பொம்மைகள்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 22 in the series 1 ஏப்ரல் 2018

அரிசங்கர்

”உன் வேல முடிஞ்சதும் எழுந்து போய்டு, புதுசா எதுவும் தெரியாதா உனக்கு”
இது தான் மலர்விழி, கார்த்திக்கிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள். அதன் பிறகு இன்றோடு நான்கு மாதங்கள் கடந்துவிட்டது. ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள், அவள் சமைக்கும் போது சேர்த்துதான் சமைக்கிறாள், ஒன்றாகவே உறங்குறார்கள். தூக்கத்தில் கை, கால்கள் படுகிறது, சில நேரம் பிண்ணிக்கூட கொள்கிறது. சில நேரம் அணைத்தவாறே கூட தூங்குகிறார்கள். ஆனால் பேசிக்கொள்வது மட்டுமில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு வாட்சப்பில் தகவல் பரிமாரிக்கொள்வதோடு சரி.
மலர்விழி வெட்ஸ் கார்த்திக். மண்டப வாசலில் மிக பெரிய பேனர். சில அமைச்சர்கள், பல வி.ஐ.பிக்கள் என மண்டபம் இருந்த சாலை அன்று பொதுமக்களுக்கு மாற்றிவிடப்பட்டிறுந்தது. மணமகன் அறையும், மணமகள் அறையும் பரிசுப்பொருட்கள் வைக்கவே பத்தவில்லை. இவர்கள் திருமணம் பல பெரிய தலைகளின் தலையீட்டால் முடிவானது. இருவருமே சென்னையில் பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் திருமணம் முடிந்த கையோடு புதுவீட்டில் குடிவைக்கப்பட்டனர்.
இருவருமே வெவ்வேறு நிறுவனங்களில் பதவியில் இருந்ததால் வார இறுதியில் மட்டுமே அனைத்திற்கும் நேரம் வாய்த்தது. திருமணமாக முதல் ஐந்து மாதங்கள் வார இறுதி, சினிமா, மால், பீச், ரிசார்ட், ஆபீஸ் நண்பர்கள் பார்ட்டி என கழிந்தது. முதல் ஐந்து மாதம், இதோ இந்த நான்கு மாதம் சேர்த்து மொத்தம் ஒன்பது மாதங்களே முடிந்திறுக்கிறது. அதற்குள் மலர்விழிக்கு சளிக்க ஆரம்பித்திருக்கிறது.
********
திருமணம் முடிந்து, தேன் நிலவு முடிந்து, மலர்விழி அலுவலகம் வந்த முதல் நாள். உள்ளே நுழையும் போதே அனைவரிம் வாழ்த்துக்களையும் ஒரு புன்னகையாலேயே ஏற்றுக்கொண்டால். சில நல விசாரிப்புகள் முடிந்து தன் வேலையை துவங்கும் போது மாலதி வந்து மலரின் தோலில் கையை போட்டு
“என்ன மச்சி எல்லாம் முடிஞ்சிதா” என இரட்டை அர்த்தத்தில் வினவினாள் மாலதி.
மாலதி மலரின் கீழ் வேலை செய்யும் ஒரு டீம் லீடர். மலரின் அலுவலக தோழியும் கூட.
கேள்வியை கேட்டு திரும்பி பார்த்த மலர் ஒரு வெட்க புன்னகையை பூத்தால். பின் இருவரும் எழுந்து கஃபிடேரியாவை நோக்கி நடந்தார்கள்.
“என்ன மலர் அதுக்குள்ள வந்துட்ட… அடுத்த வாரம் தான் வருவன்னு நினச்சன்.”
“இவளோ நாள் வீட்ல இருந்ததே அதிகம். வீட்ல இருந்தா கெஸ்ட் யாராவது வந்துட்டே இருக்காங்க. அதுகூட பராயில்ல, விருந்துக்குவான்னு சொந்தகாரங்க நச்சரிப்புவேற. போனா ஒரு நாள் முழுக்க மொக்கயா போட்டு கொல்றாங்க. அதான் ஆபீஸ்ல லீவு இல்லனு சொலிட்டு வந்துட்டன்.”
“ஏன் உன் ஹஸ்பண்ட் ஒண்ணும் சொல்லலயா?”
“அவன் எனக்கு மேல. எங்க வீட்டில இருக்கான்.”
“மச்சி இது தான் என்ஜாய் பண்ற டைம். இதல்லாம் விட்டுட்டன, அப்பறம் ஒண்ணும் முடியாது. புள்ளகுட்டியெல்லாம் பொறந்துடுச்சினா நிம்மதியா ஒரு கிஸ் அடிக்கக்கூட முடியாது.”
“என்னடி என்ஜாய்மெண்ட் எல்லாரும் பண்ணறதுதாண பண்ணபோறோம். வேற என்ன. அதிகம்பட்சம் இருவது நிமிஷம். அதுக்கு எதுக்கு ஒரு நாள் பூறா வீட்ல ஒரே மூஞ்சிய பாத்துக்கிட்டு இருக்கனுமா.”
“என்ன இப்படி பேசற… உனக்கு கல்யாணம் பண்ணது பிடிக்கலயா?”
“அப்படிலாம் இல்ல மாலு, கொஞ்சம் பிராக்டிக்கலா யோசி.”
“நானும் அதே பிராக்டிக்கல பத்தி தான் சொல்றன். எந்த காலத்துல இருக்க நீ. அவன் ஜிம்னாஸ்டிக்கே பண்ணறான் நீ என்னனா… ஏய் எவ்ளோ சைட்ஸ் இருக்கு. எவ்ளோ வீடியோஸ் இருக்கு. அதல்லாம் நீ பாத்ததே இல்லயா?”
“அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வருமா? நாம என்ன சர்கஸ் காரியா என்ன. அதல்லாம் மெடிசன் யூஸ்பண்றாங்கனு கேள்விப்பட்டிருக்கன். அதெல்லாம் ரியல் லைஃப்ல வேலைக்கே ஆகாது.”
“நமக்கு சந்தோஷம் வேணும்னா என்ன வேனும்னா யூஸ் பண்ணலாம். லைஃப் என்ஜாய் பன்றதுக்கு தான். இல்லனா நீ சம்பாரிச்சி என்ன பண்ணப்போற. காச வச்சி பொருளவாங்களாம் ஆடம்பறமா வாழலாம். ஆனா செக்ஸ்ல சந்தோஷம் இல்லனா இது எல்லாம் இருந்தும் எல்லாமே வேஸ்ட் தான். யோசி.”

********

மாலைக்கும் இரவுக்கும் நடுவில் கார்த்திக் ஒரு உயர்தர பாரில் அமர்ந்திருந்தான். அவனுடன் அவன் நெருங்கிய நண்பர்கள் சிவகுமாரும், டெனியலும் இருந்தார்கள். இரண்டு, இரண்டு, மூன்று என்று ரவுண்டுகள் ஓடுக்கொண்டிருந்தது. வந்த இருவருக்கும் தெரிந்திருந்தது ஏதோ பிரச்சனை என்று. கார்த்திக் சாதாரமாக தண்ணி அடிக்க மாட்டான் என்று அவர்களுக்கு தெரியும். அவனாகவே பேசட்டும் என காத்திருந்தார்கள். மந்தமான வெளிச்சத்தில் தூரத்தில் பெரிய திரையில் ஓடிய கிரிக்கெட் மேட்சை பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக்,
“ச்சைக்… அவுட்டே ஆகமாட்டான் போலருக்கு…, மச்சான் வேற என்ன வேணும்” என்றான்.
“இல்ல டா போதும்… டிரைவ் பண்ணனும்” என்றான் சிவா.
சற்று யோசித்த கார்த்திக் பேச ஆரம்பித்தான்,
“மச்சான் அவரப்பட்டுடனோன்னு தோனுதுடா”
“ஏண்டா?” என்றான் டேனியல் சிவாவை பார்த்துக்கொண்டே.
“இல்லைடா எங்களுக்கு செட் ஆகலடா.”
“டேய் கல்யாணம் ஆகி இன்னும் ஒரு வருஷம் கூட ஆகல அதுகுள்ள என்னடா?”
“செட் ஆகல அதுக்கு எதுக்குடா டைம் லிமிட்லாம். நாலுமாசமா எங்களுக்கு பேச்சிவார்த்தையே இல்ல. என்ன சொல்ற இதுக்கு.”
“டேய் மிஸ் அண்டர்ஸ்டெண்டிங் வரது சகஜம் தான். நீ போய் பேசனா சரியாக போவுது. அதுக்கு இப்படியே எவ்வளவு நாள் பேசாம இருப்ப சொல்லு?” என்றான் டேனியல்
“இல்லடா இனிமே பேசற ஐடியாவே இல்லடா…”
“என்னடா பண்ணப்போற?”
“டிவோர்ஸ் பண்ணிடலாம்னு இருக்கன்.”
சிவா கோவமாக “அப்படி என்னடா பிரச்சனை. வேற எதுனா லவ் மேட்டாறா?”
“அதுலாம் இல்லடா. இரண்டு பேருக்கும் லைஃப் ஸ்டைல் ஒத்துவரல. அவ எதிர்ப்பாக்கறதுலாம் நமக்கு செட் ஆகாது.”
“எண்ணனுதான் சொல்லேண்டா” என்றான் சிவா.
கார்த்திக் அமைதியாகவே இருந்தான். மீண்டும் மேட்ச் பார்க்க துவங்கினான். அடித்துக்கொண்டிருந்த எதிரணி பேட்ஸ்மேன் அவுட் ஆனதும் அவன் முகத்தில் ஒரு சந்தோஷம் எட்டிப்பார்த்தது. சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டார்கள். இரவு தன் முடிவை நோக்கி போய்க்கொண்டிருந்தது.
********
மலர்விழி வீட்டிற்கு வந்து ஹாலில் இருந்த சோபாவில் சோர்வாக சாய்ந்தாள். உள்ளே திறந்தும் திறக்கப்படாமலும் இருந்த கதவின் இடைவெளியில் இருந்து கார்த்திக் அவளையே பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் பார்ப்பது தெரிந்ததும் தன் செல் போனை எடுத்து பார்க்க ஆரம்பித்தால். அவள் எதிரில் இருந்த டீ டேபிளில் இருந்த காகிதங்களை முதலில் ஓரக்கண்ணில் தான் பார்த்தாள். பிறகு என்ன என்று ஒரு கண்ணை செல் போனில் வைத்துக்கொண்டே பார்த்தாள், பிறகு இரண்டு கண்னையும் கொண்டு சென்றாள். செல் போனை டேபிளில் வைத்துவிட்டு அந்த காகிதங்களை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். கார்த்திக் பதற்றமாக பார்த்துக்கொண்டிருந்தான். முழுவதும் படித்தும் அவள் மெலிதாக புன்னகையித்தாள். பிறகு அருகில் இருந்த தன் பையில் இருந்து ஒரு பேனாவை அடுத்து அதில் எக்ஸ் குறியிட்ட இடங்களில் கையெழுத்திட்டாள். பிறகு மீண்டும் தன் போனை எடுத்து எதோ ஒரு எண்ணை தேடி எடுத்து அழைத்து, காத்திருந்து பிறகு,
“மச்சி… வீடு பாக்க சொன்னேன்ல… எப்போ ரெடியாகும்?
“…………………………”
“அப்படியா… இந்த வீக்ல வேணும். சீக்கிரம் பாரு…”
“……………………….”
“ம்”
“……..”
“ஒகே” என்று சொல்லிவிட்டி, கதவின் இடைவெளியை ஓரக்கண்ணில் பார்த்தபடி சமயலறைக்குள் நுழைந்தாள்.

Series Navigationவ கீதா உரை – புதுமைப்பித்தன் நினைவு – விளக்கு விருது – 2016யான் x மனம் = தீா்வு
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *