விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.

This entry is part 27 of 29 in the series 12 மே 2013
viswaaa

5. யமுனா ராஜேந்திரனின் கட்டுரை வத வதவென்று பல படங்களைப் பற்றிப பேசுகிறது. அவர் எத்தனை படங்களைப் பார்த்திருக்கிறார் என்று தம்பட்டம் அடிக்க இது உதவலாமே தவிர விஸ்வரூபம் விமர்சனத்திற்கு உதவாது. ஒரு கலாசாரத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படைப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கில் ஒவ்வொரு பார்வையில் ஒவ்வொரு அழுத்தப் புள்ளியில் செயல்படும். இரண்டு படங்களை ஒப்பிட்டு இந்தப்படம் சிறந்தது, இன்னொரு படம்  சிறந்தது இல்லை என்று மதிப்பீட்டை முன்வைப்பதற்கு அவை இரண்டும் ஒரு நாட்டினைப் பற்றியது என்ற தளம் மட்டும் போதாது. அவற்றின் மையப் புள்ளி என்ன, அவை ஒரே விதமான நிகழ்வுகளை வெவ்வேறு புள்ளியில் சொல்லிச் செல்கிறதா என்பதும் முக்கியம். அவர் அடுக்கிச் செல்லும் படங்களின் வரிசை விஸ்வரூபத்துடன் எதனால் ஒப்பிடப் படுகிறது என்று சொல்லாமலே அல்லது, சொல்லும் போது எந்தப் பொருத்தமும் இல்லாமலே விஸ்வரூபத்தை விட காபூலி கிட் சிறந்தது, ஒசாமா படம் அமெரிக்கர்களை மகிழ்ச்சிப் படுத்த எடுக்கப் பட்டது என்று எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்கிறார். முக்கியமான ஈரானிய இயக்குனர் மக்மல்பபின் துணையுடன் ஒசாமா படம்  இயக்கிய சித்திக் பர்மக் அமெரிக்க அடிவருடி என்று ஒரு வரியில் சொல்லிவிட்டால் தீர்ந்தது யமுனா ராஜேந்திரனின் விமர்சனம். சித்திக் பர்மக் மாஸ்கோவில் திரைப்படம் பயின்றவர் என்பது ஒரு கூடுதல் செய்தி.

வேடிக்கை என்னவென்றால், விஸ்வரூபத்தில் ஆப்கான் நிகழ்வுகள் என்று காட்டப்படும்  எதுவும் உண்மையல்ல என்று யமுனா ராஜேந்திரனோ அல்லது வேறு விமர்சகர்களோ சொல்லவில்லை. அவர்கள் கேள்வி என்னவென்றால், இதை ஏன் சொல்கிறார், ஏன் அமெரிக்காவைக் குற்றம் சாட்டவில்லை, என்பது தான்.

6. தாலிபான் பற்றிப் பேசும்போதெல்லாம் அமெரிக்கா  அளித்த ஆயுதங்கள், பெனசிர் புட்டோ அளித்த உதவி, பாகிஸ்தான் தொடங்கிய இயக்கம்  என்று மற்றவர்கள் மேல் பழி போடும் ஒரு போக்கு தமிழக/இந்திய அறிவுஜீவிகளுக்கே  உரிய ஒரு வியாதி. வேடிக்கை என்னவென்றால் தாலிபான் யாரும் இப்படி அறிக்கைகள் விடுவதில்லை. அவர்கள் தம் செயல்பாடுகளுக்கெல்லாம், இஸ்லாமையும், குரானையும் தான் பொறுப்பாக்குகிறார்கள். தாலிபான் ஏதும் ஸ்கௌட் இயக்கமல்ல. எடுப்பார் கைப்பிள்ளையாக இயங்குகிற பொம்மலாட்டமும் அல்ல அது. உயிரும் உடலும் கொண்ட சுய சிந்தனை உள்ள தலைவர்களையும் இஸ்லாமும், குரானும் நன்கறிந்த மனிதர்களையும் உட்கொண்டது அந்த இயக்கம். இப்படி வெளி சக்திகளால் தான் இந்த இயக்கம் உருவாகியது என்றால், அமேரிக்கா வெளியேறினவுடன் அவர்கள் திசை மாறியிருக்கலாம். பாகிஸ்தான் இடை இடையே தன்  உதவியை நிறுத்திக் கொண்ட தருணங்களில் தன் வன்முறை வழிகளை விட்டிருக்கலாம். பெண்களை மிக மோசமாக நடத்துவது இஸ்லாமிற்குப் புறம்பானது என்று பெண்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுத்திருக்கலாம். அதெல்லாம் ஏதும் நடக்கவில்லை. ஆனாலும் அருந்ததி ராய் தொடங்கி, நம் உள்ளூர் யமுனா ராஜேந்திரன் வரையில் தாலிபான் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். தாலிபான் இயக்கம் தன்னளவில் எந்த நோக்கும் இல்லாத ஒரு இயக்கம் என்ற ஒரு பிரமையை இவர்கள் எபப்டிப் பெற்றார்கள் என்று தெரியவில்லை.

Series Navigationகல்யாணக் கல்லாப்பொட்டிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை
author

கோபால் ராஜாராம்

Similar Posts

Comments

  1. Avatar
    புனைப்பெயரில் says:

    தகுதிக்கு மீறி விஸ்வரூபத்திற்கு முக்யதுவம் ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *