This entry is part 1 of 10 in the series 2 நவம்பர் 2025


இப்பொழுதெல்லாம்
நான் கோபத்தைக் குறைத்து விட்டேன்

பக்கத்து வீட்டு மரத்திலிருந்து என் தோட்டத்தில் கொட்டும் இலைகளைப் பேசாமல் எடுத்துப் போடுகிறேன்

வாடிய பூக்களை வைத்துக் கட்டிய மாலையை
புதிதென்று தருகின்ற பூக்காரியிடம் சிரித்துக் கொண்டே வாங்குகிறேன்

பிள்ளைகளின் மதிப்பெண்கள் குறைந்திருந்தாலும் அடுத்த முறை அதிகம் என ஆறுதல் சொல்கிறேன்

பின்னால் வழிகேட்டு ஒலித்துக் கொண்டே ஓயாத் தொல்லை தரும் வண்டியைப் போகவிடுகிறேன்

புரியாத கவிதையையும் புரிந்ததுபோல நடிக்கத் தொடங்கிவிட்டேன்

Series Navigationநேசம்