கடைசிப்பெட்டியில்
கடைசியாக தாவி ஏறினேன்.
பசிக்கு
திரும்பி பார்த்தால்
ஏற்கெனவே
பண்டாரங்கள்
பொட்டலத்தை பிரித்து விட்டனர்.
கடைசியாக
மிஞ்சிய பொட்டலத்தை
ஒருவன் கொடுத்தான்.
பிரித்து பார்த்தால்
ஒரு ஓரத்தில் இனிப்பு, புளிப்பு
மற்றொரு ஓரத்தில்
கசப்பு, துவர்ப்பு.
எதை முதலில், இரண்டாவது, கடைசியில் சாப்பிடுவது
கணக்கு போட்டதில்
இறங்க வேண்டிய சந்திப்பு
வந்துவிட்டது.
இனி என்ன செய்ய
காலத்திடம் கொடுத்து விட்டு
இறங்கி விட்டேன்.