This entry is part 5 of 11 in the series 8 பிப்ரவரி 2026

    ச.சிவபிரகாஷ் 

  1. தவறியதை

           விட, 

           மேலானது, 

           கிடைத்த போதும்.,

           தவறியதே, 

           தலைதூக்குகிறது, 

           மீளாத… 

           நினைவுகளாய். 

     (2)  மறதியான, 

           நாட்களையும், 

           நான்… 

           மறக்க துடித்த, 

           பெயரையும், 

           அடிக்கடி… 

           ‘கவிதா’ மிஸ், 

           ‘கவிதா’ மிஸ் – என

           ஆறாம் வகுப்புக்கு, 

           சென்றுவிட்ட, 

           எனது, 

           அன்பு மகள், 

           நினைவூட்டிக்கொண்டே

           இருக்கிறாள். 

     (3)  நாம்… 

           சுற்றி திரிந்த, 

           சாலைகள், 

           கொஞ்சம், 

           விரிவடைந்து, 

           அங்கே தான், 

           இருக்கிறது., 

           வழிப்பட்ட, 

           கோயிலின், 

           குருக்கள்,

           குண்டாக தெரிகிறார். 

           தண்ணீரில்லாமல், 

           இருந்த குளம்,

           இப்போது… 

           நாம், 

           அமர்ந்து பேசிய, 

           படிக்கட்டு வரை, 

           நிரம்பியே, 

           இருக்கிறது. 

           அருகருகேயிருந்த, 

           நமது வீடுகள், 

           புனரமைக்கப்பட்டும், 

           இருக்கிறது. 

           நானும்… 

           இருக்கிறேன். 

           உன்னை… 

           மட்டுமே, 

           எங்கும்

           காணவில்லை. 

     (4) காலம்

          A I – வரை, 

          கடந்தும் விட்டது.,

          நானும், 

          இப்போது, 

          எப்போதோ, 

          அலட்சியம் செய்துவிட்டு, 

          சென்ற, 

          உன்னை, 

          நினைவில் கொண்டு, 

          கவிதைகளாய்… 

          உருமாற்றம், 

          செய்து, 

          எனதாக்கிக்கொள்ள,

          முயற்சித்து, 

          வருகிறேன். 

     (5) கவிதை 

          எழுத, 

          எனக்கே, 

          நேரம் இருக்கும் போது. 

          என்னை 

          நினைக்க, 

          உனக்கு, 

          நேரமில்லாமலா, 

          போய்விடும்? 

                                     ச.சிவபிரகாஷ் 

Series Navigation சூதாட்டமாக மாறிய தேர்தல் களம்    – மக்கள்  வெறும் கருவேப்பிலை தான்ஒரு வன பரப்பில்,பல மரங்கள் …