புத்தாண்டு பிறந்தது !

This entry is part 4 of 17 in the series 2 ஜனவரி 2022

 

சிஜெயபாரதன்கனடா

 புத்தாண்டு பிறந்தது ! நமக்கு

புத்தாண்டு பிறந்தது !

கடந்த ஆண்டு மறையுது, கரோனா

கடும் நோய்

தடம் இன்னும் விரியுது !

உயிரிழந்த சடலங்கள் குவிப்பு

வேலை இல்லா மக்கள் தவிப்பு

உணவின்றி எளியோர் மரிப்பு

சாவோலம் எங்கும்

நாள் தோறும் கேட்கும் !

ஈராண்டு போராட்டம்

தீரா வில்லை இன்னும் !  

 

அத்துடன்

பூகோளம் சூடேறி

பேரழிவுகள் நேர்ந்து விட்டன !

பேரரசுகள்

போகும் திசை தெரியாது

ஆரவாரம் எங்கும் !

பேய்மழை, பேரிடர், பெருந்தீ மயம்,,

பிரளயக் காட்சிகள் !

  

புத்தாண்டு பிறந்தது !

புவி மக்களுக்கு புத்துணர்ச்சி

புத்துயிர் அளிக்கட்டும் !

வித்தைகள் சிறந்து ஓங்கட்டும் !

விஞ்ஞானத் தொழில்கள் தழைக்கட்டும் !

வேலைகள் பெருகட்டும் !

ஊதியம் கூடட்டும் !

சித்தர்கள் ஞானம் விதைக்கட்டும் !

யுக்திகள் புதிதாய்த் தோன்றட்டும்.

ஜாதிச் சண்டைகள் குறைந்து, !

ஜாதிகள் சேர்ந்து வாழட்டும் !

சமய இனத்தர் கைகோர்த்து வசிக்கட்டும் !

பொரி உருண்டை ஆச்சு

பூத உலகு !

உலக நாடுகள் ஒருமைப் பாட்டில்

வாணிபம் வலுக்கட்டும்,

செல்வீக நாடுகள்,

வல்லரசுகள் வறுமை நாடுகட்கு

எல்லா உகவியும் செய்யட்டும்.

வறுமை குன்றி வாழ்வு தழைக்கட்டும்.

மின்சக்தி பெருகி யந்திரங்கள் ஓடட்டும்.

வேளாண்மை விருத்தி ஆகட்டும் !

லஞ்ச மனிதர் அஞ்சி அடங்கணும் !

நீர்வளம், நிலவளம், சூழ்வெளி

ஊர் மக்கள் கூடி

துப்புரவு செய்யணும் !

விடுதலை நாடு சீராய்த் தழைக்க,

குடிமக்கள் தம்தம் கடமை

முடிக்கணும்;

நாட்டுப் பொறுப்புகள் ஏற்கணும் !

தேசப் பற்று ஊறணும் !

தேச விருத்தி ஒன்றே குறிக்கோள் ஆகணும் !

தேச மக்கள் நேசம் பெருகணும் !

 

Series Navigationசோளக்கொல்லை பொம்மைHypocrite -பசுனூரு ஸ்ரீதர்பாபு 
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *