ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 38) என் கலைக் குரு

This entry is part 20 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள்
(Shakespeare’s Sonnets : 38)

என்  கலைக் குரு


மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ள வில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

++++++++++++++

(ஈரேழ் வரிப்பா -38)
என் கலைக் குரு

என்  கலைக்குரு எப்படி இருப்பார் ஆக்கத் திறமில்லாது
உன் மூச்சினில் பிறப்பவை என் பாக்களை நிரப்பும் போது,
உனதினிய தர்க்கம்  உயர் தரச் செம்மையாய் உள்ள போது
ஒவ்வொரு கீழ்த்தரப் படைப்பை ஒத்திகை பார்க்கையில்  ?
உனக்கு நீயே நன்றி கூறிடு என்னிட மிருந்து வருவதாய்
தகுதி உடைய உன் படிப்பு எதிர்க்கும் உன் கண்ணோக்கை !
யார்  அந்த மூடர்  உனக்கு எழுத இயலாமல் போனது
உனக்கு நீயே வழிகாட்டும் ஒளி விளக்காய் உள்ள போது ?
பத்தாம் கலைக்குரு நீ ! பத்து மடங் குக்கு மேல்  தகுதி.
பழைய ஒன்பது கவிஞரைக் காட்டிலும்  நீ பேரெடுத்தாய்
உன்னைக் காண வரும் கவிஞர் படைத்திட வழிநடத்து
அழியாமல் நெடுநாள் நிலைக்கும் அமர காவியங்கள்
என் எளிய திறமை ஆர்வ நாட்களில் மகிழ் வித்தால்
மெய்வலி என்னைச் சேரும்  மேன்மை உன்னைச் சேரும்.

+++++++++

SONNET 38

How can my muse want subject to invent
While thou dost breathe that pour’st into my verse,
Thine own sweet argument, too excellent,
For every vulgar paper to rehearse?
O give thy self the thanks if aught in me,
Worthy perusal stand against thy sight,
For who’s so dumb that cannot write to thee,
When thou thy self dost give invention light?
Be thou the tenth Muse, ten times more in worth
Than those old nine which rhymers invocate,
And he that calls on thee, let him bring forth
Eternal numbers to outlive long date.
If my slight muse do please these curious days,
The pain be mine, but thine shall be the praise.

++++++++++++++
Sonnet Summary : 38
Like the previous sonnet, Sonnet 38 contrasts the selfishly lascivious youth and the adoring, idealistic poet. The poet appears pitifully unable to contemplate his life without the youth, who remains physically distanced from the poet. The poet’s emotional reliance on the young man dominates the sonnet. For example, the youth provides the inspiration for the poet’s verse: “How can my Muse want subject to invent / While thou dost breathe.” The youth is even hailed as the “tenth Muse,” generating ten times the inspiration of the other nine. Ironically, the poet demeans the worth of his own verse not only by acknowledging his complete reliance on the young man but by admitting that any poet could write exceptional poetry were the young man the poem’s subject matter.

The poet basks in his good fortune, but he is not optimistic about the success of his verse: “If my slight Muse do please these curious days, / The pain be mine, but thine shall be the praise.” He continues to bear all of the
responsibility for the relationship’s success or failure, but he seems to be so wholly submerged in his affections for the young man that he risks losing sympathy for his plight.

++++++++++++++++++++++++

Sonnet 38

(Paraphrased)

01. How could my Muse lack subject matter for creative writing

02. While you breathe out that which fills my verse:

03. The sweet subject of you, yourself, which is too excellent,

04. For any inferior writing to record.

05. Please do, give yourself the thanks, if anything from me,

06. Worth your perusal, can withstand your inspection;

07. Since, who could be so lacking in expression, that he couldn’t write of you,

08. When you, yourself, are a guiding light for creativity?

09. You must be the tenth Muse, and worth ten times more

10. Than those ancient nine which poets invoke,

11. And the poet who calls upon you, lead him to produce

12. Immortal poems that outlive lengthy time, itself.

13. If my modest talent does please these exacting times,

14. The effort may be mine, but the praise shall be yours.

++++++++++++++++

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) September 20, 2012

Series Navigationஇந்த வார நூலகம் – வணிக இலக்கியமும் புனைக்கதைகளும்தாகூரின் கீதப் பாமாலை – 32 என் வாழ்வின் கழுத்தாரம் !
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

Leave a Reply to S. Jayabarathan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *