புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ஷேக்ஸ்பியர்

This entry is part 26 of 31 in the series 31 மார்ச் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள்

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

    Shakespeare இன்று பலரும் பணமிருந்தால்தான் வாழ்க்​கையில் உயர முடியும் என்று நி​னைக்கின்றனர். பணமின்றி வாழ்க்​கையில்​லை என்றும் கருதி மனதிற்குள் மறுகிக் கு​மைகின்றனர். வாழ்வில் வசதி ப​டைத்​தோரே புகழ​டைந்துள்ளனர் என்றும் எண்ணுகின்றனர்.

பணம் ப​டைத்​தோ​ர்தான் புகழ் ​பெற முடியுமா? பணம் ப​டைத்தவர்களுக்குத்தான் இவ்வுலகமா? மற்றவர்களுக்கு இங்கு இடமில்​லையா? அவர்கள் வறு​மையில் உழன்று உழன்று மடிவதுதான் விதியா? வறு​மையாளர்கள், வறு​மையில் உழன்றவர்கள் வாழ்வில் முன்​னேற்றங் கண்டதில்​லையா? வறு​மையில் வாடியவர்கள் புகழ் ​பெறவில்​லையா? இங்ஙனம் பல்​வேறுவிதமான ​கேள்விகள் நமது உள்ளத்தில் அ​லைஅ​லையாக எழுந்த வண்ணம் உள்ளன. இக்​கேள்விகளுக்கு வி​டைகாணும் விதமாக​வே இத்​தொடர் அ​மைகின்றது.

வசதி வாய்ப்புகள் இருந்தவர்கள் தான் வாழ்வில் முன்​னேற்றம் காணுகின்றனர் என்று நி​னைப்பதும் வறு​மையில் உழன்றவர்கள் வறு​மையி​லே​யே உழன்று மடிய​வேண்​டியதுதான் அவர்களது த​லை​யெழுத்து வறு​மையில் வாடியவர்களால் உலகில் புகழுடனும் ​​பெரு​மையுடனும் வாழமுடியாது என்​றெல்லாம் சிலர் கருதுகின்றனர். இவ்வாறு நி​னைப்பது மிக மிக முட்டாள்தனமான எண்ணமாகும்.

அவ்வாறு நி​னைப்பது ​கையாலாகத்தனமாகும். வறு​மை​யே பல​ரைப் புடம்​போட்டு பத்த​ரை மாற்றுத் தங்கமாகப் பரிணமிக்க ​வைத்திருக்கின்றது. வறு​மை​யே பல​ரை வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்களாக மாற்றியது. வறு​மை திற​மை​யை வளர்க்கும் ஓர் ஒப்பற்ற சாதனமாகும்.

என்னங்க அப்படிப் பாக்குறீங்க…அட அமாங்க.. இதுதான் உண்​மைங்க. இதுல எள்ளளவும் சந்​தேக​மே இல்​லை. உலகம் உங்களு​டையது. ​வெற்றி உங்கள் அருகில் உள்ளது. உலகில் சாத​னை ப​டைத்த மனிதர்களில் 99 விழுக்காட்டினர் ஏ​ழைக​ளே ஆவர். அவர்கள் ஏ​​ழைகளாக இருந்ததனால் மட்டு​மே உயர்ந்தனர். அவர்கள் சூழல்க​ளைத் ​தேடினர், உருவாக்கினர், உ​ழைத்தனர், அவர்களும் உயர்ந்தனர். அவர்க​ளைச் சார்ந்​தோரும் உயர்ந்தனர்.

ஏழ்​மை​தான் அவர்க​ளை உ​ழைப்பாளர்களாக மாற்றியது. ஊக்கத்​தைக் ​கொடுத்தது. இன்​றைய இ​ளைஞர்கள் பலர் வறு​மை​யைக் கண்டு அஞ்சி நடுங்கி, அதன் தாக்குதலுக்கு இ​ரையாகின்றனர். சிலர் மட்டு​மே அத​னை எதிர்த்துப் ​போராடி ​வெற்றி​பெற்று ​வெற்றியாளர்களாகத் திகழ்கின்றனர். வறு​மை வந்துவிட்ட​தே என்று கருதி குறுக்கு வழியில் ​சென்றுவிடக் கூடாது. ​நேரிய வழி நிரந்தரமான ​வெற்றி​யைத் தரும். முழு​மையான மகிழ்​வைத் தரும்.. இது அ​னைவரும் கண்ட உண்​மை.

வறு​மை​யை நி​னைத்து வருந்தி மூ​லையில் ஒடுங்கி விதி​யை நி​னைத்து வீழ்ந்து கிடக்கும் வீணர்க​ளையும் நம்மால் முடியாது அதற்குரிய தகுதி நம்மிடம் இல்​​லை என்று பத்தாம் பசலித்தனமாகக் கருதும் எண்ணக் குருடர்க​ளையும் கருத்துக் குருடர்க​ளையும் மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் மூடமதி ​கொண்​டோ​ரையும் எண்ணக் கருத்துக்களால் தட்டி​யெழுப்பி அவர்களுக்குள் தன்னம்பிக்​கை வி​தைக​ளைத் தூவி அவர்க​ளைச் சாத​னையாளர்களாக உருவாக்கும் விதமாக முகிழ்த்த எண்ண​மே இக்கட்டு​ரைத் ​தொடர்.

உலகில் வறு​மையில் உழன்று உ​ழைப்பால் உயர்ந்த உத்தமர்களின் வாழ்க்​கை குறித்த ​தொடர். இத​னை வாசகர்கள் வர​வேற்பர் என்று கருதுகி​றேன்.. இதற்கு முன்னர் பாரதியும் பட்டுக்​கோட்​டையாரும் குறித்த ​தொடருக்கு திண்​ணை வாசகர்கள் எனக்களித்த ஊக்கத்​தை கருத்தில் ​கொண்டு இத்​தொட​ரை எழுத முயல்கி​றேன். நி​றைகு​றை இருப்பின் அன்புடன் சுட்டுக.. அ​வை எனது எழுத்துப் பணிக்குச் ​செம்​மைப்படுத்தி ​மேலும் என்​னை ஊக்கப்படுத்தும் உரமாக அ​மையும்.

1.நாடகக் ​கொட்ட​கையில் ​வே​லை பார்த்த ஏ​ழை

வயிற்றுப் பசி​யைப் ​போக்க நாடக கொட்டகையில் குதிரை வண்டிகளை காவல்காக்கும் வேலை செய்த ஏழை ஒருவர் உலகப் புகழ் பெற்ற அறிஞராக உயர்ந்தார்.பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க வசதியில்லாமல் அதனைப் பாதியிலேயே விட்டுவிட்ட அந்த ஏழையின் எழுத்துக்களைப் பிற்காலத்தில் உலகப் பல்கலைக்கழகங்கள் அ​னைத்தும் ஏற்றுப் போற்றின! அவற்றை ஒவ்வொரு எழுத்தாக எண்ணி ஆராய்ச்சி செய்தன. அவர் யார்?

உலக மொழிகளை அலசிப் பார்த்தால் ஒரு சில மொழிகளுக்கு தனிச் சிறப்பு இருப்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு தமிழுக்கு ‘ழ’ என்ற எழுத்து தனிச் சிறப்பு. அதேபோல் ஆங்கில மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆகக் குறைவாக இருபத்தாறே எழுத்துக்களைக் கொண்ட ஓர் எளிய மொழி என்பதுதான் அந்த தனிச் சிறப்பு.அதனால்தானோ என்னவோ அந்த மொழி இன்று உலக மொழியாக இருக்கிறது. அந்த உலக மொழிக்கு அழகு சேர்த்தவர்கள் பலர். பெருமை சேர்த்தவர்கள் சிலர். அவர்களுள்தலையாயவர் என்று இன்றும் உலகின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் பல அமரஇலக்கியங்களைத் தந்த ஆங்கில இலக்கியமேதை ஷேக்ஸ்பியர்.

அவர் பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில்தான் ஏப்ரல் 23. 1564-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி லண்டனுக்கு அருகில் உள்ள ஸ்ட்ராட் ஃபோர்டு- அபான் -அவான் (Stratford-upon – Avon) என்ற சிற்றூரில் வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்தார் .

அவர் பிறந்தது ஏழ்மையில்தான். வில்லியம் ஷேக்ஸ்பியர் எட்டுப் பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது தந்தை ஜான் ஷேக்ஸ்பியர் கையுறை தைத்து விற்கும்சிறுவியாபாரி. தொழிலில் அவ்வுளவு இலாபம் கி​டைக்காததால் அவரது குடும்பம் வறு​மையில் வாடியது.

இதனால் பன்னிரெண்டாவது வயது வரைதான் சேக்ஸ்பியரால் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. அதன்பிறகு அவரால் முறையான கல்வி கற்க முடியாமல் போனது.பன்னிரெண்டு வயது வரை இலத்தீன் மொழியில் இலக்கண, இலக்கியத்தை அவர் கற்றார். அவருக்கு பதினெட்டு வயதானபோது தன்னைவிட எட்டு வயது மூத்தவரான ஆன்ஹதாவே (Anne Hatha way) என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. 23 வயதான போது அவர் பிழைப்புத்தேடி 1587-ஆம் ஆண்டு லண்டன் வந்து சேர்ந்தார். அடுத்த ஆறு ஆண்டுகள் அவர் என்ன செய்தார் என்பது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. அவற்​றைப் பற்றி யா​தொன்றும் ​தெளிவாகப் புலப்படவில்​லை.

அந்தக் காலகட்டத்தில் நாடகங்களுக்குப் புகழ் பெற்ற நகரமாக லண்டன் விளங்கியது. அங்கு சில இடங்களில் தினசரி நாடகங்கள் மேடையேறும். பல பகுதிகளிலிருந்துசெல்வந்தர்கள் தங்களது குதிரை வண்டிகளில் நாடகம் பார்க்க வருவார்கள்.

அப்படிப்பட்ட ஒரு நாடகக் கொட்டகையில் குதிரை வண்டிகளை காவல்காக்கும் வேலை ​ஷேக்ஸ்பியருக்குக் கிடைத்தது. அப்படி குதிரைகளைக் காவல் காத்தஷேக்ஸ்பியர்தான் பிற்காலத்தில் ஆங்கில இலக்கியத்தின் முகவரியை மாற்றப் போகிறார் என்பது யாருக்கும் ​தெரியாது. அ​தோடு மட்டுமல்லாது அந்த நாடகக்கொட்டகையின் உரிமையாளரும் அத​னை அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

ஷேக்ஸ்பியருக்கு நி​னைவாற்றல் திறன் அதிகம். குதிரைகளை காவல் காக்கும் அதே நேரத்தில் நாடகங்களை ரசித்துப் பார்த்த அவர் நாடகத்தில் வரும் வசனங்களைமனப்பாடம் செய்துகொள்வார். இந்த வசனம் இப்படி இருந்திருக்கலாமே என்று தனக்குள்​ளே​யே நினைத்துக்கொள்வார்.

இது தி​ரைப்படக் கதை போல் இருந்தாலும் ஒருநாள் அந்தச் சம்பவம் நடந்தது. அரங்கம் நிறைந்த கூட்டம், நாடகம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புநாடகத்தில் முதன்​மைப் பாத்திரத்தில் நடிப்பவர் வர வில்லை. இத​னை அறிந்த நாடகக் கம்​பெனியின் நிர்வாகிப் பதறிப்​போனார். என்ன ​செய்வ​தென்று அவருக்குப் புரியவில்​லை. நாடகம் பார்க்க வந்தவர்கள் நாடகத்​தைத் ​தொடங்குமாறு கூச்சலிட்டனர். நாடகக் கம்​பெனியின் நிர்வாகிக்கு அவமானமாகப் ​போய்விட்டது. இதிலிருந்து எப்படி மீள்வது என்று கண்ணீர்விட்டுத் தவித்தார்.

நிலமையை உணர்ந்த ஷேக்ஸ்பியர் நிர்வாகியின் அரு​கே வந்து, “ஐயா நான் அந்தப் பாத்திரத்தில் நடிக்கலாமா?” என்று அ​மைதியாகக் ​கேட்டார், கலக்கத்தில் இருந்த நிர்வாகி அந்தக் குரல் வந்த தி​சை​யைப் பார்த்தார். அங்கு குதி​ரைக் ​கொட்ட​கை​யைப் பாதுகாக்கும் பாதுகாவலரான ​ஷேக்ஸ்பியர் நின்றிருந்தார். நிர்வாகிக்கு ஒன்றும் புரியவில்​லை. அப்பாதுகாவலன் தன்​னைக் ​கேலி ​செய்கின்றானா? அல்லது உண்​மையி​லே​யே உதவுவதற்கு வந்திருக்கின்றானா? என்று அவருக்குக் குழப்பமாக இருந்தது. வேறு ஒரு சமயமாக இருந்திருந்தால் அந்த நிர்வாகி நகைத்திருப்பார். சிரித்த​​தோடு நிற்காமல் அவ​ரை அடித்துத் துரத்தியிருப்பார். ஆனால் அப்போது வேறு வழிதெரியாததால் நிர்வாகியும் சம்மதித்தார். ஷேக்ஸ்பியருக்கு ஒப்பனை செய்யப்பட்டது. நாடகமும் தொடங்கியது.

 

தனக்கு முன் நடித்தவரைக் காட்டிலும், அந்த பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பலத்த கைதட்டலையும், பாராட்டையும் பெற்றார் ​ஷேக்ஸ்பியர். நாடக நிர்வாகிக்கு மகிழ்ச்சி க​ரைபுரண்டு ஓடியது. நாடகத்தில் வந்த சில முக்கிய காட்சிகளில் ஷேக்ஸ்பியர் சொந்தமாகவும் வசனம் பேசினார். நாடகம் முடிந்தவுடன் நன்றிப் ​பெருக்கால் நிர்வாகி ஷேக்ஸ்பிய​ரைக் கட்டித் தழுவிக் ​கொண்டார்.

நாடக ரசிகர்கள் ஷேக்ஸ்பியரின் நடிப்​பை வர​வேற்றனர். அவ​ரைப் பலவாறு புகழ்ந்தனர். ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து மகிழ்ந்துபோன நிர்வாகி தொடர்ந்துநாடகத்தில் நடிப்பதற்கு ஷேக்ஸ்பியருக்கு வாய்ப்புக் கொடுத்தார். ஷேக்ஸ்பியர் சில நாடகங்களையும் அந்த நிறுவனத்திற்காக எழுதிக் கொடுத்தார்.

1592-ஆம் ஆண்டு லண்டன் மாநகரை பிளேக் எனும் கொடிய நோய் பரவி அலைக்கழிக்கத் தொடங்கியது. பிளேக் நோயால் லண்டன் மாநகரம் முடங்கிப் போனது.அதனால் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அனைத்து நாடக கொட்டகைகளும் மூடிக்கிடந்தன. நாடகக் கலைஞர்களுக்கு பிழைப்பு இல்லாமல் போனது.

லண்டனை அலைக்கழித்த அந்த நோய்தான் பல அமர காவியங்களைப் படைக்கும் வாய்ப்பையும், கால அவகாசத்தையும் ஷேக்ஸ்பியருக்குத் தந்தது. அந்த இரண்டுஆண்டுகளில் அவர் நிறைய நாடகங்களையும், கவிதைகளையும் எழுதிக் குவித்தார். இத்தாலியிலிருந்து வந்த இலக்கிய வ​கையான சானட் (sonnet) எனப்படும் புது வகைக்கவிதைகளையும் ஷேக்ஸ்பியர் புனைந்தார். 154 சானட் கவி​தைக​ளை, காதல் நட்பு ஆகிய ​பொருள்களில் ஷேக்ஸ்பியர் எழுதியுள்ளார். லண்டனில் பிளேக் நோய்முடிந்தவுடன் அவரது நாடகங்கள் புத்தகமாக வெளிவரத் தொடங்கின. ஷேக்ஸ்பியர் 24 ஆண்டு இலக்கியப் பணியில் அவர் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார். அவர் எழுதினார் என்று கூறுவதை விட இயற்றினார் என்றுதான் கூற வேண்டும். ஒவ்​வொரு நாடகத்​தையும் திறம்ப​டைத்த ​தேர்ந்த சிற்பி​யைப் ​போன்று வடித்​தெடுத்தார்.

துன்பியல், இன்பியல் என இரு பிரிவுகளாக அவரது நாடகங்களை வகைப்படுத்தலாம். A Midsummer Night’s Dream, As You Like It, The Taming of the Shrew, The Merchant of Veniceபோன்றவை ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்கள் ஆகும். Romeo and Juliet, Hamlet, Othello, King Lear, Julius Caesar, Antony and Cleopatra, போன்றவை அவரது புகழ் பெற்ற துன்பியல்நாடகங்களாக விளங்குகின்றன. எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் இன்றும் காதலுக்கு முகவரி சொல்லும் மிக முக்கியமான உலகஇலக்கியம் ‘​ரோமி​யோ ஜூலியட்’ என்னும் நாடகமாகும் என்பதை எந்த மொழி அறிஞராலும் ஒரு​போதும் மறுக்க முடியாது. உலகம் முழுவதும் ரோமியோ, ஜூலியட் பெயரைஉச்சரிக்காத காதலர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான். அதேபோன்று தன் உயிர் நண்பன் புரூட்டஸ் தன்னை கத்தியால் குத்தும் போது அதிர்ந்து போய் (Et tu Brutus?) “நீயுமா புரூட்டஸ்?” என்று கேட்டுவிட்டு உயிர் விட்ட ஜூலியஸ் சீசரின் கதாபாத்திரத்தையும் இலக்கிய உலகம் ஒருபோதும் மறக்க முடியாது.

இவ்வாறு உலக மக்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு என்றும்​ கோ​லோச்சும் பாத்திரங்க​ளைப் ப​டைத்தார் ஷேக்ஸ்பியர். க​தைமாந்தர்களுக்குத் தனது வலுவான வசனங்களால் ஷேக்ஸ்பியர் உயிர் ஊட்டியதால்தான் இன்றும் அவை உயிரோவியங்களாக உலகில் உலா வருகின்றன.

தமது படைப்புகள் மூலம் இன்றும் நம்மிடையே உலா வரும் ஷேக்ஸ்பியர் 1616-ஆம் ஆண்டு ஏப்ரம் 23-ஆம் நாள் தாம் பிறந்த தினத்திலேயே இறந்து போனார். ஓர்இலக்கிய மேதை 52 வயதில் மறைந்து போனது நாடக இலக்கிய உலகிற்கு பேரிழப்புதான். தமிழ் இலக்கிய உலகின் அமரகவி கம்பன் என்றால் ஆங்கில நாடக இலக்கியஉலகின் அமரகவி ​ஷேக்ஸ்பியர் ஆவார். இருவரின் படைப்புகளுமே அமர காவியங்களாக, அழியா ஓவியங்களாக அ​னைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுப்போற்றப்படுகின்றன.

ஷேக்ஸ்பியரால் எழுதப்பட்டு நானூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது நாடகங்களுக்கு உயிரோட்டம் இருக்கிறது என்பதால்தான் உலகத்தில் உள்ள அ​னைத்துப்பல்கலைக்கழகங்களும் இன்றும் அவற்றை கற்பிக்கின்றன. ஷேக்ஸ்பியருக்கு எந்தப் பட்டமும் யாராலும் ​கொடுக்கப்படவில்​லை. எந்தப் பட்டத்திற்காகவும் அவர் ஏங்கவில்​லை. ஆனால் அவரது எழுத்துக்க​ளைப் பயின்று இன்று பலரும் பட்டங்கள் ​பெற்று வாழ்கின்றனர். இது அவரது நாடகத்திற்கும், அவரது முயற்சிக்கும், உ​​ழைப்பிற்கும் கி​டைத்த மா​​பெரும் ​வெற்றியாகும்.

ஏழ்​மை​யை நி​னைத்து அவர் மூ​லையில் முடங்கிப் ​போயிருந்தால் இன்று உலகம் அவ​ரைப் பற்றிப் ​பேசுமா? அல்லது அவரது ​பெய​ரைத்தான் உச்சரிக்குமா? அ​னைத்திற்கும் காரணம் அவரது விடாமுயற்சியும் உ​ழைப்பு​மே அவரது ஏழ்​மை​யை விரட்டியடித்தது. அவ​ரைப் புகழின் உச்சத்திற்குக் ​கொண்டு ​சென்றது.

ஏழ்மையில் பிறந்து அடிப்படைக் கல்வியைகூட முறையாகக் கற்க முடியாத ஒருவரால் உலகப் புகழ்பெற முடிந்தது. ஏழை என்பது தலையெழுத்தல்ல. ஏழ்மையில்இருந்து இறந்து போவதும் தலையெழுத்தல்ல.

நாளையப் பொழுது நம்முன்னேற்றத்திற்காகக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடன் முயன்றால் வானம் கூட விரைவில் வசப்படும். இலக்கியம் என்ற வானம்ஷேக்ஸ்பியருக்கு வசப்பட்டதற்கு அவரது திறமை மட்டும் காரணம் அல்ல. அவரது தன்னம்பிக்கையும்தான் காரணமாகும். உலக நாடக இலக்கிய உலகில் என்​​றென்றும் ஒளிவிடும் ​வைரமாக ஷேக்ஸ்பியர் ஒளிர்ந்து ​கொண்டிருக்கின்றார். அவர் நம் அ​னைவருக்கும் கலங்க​ரை விளக்கமாகவும் திகழ்கிறார். அவரது வாழ்க்​கை நமக்குப் பாடமாகத் திகழ்கின்றது. நாம் தன்னம்பிக்கையை முதலீடு செய்து உ​ழைப்​போம். வானம் வசப்படும்.

என்ன நண்பர்க​ளே இதப் படிச்சீங்களா? இப்ப வறு​மைங்கறது சாபமல்லன்னு முடிவுக்கு வாங்க.. அது வாழ்க்​கையில் முன்​னேறுவதற்கு இ​றைவன் ​கொடுத்த வரம்ன்னு நி​னைங்க…அட ஆமாங்க…. இ​தைவிட இன்​​னொரு நிகழ்ச்சி ஒண்ணு இருக்கு.. அது ​நெஞ்​சை உலுக்குறதுங்க… ஆமா..வறு​மை வந்தாலும் முயன்று உ​ழைத்த ஒருத்த​ரோட வாழ்க்​கைதாங்க..

சிறுவன் ஒருவன் பசியால் துடித்தான். அவ​னைத் ​தேற்றுவதற்கு யாருமில்​லை. தாய் ​பைத்தியம்…​​………பொறுப்பில்லாத குடிகாரத் தந்​தை…….. அவ​னை வறு​மை துரத்தியது… இருந்தாலும் வறு​மை​யை எதிர்த்துப் ​போராடினான்…​வெற்றி​பெற்றான்… உலக​மே அவ​னைப் பார்த்து மயங்கியது.. அத்த​கையவன் யார்? என்ன ஆவலா இருக்கா…? ​கொஞ்சம் ​பொறு​மையா இருங்க..வறு​மைக்கு வறு​மை​யைக் ​கொடுத்துப் புகழ் ​பெற்ற அந்த ஏ​ழை​யைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்​போம்…(​தொடரும்………..2)

 

Series Navigationபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகத்தின் 74வது நிகழ்ச்சியாக நீயா நானா இறுதிச் சுற்று.
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Comments

 1. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  அன்புள்ள திண்ணை நிர்வாகிகளுக்கு,

  இந்தக் கட்டுரை வரிகள் தாறுமாறாய் தடம் புரண்டுள்ளன. தயவு செய்து இவற்றைச் சீர்ப்படுத்துங்கள்.

  நன்றி,
  சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *