நேற்றைய நாளுக்கு ஏக்கம் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 6 of 9 in the series 29 அக்டோபர் 2017

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++

நேற்று எனது

தொல்லைகள் எல்லாம் தெரிந்தன,

வெகு வெகு

தூரத்தில் இருப்பதாய் !

இப்போது அவை எல்லாம்

நிலைக்கப் போவதாய்

கலக்கு தென்னை !

நேற்றைய தினத்தை நம்பிக்

கிடந்தேன் !

திடீரென முன்பு இருந்ததில்

அரை மனிதனாய்க் கூட நானில்லை !

ஒரு கரிய நிழல் என் மீது

படர்ந்துளது !

அந்தோ ! திடீரென

நேற்றைய தினம் வந்தது என் முன்னால் !

ஏனவள் போக வேண்டுமென

நானறியேன் ! ஏன்

அவளிங்கு தங்க வில்லை !

தவறாய் ஏதும் சொல்லி விட்டேனா ?

இப்போது நான் ஏங்கித் தவிப்பது

நேற்றைய தினத்துக்கு !

காதல் விளையாட் டெனக்கு எத்தனை

எத்தனை எளிதாய் இருந்தது,

நேற்றைய தினத்தில் !

இப்போது நான் ஒளிந்து கொள்ள

இடம் ஒன்று தேவை !

அந்தோ !

நேற்றைய தினத்தை நான்

நம்பினேனே !

++++++++++++++

Series Navigationநான் நானாகத்தான்நாயின் கருணை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *