This entry is part 5 of 9 in the series 22 பிப்ரவரி 2026

  • லதா ராமகிருஷ்ணன்
  • C:\Users\computer\Desktop\gettyimages-1158020992-1024x1024.jpg

………………………………………………………………………………………………………………….

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் குறித்து தோழர் பார்வையற்றவனின் காணொளிப் பதிவைக் காண நேர்ந்தது. https://www.facebook.com/reel/1180425227506969

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அவர்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற அவலநிலையே இன்றளவும் தொடர் கிறது எனலாம். 

அரசியல் களத்தில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவமே இல்லையெனலாம். 

திரு.விஜயகாந்த் தான் முதன்முதலில் மாற்றுத் திறனா ளிகளுக்கான தனி பிரிவைத் தன் கட்சியில் தொடங்கி னார். (இப்போது அந்தப் பிரிவு அந்தக் கட்சியில் செயல் படுகிறதா தெரியவில்லை. 

வேறு எந்தக் கட்சியிலும் அத்தகைய தனிப்பிரிவு இருப்ப தாகத் தெரியவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய பிரதிநிதித்துவம் இருப்பதாகவும் தெரியவில்லை. 

அவர்களும் சமூகத்தின் அங்கம் என்பதால் தான் தனிப் பிரிவு ஆரம்பித்து அவர்களை ஒதுக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் கூறக்கூடும். அதுதான் உண்மை யெனில் மாற்றுத்திறனாளிகளின் நலவாழ்வு, முன்னேற் றம் அவர்களுடைய செயல்திட்ட உருவாக்கங்களில் இரண்டறக் கலந்த அம்சமாக இடம்பெறவேண்டும். பெறுகிறதா?

சமயங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒரு கட்சியை சார்ந் திருப்பதாலும் பாதகங்கள் ஏற்படுவதுண்டு. கட்சி சார்ந்தே இயங்கவேண்டியிருக்கும் என்பதால் தங்களுடைய பிரச்சனைகளை உரிய முறையில் உரிய நேரத்தில் உரத்துப்பேச முடியாத நிலை ஏற்படக்கூடும். 

இவ்வகையில் பார்த்தால் மாற்றுத்திறனாளிகள் ஓர் அமைப்பாக, கூட்டமைப்பாக இயங்கவேண்டியதும் அவசியமாகிறது. 

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகோரல்களெல்லாம், உரிமைக்கான போராட்டங்களெல் லாம் கண்டுகொள்ளா மல் புறக்கணிக்கப்படுவது எந்த அரசுக்கும் அழகல்ல. 

இதில் பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளி களின் நிலைமை இன்னும் அவலம். 

இங்கே காணொளியில் தோழர். பார்வையற்றவன் (ஆசிரி யர் – எழுத்தாளர்) மாற்றுத் திறனாளிகளின் போராட்டம் சமூகத்தின் பல பிரிவினராலும் கண்டுகொள்ளப்படாத நிலை குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

அவருடைய ஆதங்கக்குரலை ஆளுங்கட்சியும், எதிர்க் கட்சிகளும், பொதுச் சமூகமும் பொருட்படுத்த வேண்டி யது அவசியம். 

மாற்றுத்திறனாளிகளை அரசியல் கட்சிகளும் அரசுகளும் (தங்கள் முன்னேற்றத்திற்கான பகடைக்காய்களாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவர்கள் முன்னேற்றமும் சமூக முன்னேற்றத்தில் ஆதாரமான பங்கு வகிக்கிறது என்ற உண்மையைப் புரிந்துகொண்டு மாற்றுத் திறனாளி களின் நலன்களையும் தங்கள் நலத்திட்டங்கள் உருவாக் கத்தில் கணக்கில் கொள்ளவேண்டும்.

Series Navigationமழை புராணம் – 20  தி.ஜா.வின் —– “ஏசு”