உறுதியின் விதைப்பு

This entry is part 33 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தன் உறுதின் மீது
கலைந்திருக்கும்
சிறு சிறு
நம்பிக்கைகளை
சேகரிக்கிறேன் .

நாளையின் மீது
அவை இன்னும்
நிர்பந்திக்கவில்லை
இன்றைய
இப்பொழுதைய
கடக்கும் நிமிடத்தில்
தனக்கு உண்டான
கட்டமைப்பை
சரி பார்த்து
கொள்கிறது .

இயங்குதலில்
கவலை கொள்வதில்லை
அது
என் பிரபஞ்சம்
பார்த்து கொள்கிறது .

என் இருப்பின்
என்றைக்குமான
அவசியம்
தன் எண்ணத்தின்
உறுதியில்
திளைத்திருப்பது
வெறும்
கற்பனை கொண்ட
கனவல்ல
என்பதை நிருபணம்
செய்வதே .

பகடை செய்யப்பட்ட
வாழ்வு அல்ல
மற்றவர்கள் தீர்மானம்
என் மீது
நடைபெறுவதற்கு .

உறுதி கொண்ட
எண்ணங்களை
வழிமறித்து
உரமேற்றுகிறது
தோன்றலின் விதைப்பு .
என் விடியலின் பேரொளி
அகத்தில் நெருங்குகிறது .
-வளத்தூர் தி.ராஜேஷ் .

Series Navigationஅழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலிஉன்னைப்போல் ஒன்று
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *