ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 31) காதலின் மனக்காட்சி

This entry is part 18 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

++++++++++++++

(ஈரேழ் வரிப்பா -31)

காதலின் மனக்காட்சி

உன் நெஞ்சம் பொங்கியது நேசிக்கும் ஏனைய இதயங்களால்
என் வாழ்வைக் கடந்தவர் போனதால் இறந்ததாய் நினைப்பேன்
காதலே ஆட்சி அங்கே, காதல் உறுப்புகள் யாவும் நேசிக்கப்படும்
மரித்ததாய் நினைத்த நண்பரை எல்லாம் காண்ப துன்னிடம்.
சொரிந்த புனிதக் கண்ணீர்த் துளிகள் எத்தனை, எத்தனை ?
பரிவுள்ள மரபுக் காதல் கண்ணி லிருந்து கவரப் பட்டது.
மரித்தவர் உணர்வுக்கு மதிப்பு தெரியுது இப்போ தெனக்கு.
இடம் மாறி வைத்த பொருள்கள் ஒளிந்துள்ளன உன்னிடம்
நீதான் புதைத்தளம், அங்கே இறந்த காதல் மீளும் உயிர்த்து.
வெகுமதி கள் தொங்கிடும் காதலர் கடந்து போயினர்
என்னுடல் உறுப்புகள் அனைத்தும் உனக்குச் சமர்ப்பணம்
பலரை நேசித்த என்னிதயம் ஒருவன் உனக்கு மட்டுமே
எனக்குப் பிடித்த அவர் படங்களில் உனைத்தான் கண்டேன்
மேலும் (அவர்கள் மூலம்) எனக்குகந்த வற்றைக் கைக்கொள்.

+++++++++

SONNET 31

Thy bosom is endeared with all hearts,
Which I by lacking have supposed dead,
And there reigns love and all love’s loving parts,
And all those friends which I thought buried.
How many a holy and obsequious tear
Hath dear religious love stol’n from mine eye,
As interest of the dead, which now appear,
But things removed that hidden in thee lie.
Thou art the grave where buried love doth live,
Hung with the trophies of my lovers gone,
Who all their parts of me to thee did give,
That due of many, now is thine alone.
Their images I loved, I view in thee,
And thou (all they) hast all the all of me.

++++++++++++++

Sonnet Summary : 31

Sonnet 31 expands upon the sentiment conveyed in the preceding sonnet’s concluding couplet, “But if the while I think on thee, dear friend, / All losses are restored and sorrows end.” In the present sonnet, the young man is a microcosm representing all the poet’s past lovers and friends; however, the poet’s separation from the youth also represents the loss of companionship with these now-dead lovers and friends. Ironically, the young man, whom the poet earlier admonished to bear children to stave off death and mortality, now himself becomes an image of death: “Thou art the grave where buried love doth live.”

The sonnet demonstrates that the poet is really writing to himself rather than to the young man. His physical separation from the youth prompts him to remember lost loves and then link them to his current relationship with the youth. The poet rejoices that his dead friends are metaphysically implanted in the youth’s bosom, but lost friends and lovers — not the young man — are the main subjects of the sonnet.

++++++++++++++++++++++++

Sonnet 31

(Paraphrased)

——————————————————————————–
01.     Your heart and soul are enriched by holding all the loved ones,
figuratively speaking,
02.     Which I (since they’re gone from my life) had presumed dead,
in every way,
03.     And Love, personified, rules there, in your heart and soul,
with all Love’s affectionate qualities,
04.     And all those friends I thought I’d lost forever, I “see” them again,
in you;
05.     How many devoted and dutiful tears

06.     Has emotionally-costly adoration withdrawn from my eyes? —

07.     As emotional payment for the dead, who now appear to be

08.     Only things misplaced earlier, and who lie hidden in your heart and soul;

09.     You are the “house” where dead loves live again,

10.     Where the proper and honorable reminders of my dead friends and loves
are displayed,
11.     And I have transferred to you all the affection I once held for
each of them;
12.     The love I once “owed” to many, is now yours, alone.

13.         Their images, that I loved, I see in you,

14.         And you (“holding” all of them,) hold everything that’s worth anything,

of me.

++++++++++++++++

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) July 31, 2012
+++++++++++++

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -6சாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *