This entry is part 2 of 4 in the series 12 ஜனவரி 2025

விடாது துரத்துகின்றவைகளுக்காகவும்

விட்டு விட

முடியாதவைகளுக்காகவும்

ஓடுமென்

அன்றாடத்தின்

இடையில்

உரசிவிடும்

இவரை

விட்டொழித்துவிடலாம்தான்

வெறுப்பின்

வேதனையில்.

மறந்துபோன

என்னை

நினைவூட்டுவதன்

பொருட்டால்

யாவின்

அசௌகரியங்களையும்

பொறுக்கத்தான்

வேண்டியதாகிறது

இவரைப் போல

ஒருவரை

இக்கணம் வரை

என் வாழ்வில்

சந்திக்க

இயலாதிருப்பதால்.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationஅந்தனிஜீவா நினைவுகள் ! ஏழு தசாப்த காலத்தின் கலகக்குரல் ஓய்ந்தது ! !பாட்டியின் கதை