2 கவிதைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 13 of 17 in the series 9 அக்டோபர் 2022

 

வசந்ததீபன்

1) ஆகப் பெரிய துயரம்
_______________________________
 
நிறமற்ற  மீன்கள் 
உயிர்  காக்கும்
நிறமுள்ள  மீன்கள்  
கனவுகள்  வளர்க்கும்
நிறங்கள்  என்பது  தோற்றப்பிழை
வாழ்தல்  இனிது
வாழ  வைத்தல்  மிக  இனிது
வாழ்விற்கு  தம்மைக்  கொடுத்தல்  
மிக  மிக  இனிது
கனிந்த  வாசனை
பறவைகளை  அழைக்கிறது
பசி  தீர்க்கவே  நிகழட்டும் கொண்டாட்டம்
நாய்கள்  அலைகின்றன
பசி  தீர்க்க  எதுவும்  செய்யும்
எதிர்க்க வெற்றுக் கண்ணீர் போதாது
சர்வாதிகாரியின்  கோரமுகம்  அழிவதில்லை
அவன்  ருசித்த  உதிரத்தின்  வாடை  மறைவதில்லை
சண்டாள  காலத்தின் வன்மம்  தீருவதில்லை
வாழ்ந்த  காலமெல்லாம்  நரித்தந்திரம்
பொதுநலமென  சுயநலம்
கழிவிரக்கம்  மீறி  
வஞ்சம்  தான்  எழுகிறது
பட்டினி  கிடப்பவர்கள்  கிடக்கிறார்கள்
பதுக்கி  வைப்பவர்கள்  வைக்கிறார்கள்
வந்தேமாதரம்  பாடிட
எந்த முகாந்திரமும் இல்லை. 
 
🦀
 
(2) ஆடுகளம்
__________________
 
பால்யத்தின் நிலவறைகள்
திறந்து கொண்டு
ரத்தவாடை மிக்க கனவுகள்
வேட்கை கொண்டு ஆடிய 
உக்கிர அடவுகள்
நினைவில் சுழன்று சுழன்று எழுகின்றன
அப்பா  இருந்தார்
அம்மா  இருந்தாள்
அன்பு  தான்  இருந்ததே  இல்லை
என்  உடலை  மீட்க  நான்  போராடுகிறேன்
கண்ணீரும்  துயரமும்  கசப்பும்  திசையெங்கும் கசிகின்றன
கனவுகள்  பற்றியெரியும்  தேகம்  மெளனமாயிருக்கிறது.
துக்கத்தினை பொதிந்து வைத்த 
பொதி கனக்கிறது
கவலைகள் பூசப்பட்ட அறைகளில்
கண்ணீர் பூசனம் 
நெருக்கப் படர்ந்திருக்கிறது
ஆங்கார  வெறியோடு 
ஆடுகிறது வெறுமை
அனுபவித்து  ஓய்ந்தவன்  
ஞானியாகிறான்
கிட்டாதவன்  உபதேசம்  கேட்கிறான். 
—-
 
 
 
 
 
அன்புமிகு புது திண்ணை மின்னிதழ் ஆசிரியர் அவர்களுக்கு. 
வணக்கம். 
எனது கவிதையை அனுப்பி உள்ளேன். 
தயவு கூர்ந்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 
நன்றி. 
மிகுந்த அன்புடன், 
வசந்ததீபன்
 
 
Series Navigationகாற்றுவெளி ஐப்பசி 2022கபுக்கி என்றோர் நாடகக்கலை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *