ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ

This entry is part 4 of 9 in the series 4 டிசம்பர் 2022

வெனிஸ்  கருமூர்க்கன்

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++

தாழ்ச்சி காயப் படுத்திச்
சீர்குலைந்த ஆத்மா, 
அழுவது கேட்டால்
அமைதி செய்ய  முயல்வார் !
வலித்துயர்  மிகுந்து பாரம்
அமுக்கி விட்டால்
புலம்புவோம்  அதிகமாய்,
அன்றி இணையாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ] 

நற்பெயர் மாந்தர்க்கு
உதவும் அணிகலன்,
அவர் ஆத்மா வுக்கு….
ஆயினும் என் நற்பெயர்
கெடுப்போன்
தான் இழந்ததை
என்னிடம் திருடி
என்னை வறியன்
ஆக்குவ துண்மை.

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ ஒத்தல்லோ ]

+++++++++++++++++++

முன்னுரை :  உலகப் புகழ்பெற்ற நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த 52 ஆண்டுகளில் 37 நாடகங்கள், பல ஈரேழு வரிப் பாக்கள் எழுதியதாகத் தெரிகிறது.  கடந்த 400 ஆண்டுகளாய் அவரது நாடகங்கள் எல்லா மொழிகளிலும், அனைத்து நாடுகளிலும் பன்முறை அரங்கேறியுள்ளன.  அவரது நாடகங்களில் மனித ஆசாபாசங்கள், வெறுப்பு, விருப்புகள், கோப தாபங்கள், அச்சம், மடமை, பொறாமை, அகந்தை, மோகம், மோசடி, வஞ்சக வாணிப இச்சைகள், நிறவெறி, இனவெறி மாந்தர்களைக் காணலாம். அவரது இறுதிக் காலங்களில்தான் ஹாம்லெட், மாக்பெத், கிங் லியர், ஒத்தல்லோ போன்ற துன்பியல் நாடகங்கள் எழுதப் பட்டதாகத் தெரிகிறது. இந்த ஒத்தல்லோ நாடகம் அவரது காலத்திலும் இன வெறுப்பு, நிற பேதச் சண்டைகள், கொலைகள் இருந்ததைக் காட்டுகிறது. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்தவர்.  தானே நாடங்கள் எழுதியவர்.  நாடகக்கலை மன்றங்கள் அமைத்தவர். அவர்க்குத் திருமணமாகி ஒரு பெண்ணும், ஆணும் இருந்துள்ளார். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளும் [ஏப்ரல் 23, 1564] இறந்த நாளும் [ஏப்ரல் 23, 1616] ஒரே தேதியில் நேர்ந்ததாகச் சிலர் கருதுகிறார்.

மோனிகா & ஒத்தல்லோ

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் : 

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ துன்பியல் நாடகம் 400 ஆண்டுகட்கு முன்னர் வெனிஸ் நகரிலும் , சைப்பிரஸ் தீவிலும் நிகழ்ந்த இன வெறுப்பு, பொறாமையால் விளைந்த தீவினைக் காட்சிகள். அந்த இனச்சண்டை, நிறச்சண்டைகளால் பரிதாபமாகப் பலியான நபர்களைப் பற்றியது.  நாடகம் வெனிஸ் சாம்ராஜிய வல்லமைக் கருந்தளபதி ஒத்தல்லோ, அவனது வெள்ளைக் காதலி, இளங்குமரி மோனிகா ஆகியோரைச் சுற்றி நடப்பது. மோனிகா தந்தைக்குத் தெரியாமல் ஓடி, பலத்த எதிர்ப்பு மீறி, கருந்தளபதியை மணம் செய்து கொள்கிறாள்.  அவரது காதல் திருமண வாழ்க்கை நிற வெறுப்பு, இனக் கசப்பு சமூகத்தால் முறிந்து போகிறது.  முற்போக்குச் சிந்தனை யுடைய, பராக்கிரம கருந்தளபதி ஒத்தல்லோ, பொய்யான மாற்றான் சொற்கேட்டு, மனைவி மீது நம்பிக்கை இழந்து, பயங்கரக் கொலை செய்யத் துணிகிறான். முன்கோபியான ஒத்தல்லோ “மூர்” [Moore] எனப்படும் ஆப்பிரிக்க கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவன்.  வெனிஸ் சாம்ராஜியத்தின் படைத் தளபதியாக நியமிக்கப் பட்ட பராக்கிரம வீரன்.

மோனிகா, ஒத்தல்லோ, வில்லன் புரூனோ

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தின் மூல நிகழ்வு, வெனிஸில் 1565 ஆண்டில் வெளியான  ஓர் இத்தாலிய நாவல் ஹெகாடோமிதி [Hecatommithi] எனப்படுவதில் ஒரு பகுதி.  எழுதிய இத்தாலியர் பெயர் கிரால்டி சிந்தியோ [Giraldi Cinthio]. ஷேக்ஸ்பியர் தன் நாடகத்துக்காக,  அதில பல மாற்றங்களைச் செய்துள்ளார்.

20 – 21 ஆம் நூற்றாண்டுகளில் உலக மாந்தரைத் துயர்ப் படுத்தும்  நிற வெறுப்பும், இனக் கசப்பும், ஷேக்ஸ்பியர் காலத்திலேயே [1600 ஆண்டுகளில்] மத்திய தரைக்கடல் ஐரோப்பிய பகுதியில் இருந்திருப்பதை ஒத்தல்லோ நாடகம் மிகக் கொடூரமாகக் காட்டியுள்ளது. 1940 ஆண்டில் அமெரிக்கா பிராட்வே தியேட்டரில் முதன்முதல் அரங்கேறிய ஒத்தல்லோ நாடகம்  [American and the Son of a Slave]  அடிமைகளைக் கொடுமைப் படுத்தி வந்த அப்போதைய அமெரிக்க வாழ் மாந்தருக்குப் பேரதிர்ச்சியும், பேரடியும் கொடுத் துள்ளது !  அவ்வித இன வெறுப்பும், நிற வேற்றுமையும் உலக நாடுகளில் இப்போது,  21 ஆம் நூற்றாண்டிலும்  பெருகிப் பன்முறை பெரும் இனப்போர் நேர்ந்து வருவது, நாகரீக மனித சமூகம் வெட்கப் பட வேண்டிய தொடர் நிகழ்ச்சி !

[தொடரும்]

Series Navigationநாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்….பிரபஞ்ச மூலம் யாது ?
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *