக நடத்தினர்.

மாதிரி சட்ட சபை. சபாநாயகருக்குத் தனியிடம்.  ஒரு பக்கம் அமைச்சர்கள். இன்னொரு பக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள். பக்கவாட்டில் பார்வையாலார்கள். இது மாதிரி சட்ட சபை. எங்களில் சிலருக்கு அமைச்சர்கள் பொறுப்பும் சிலருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பும் கொடுத்துப் பேச வைத்தார். கல்வி அமைச்சரிடம் கேள்விகள் கேட்கப்படும் அவர் பதில்கள் கூறியாக வெண்டும். மந்திரியின் அறிக்கை மட்டுமே முதலில் தயாரிக்கப்பட்டிருக்கும். மற்றவைகள் மாணவர்கள் சிந்தித்துப் பேச வேண்டும். ஆசிரியர் அப்பொழுது எதுவும் பேச மாட்டார். குறிப்பிட்ட நேரம் கழித்து கூட்டத்தை நிறுத்தி குறை நிறைகளைக் கூறுவார். வர வர நாங்கள் உற்சாகத்துடன் அதில் பங்கு கொள்ள ஆரம்பித்தோம்.

இன்னொரு பயிற்சி.

மேடையில் ஏறச் சொல்வார். ஏறிய பின்னர்தான் பேச வேண்டிய பொருள் பற்றிக் கூறுவார். நாங்கள் சில நிமிடங்களில் சிந்தித்துப் பேச வேண்டும். மேடைப் பேச்சில் எங்களுக்குக் கிடைத்த பயிற்சி

அடுத்து ஒரு வித்தியாசமான முறையில் வாதங்கள். என்னை எழுப்பி பெண்களுக்கு சம உரிமை வேண்டாம் என்று பேச சொன்னார். ஒரு மாணவனை எழுப்பி பெண்ணுக்குச் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று பேசச் சொன்னார். இது எவ்வளவு கடுமையான சோதனை.! பாரதி ஊரில், பாரதி கண்ட புதுமைப் பெண் என்ற பட்டமும் கொடுத்து, பெண்ணியம் பேசும் ஒருத்திக்குக் கொடுத்த தலைப்பு இது. எங்கள் சிந்தனைகளை அவர் செதுக்கிய விதம் இன்றும் அவரை நாஙகள் நினைவில் வைத்துக் கொண்டிருக்கின்றோம். இப்படி எல்லா ஆசிரியர்களும் இருந்துவிட முடியுமா? ஒரு சிலருக்கு தனித் திறமைகளும் ஆர்வமும் இருக்கின்றன அதற்கேற்ப பலனும் அமைகின்றது. மேடையில் சிறந்த பேச்சாளரானதிற்குக் காரணம் என் ஆசிரியர் தந்த பயிற்சிதான்.

என் பள்ளி அனுபவத்தைப் பார்க்கும் பொழுது அரிமா சங்கத்தின் அறிவுரைகள் என் குழந்தைப் பருவத்திலேயே இருந்திருக்கின்றன என்பது புரிந்து கொள்ளலாம்.

எத்தனை திட்டங்கள் செயல்பட்டும் முன்னேற்றம் மட்டும் விரும்பிய அளவில் கிடைக்கவில்லை. ஏன்?

எதுவும் வாழும் வீட்டிலிருந்து தொடங்கப்பட்டால், வீட்டிலே பழக்கமாகி விட்டால் அவைகள் நம்முடன் நீடித்து வாழ முடியும். அதுவும் கூட சூழலின் சுழற்சியில் அடிபட்டுப் போகலாம். மீண்டும் மீண்டும் பயிற்சியும் முயற்சியும் தேவையாகின்றது.

பள்ளி வாழ்க்கை புதிய நட்புகளை ஏற்படுத்துகின்றது. நல்லவை, தீயவை இரண்டும் கலந்தது வெளி உலகம். அது கல்விச் சாலையானாலும் ஒரே விதிதான். அப்பொழுது அவன் தன் பொறுப்பை உணர்தல், தன் இலக்கு என்ன என்பதைத் தெரிந்து வைத்திருத்தல், சொல்ல நினைப்பதையும் தெரிந்து தெளிந்து சொல்லல், ஆக்க பூர்வமான செயல்பாடுகளில் கலந்து கொண்டு முன்னேறிச் செல்லுதல் ஆகியவைகளை எதிர்கொள்கின்றான். அப்பொழுது பெற்றோர்களும் வீட்டிலுள்ள மற்ற பெரியவர்களும், ஆசிரியர்களும் சரியான முறையில் வழிப்படுத்துதல் வேண்டும். அன்றாடப் பணிகளை முதலில் ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். காலையில் எழும் நேரம், இரவில் தூங்க வேண்டிய நேரம் இவைகளை ஒழுங்கு படுத்தி பெற்றோர்கள் கவனித்தல் வேண்டும். பல் துலக்காமல் உண்பது சரியா? உடுக்கும் உடை, உண்ணும் உணவுகளில் ஒழுங்கு இருந்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கை அமையும்.

அரிமா சங்கத்தின் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களில் அதிகமானவர்கள் ஆசிரியர்கள்தான். பள்ளி முடிந்தவுடன் ஆசிரியர்கள் அதே பள்ளியில் தங்கி மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி கொடுக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் அவர்கள் இல்லங்களில் நடத்த வேண்டும். திட்டம் அருமையானதுதான். ஆனால் தொடர் கண்காணிப்பு இல்லை. மேலும் இப்பயிற்சி இந்தியாவில் சில நகரங்களில் மட்டும் நடந்தது. அரசத் திட்டங்களிலேயே நாளடைவில் ஆர்வமும் செயல்பாடும் குறைய ஆரம்பித்து விடுகின்றது. அப்படியிருக்க தொடர் கண்காணிப்பில்லாது நடக்கும் திட்டங்கள் தொடர்ந்து செவ்வனே நடக்காது. மேலும் தமிழ் நாட்டில் ஒரு துயரச் சம்பவத்தால் இதன் முன்னேற்றம் தடைபட்டது. ராஜேஸ்வரி அவர்கள் டில்லிக்கு சென்றிருந்தார்கள். முன்னால் அதிபர் உயர்திரு அப்துல்கலாம் அவர்களிடமிருந்து ஓர் விருதுபெறச் சென்றார்.. திரும்பும் பொழுது சென்னை விமான நிலையத்தில் விழுந்து காலில் அடிபட்டு முடியாமல் படுக்கையில் விழுந்து விட்டார்கள். இப்பொழுது அவர்கள் உயிருடன் இல்லை.

அமெரிக்காவில் அரிமா சங்கப்பணிகளை நேரில் பார்க்க வில்லை. அது பற்றிய சில விபரங்களாவது சேகரித்து உங்களுக்குத் தர விரும்பி தேடலில் புறப்பட்டேன். கிடைத்த விபரங்களை ஆங்கிலத்திலேயே கொடுப்பதற்கு மன்னிக்கவும். இங்கே மொழிப் போராட்டம் வேண்டாம். நமக்கு வேண்டியது தகவல்கள். களம் சென்று பார்வையிட எனக்கு சக்தி யில்லை. இத்திட்டத்தில் பயிற்சி பெற்றவள் என்ற நிலையிலும் இதன் அருமைகளை உணர்ந்தவள் என்பதாலும் கணினி உலகில் வலம் வந்தேன். அரிமாசங்கப் பணிகள் தொடர்ந்து நடப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.

SFA  இதன் அறிக்கை பார்க்கவும் அப்படியே முக்கியமான பகுதியைப் பார்வைக்குக் கொண்டுவந்துவிட்டேன். அந்த நிறுவனத்தார்க்கு நன்றி.

Skills for Adolescence for Out-of-School Time – New!

Skills for Adolescence for Out-of-School Time (SFA for OST) is adapted from Lions Quest’s highly-rated middle school curriculum to provide staff with a positive youth development program that meets the unique demands of out-of-school time settings. The program is comprised of 33 social and emotional learning lessons, five service-learning lessons, three online bullying prevention lessons, 116 reinforcement activities, and numerous relationship-centered learning community strategies and activities. These selections, combined with newly-created implementation tools, align with the six common elements of high-quality OST programming, recognized by researchers and practitioners as having the most influence on positive outcomes for young people.

 

Included with the program manual is a copy of the Changes and Challenges student activity book. A program supplement is available for those who already have the full SFA curriculum. On-site, experiential  training and a supportive webinar series complete the program.

 

The Arkansas Lions have partnered with the Arkansas Service Commission (ASC) to bring Lions Quest to schools across the state! A steering committee comprised of Lions, the Arkansas Learn & Serve Coordinator, two ASC members and one Department of Education representative, have developed an action plan with a timeline of June 2011 through August 2013. Funding from the Arkansas Lions Foundation, Lions Clubs International Foundation, and anticipated county drug education funds will provide staff development workshops, classroom curricula and student materials. The first teacher workshop was held in Fayetteville on June 27, 2011. The ASC anticipates that more than 3,000 middle and high school youth will participate in Lions Quest as a result of this partnership.

 

Program Overview

Lions Quest believes the most effective way to implement positive youth development programs and bring about lasting improvements in school climate is to equip educators with current research, materials and strategies for addressing critical issues facing youth.

All three Lions Quest programs – Skills for Growing (K-5)Skills for Adolescence (6-8), and Skills for Action (9-12) – help foster in young people important life skills, healthy attitudes, strong character, positive relationships, and active citizenship, through easy-to-use classroom materials, superior professional development, and important community partnerships. Our workshops are conducted by certified trainers who represent the highest standards of professionalism in training, education, and commitment to youth. Lions Quest research-based programs support school-community partnerships by linking local schools with the largest service organization in the world – Lions Clubs International.

 

 

Lions Quest provides curricula, products, training and services to support adults in helping young people deal with the complex issues they face every day.

Prevention 
Character Education and Life Skills 
Social and Emotional Learning (SEL) 
Service-Learning

 

வாசகர்கள் இதனைப் படித்துப் பார்க்கவும். அவர்கள் ஊர்களுக்கருகில் இருக்கும் அரிமாசங்கத்துடன் தொடர்பு கொள்ளவும். இது வரை அப்பக்கத்தில் பயிற்சி தரப்படாவிட்டால் அதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லவும். தொடர் கண்காணிப்பிற்கும் வேண்டிக் கொள்ளவும்.

இன்றைய சிறுவர்கள், இளம் காளைப் பருவத்தினருக்கு தேவையான திட்டம். குழந்தைகள் காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளின் வயது 6 வயதுக்கும் கீழ். அதாவது பள்ளிக்குப் போகும் வரை இருக்கலாம். அதற்கு மேலுள்ள வயது அதாவது 5 முதல் 18 வயதுவரை உள்ளவர்களுக்கு இத்திட்டம் மிக மிக அவசியம். புகை பிடிக்கும் பழக்கம், போதை மருந்தும் எடுத்துக் கொள்வது, சினிமாவிற்கு அதிகம் செல்வது, செக்ஸ் பழக்கங்கள் இவைகளின் காரணமாகப் பொய் பேசுதல், ஆடம்பரச் செலவிற்காக வீட்டிலேயே திருடுதல், செக்ஸ் வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பது இது போன்ற தீய பழக்கங்கள் சிறிது சிறிதாக இளம் வயதில் பற்றி விட்டால் அவர்கள் மீண்டுவருவது கடினம். வாழ்க்கையே அழிந்துவிடும். நம் வீட்டுப்பிள்ளைகள் நல்லவர்கள் என்று பாசத்தால் நினைத்து அசட்டையாக இருத்தல் கூடாது. வரும் முன் காப்பது நல்லது. தீய காற்றிலிருந்து இந்தப் பிஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டியது கடமை. எல்லவற்றிற்கும் அரசு செய்ய வேண்டும் என்று இருத்தல் கூடாது. மேலும் அரிமா சங்கம் அமைப்பு உலகளாவியது. வளர்க்கவும். செம்மையாகக் கொண்டு செல்லவும் வாய்ப்புள்ளவர்கள். அரிமா சங்கத்தினர்.  எல்லோருக்கும் அன்பு வேண்டுகோளாக இதனை எழுதுகின்றேன்.

 

ஒன்றை எல்லோரும் கவனித்தில் கொள்ளல் வேண்டும். எந்த திட்டம் ஆரம்பித்தாலும் ஒருவரை மட்டும் நம்பி இருத்தல் கூடாது. சிலர் தன் பெருமை தனக்கு மட்டும் என்று இருப்பதும் தவறு. பயிற்சி பெற்றவுடன் அடுத்த நிலைகளில் சிலரைத் தயார் செய்துவிட வேண்டும். அப்படிச் செய்தால் முதல் நபருக்கு ஏதாவது ஏற்பட்டாலும் பின்னால் தொடர்ந்து செயலில் இறங்க மற்றவர் வருவர். இதனை அடிக்கடி திருமதி ஜாதவ் அவர்கள் கூறுவார்கள். என்னிடம் பணியாற்றியவர்களில் எப்பொழுதும் சிலரைச் சிலத்திட்டங்களில் அதிகமாகப் பயன்படுத்தி தயார் நிலையில் வைத்திருப்பேன். பார்வையாளர்கள் வரும் பொழுது கூட நான் பேசுவதைத் தவிர்த்து களத்தில் யார் பணி செய்கின்றார்களோ அவர்களைத்தான் பேச வைப்பேன். தவறுகள் நேர்ந்தாலும் பின்னர் பாவையாளர்களிடம் விளக்கம் கூறுவேன். இன்றும் எனக்கு என் துறைப் பணியாளர்களுடன் தொடர்பு இருக்கின்றது. என்னைவிடச் சிறந்து பணியாற்று கின்றவர்களக் காணும் பொழுது எனக்குப் பெருமையாக இருக்கின்றது.

இன்னொரு முக்கியமான தகவலைப் பதிவு செய்தாக வேண்டும். ஏதாவது புதிய திட்டம் கொண்டு வர நினைத்தால், இருக்கும் திட்டங்களில் சில மாறுதல்கள் செய்ய நினைத்தாலும் முதலில் ஏற்கனவே இருந்த திட்டங்களின் நோக்கங்களையும், அதன் வெளிப்பாடுகளையும் மதிப்பீடு செய்தல் வேண்டும். அல்லது முக்கிய நோக்கம் சிதறுண்டு போய்விடும். எனவே ஒரு சிலராவது ஆரம்ப காலம் முதல் திட்டங்களின் தோற்றம், வளர்ச்சி, குறை நிறைகள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு முறையுடன் பயிற்சி நின்றுவிடக் கூடாது. அவ்வப்பொழுது சிறிய அளவு பயிற்சிகள், ஆய்வரங்குகள் நடத்திக் கொண்டிருக்க வேண்டும். இலக்கு முக்கியமானது. அதனை என்றும் மறத்தலோ மறுத்தலோ கூடாது.

மகளிர், குழந்தைகள் நலத்திட்டங்கள் அனைத்திலும் பணியாற்றி யிருக்கின்றேன். அதற்கேற்ப பயிற்சிகளும் பெற்றிருக்கின்றேன். தமிழகத்தில் சமூக நல வாரியமும் துறையுடன் இணைந்து செயல்பட்டதால் தொண்டு நிறுவனங்கள் பணிகளையும் அறிவேன். சுதந்திரம் பெறும் முன்னர் பிறந்தவள். அக்காலத்தில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெண்மணிகள் பலருடன் பழகி அவர்களிமிருந்தும் பயிற்சி பெற்றிருக்கின்றேன். எங்கள் துறையில் இப்படி பல நிலைகளில் அனுபவம் பெறும் வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. வரலாற்றுச் செய்திகள் அழிந்துவிடக் கூடாது. எனவே ஆவணப்படுத்து மளவில் சில விபரங்களுடனும் எடுத்துக் காட்டு களுடனும் எழுதியிருக்கின்றேன். இவைகளை அடித்தளமாக வைத்து சமுதாய நலப் பணிகள் செய்தால் முன்னேற்றம் காணலாம் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னும் ஒரு திட்டம்பற்றி மட்டும் எழுத வேண்டும். அதனையும் விளக்கிவிட்டால் இத்தொடரின் இலக்கை அடைந்துவிடுவேன். இதனை என் கடமையாகச் செய்கின்றேன்.

உண்மைகள் கசப்பானவைதான். ஆனால் உடலுக்கு நல்லது செய்யு மென்றால் ருசி பார்க்கக் கூடாது. வருங்கால சந்ததியினருக்கு ஓரளவாவது நிம்மதியான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முயல்வோம்.

“வாழ்க்கையில் எல்லாமே ஏதோ ஒன்றை சொல்லித் தருகின்றது என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை அணுகுபவன் ஒவ்வொரு பிரச்சனை யிலும் ஒவ்வொரு பாடத்தைப் படித்துக் கொண்டு அதைக் கச்சிதமாகச் சந்திக்கும் விதத்தில் தன்னைப் பலப்படுத்திக் கொள்கிறான்.ஒவ்வொரு பிரச்சனையும் அவனை உயர்த்தும் படிக்கட்டாக அமைந்து அவன் புரிந்து கொண்ட விதமாகவே வாழ்க்கை அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசானாக அமைந்து அவனை உயர்த்தி விடுகின்றது.  எனவே புரிந்து கொள்ளும் விதத்திலேயே வாழ்க்கை தீர்மானிக்கப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.”

என்.கணேசன்  – வாழும் கலை

தொடரும்

 

 

Series Navigationதளபதி .. ! என் தளபதி ..!நினைவுகளின் சுவட்டில்(104)
author

சீதாலட்சுமி

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    அரிமா சங்கத்தின் மூலமாக செயல்படும் இந்த குவஸ்ட் பயிற்சி திட்டம் நம் இன இளைஞர்களுக்கு மிகவும் உகந்தது. இதை முறைப்படி நமது பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தினால் பெரும் பயன் பெறலாம். நிச்சயமாக உள்ளூர் அரிமா சங்கங்களுக்கு இதுபற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தங்களின் அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்ளலாம். பொது நலனில் இவ்வாறு அக்கறை கொண்டு பயனுள்ள வகையில் இத்தொடரை வாரந்தோறும் எழுதிவரும் சீதாலட்சுமி அம்மையாருக்கு எனது நல்வாழ்த்துக்கள்……தொடரட்டும் தங்களின் சமுதாய இலக்கியப் பணி! … டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர். says:

    அன்பின் சீதாம்மா,

    தங்களுக்கு அமைந்த ஆசிரியர் போல இப்போதெல்லாம் ஆசிரியர்கள் இருந்தால் இப்போதுள்ள குழந்தைகளின் விவேகமான சிந்தனைகளுக்கு இன்னும் சிறப்பாக அவர்களை உருவாக்கித் தர இயலும்.. இதற்கெல்லாமும் கொடுப்பினை வேண்டும்.

    தாங்கள் குறிப்பிட்ட சங்கங்கள் உலக அளவில் இயங்கி வருவதால் இங்கும் அரிமா சங்கங்கள் சிறப்பாக இயங்கி வருவது , தொடர் கண்காணிப்புடன். தாங்கள் சொல்லும் ஒவ்வொரு வரியும் வருங்கால சந்ததியாரின் மேன்மைக்கும் , நல்வாழ்வையும் மனதிற் கொண்டு தங்களின் உடல் நிலைமையையும் பொருட்படுத்தாது எழுதி இருக்கிறீர். தங்களின் சேவை மனப்பான்மையை எண்ணி வாழ்த்துகிறேன்.

    டாக்டர்.ஜி.ஜான்சன் அவர்கள் சொல்வது போலவே….தான் …தொடர வேண்டும் எழுத்தால் இனி தங்களின் சமுதாய இலக்கியப் பணி! … !

    அன்புடன்
    ஜெயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *