எஸ்.ஹஸீனா பேகம்
எவரேனும்
எனக்கொரு முகமூடியை கொணர்ந்து தாருங்கள்.
ரத்தநாளங்களை
vவறண்டுபோக செய்யக்கூடிய
புகலிடம் தேடித்திரியும்
விரட்டியடிக்கப்பட்ட மக்களின்
மரண ஓலங்கள்
எனது செவிப்பறைகளை தீண்டிடாதவாறு
காதுகளை பஞ்சினால்
அடைக்கப்பட்டதை போன்றதொரு
செவிட்டு முகமூடியொன்றை
கொணா்ந்து தாருங்கள்.
சாதியின் பெயரால்
துகிலுறிக்கப்படும் திரௌபதிகளின்
நிா்வாண கோலங்களை
அசட்டைகளற்று கடந்து சென்றிட
எனக்கோர் குருட்டு முமூடியை
கொணர்ந்து தாருங்கள்.
நெடுஞ்சாலைப்பரப்புகளில்
சிதறுண்டு கிடக்கும்
எவனோ ஒருவனின்
விபத்துக்குள்ளான சடலத்தையும்,
விடிகாலைப்பொழுது முதலே
டாஸ்மாக் தரிசணம் வேண்டி
வரிசையில் காத்துக்கிடந்து
தேசத்தை செங்குத்தாக தூக்கி நிறுத்தவல்ல பெருங்குடிமகன்களையும்
அந்த ஆட்சியா் அலுவலக வளாகத்தினில்
வாயில் கருப்பு துணியை கட்டியவாறு
நீதி கேட்டு அடம்பிடித்து நிற்கும் இளம் பெண்ணையும்
வெகு அலட்சியமாக கடந்து சென்றிட
எனக்கொரு பிததனின் முகமூடியையும் தந்துதவுங்கள்.
இந்த தேசத்தினில்
அயோக்கியனுக்கொரு யோக்கிய முகமூடியும்
காமுகனுக்கொரு ஆன்மீக் முகமூடியும்
போராடடக்காரனுக்கொரு குண்டர் முகமூடியும்
வஞசக அரசியல் வியாபாரிகளுக்கொரு
காந்தீய முகமூடியும்
அணிவித்து அழகு பார்க்கும்
பாரத தாயே
எனக்குமொரு
முகமூடியை கொணர்ந்து தாராயோ…
– எஸ்.ஹஸீனா பேகம்.
- தொடுவானம் 186. நண்பர்களிடம் பிரியாவிடை
- செவ்வாய்க் கோளில் உயிரின மூலவிப் பூர்வத் தோற்ற இருப்பைக் கரிக்கலவை இரசாயன மூலகக் கண்டுபிடிப்பு ஆதாரம் அளிக்கிறது.
- சுப்ரபாரதிமணியன் சிங்கப்பூர் மலேசியா பயணத்தில்
- முகமூடி
- பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்
- விதை நெல்
- உன்னத மனிதன் நாடக நூல் வெளியீடு அறிவிப்பு, சி. ஜெயபாரதன், கனடா
- உன்னத மனிதனை எதிர்நோக்கும் உலகம்
- அவுஸ்திரேலியா – மெல்பனில் நூல் வெளியீடும் ஆவணப்படம் திரையிடலும்
- ”குகைமனிதர்”களது உணவுப்பழக்கம் என்று பிரபலப்படுத்தப்படும் பேலியோ உணவு பழக்கம் ஆபத்தானது என்று உடல்நல நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
- அவள் ஒரு பெண்
- “நீட்”டாய் தெரியும் அசிங்கங்கள்…