This entry is part 1 of 11 in the series 8 பிப்ரவரி 2026

குளிர் மண்ணின் 

கோசு காரட்டு

கோடையின்

புளி பூண்டு மிளகாய்

வித்துக்களின் எண்ணெய்

சத்தான கோதுமை

கடலின் உப்பு

எல்லாமும் சேர்ந்து

‘சமோசா’ வாகி

இதோ!  என் தட்டில்

மலை மண் கடல் என

இயற்கை என்னைக் 

கேட்கிறது

எங்கள் கொடை

இப்படியாய் உனக்கு

உன் கொடை என்ன

எங்களுக்கு

அமீதாம்மாள்

Series Navigationபடைப்பும் படைப்பாளியும்